என் மலர்
கிறித்தவம்
திருச்சி மாவட்டம் புள்ளம்பாடி ஒன்றியம் தின்னகுளம் கிராமத்தில் உள்ள புனித சவேரியார் ஆலயத்தில் வருடம் தோறும் நடைபெறும் ஆண்டு விழா கடந்த 21–ந்தேதி மாதா கொடியேற்றத்துடன் தொடங்கியது.
21–ந்தேதி இரவு முதல் 27–ந்தேதி இரவு வரை நவநாள் திருப்பலி நடைபெற்றது. 28–ந்தேதி இரவு 10.30 மணியளவில் ஆடம்பர சப்பர பவனி கிராமத்தின் முக்கிய வீதிகள் வழியாக நடைபெற்றது.
29–ந்தேதி விரகாலூர் பங்கு தந்தை தலைமையில் கூட்டு பாடற் திருப்பலி நிறைவேற்றப்பட்டு மாதா கொடியிறக்கம் நடை பெற்றது. விழாவில் ஆலம்பாடி மேட்டூர், தங்கசாலை, விரகாலூர், ஆலம்பாக்கம், நத்தமாங்குடி, மேலரசூர் உள்பட சுற்று வட்டார கிராம பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டனர்.
கிராம இளைஞர்கள் சார்பில் இன்னிசை கச்சேரி நடைபெற்றது.
‘சமாரியா’ யூதர்களுக்குப் பிடிக்காத ஊர்.
‘சமாரியர்கள்’ யூதர்களால் வெறுக்கப்படும் இனம்.
இவர்களுக்குள் அப்படியொன்றும் பெரிய வித்தியாசம் இல்லை. மூதாதையர்களைப் பொறுத்தவரை எல்லோரும் ஒன்றாக இருந்தவர்கள் தான். காலப்போக்கில் கடவுளை வழிபடும் முறையினால் பிளவு பட்டார்கள்.
சமாரியர்களின் புனித நூல் என்பது மோசே எழுதிய சட்டதிட்டங்கள் அடங்கிய ‘தோரா’ நூல். யூதர்களின் புனித நூலில் வேறு பல பகுதிகளும் உள்ளன.
யூதர்கள் எருசலேமில் மோரியா மலைமீது அமைந்துள்ள எருசலேம் தேவாலயத்தில் கடவுளை வழிபட்டனர். சமாரியர்களோ கரிசிம் மலையில் கடவுளை வழிபட்டனர்.
கலிலேயாவிலிருந்து யூதர்கள் எருசலேம் தேவாலயத்துக்குச் செல்லவேண்டுமென்றால் சமாரியா வழியாகச் செல்வது தான் எளிது. ஆனால், யூதர்கள் அப்படிச் செல்வது தங்களுக்கு இழுக்கு என்று கருதி சமாரியாவைச் சுற்றிக்கொண்டு சுற்றுப்பாதையில் தான் செல்வார்கள். சமாரியர்களை தாழ்வானவர்களாகக் கருதினார்கள்.
சமாரியா வழியாக நடந்து கொண்டிருந்த இயேசு அங்கே இருந்த ஒரு கிணற்றின் அருகே அமர்ந்தார். ஏதாவது உணவு வாங்கி வரும்படி சீடர்களை அனுப்பினார்.
அப்போது சமாரியப் பெண் ஒருத்தி தண்ணீர் எடுப்பதற்காக அங்கே வந்தாள். கிணற்றின் கரையில் அமர்ந்திருந்த இயேசுவை உற்றுப்பார்த்தாள்.
யூதன் எப்படி சமாரியாவுக்குள்? அவளுடைய மனதில் அடுக்கடுக்காய் பல கேள்விகள் எழுந்தன.
‘பெண்ணே, மிகவும் தாகமாய் இருக்கிறது. கொஞ்சம் தண்ணீர் தர முடியுமா?’
இயேசுவின் கேள்வியால், அவள் திடுக்கிட்டாள்.
‘சமாரியர்கள் சாத்தானின் கூடாரங்கள்’ என்று யூதர்கள் கூவுவதை பல முறை கேட்டிருக்கிறாள் அவள்.
சமாரியர்களிடமிருந்து உணவு வாங்கி உண்பதும் விலக்கப்பட்ட பன்றியின் இறைச்சியை சாப்பிடுவதும் ஒன்று என்பது யூதர்களின் எழுதப்படாத சட்டங்களில் ஒன்று என்பதும் அவளுக்குத் தெரியும்.
‘ஐயா... நீர் யூதன். நான் சமாரியப் பெண். யூதர்கள் சமாரியர்களிடம் பேசுவதேயில்லை. நீர் தண்ணீர் கேட்கிறீரே’ அவள் சொன்னாள்.
‘அம்மா.. கடவுளின் கொடை என்ன என்பதையும், உன்னிடம் தண்ணீர் கேட்பவர் யார் என்பதையும் நீ அறிந்திருந்தால் நீயே அவரிடம் தண்ணீரைக் கேட்டிருப்பாய்’.
‘உம்மிடம் தான் கயிறோ, பாத்திரமோ இல்லை. கிணறும் ஆழமானது. எப்படி தண்ணீர் எடுப்பீர். இந்தக் கிணறை வெட்டிய முற்பிதா யாக்கோபை விட நீர் பெரியவரோ?’ அவள் குரலில் நகைப்பு தெரிந்தது.
‘தான் தரும் தண்ணீர், வாழ்வளிக்கும் தண்ணீர். நான் தரும் தண்ணீரைக் குடித்தால் உனக்குத் தாகம் எடுக்காது’ இயேசு சொல்ல அவள் வியந்தாள், குழம்பினாள்.
‘ஐயா... அப்படி ஒரு தண்ணீர் இருந்தால் அதை எனக்குத் தாருங்களேன். நான் தண்ணீருக்காய் இவ்வளவு கஷ்டப்படத் தேவையில்லையே’ அவள் கேட்டாள்.
‘தருகிறேன்! முதலில் போய் உன் கணவனைக் கூட்டி வா’ இயேசு சொன்னார்.
‘ஐயா, மன்னிக்க வேண்டும் எனக்குக் கணவன் இல்லை’ அவள் குரலில் சுருதி குறைந்தது.
‘உண்மை தான். உனக்குக் கணவன்கள் ஐந்து பேர் இருந்தார்கள். இப்போது உன்னுடன் இருப்பவர் உன் கணவன் அல்ல’ இயேசு சொன்னார்.
‘ஐயா, நீர் இறைவாக்கினர் தானே’ அவள் அதிர்ச்சி கலந்த படபடப்புடன் பேசினாள்.
இயேசு புன்னகைக்க, அவள் ஒரு கேள்வியைக் கேட்டாள்.
‘ஐயா, எங்கள் முன்னோர்கள் இந்த மலையில் தான் கடவுளை வழிபட்டார்கள். ஆனால் யூதர்களாகிய நீங்களோ எருசலேமில் வழிபடுவதே சிறந்த வழிபாடு என்கிறீர்கள். எது சரி?’
‘அம்மா.. காலம் வருகிறது. அப்போது நீங்கள் கடவுளை இந்த மலையிலோ, எருசலேமிலோ வழிபட மாட்டீர்கள்! உள்ளத்தில் வழிபடுவீர்கள்’ இயேசு விளக்கினார்.
‘ஐயா.. நாங்கள் கிறிஸ்து என்னும் மீட்பரை எதிர்நோக்கிக் காத்திருக்கிறோம்’ அவள் அமைதியாகச் சொல்ல,
இயேசு தெளிவான குரலில் சொன்னார்.
‘நானே அவர்! நம்பு’.
‘நானே அவர்’ என்று இயேசு சொன்னதைக் கேட்டதும் அந்தப் பெண் குடத்தையும், கயிறையும் அங்கேயே விட்டு விட்டு நகருக்குள் ஓடினாள்.
‘நான் மெசியாவைக் கண்டேன்.. கிறிஸ்துவைக் கண்டேன்...’ என தெருக்களில் கத்தினாள்.
சமாரியப் பெண் சொன்னதைக் கேட்டு கூட்டம் இயேசுவை நோக்கி ஓடியது. இயேசு அவர்களிடம் பேசினார். மக்கள் மெய் மறந்து கேட்டுக் கொண்டிருந்தனர்.
ஒரு சமாரியப் பெண் அங்கே ஊருக்கு நற்செய்தியை அறிவித்தவராய் மாறினார்.
* "நல்ல ஆயன் நானே...என் ஆடுகளுக்காக எனது உயிரைக் கொடுக்கிறேன்" (யோவான் 10:14-15).
* "வழியும் உண்மையும் வாழ்வும் நானே. என் வழியாய் அன்றி எவரும் தந்தையிடம் வருவதில்லை" (யோவான் 14:6).
* "உங்கள் பகைவரிடமும் அன்புகூருங்கள்; உங்களைத் துன்புறுத்துவோருக்காக இறைவனிடம் வேண்டுங்கள்" (மத்தேயு 5:44).
* "பிறர் உங்களுக்குச் செய்ய வேண்டும் என விரும்புகிறவற்றை எல்லாம் நீங்களும் அவர்களுக்குச் செய்யுங்கள்" (மத்தேயு 7:12).
* "மரம் நல்லது என்றால் அதன் கனியும் நல்லதாக இருக்கும். மரம் கெட்டது என்றால் அதன் கனியும் கெட்டதாக இருக்கும். மரத்தை அதன் கனியால் அறியலாம்" (மத்தேயு 12:33).
* "உன்மீது நீ அன்பு கூர்வதுபோல உனக்கு அடுத்திருப்பவர்மீதும் அன்பு கூர்வாயாக" (மத்தேயு 22:39).
* "தந்தையே, இவர்களை மன்னியும். ஏனெனில் தாங்கள் செய்வது என்னவென்று இவர்களுக்குத் தெரியவில்லை" (லூக்கா 23:34).
தொடர்ந்து, தினமும் ஆலயத்தில் சிறப்பு திருப்பலி மற்றும் பிரார்த்தனைகள் நடைபெற்று வந்தது. இதில் முக்கிய நிகழ்ச்சியாக தேர்பவனி நேற்று முன்தினம் நடைபெற்றது. இதையொட்டி, காலை 8 மணிக்கு மதுரை பேராயரும், தமிழ்நாடு ஆயர் பேரவை தலைவருமான அந்தோணி தலைமையில், அருட்தந்தையர்கள் பிச்சமுத்து, பாஸ்கல்ராஜ், ஆகியோர் முன்னிலையில் திருவிழா திருப்பலி, உறுதிபூசுதல் நிகழ்ச்சியும் நடைபெற்றது.
இதனை தொடர்ந்து இரவு 7 மணிக்கு மின்விளக்குகளால் அலங்கரிப்பட்ட தேரில் அன்னை மாதா சொரூபம் வைக்கப்பட்டு, தேர்பவனி நடைபெற்றது. தேர் முக்கிய வீதிகள் வழியாக சென்று ஆலயத்தை சென்றடைந்தது. இதில் ஏராளமான கிறிஸ்தவர்கள் கலந்து கொண்டனர். இந்த பெருவிழாவிற்கான ஏற்பாடுகளை பாத்திமா பங்குதந்தை ஆரோக்கியதாஸ், மற்றும் பங்கு மக்கள் செந்திருந்தனர்.
திருவிழா தொடங்கிய நாளிலிருந்து புனித ஆரோக்கிய அன்னை ஆலயத்தில் தினந்தோறும் மறை உரை கருத்துக்கள், நவநாள் திருப்பலிகள் நடைபெற்று வருகிறது. முக்கிய நிகழ்ச்சியான தேர்பவனி நாளை மறுநாள் (திங்கட்கிழமை) நடக்கிறது. இதையடுத்து காலையில் அந்தோணியார் பல்த்தசார் பங்குதந்தை, கபிரியேல் ஆகியோரால் திருப்பலிகள் நடத்தி வைக்கப்படுகிறது.
அதனை தொடர்ந்து இரவு மின் அலங்காரம் செய்யப்பட்ட தேரில் புனித ஆரோக்கிய அன்னை எழுந்தருள செய்யும் நிகழ்ச்சி நடக்கிறது. அதனை தொடர்ந்து வாணவேடிக்கையுடன் திரளான கிறிஸ்தவர்கள் கூடி தேரை இழுக்க தேர்பவனி நடக்கிறது. இதற்கான ஏற்பாடுகளை பங்கு தந்தை, ஊர் பொதுமக்கள் செய்து வருகின்றனர். பாதுகாப்பு ஏற்பாடுகளை நார்த்தாமலை போலீசார் செய்து வருகின்றனர்.
அனைத்தும் தேவனுடைய வார்த்தை மூலமாக உண்டாயிற்று. உயிருள்ள அனைத்தும் அவரால் உருவாக்கப்பட்டு உயிர் பெற்றன. கர்த்தருக்குள் ஜீவன் இருக்கிறது. அந்த ஜீவனில் இருந்து மனிதனுக்கு ஒளி தோன்றிற்று. கர்த்தரின் ஒளியானது இருளிலே பிரகாசித்தது. எந்த இருளும் அந்த ஒளியை மறைக்க முடியவில்லை.
இயேசு சொன்னார், ‘நான் உலகத்திற்கு ஒளியாயிருக்கிறேன். என்னை பின்பற்றுகிறவன் இருளிலே நடவாமல் ஜீவ ஒளியை அடைவான்’ என்றார்.
பொல்லாங்கு செய்கிற எவனும் ஒளியை காணமாட்டான். அவன் இருளிலே இருக்கிறான். இருளில் நடக்கிறவன் தான் போகிற இடம் இன்னதென்று அறியமாட்டான். துன்மார்க்கனின் ஒளி அவர்களை விட்டு எடுபட்டு போகும்.
சத்தியத்தின்படி ஜீவிக்கிறவன் ஒளியினிடத்திற்கு வருகிறான். ஒளி உங்களோடு இருக்கையில் நீங்கள் ஒளியின் பிள்ளைகள். எந்த மனுஷனையும் பிரகாசிக்கிற ஒளியே அந்த மெய்யான ஒளி. ஞானவான்களை ஆகாய மண்டலத்தின் ஒளியைப் போல் வைக்கின்றார். அப்பொழுது உன் ஒளி வந்தது. கர்த்தருடைய மகிமை உன்மேல் உதித்தது. ஒரு மனிதனின் கண்களின் ஒளி அவன் இருதயத்தைப் பூரிப்பாக்கும்.
‘தேவரீர் எங்களுக்கு இரங்கி எங்களை ஆசீர்வதித்து உம்முடைய முகத்தை எங்கள்மேல் பிரகாசிக்கப் பண்ணும்’ (சங்.67:2).
யூதேயா தேசத்திலும், எருசலேம் பட்டணத்திலும், கலிலேய தேசத்திலும் நன்மை செய்கிறவராய் சுற்றித்திரிந்த போது எல்லாருக்கும் அவரிடத்திலிருந்து வல்லமை புறப்பட்டு எல்லாரையும் குணமாக்கின படியினாலே, மக்கள் யாவரும் அவரைத் தொடும்படிக்கு வகை தேடினார்கள். அதைபோல் நமது சரீரம் முழுவதும் பெலவீனம் அடைந்து மூழ்கி போகின்ற நேரத்தில் ஒளியை வஸ்திரமாகத் தரித்து இருக்கிறவர், சுத்த ஒளியான கர்த்தர் நமது உடல் முழுவதும் பெலவீன பகுதிகளில் அவரது ஒளியால் சுகம், பெலன் ஆரோக்கியத்தை கட்டளை இடுகிறார்.
கர்த்தருடைய முகத்தின் ஒளியை நம்மேல் பிரகாசிக்கப் பண்ணுகிறார். அப்பொழுது சரீரத்தில் உள்ள வியாதி என்ற இருளின் அதிகாரங்கள் மாறி ஒளியின் கிருபையை தரித்துக் கொள்கின்றோம்.
‘நான் உலகத்திலிருக்கையில் உலகத்திற்கு ஒளியாயிருக்கிறேன் என்றார்’. (யோவா.9:5)
சவுல் என்பவன் கர்த்தருடைய சீடரை கொலை செய்யும்படி தமஸ்கு நகருக்குச் செல்லும் வழியில் இயேசு தரிசனமானார். உடனே வானத்திலிருந்து ஒரு ஒளி அவனைச் சுற்றிலும் பிரகாசித்தது. அவன் தரையிலே விழுந்தான். அப்பொழுது ஒளியிலிருந்து ஒரு சத்தம் உண்டாகி ‘சவுலே, சவுலே நீ என்னை ஏன் துன்பப்படுத்துகிறாய்?’ என்று தன்னுடனே சொல்லுகிற ஒரு சத்தத்தை கேட்டான். அதற்கு அவன், ‘ஆண்டவரே நீர் யார்?’ என்றான். அதற்கு கர்த்தர், ‘நீ துன்பப்படுத்துகிற இயேசு நானே. முள்ளில் உதைக்கிறது உனக்குக் கடினமாம்’ என்றார்.
ஒளியா இருக்கிற கர்த்தர் அனனியா என்ற தேவ மனிதனை அனுப்பி அவன் பார்வை பெற்றான். சவுல் என்ற மனிதன் பெயர் பவுல் ஆக மாற்றப்பட்டது. அவன் அகிரிப்பா ராஜாவின் முன் சாட்சி கொடுக்கிறான். சூரியனுடைய பிரகாசத்திலும் அதிகமான ஒளி வானத்திலிருந்து பிரகாசிக்கக் கண்டேன் (அப்.26:13) கர்த்தரின் ஒளி சூரியனுடைய பிரகாசத்திலும் அதி பயங்கரமான ஒளி. தேவன் ஒளியாயிருக்கிறார். அவரில் எவ்வளவேனும் இருளில்லை.
யோசுவா கர்த்தரை நோக்கி பேசி, பின்பு இஸ்ரவேலின் கண்களுக்கு முன்பாக சூரியனே நீ கிபியோன் மேலும், சந்திரனே நீ ஆயலோன் பள்ளத்தாக்கின் மேலும் தரித்து நில்லுங்கள் என்றான் (யோசு.10:12)
இஸ்ரவேல் மக்களை கர்த்தர் பகலில் மேக ஸ்தம்பத்தினாலும், இரவில் அக்கினி ஸ்தம்பத்தினாலும் வழி நடத்தினார். அவர்களுக்கு ஒரு சேதமும் வரவில்லை. இஸ்ரவேல் மக்களுக்கு விரோதமாக எருசலேம் ராஜா, எபிரோனின் ராஜா, யர்மூத்தின் ராஜா, லாஜுசின் ராஜா, எக்லோனின் ராஜா ஆகிய ஐந்து ராஜாக்களும் அவர்களுடைய எல்லா யுத்த சேனைகளும் இஸ்ரவேல் மக்களை அழிக்கும் படியாக கிபியோனுக்கு முன்பாகப் பாளையமிறங்கினார்கள். இஸ்ரவேல் புத்திரருக்கும், ஐந்து ராஜாக்களும் ஒன்று சேர்ந்து மகா பெரிய யுத்தம் உண்டானது.
கர்த்தர் இஸ்ரவேல் புத்திரருக்கு துணை நின்றார். ஐந்து ராஜாக்களையும் கிபியோனிலே மகா சங்காரமாக மடங் கடித்து முறியடித்தார்கள். யுத்தம் தீவிரமாக நடந்து கொண்டு இருந்தபோது யோசுவா என்ற தேவ மனிதன், ‘சூரியனே நீ கிபியோன் மேலும், சந்திரனே நீ ஆயலோன் பள்ளத்தாக்கின் மேலும் தரித்து நில்லுங்கள்’ என்று கட்டளை கொடுத்தான்.
உடனே சூரியன் அஸ்தமிக்காமல் ஒரு பகல் முழுவதும் நடுவானத்தில் நின்றது. இரவில் சந்திரனும் அப்படியே நின்றது. கர்த்தர் ஐந்து ராஜாக்களையும் இஸ்ரவேல் புத்திரருக்கு ஒப்புக் கொடுத்தார். கர்த்தர் யுத்தம் செய்தார். ஐந்து ராஜாக்களும் யுத்த சேனைகளும் நிர்மூலமாக்கப்பட்டார்கள்.
யுத்தத்திலே தமது மகிமையின் அறிவாகிய ஒளியை தோன்றப் பண்ணும் பொருட்டாக இஸ்ரவேல் மக்களின் இருதயங்களிலே பிரகாசித்தார். அவர் ஒருவரும் சேரக்கூடாத ஒளியிலே வாசம் பண்ணுகிறார். உலகம் முழுவதும் உள்ள மக்களுக்கு அவர் ஒளியாக இருக்கிறார்.
ஆமென்
பின்னணி
இயேசு இவ்வுவமையை கூறுவதற்கான பின்னணி இவ்வாறு கூறப்பட்டுள்ளது:
இயேசு போதித்துக்கொண்டிருக்கும் போது, வழக்கறிஞர் ஒருவர் எழுந்து அவரைச் சோதிக்கும் நோக்குடன், போதகரே, நிலைபேறுடைய வாழ்வைப் பெற நான் என்ன செய்ய வேண்டும்? என்று கேட்டார்.
அதற்கு இயேசு, சட்ட நூலில் என்ன எழுதியிருக்கிறது? அதில் நீர் என்ன வாசிக்கின்றீர்? என்று அவரிடம் கேட்டார். அவர் மறுமொழியாக, உன் முழு இதயத்தோடும், முழு உள்ளத்தோடும், முழு ஆற்றலோடும், முழு மனத்தோடும் உன் கடவுளாகிய ஆண்டவரிடம் அன்பு கூர்வாயாக. உன்மீது நீ அன்புகூர்வது போல் உனக்கு அடுத்திருப்பவர் மீதும் அன்பு கூர்வாயாக என்று எழுதியுள்ளது" என்றார்.
இயேசு, சரியாகச் சொன்னீர் அப்படியே செய்வீர் நீவிர் வாழ்வீர் என்றார்.
அவர், தம்மை நேர்மையாளர் எனக் காட்ட விரும்பி, எனக்கு அடுத்திருப்பவர் யார்? என்று இயேசுவிடம் கேட்டார்.
அதற்கு இயேசு மறுமொழியாகக் கூறிய உவமை நல்ல சமாரியன் உவமையாகும்.
உவமை
ஒருவர் எருசலேமிலிருந்து எரிக்கோவுக்குப் போகும்போது கள்வர் கையில் அகப்பட்டார். அவருடைய ஆடைகளைக் கள்வர்கள் உரிந்து கொண்டு, அவரை அடித்துக் குற்றுயிராக விட்டுப் போனார்கள். தற்செயலாய் அவ்வழியே வந்த சமயகுரு ஒருவர் குற்றுயிராகக் கிடந்தவரைக் கண்டும் மறுபக்கமாக விலகிச் சென்றார். அவ்வாறே லேவியர் ஒருவரும் அவ்விடத்துக்கு வந்து குற்றுயிராகக் கிடந்தவரைக் கண்டும் மறுபக்கமாய் விலகிச் சென்றார்.
ஆனால் அவ்வழியே பயணம் செய்துகொண்டிருந்த சமாரியர் ஒருவர் அருகில் வந்து அவரைக் கண்டபோது அவர்மீது பரிவு கொண்டார். விழுந்துகிடந்தவரை அணுகி, காயங்களில் திராட்சை மதுவும் எண்ணெயும் வார்த்து, அவற்றைக் கட்டி, தாம் பயணம் செய்த விலங்கின் மீது ஏற்றி, ஒரு சாவடிக்குக் கொண்டுபோய் அவரைக் கவனித்துக் கொண்டார். மறுநாள் இருதெனாரியத்தை (நாணயம்) எடுத்து, சாவடிப் பொறுப்பாளரிடம் கொடுத்து, "இவரைக் கவனித்துக் கொள்ளும் இதற்கு மேல் செலவானால் நான் திரும்பி வரும்போது உமக்குத் தருவேன்" என்றார்.
கருத்து
பரிவு, அன்பு என்பனவேயன்றி ஒருவனது சட்ட அறிவோ பதவியோ நிலைபேறுடைய வாழ்வை அளிக்காது என்பது முக்கிய கருத்தாகும். அக்காலத்தில் யூதர் சமாரியரைத் தாழ்ந்த வகுப்பினராக நடத்தினர். இயேசு இங்கு சமாரியனை எடுத்துக்காட்டாகப் பயன்படுத்தியது எல்லோரும் சமன் என்ற கருத்தையும் வலியுறுத்துகிறது. இன்று பண்பாடுகளுக்கு ஏற்றபடி சமாரியனின் கதாபாத்திரம் பலவாறாக உருவகப்படுத்தப்படுகின்றது.
தொடர்ந்து அடுத்த மாதம் 3-ந் தேதி இரவில் சமபந்தி விருந்தும், 4-ந் தேதி காலையில் திருமுழுக்கு திருப்பலியும், 5-ந் தேதி காலையில் முதல் திருவிருந்து விழாவும், பெருவிழாத் திருப்பலியும், மாலையில் கொடியிறக்கமும் நடைபெறுகிறது. விழா நாட்களில் தினமும் காலையில் திருப்பலியும், மாலையில் செபமாலையும், இயேசுவின் திரு இருதய புகழ்மாலையும், திருப்பலியும் நடக்கிறது.
10-ந் திருநாளான நேற்று காலை 5 மணிக்கு பிஷப் இவோன் அம்புரோஸ் தலைமையில் பெருவிழா ஆடம்பர பாடல் திருப்பலியும், உறுதி பூசுதல் விழாவும் நடந்தது. திருவிழா திருப்பலியில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர். மாலை 3 மணிக்கு தேர் பவனியும், தொடர்ந்து இரவு 10 மணிக்கு இன்னிசை நிகழ்ச்சியும் நடந்தது.
விழா ஏற்பாடுகளை பங்கு குரு எஸ்.மைக்கிள் மகிழன் அடிகள், பங்கு மேய்ப்பு பணிக்குழு, அன்பியங்கள் மற்றும் பக்த சபையினர் செய்திருந்தனர்.
நால்வருமே இயேசுவின் மரணத்துக்குப் பின்பு யோசேப்புவை அறிமுகப்படுத்துகிறார்கள். ஒரு சில காட்சிகளுக்குப் பின் யோசேப்பு காணாமல் போய்விடுகிறார்.
இயேசுவைப் பிடித்து சிலுவைச் சாவு கொடுத்து, அடித்து சித்திரவதை செய்து சிலுவையில் அறைந் தாயிற்று. மதியம் மூன்று மணியளவில் இயேசு தனது உயிரை விண்ணகத் தந்தையிடம் ஒப்படைத்தார்.
மறுநாள் ஓய்வு நாள். யூதர்களின் கணக்குப்படி ஆறுமணியோடு அன்றைய தினம் முடிவடையும். இயேசு இறந்து போய் சிலுவையில் தொங்கிக் கொண்டிருக் கிறார். யாரேனும் அவரை அடக்கம் செய்தாக வேண்டும். இன்னும் மூன்று மணி நேரத்தில் அடக்கம் செய்யப்படாவிட்டால் மறு நாள் அடக்கம் செய்ய முடியாத நிலை ஏற்படும்.
இயேசுவின் சீடர்கள் எல்லாரும் ஓடிவிட்டார்கள். இயேசு இறந்து போவார் என எதிர்பார்க்காத அவருடைய ஆதரவாளர்கள் எல்லோரும் தலைமறைவாகி விட்டார்கள்.
வெளிப்படையாய் சுற்றித்திரிந்தவர்கள் தலைமறைவான போது, தலைமறைவாய் இருந்த யோசேப்பு வெளியே வந்தார். அவர் துணிச்சலுடன் பிலாத்துவிடம் போய் இயேசுவின் உடலைக் கேட்டார். அவர் தலைமைச் சங்க உறுப்பினர். ‘இறையாட்சியின் வருகைக்காகக் காத்திருந்தவர்’ என்கிறது பைபிள்.
சிலுவையில் அறையப்பட்டவர்கள் அவ்வளவு விரைவாக இறந்து விடுவதில்லை. இயேசு ஆறு மணி நேரங்களில் இறந்து விட்டார். சிலர் சிலுவையில் சில நாட்கள் கூட தொங்குவதுண்டு.
எனவே இயேசு இவ்வளவு விரைவாய் இறந்து போனது பிலாத்துவுக்கு ஆச்சரியமாய் இருந்தது. உடனே ஒரு நூற்றுவர் தலைவனை அழைத்து இயேசுவின் மரணத்தை உறுதி செய்தார். கொல்கொதா அரண்மனையிலிருந்து வெறும் இரண்டு கிலோ மீட்டர் தொலைவில் தான் இருந்தது. இயேசுவின் மரணம் உறுதியானபின் பிலாத்து யோசேப்புக்கு அனுமதி அளித்தார்.
அப்போது யோசேப்புடன் கை கோர்த்தார் இன்னொருவர். அவர் நிக்கதேம். அவரும் ரகசிய சீடர். இருவருமே சனதரீம் எனும் தலைமைச் சங்க உறுப்பினர்கள். இருவரும் ஒருவருக்கொருவர் நன்கு அறிந்தவர்களாய் இருந்திருப்பார்கள் என்பதிலும் சந்தேகமில்லை.
இயேசுவின் மரணம் எந்த நேரத்தில் நிகழும் என்பதை அவர்கள் அறிந்திருந்தது போல இருந்தன அவர்களுடைய செயல்கள். ஒருவேளை இயேசுவே தனது மரண நேரத்தைக் குறித்து அவர்களிடம் தெரிவித்திருக்கலாம் என விவிலிய ஆய்வாளர்கள் கருதுகின்றனர்.
வெறும் மூன்று மணி நேரத்துக்குள், ரோம முறைப்படி கொலை செய்யப்பட்ட இயேசுவை, யூத முறைப்படி இவர்கள் அடக்கம் செய்கின்றனர்.
யோசேப்பு மெல்லிய துணியைக் கொண்டு வரு கிறார், நிக்கதேம் வாசனைப் பொருட்களை கொண்டு வருகிறார். இருவருமே செல்வந்தர்கள் என்கிறது பைபிள்.
நூறு ராத்தல் எடையுள்ள வெள்ளைப்போளத்தைக் கரிய போளத்துடன் கலந்து வாசனைப் பொருளாக்க குறைந்த பட்சம் ஐந்து மணி நேரமாகலாம் என்பது ஆய்வாளர்களின் கருத்து. அப்படியானால் அந்தப் பொருட்கள் நிக்கதேமுவால் ஏற்கனவே தயாராக்கி வைக்கப்பட்டிருக்க வேண்டும்.
அடக்கம் செய்யப்பட வேண்டிய குகை தயாராக இருந்தது. அது யோசேப்பு தமக்கென தயாராக்கி வைத்திருந்த புத்தம் புது கல்லறை. அரிமத்தியா ஊர் யோசேப்பு ஏன் இருபத்தைந்து கிலோ மீட்டர் தொலைவில் இருந்த எருசலேமில் தனக்கான கல்லறை வாங்கினார் என்பது வியப்பானது. அது இறைவனின் மாபெரும் திட்டம் என்பதைத் தவிர வேறில்லை.
இயேசு வாழ்ந்த காலத்தில் ரகசிய வாழ்வு வாழ்ந்த யோசேப்பு, இயேசுவின் மரணத்தோடு வலிமை பெற்று வெளியே வருகிறார். தான் இயேசுவின் சீடர் என்பது தெரிந்தால் தனது பதவி பறி போய்விடலாம், சொத்து பறிமுதல் செய்யப்படலாம், சிறையில் அடைக்கப்படலாம், தேவாலயத்தில் நுழையும் அனுமதி கூட மறுக்கப்படலாம். எது வேண்டுமானாலும் நடக்கலாம். ஆனால் யோசேப்பு அதைப்பற்றிஎல்லாம் கவலைப்படவில்லை. அது இயேசுவின் மீது அவருக்கு இருந்த அசைக்க முடியாத விசுவாசத்தை எடுத்துக் காட்டுகிறது.
இயேசுவோடு இருந்தவர்கள் எல்லோரும் ஓடிவிட, ஓடி ஒளிந்திருந்தவர் இத்தனை தைரியமாய் வெளியே வருகிறார் எனில் இயேசு அவரிடம் தனது மரணத்தைக் குறித்தும், அடக்கம் குறித்தும் தெளிவாகத் தெரிவித்திருக்க வேண்டும் என ஆய்வாளர்கள் பலர் கருதுகின்றனர்.
இயேசு சிலுவையில் தொங்கிக் கொண்டிருக்கையில் அவரது ரத்தம் தரையில் விழாமல் யோசேப்பு ஒரு பாத்திரத்தில் பிடித்ததாகவும், அந்தப் பாத்திரம் அவரோடு கடைசி வரை இருந்ததாகவும், யோசேப்பு சிறையில் அடைக்கப்பட்டதாகவும், அப்போது அந்தப் பாத்திரம் அமுத சுரபி போல் அவருக்கு அதிசயமாய் உணவு வழங்கியதாகவும் ‘நிக்கதேமின் நற்செய்தி’ எனும் மரபு நூல் தெரிவிக்கிறது.
யோசேப்பின் வாழ்க்கை நமக்கு துணிச்சல் கலந்த விசுவாசத்தின் தேவையை நமக்கு விளக்குகிறது.
திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியாக நேற்று மாலை சலேத் மாதாவின் தேர் பவனி நடைபெற்றது. அப்போது தேரை சுற்றி பக்தர்கள் முழங்காலிட்டு கையில் மெழுகுவர்த்தி ஏந்தியபடி சுற்றி வந்து நேர்த்திகடன் செலுத்தினர்.

மேலும் அங்கபிரதட்சணம் செய்தும் வழிபட்டனர். இது குறித்து பக்தர்கள் கூறுகையில், சலேத் அன்னையிடம் எந்த வேண்டுதல் வைத்தாலும் அது நிறைவேறும். எங்கள் கோரிக்கை நிறைவேறிய பிறகு நடைபெறும் திருவிழாவின்போது முழங்காலிட்டு நேர்த்தி கடன் செலுத்துகிறோம்.
திண்டுக்கல் மட்டுமின்றி பல்வேறு ஊர்களில் இருந்தும் இந்த வினோத திருவிழாவை காணவும், பங்கேற்கவும் பொதுமக்கள் வருகின்றனர் என்று தெரிவித்தனர்.
மாற்கு நற்செய்தியின்படி, இயேசு யோர்தான் ஆற்றருகே வந்து, அங்கே திருமுழுக்குக் கொடுத்துக் கொண்டிருந்த யோவானிடம் தாமும் திருமுழுக்குப் பெற்றார். ஆற்றிலிருந்து இயேசு கரையேறியபோது தூய ஆவி அவர்மீது புறா வடிவில் வந்திறங்கினார். மேலும் "என் அன்பார்ந்த மகன் நீயே. உன்பொருட்டு நான் பூரிப்படைகிறேன்" (மாற்கு 1:10–11) என்று வானத்திலிருந்து ஒரு குரல் ஒலித்தது.
லூக்கா நற்செய்தியில் யோவான் போதிக்க தொடங்கியது திபேரியு (Tiberius) சீசரின் 15வது ஆண்டு என்னும் குறிப்பு உள்ளது (காண்க: லூக்கா 3:1). இது கி.பி. 28/29ஆம் ஆண்டு ஆகும். இயேசு பிறந்தது கி.மு. சுமார் 4ஆம் ஆண்டு என்று கொண்டால், அவர் திருமுழுக்குப் பெற்றபோது சுமார் 32 வயதினராக இருந்திருப்பார்.
இயேசு திருமுழுக்குப் பெற வந்ததைக் கண்ட யோவான் இயேசுவைத் தடுத்து, "நான்தான் உம்மிடம் திருமுழுக்குப் பெற வேண்டியவன்; நீரா என்னிடம் வருகிறீர்?" என்று கூறியதாக மத்தேயு நற்செய்தி குறிப்பிடுகிறது. ஆனால் இயேசு அவரைப் பார்த்து, "இப்பொழுது விட்டுவிடும். கடவுளுக்கு ஏற்புடையவை அனைத்தையும் நாம் நிறைவேற்றுவதுதான் முறை" (மத்தேயு 3:13-15) என்று பதிலளித்தார்; பின்னர் யோவானின் கைகளால் திருமுழுக்குப் பெற்றார்.
திருமுழுக்குப் பெற்ற பின்னர் இயேசு பாலைநிலத்துக்குச் சென்று 40 நாள்கள் நோன்பிருந்தார். அப்போது அலகை அவரை மூன்று முறை சோதித்தது. மூன்று முறையும் இயேசு வென்றார். பின்னர் இயேசு பாலைநிலத்தை விட்டகன்று, மக்களுக்கு "இறையரசு" பற்றிய நற்செய்தியை அறிவிக்கலானார். தம்மோடு இருக்கவும் மக்களுக்கு இறையரசு பற்றிய நற்செய்தியை அறிவிக்கவும் இயேசு தமக்கென சீடர்களைத் தெரிந்துகொண்டார் (காண்க: மத்தேயு 4:12-22; மாற்கு 1:14-20; லூக்கா 4:14-5:11).






