என் மலர்
கிறித்தவம்
எவ்வளவு பாவம் செய்து நாம் தவறிப்போனாலும். நாம் பாவங்களை உணர்ந்து இறைவனிடம் திரும்பும் போது அவர் நம்மை மன்னித்து ஏற்கிறார்.
ஊதாரி மைந்தன் உவமை அல்லது கெட்ட குமாரன் உவமை, இயேசு கூறிய ஒரு உவமையாகும். இயேசு போதித்துக் கொண்டிருக்கும் போது, அன்றைய சமூகத்தால் ஒதுக்கப்பட்ட பாவம் செய்பவர்களாக கருதப்பட்ட ஆயக்காரரும்(வரி வசூல் செய்பவர்), பாவிகளும் (கொடிய வியாதிகளால் பாதிக்கப்பட்ட்வர்களும் பாவம் செய்தவர்களாகவே யூத சமயத்தவரால் கருதப்பட்டனர்) அவருடைய போதனையை கேட்கும்படி அவரிடத்தில் வந்து சேர்ந்தார்கள்.
அப்பொழுது தங்களை நல்லவர்களாக, பாவம் அறியாதவர்களாக எண்ணிக்கொண்ட பரிசேயரும் வேதபாரகரும் (யூத கோயிலில் மதகுருகள்) தமக்குள், இவர்(இயேசு) பாவம் செய்தவர்களை ஏற்றுக்கொண்டு அவர்களோடே சாப்பிடுகிறார் என்றார்கள். அப்போது இயேசு அவர்களுக்கு உவமைகளால் பேசத் தொடங்கினார். காணாமல் போன ஆடு,காணாமல் போன காசு உவமைகளை தொடர்ந்து இவ்வுவமையை இயேசு கூறினார். இது லூக்கா 15:11-32 இல் குறிப்பிடப்பட்டுள்ளது.
உவமை ஊதாரி
ஒரு மனிதனுக்கு இரண்டு மகன்கள் இருந்தார்கள். அவர்களில் இளையவன் தன் தகப்பனிடத்தில்: தகப்பனே, சொத்தில் என் பங்கை எனக்குத் பிரித்து தரவேண்டும் என்றான். எனவே தகப்பன் அவர்களுக்குத் தன் சொத்தை பங்கிட்டுக் கொடுத்தார். சில நாட்களுக்குப் பின்பு, இளையமகன் எல்லாவற்றையும் விற்று சேர்த்துக்கொண்டு, தூரநாட்டுக்குப் புறப்பட்டுப்போய், அங்கே தீய வழிகளில் வாழ்ந்து, தன் சொத்தை எல்லாம் அழித்தான்.
எல்லாவற்றையும் அவன் செலவழித்த பின்பு, அந்தத் நாட்டில் கொடிய பஞ்சமுண்டாயிற்று. அப்பொழுது அவன் குறைவுபடத் தொடங்கி, அந்த நாட்டின் குடிகளில் ஒருவனிடத்தில் போய் சேர்ந்துக்கொண்டான். அந்தக் குடியானவன் அவனைத் தன் வயல்களில் பன்றிகளை மேய்க்கும்படி அனுப்பினான். அப்பொழுது பன்றிகள் தின்னும் தவிட்டினாலே தன் வயிற்றை நிரப்ப ஆசையாயிருந்தான், ஆனாலும் ஒருவனும் அதை அவனுக்குக் கொடுக்கவில்லை.
மனமாற்றம்
அவனுக்குப் புத்தி தெளிந்தபோது, அவன்: என் தகப்பனுடைய வேலையாள்கள் எத்தனையோ பேருக்குப் போதுமான சாப்பாடு இருக்கிறது, நானோ பசியினால் சாகிறேன். நான் எழுந்து, என் தகப்பனிடத்திற்குப் போய்: தகப்பனே, இறைவனுக்கு எதிராகவும் உமக்கு முன்பாகவும் பாவஞ்செய்தேன். இனிமேல் உம்முடைய குமாரன் என்று சொல்லப்படுவதற்கு நான் தகுதி உள்ளவனல்லன், உம்முடைய வேலையாள்களில் ஒருவனாக என்னை வைத்துக்கொள்ளும் என்பேன் என்று சொல்லி எழுந்து புறப்பட்டு, தன் தகப்பனிடத்தில் வந்தான்.
கெட்ட குமாரன்
அவன் தூரத்தில் வரும்போதே, அவனுடைய தகப்பன் அவனைக் கண்டு, மனதுருகி, ஓடி அவன் கழுத்தைக் கட்டிக்கொண்டு, அவனை முத்தஞ்செய்தார். மகனானவன் தகப்பனிடத்தில்: தந்தையே , இறைவனுக்கு எதிராகவும் உமக்கு முன்பாகவும் பாவஞ்செய்தேன். இனிமேல் உம்முடைய குமாரன் என்று சொல்லப்படுவதற்கு நான் தகுதி உள்ளவனல்லன் என்று சொன்னான்.
அப்பொழுது தகப்பன் தன் வேலையாள்களிடம்: நீங்கள் உயர்ந்த ஆடைகளை கொண்டுவந்து, இவனுக்கு உடுத்தி, இவன் கைக்கு மோதிரத்தையும் கால்களுக்குப் காலணிகளையும் போடுங்கள். கொழுத்த கன்றைக் கொண்டுவந்து சிறந்த விருந்து சமையுங்கள். நாம் விருந்துண்டு, இன்பமாயிருப்போம். என் குமாரனாகிய இவன் இறந்தான், திரும்பவும் உயிர்த்தான் காணாமற்போனான், திரும்பவும் காணப்பட்டான் என்றான். அப்படியே அவர்கள் இன்பமாயிருக்க தொடங்கினார்கள்.
மூத்த மகன்
அவனுடைய மூத்தகுமாரன் வயலிலிருந்தான். அவன் திரும்பி வீட்டுக்குச் சமீபமாய் வருகிறபோது, கீதவாத்தியத்தையும் நடனக்களிப்பையும் கேட்டு, வேலையாள்களில் ஒருவனை அழைத்து: இதென்ன என்று விசாரித்தான். அதற்கு அவன்: உம்முடைய சகோதரன் வந்தார், அவர் மறுபடியும் சுகத்துடனே உம்முடைய தகப்பனிடத்தில் வந்து சேர்ந்தபடியினாலே அவருக்காகக் விருந்து செய்கிறார் என்றான்.அப்பொழுது அவன் கோபமடைந்து, வீட்டினுள்ளே போக மனதில்லாதிருந்தான்.
தகப்பனோ வெளியே வந்து, அவனை வருந்தியழைத்தார். அவன் தகப்பனுக்குப் பதிலாக: இதோ, இத்தனை வருடகாலமாய் நான் உமக்கு வருந்தி உழைத்தேன், ஒருக்காலும் உம்முடைய கட்டளையை மீறாதிருந்தும், என் நண்பரோடே நான் இன்மாயிருக்கும்படி நீர் ஒருக்காலும் எனக்கு ஒரு ஆட்டுக்குட்டியையாவது கொடுக்கவில்லை.
விபச்சாரிகளிடத்தில் உம்முடைய சொத்தை அழித்த உம்முடைய மகனாகிய இவன் வந்தவுடனே கொழுத்த கன்றை இவனுக்காக சமைத்து விருந்து கொண்டாடுகிரே என்றான். அதற்குத் தகப்பன்: மகனே, நீ எப்போதும் என்னோடிருக்கிறாய், எனக்குள்ளதெல்லாம் உன்னுடையதாயிருக்கிறது. உன் சகோதரனாகிய இவனோ இறத்தான், திரும்பவும் உயிர்த்தான் காணாமற்போனான், திரும்பவும் காணப்பட்டான் ஆனபடியினாலே, நாம் மகிழ்ச்சியாய் இருக்கவேண்டாமோ என்று சொன்னார்.

பிலாவிளை தூய ஜார்ஜியார் ஆலய அர்ச்சிப்பு விழா மற்றும் பங்கு குடும்ப விழா ஆகியவை வருகிற 20-ந் தேதி தொடங்குகிறது.
பிலாவிளை தூய ஜார்ஜியார் ஆலய அர்ச்சிப்பு விழா மற்றும் பங்கு குடும்ப விழா ஆகியவை வருகிற 20-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி 29-ந் தேதி வரை நடக்கிறது. விழாவில் 20-ந் தேதி மாலை 3.30 மணிக்கு தூய ஜார்ஜியார் புதிய ஆலய அர்ச்சிப்பு விழா மற்றும் திருக்கொடியேற்றம், ஆடம்பர கூட்டுத்திருப்பலி ஆகியவை நடக்கிறது. இதற்கு குழித்துறை மறைமாவட்ட ஆயர் ஜெரோம்தாஸ் தலைமை தாங்கி, ஆலயத்தை அர்ச்சித்து திறந்து வைக்கிறார்.
திருக்கொடியேற்ற திருப்பலிக்கு பின்னர் அன்பின் விருந்து நடக்கிறது. 21-ந் தேதி மாலை 6.30 மணிக்கு செபமாலை, நவநாள் திருப்பலி நடக்கிறது. இதற்கு கோட்டார் மறைமாவட்ட ஆயர் பீட்டர் ரெமிஜியுஸ் தலைமை தாங்கி திருப்பலி நிறைவேற்றுகிறார். 22-ந் தேதி மாலை 6.30 மணிக்கு செபமாலை, நவநாள் திருப்பலி, பின்னர் அன்பிய மக்களின் கலை நிகழ்ச்சிகள் ஆகியவை நடக்கிறது. தொடர்ந்து விழா நாட்களில் தினமும் செபமாலை, திருப்பலி, கலைநிகழ்ச்சிகள் உள்பட நிகழ்ச்சிகள் நடைபெறுகின்றன.
9-ம் திருவிழாவான 28-ந் தேதி மாலை 6.30 மணிக்கு ஜெபமாலை, ஆடம்பர மாலை வழிபாடு, நற்கருணை ஆசீர், இரவு 9 மணிக்கு ஆடம்பர தேர்ப்பவனி நடக்கிறது. 10-ம் திருவிழாவான 29-ந் தேதி காலை 8.30 மணிக்கு ஜெபமாலை, நிறைவு விழா திருப்பலி, முதல் திருவிருந்து திருப்பலி, திருக்கொடியிறக்கம் ஆகியவை நடக்கிறது. இதற்கு அருட்பணியாளர் லூர்து தலைமை தாங்க, காரங்காடு வட்டார முதல்வர் ஜார்ஜ் மறையுரையாற்றுகிறார். மாலை 6 மணிக்கு மறைக்கல்வி மன்ற ஆண்டுவிழாவினை தொடர்ந்து பங்கு இறைமக்கள் இணைந்து நடத்தும் நாடகம் நடக்கிறது.
இதற்கான ஏற்பாடுகளை பங்குத்தந்தை சிறில் தனிஸ்லாஸ், பங்கு பேரவை துணைத்தலைவர் தெரேசம்மாள், செயலாளர் கலா ராணி, துணைச்செயலாளர் ஜஸ்டின், பொருளாளர் ராபர்ட் கிளாரன்ஸ், கட்டிட குழு தலைவர் லாரன்ஸ், செயலாளர் சுமி, பொருளாளர் செல்வகுமார் உள்பட பலர் இணைந்து செய்து வருகின்றனர்.

இயேசு வழங்கிய முக்கியமான போதனைகளில் ஒன்று மலைப்பொழிவு ஆகும்.
இயேசு வழங்கிய முக்கியமான போதனைகளில் ஒன்று மலைப்பொழிவு ஆகும். எல்லா மனிதரையும் நாம் அன்புசெய்ய வேண்டும் என்றும், குறிப்பாக நம் எதிரிகளை வெறுக்காமல் அவர்களை மன்னித்து ஏற்கவேண்டும் என்றும் இயேசு வழங்கிய போதனை மலைப்பொழிவில் உள்ளது. இயேசுவின் இப்போதனை தம் வாழ்வில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது என்று மகாத்மா காந்தி கூறியுள்ளார்.[13]
இயேசு வழங்கிய மலைப்பொழிவு மத்தேயு நற்செய்தியில் உள்ளது (காண்க: மத்தேயு - அதிகாரங்கள் 5 முதல் 7 முடிய). இப்பொழிவைப் பெரிதும் ஒத்த இன்னொரு பொழிவு சமவெளிப் பொழிவு என்று அழைக்கப்படுகிறது. அது லூக்கா நற்செய்தியில் உள்ளது (காண்க: லூக்கா 6:20-49).
இயேசு வழங்கிய மலைப்பொழிவின் தொடக்கப்பகுதி கீழே தரப்படுகிறது :
மத்தேயு 5:1-12
1 இயேசு மக்கள் கூட்டத்தைக் கண்டு மலைமீது ஏறி அமர, அவருடைய சீடர் அவரருகே வந்தனர்.
2 அவர் திருவாய் மலர்ந்து கற்பித்தவை:
3 ஏழையரின் உள்ளத்தோர் பேறுபெற்றோர்; ஏனெனில் விண்ணரசு அவர்களுக்கு உரியது.
4 துயருறுவோர் பேறுபெற்றோர்; ஏனெனில் அவர்கள் ஆறுதல் பெறுவர்.
5 கனிவுடையோர் பேறுபெற்றோர்; ஏனெனில் அவர்கள் நாட்டை உரிமைச் சொத்தாக்கிக் கொள்வர்.
6 நீதிநிலைநாட்டும் வேட்கை கொண்டோர் பேறுபெற்றோர்; ஏனெனில் அவர்கள் நிறைவுபெறுவர்.
7 இரக்கமுடையோர் பேறுபெற்றோர்; ஏனெனில் அவர்கள் இரக்கம் பெறுவர்.
8 தூய்மையான உள்ளத்தோர் பேறுபெற்றோர்; ஏனெனில் அவர்கள் கடவுளைக் காண்பர்.
9 அமைதி ஏற்படுத்துவோர் பேறுபெற்றோர்; ஏனெனில் அவர்கள் கடவுளின் மக்கள் என அழைக்கப்படுவர்.
10 நீதியின் பொருட்டுத் துன்புறுத்தப்படுவோர் பேறு பெற்றோர்; ஏனெனில் விண்ணரசு அவர்களுக்குரியது.
11 என் பொருட்டு மக்கள் உங்களை இகழ்ந்து, துன்புறுத்தி, உங்களைப் பற்றி இல்லாதவை பொல்லாதவையெல்லாம் சொல்லும்போது நீங்கள் பேறுபெற்றவர்களே!
12 மகிழ்ந்து பேருவகை கொள்ளுங்கள்! ஏனெனில் விண்ணுலகில் உங்களுக்குக் கிடைக்கும் கைம்மாறு மிகுதியாகும். இவ்வாறே உங்களுக்கு முன்னிருந்த இறைவாக்கினர்களையும் அவர்கள் துன்புறுத்தினார்கள்.

இயேசுவை பொறுத்தமட்டில் மக்களிடையே உயர்ந்தவர் தாழ்ந்தவர் என்னும் வேறுபாடு கிடையாது.
அக்கால யூத சமுதாயத்தில் உயர்ந்தோர் தாழ்ந்தோர் என்னும் வேறுபாடு நிலவியது. சமயச் சடங்குகளில் யார் பங்கேற்கலாம், யாரோடு உணவு அருந்தலாம், யாருடன் உறவு வைத்துக்கொள்ளலாம் என்பது குறித்து தீட்டு பற்றிய சட்டங்கள் பல இருந்தன. அச்சட்டங்களை இயேசு வேண்டுமென்றே மீறினார் என்னும் செய்தி நற்செய்தி நூல்களில் பல இடங்களில் வருகிறது.
அவரைப் பொறுத்தமட்டில் மக்களிடையே உயர்ந்தவர் தாழ்ந்தவர் என்னும் வேறுபாடு கிடையாது. எல்லா மனிதரும் ஒரே கடவுளின் பிள்ளைகளே. எனவேதான் அன்றைய சமுதாயம் பாவிகள் என்றும் ஒதுக்கப்பட்டவர் என்றும் தீட்டுப்பட்டவர் என்றும் கருதிய மக்களோடு ஒன்றாக அமர்ந்து விருந்துண்டார். அன்றைய தூய்மைச் சட்டங்களை மீறினார். இதைக் கண்ட இயேசுவின் எதிரிகள் அவர் "வரிதண்டுபவர்களுக்கும் பாவிகளுக்கும் நண்பன்" (மத்தேயு 11:19) என்று இழித்துரைத்தார்கள்.
ஏழைகளோடும் தாழ்த்தப்பட்டவர்களோடும் இயேசு நெருங்கிப் பழகியது அம்மக்களது வாழ்க்கையில் அதிசயமான மாற்றத்தை ஏற்படுத்தியது என்று நற்செய்தி நூல்கள் பதிவுசெய்துள்ளன. ஆனால் இயேசுவின் எதிரிகள் அவரிடம் குற்றம் கண்டனர். தாழ்ந்த தொழிலாகக் கருதப்பட்ட வரிதண்டும் தொழிலைச் செய்தவர் மத்தேயு.
அவர் சுங்கச்சாவடியில் அமர்ந்திருந்ததைக் கண்ட இயேசு அவரைப் பார்த்து, "என்னைப் பின்பற்றி வா" என்றார். அவரும் எழுந்து இயேசுவைப் பின்பற்றிச் சென்றார். பின்பு மத்தேயு வீட்டில் இயேசு விருந்து அருந்தினார். பரிசேயர்கள் இதைக் கண்டனர். உடனே அவர்கள் இயேசுவின் சீடரிடம், "உங்கள் போதகர் வரிதண்டுபவர்களோடும் பாவிகளோடும் சேர்ந்து உண்பது ஏன்?" (மத்தேயு 9:11) என்று கேள்வி எழுப்பினார்கள்.
அதற்கு இயேசு அளித்த பதில் அவர் மனிதரிடையே ஏற்றத்தாழ்வு கற்பிக்கவில்லை என்பதைக் காட்டுகிறது. இயேசு கூறியது: "நோயற்றவர்க்கு அல்ல, நோயுற்றவர்க்கே மருத்துவர் தேவை. 'பலியை அல்ல, இரக்கத்தையே விரும்புகிறேன்' என்பதன் கருத்தை நீங்கள் போய்க் கற்றுக்கொள்ளுங்கள்; ஏனெனில் நேர்மையாளரை அல்ல, பாவிகளையே அழைக்க வந்தேன்" என்றார் (மத்தேயு 9:12-13).

ராஜாவூர் புனித மிக்கேல் அதிதூதர் திருத்தலத்தில் தேர் பவனி இன்று நடக்கிறது.
ராஜாவூரில் புகழ்பெற்ற புனித மிக்கேல் அதிதூதர் திருத்தலம் உள்ளது. இந்த திருத்தலத்தின் திருவிழா கடந்த 6-ந் தேதி தொடங்கி நடந்து வருகிறது. திருவிழாவில் 9-வது நாளான இன்று (சனிக்கிழமை) காலை 6 மணிக்கு திருமுழுக்கு திருப்பலி, மாலை 4.30 மணிக்கு நவநாள் திருப்பலி, 6.15 மணிக்கு மாலை ஆராதனை, இரவு 9 மணிக்கு தேர் பவனி போன்றவை நடக்கிறது.
திருவிழாவின் இறுதி நாளான நாளை (ஞாயிற்றுக்கிழமை) காலை 5.30 மணிக்கு கோட்டார் மறைமாவட்ட ஆயர் பீட்டர் ரெமிஜியூஸ் தலைமையில் திருவிழா கூட்டுத்திருப்பலி நடக்கிறது. தொடர்ந்து காலை 8.30 மணிக்கு மலையாளத்தில் திருப்பலியும், தேர் பவனியும் நடக்கிறது.
இரவு 7 மணிக்கு தேரில் திருப்பலியும், இரவு 9 மணிக்கு கலைநிகழ்ச்சியும் நடக்கிறது. இதற்கான ஏற்பாடுகளை பங்கு அருட்பணியாளர் ரால்ப்கிராண்ட் மதன், இணை பங்கு அருட்பணியாளர் சுதர்சன், பங்கு பேரவை துணைத்தலைவர் கிளாட்சன், செயலாளர் அலெக்சாண்டர், துணை செயலாளர் ஜிங்லின் ஷைனுஜா, பொருளாளர் ஜார்ஜ் சகாய ஜோஸ் மற்றும் அருட்சகோதரிகள் செய்துள்ளனர்.

விருத்தாசலம் அருகே புனித ஆரோக்கிய அன்னை தேவாலயத்தில் நடைபெற்ற தேர்பவனியில் திரளான கிறிஸ்தவர்கள் கலந்து கொண்டனர்.
விருத்தாசலம் அருகே புதுவிருத்தகிரிகுப்பம் கிராமத்தில் பிரசித்தி பெற்ற புனித ஆரோக்கிய அன்னை தேவாலயம் உள்ளது. இந்த தேவாலயத்தில் ஆண்டுதோறும் தேர்பவனி வெகு விமரிசையாக நடைபெறுவது வழக்கம். அதன்படி இந்த ஆண்டுக்கான திருவிழா கடந்த 10-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதையடுத்து தினந்தோறும் தேவாலயத்தில் சிறப்பு திருப்பலி, கூட்டு பிரார்த்தனை நடைபெற்று வந்தது.
விழாவில் முக்கிய நிகழ்ச்சியான ஆடம்பர தேர்பவனி விழா நேற்று முன்தினம் நடந்தது. இதையொட்டி தேவாலயத்தில் காலை 7.30 மணிக்கு திருப்பலி நடந்தது. இதை தொடர்ந்து இரவு 10 மணிக்கு பங்கு தந்தை நிர்மல்ராஜ் மற்றும் உதவி பங்கு தந்தை மரியசூசை ஆகியோர் தலைமையில் சிறப்பு திருப்பலி நடைபெற்றது.
பின்னர் 11 மணிக்கு புனித ஆரோக்கிய அன்னை ஆடம்பர தேர் பவனி நடந்தது. இதில் வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட தேரானது முக்கிய வீதிகள் வழியாக சென்று மீண்டும் தேவாலயத்தை வந்தடைந்தது. விழாவில் இருப்புக்குறிச்சி, புதுவிருத்தகிரிகுப்பம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த திரளான கிறிஸ்தவர்கள் கலந்து கொண்டனர்.

வழுக்கம்பாறை இடைவிடா சகாய அன்னை ஆலய திருவிழா இன்று கொடியேற்றத்துடன் தொடங்குகிறது.
சுசீந்திரம் வழுக்கம்பாறை சகாயபுரம் இடைவிடா சகாய அன்னை ஆலய திருவிழா இன்று (வெள்ளிக்கிழமை) கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. இன்று மாலை 6 மணிக்கு ஜெபமாலை, திருக்கொடியேற்றம், திருப்பலி நடக்கிறது. நிகழ்ச்சிக்கு கொட்டாரம் பங்குத்தந்தை வலேரியன் தலைமை தாங்குகிறார். சின்னமுட்டம் பங்குத்தந்தை கிறிஸ்துராஜ் அருளுரை வழங்குகிறார். வருகிற 22-ந்தேதி வரை 10 நாட்கள் திருவிழா நடக்கிறது.
நாளை (சனிக்கிழமை) மாலை 6 மணிக்கு நடைபெறும் ஜெபமாலை, திருப்பலிக்கு குழித்துறை மறை மாவட்ட ஆயர் ஜெரோம்தாஸ் தலைமை தாங்கி அருளுரை வழங்குகிறார். 15-ந்தேதி மாலை 6 மணிக்கு நடைபெறும் ஜெபமாலை, திருப்பலிக்கு கோட்டார் மறை மாவட்ட ஆயர் பீட்டர் ரெமிஜியுஸ் தலைமை தாங்கி அருளுரை வழங்குகிறார்.
தினமும் மாலை ஜெபமாலை, திருப்பலி நடக்கிறது. 22-ந்தேதி மாலை 6 மணிக்கு திருப்பலி, கொடியிறக்கம் நடக்கிறது. இதற்கான ஏற்பாடுகளை பங்குதந்தை ஜார்ஜ் வின்சென்ட் தலைமையில் பங்கு பேரவை உறுப்பினர்கள், பங்கு மக்கள் செய்து வருகிறார்கள்.

பூமியில் வாழும் மானிடர்கள் அனைவருமே இயேசுவின் வழியில், இயேசுவாக வாழவேண்டும் என்பதையே பரம பிதா எதிர்பார்க்கிறார்.
ஆதாம் முதல் இயேசுவின் பிறப்பு வரையிலான காலம் கி.மு. என அழைக்கப்படுகிறது. ஆதியிலேயே கடவுள் தந்தை, மகன், தூய ஆவி எனும் திரித்துவ நிலையில் இருந்தார். ஆதாமை கடவுள் படைத்தது முதல், இயேசுவின் பிறப்பு வரையிலான நிகழ்வுகள் பழைய ஏற்பாட்டில் இடம் பெற்றிருக்கின்றன. முதல் மனிதர்கள் ஆதாமும், ஏவாளும் பாவம் செய்து கடவுளின் வழியை விட்டு விலகினர். இறைவன் மனம் வருந்தினார், தனது மக்களை நல் வழிப்படுத்த இறைவாக்கினர்களை ஏற்படுத்தினார். அவர்கள் கடவுளின் குரலாக இருந்தார்கள். இருந்தாலும் மனித குலம் பாவத்தில் ஆழமாய் பயணித்துக் கொண்டே இருந்தது.
கடைசியாகக் கடவுள் தனது ஒரே மகனை உலகிற்கு அனுப்பினார். அவர் குரலாக மட்டும் இல்லாமல் செயலாகவும் இருந்தார். கடவுளுக்கு ஏற்புடைய வாழ்க்கை என்பது எது?, எந்த வாழ்க்கை கடவுளுக்குப் பிரியமானது என்பதை அவர் ஒவ்வொரு நாளும் தனது செயலால் நடத்திக் காட்டினார். இப்படி அவர் நமக்கு முன் செல்லும் ஒரு முன் மாதிரியானார். மோசேயின் வழியாகக் கடவுள் கொடுத்த பத்துக் கட்டளைகள் பழைய ஏற்பாட்டு மக்களுக்கு வழிகாட்டியாக அமைந்தன. பழைய ஏற்பாட்டில் மொத்தம் 613 கட்டளைகள் உள்ளன. காலப்போக்கில் அந்தக் கட்டளைகளில் பெரும்பாலானவை வெறும் சடங்குகளாகவும், ஏழைகளை ஏய்ப்பதற்கு வலியவர்கள் பயன்படுத்தும் ஆயுதமாகவும் மாறிப்போயின.
இயேசுவின் வருகையானது, ‘தூய்மை என்பது என்ன?’ என்பதை உலகிற்குப் பறைசாற்றும் விதமாக அமைந்தது. அதுவரை இருந்த சட்டங்கள், கட்டளைகள் எல்லாமே செயல்களின் அடிப்படையிலேயே இருந்தன. தவறான செயல்களைச் செய்யக் கூடாது, தீமை செய்யக் கூடாது, நன்மை செய்யவேண்டும் என்பவையே கட்டளைகளாக கடைப்பிடிக்கப்பட்டு வந்தன. ஆனால் இயேசு, கட்டளைகளை போதனைகளின் வழியே மக்களிடம் கொண்டு சேர்த்தார். ‘சிந்தனைகளைச் சீர்செய்யவேண்டும். அகத்தை அழகுபடுத்தாமல் வெளியே அழகுபடுத்துவதில் எந்த அர்த்தமும் இல்லை’ என்றார். அகத்தூய்மை இல்லாதவர்களை, ‘வெள்ளையடிக்கப்பட்ட கல்லறைகள்’ என்றழைத்தார்.
கொலை செய்வது பாவம் என்று சட்டங்கள் போதித்த காலத்தில், கோபம் கொள்வதும் பாவமே என அடித்து கூறினார். மேலும் ‘கொலை எனும் செயலைத் தடுப்பது கிளைகளை வெட்டுவது போல, கோபத்தை அழிப்பது அதன் வேர்களை அழிப்பது போல’ என கோபத்தின் விளைவுகளை மக்களிடம் விளக்கினார். விபசாரம் செய்வது பாவம் என்று சட்ட திட்டங்கள் சொன்னபோது, ‘கண்களினால் ஒரு பெண்ணை இச்சையுடன் பார்ப்பது பாவமே’ என்றார் இயேசு.
இப்படி முறையில்லாமல் குவிந்து கிடந்த சட்டங்களை இரண்டு கட்டளைகளில் அடக்கினார்.
‘உன் முழு இதயத்தோடும், முழு உள்ளத்தோடும், முழு மனதோடும் உன் ஆண்டவராகிய கடவுளிடம் அன்பு செலுத்து’.
‘உன் மீது நீ அன்பு கூர்வது போல உனக்கு அடுத்திருப்பவர் மீதும் அன்பு கூர்வாயாக’ என்று முத்தாய்ப்பாய்ச் சொன்னார். இயேசு தனது முதல் முப்பது ஆண்டுகளில் பெற்றோருக்குக் கீழ்ப்படிந்து நடப்பவராக இருந்தார். அதன் பின் மூன்றரை ஆண்டுகள் அவருடைய பணி விண்ணக வாழ்வையும், பாவத்தை விட்டு மனம் திரும்புவதையும் போதிப்பதாய் இருந்தது. ஏழைகளையும், பாவிகளையும் நேசித்த அவர், மதத்தின் பெயரால் ஏழைகளை ஏய்ப்பவர்களை சாடினார். விபசாரத்தில் பிடிபட்ட பெண்ணை மன்னித்த இயேசு, தலைமைக் குருக்களையோ கடிந்து பேசினார். சுருக்கமாகச் சொல்ல வேண்டுமெனில் பலவீனர்களின் பக்கம் நின்றார், இயேசு.
இயேசுவின் போதனைகள் மதத்தலைவர்களுக்கு பெரும் தலைவலியாகிப் போனது. அவர்களுடைய வருமானம் குறைந்தது. அவர்கள் மீது மக்களுக்கு இருந்த பயம் விலகியது. இயேசுவின் பின்னால் மக்கள் கூட்டம் பெருக ஆரம்பித்தது. அவருடைய நிழல் பட்டாலே நோய்கள் நீங்கின.
அவருடைய குரல் கேட்டாலே பேய்களும் பதறி ஓடின. அவருடைய வார்த்தைகள் எளிமையின் உச்சமாகவும், கூர்மையின் உச்சமாகவும் இருந்தன. எனவே மதத்தலைவர்கள் இயேசுவை அழிக்க முடிவு செய்தனர். அதற்காக பொய் சாட்சிகளை தயாரித்தனர். நள்ளிரவில் கைது செய்து விடியும் முன் அவரை குற்றவாளியாக்கி, என்ன நடக்கிறது என மக்கள் குழம்பி தீர்வதற்குள் அவரை சிலுவையில் அறைந்தனர்.
‘புனிதமான வாழ்க்கையை வாழ்வது எப்படி..?’ என வாழ்ந்து காட்டிய இயேசு, உலக மக்களின் பாவங்களை ஏற்று தன்னையே பலியாக்கினார்’, இயேசுவின் வருகையின் நோக்கமும் அதுவாகவே இருந்தது. பழைய ஏற்பாட்டில் ஆடுகளைப் பலி செலுத்தி பாவங்களை தீர்ப்பார்கள். ஒட்டு மொத்த மனுக்குலப் பாவத்தைத் தீர்க்க ஒரே வழி கடவுளே அதை ஏற்பது தான். அதைத் தான் இயேசு செய்தார்.
பாவங்களை அறிக்கையிட்டு இயேசுவிடம் மன்னிப்பு வேண்டும் போது அவருடைய மீட்பில் எத்தகைய கொடிய பாவியாக இருந்தாலும் இணையலாம். இயேசுவின் வாழ்க்கையை, போதனையை முழுமையாய் அறிவது, இயேசு இப்படித் தான் செய்வாரா? என கேள்வி எழுப்பினாலே போதும், அவர் வழியில் வாழ... பதில் கிடைத்துவிடும். அதன்படியே வாழ்க்கை தொடரும் பட்சத்தில் இயேசுவாகவே வாழலாம். நம்முடைய மீட்பர் விரும்புவதும் அதுவே. பூமியில் வாழும் மானிடர்கள் அனைவருமே இயேசுவின் வழியில், இயேசுவாக வாழவேண்டும் என்பதையே பரம பிதா எதிர்பார்க்கிறார். அதனால் இயேசுவின் வழியிலே வாழ்வோம்..., இயேசுவாகவே வாழ்வோம்.

வழுக்கம்பாறை இடைவிடா சகாய அன்னை ஆலய திருவிழா நாளை தொடங்கி 10 நாட்கள் நடக்கிறது.
நாகர்கோவில் - கன்னியாகுமரி தேசிய நெடுஞ்சாலையில் வழுக்கம்பாறையில் இடைவிடா சகாய அன்னை திருத்தலம் உள்ளது. இந்த திருத்தல திருவிழா நாளை (வெள்ளிக்கிழமை) தொடங்கி வருகிற 22-ந் தேதி வரை 10 நாட்கள் நடக்கிறது. நாளை மாலை 6 மணிக்கு கொட்டாரம் பங்கு அருட்பணியாளர் வலேரியன் தலைமையில் ஜெபமாலை, கொடியேற்றம் நடக்கிறது. சின்னமுட்டம் பங்கு அருட்பணியாளர் கிறிஸ்துராஜ் அருளுரை நிகழ்த்துகிறார்.
தொடர்ந்து வருகிற திருவிழா நாட்களில் ஜெபமாலை, திருப்பலி, கலை நிகழ்ச்சிகள் நடக்கிறது.
வருகிற 15-ந் தேதி மாலை 6 மணிக்கு கோட்டார் மறைமாவட்ட ஆயர் பீட்டர் ரெமிஜியூஸ் தலைமையில் ஜெபமாலை, திருப்பலி, அருளுரை நடக்கிறது. வருகிற 21-ந் தேதி மாலை 6 மணிக்கு மறைமாவட்ட பொருளாளர் பிரான்சிஸ்போர்ஜியோ தலைமையில் ஜெபமாலை, திருப்பலி நடக்கிறது. வாவாத்துறை பங்கு அருட்பணியாளர் ஜாண் ஜோர்கென்சன் அருளுரை வழங்குகிறார். இரவு 8 மணிக்கு நாடகம் நடக்கிறது.
திருவிழா இறுதி நாளான 22-ந் தேதி அதிகாலை 5 மணிக்கு திருப்பலியும், காலை 8 மணிக்கு கோட்டார் மறைமாவட்ட ஒப்புரவாளர் அருட்பணியாளர் டயனீஷியஸ் தலைமையில் திருவிழா சிறப்பு திருப்பலியும், முதல் திருவிருந்து வழங்கும் நிகழ்ச்சியும் நடக்கிறது. மாலை 6 மணிக்கு திருப்பலியும், கொடியிறக்கமும் தொடர்ந்து இன்னிசை நிகழ்ச்சியும் நடக்கிறது.
இதற்கான ஏற்பாடுகளை பங்கு அருட்பணியாளர் ஜார்ஜ் வின்சென்ட் தலைமையில் பங்குபேரவை உறுப்பினர்கள், பங்கு மக்கள் செய்து வருகிறார்கள்.

அமராவதிவிளை தூய அந்தோணியார் ஆலய திருவிழா நாளை (வெள்ளிக்கிழமை) தொடங்கி 10 நாட்கள் நடக்கிறது.
அமராவதிவிளை, கோடி அற்புதர் தூய அந்தோணியார் ஆலய திருவிழா நாளை (வெள்ளிக்கிழமை) தொடங்கி வருகிற 22-ந் தேதி வரை 10 நாட்கள் நடக்கிறது. திருவிழா முதல் நாளான நாளை மாலை 6 மணிக்கு ஜெபமாலை, கொடியேற்றம், திருப்பலி நடக்கிறது. 14-ந் தேதி மாலை 6 மணிக்கு ஜெபமாலை, நவநாள், திருப்பலி, இரவு 8 மணிக்கு பொதுக்கூட்டம், கலை நிகழ்ச்சிகள் நடைபெறுகிறது.
வருகிற 15-ந் தேதி திருவிழாவின் முக்கிய நிகழ்வாக புதிய பங்கு உதயமாகும் விழா, ஒன்றிப்பு விழா கொண்டாடப்படுகிறது. அன்று மாலை 5 மணிக்கு ஜெபமாலை, நவநாள், 5.30 மணிக்கு கோட்டார் மறைமாவட்ட ஆயர் பீட்டர் ரெமிஜியுஸ் தலைமையில் கூட்டுத்திருப்பலி நடக்கிறது. இரவு 8 மணிக்கு அன்பின் விருந்து நடக்கிறது.
தொடர்ந்து வருகிற திருவிழா நாட்களில் மாலையில் ஜெபமாலை, நவநாள், திருப்பலி, ஆண்டுவிழா கலை நிகழ்ச்சி போன்றவை நடக்கிறது. வருகிற 21-ந் தேதி காலை 7 மணிக்கு திருப்பலி, மாலை 6 மணிக்கு ஜெபமாலை, நவநாள், 6.30 மணிக்கு நற்கருணை ஆராதனை, இரவு 8 மணிக்கு தேர்ப்பவனி, வாணவேடிக்கை போன்றவை நடைபெறுகிறது.
திருவிழாவின் இறுதி நாளான 22-ந் தேதி காலை 7.30 மணிக்கு திருப்பலி, முதல் திருவிருந்து வழங்குதல் போன்றவை நடைபெறுகிறது. நிகழ்ச்சியில் வட்டார முதன்மை அருட்பணியாளர் ஆல்பர்ட் ஜார்ஜ் அலெக்சாண்டர் தலைமை தாங்குகிறார். இரவு 8 மணிக்கு பொதுக்கூட்டம், கலை நிகழ்ச்சிகள் நடைபெறுகிறது.
இதற்கான ஏற்பாடுகளை திருவிழா குழுவினர் செய்துள்ளனர்.

தளவாய்புரம் புனித ஜார்ஜியார் ஆலய திருவிழா நாளை தொடங்கி 10 நாட்கள் நடக்கிறது.
தளவாய்புரம் புனித ஜார்ஜியார் ஆலய திருவிழா நாளை (வெள்ளிக்கிழமை) தொடங்கி 22-ந் தேதி வரை 10 நாட்கள் நடக்கிறது. திருவிழா முதல் நாளான நாளை மாலை 6.15 மணிக்கு ஜெபமாலை, தொடர்ந்து கொடியேற்றம், திருப்பலி, இரவு 9 மணிக்கு கலை நிகழ்ச்சிகள் நடக்கிறது. 14-ந் தேதி மாலை 6.30 மணிக்கு ஜெபமாலை, திருப்பலி, கலை நிகழ்ச்சி நடக்கிறது.
வருகிற 15-ந் தேதி காலை 8 மணிக்கு திருப்பலி, பிற்பகல் 3 மணிக்கு நற்கருணை ஆசீர், இரவு 9 மணிக்கு மறைக்கல்வி மன்ற கலை நிகழ்ச்சி போன்றவை நடக்கிறது. தொடர்ந்து வருகிற திருவிழா நாட்களில் 16-ந் தேதி முதல் 20-ந் தேதி வரை மாலையில் ஜெபமாலை, திருப்பலி, கலை நிகழ்ச்சிகள் நடக்கிறது.
21-ந் தேதி காலை 7 மணிக்கு திருப்பலி, முதல் திருவிருந்து வழங்குதல் போன்றவை நடக்கிறது. மாலை 6.30 மணிக்கு ஜெபமாலை, மாலை ஆராதனை, நற்கருணை ஆசீர், இரவு 9 மணிக்கு தேர்ப்பவனி, வாணவேடிக்கை போன்றவை நடைபெறுகிறது. திருவிழாவின் இறுதி நாளான 22-ந் தேதி காலை 8 மணிக்கு திருவிழா திருப்பலி, பிற்பகல் 3 மணிக்கு தேர்ப்பவனி, இரவு 7 மணிக்கு கொடியிறக்குதல் தொடர்ந்து நற்கருணை ஆசீர், கலை நிகழ்ச்சிகள் போன்றவை நடக்கிறது.
இதற்கான ஏற்பாடுகளை பங்கு அருட்பணியாளர் தலைமையில் பங்கு மக்கள் செய்துள்ளனர்.

சதுசேயர்களோ முக்கியமான பொறுப்புகளில் இருந்தார்கள். சதுசேயர்களைப் பற்றி பைபிள் கீழ்க்கண்டவற்றைச் சொல்கிறது.
இயேசு தனது போதனைகளின் மூலமாக மக்களை வசீகரித்துக் கொண்டிருந்த ஒரு பொழுதில் ஒரு கூட்டத்தினர் இயேசுவிடம் வந்தார்கள்.
‘இயேசுவே எங்களுக்கு ஒரு சந்தேகம். திருமணமான ஒருவர் குழந்தைகள் இல்லாமல் இறந்து போனால், அவருடைய மனைவியை, அவனுடைய சகோதரன் மணந்து கொள்ளலாம் என்பது மோசேயின் சட்டம். அப்படியே இரண்டாம், மூன்றாம் என ஏழாம் சகோதரர் வரை அவளை மணம் முடித்தனர். யாருக்கும் குழந்தைகள் இல்லை. எல்லோரும் இறந்தனர். கடைசியில் அந்தப் பெண்ணும் இறந்தாள். உயிர்த்தெழும் போது அவள் அந்த ஏழு பேரில் யாருக்கு மனைவியாய் இருப்பாள்?’
இயேசுவை வகையாய் மடக்கிவிட்ட கேள்வியைக் கேட்டுவிட்டோம் எனும் நிம்மதி அவர்களுக்கு. காரணம் சதுசேயர்கள் உயிர்ப்பை நம்புவதில்லை. இன்னொரு வாழ்வு உண்டு என்பதையும், தேவதூதர்கள் உண்டு என்பதையும் நம்புவதில்லை. இயேசுவோ உயிர்ப்பையும், மறுவாழ்வையும் போதித்தவர். சதுசேயர்கள் மோசேயின் போதனைகளை கடைப்பிடித்து வாழ்ந்தவர்கள்.
அவர்களுடைய கேள்வியின் நோக்கம் இயேசுவுக்கு தெளிவாகத் தெரிந்தது. அவர் புன்னகைத்தார்.
‘உங்களுக்கு மறைநூலும் தெரியவில்லை, கடவுளைப் பற்றியும் தெரியவில்லை. அதனால் தான் இப்படியெல்லாம் பேசுகிறீர்கள். உயிர்த்தெழுந்தவர்கள் யாரும் திருமணம் செய்வதில்லை. அவர்கள் வான தூதர்களைப் போல இருப்பார்கள்’ என்றார்.
அவருடைய பதிலைக் கேட்ட மக்கள் வியந்து போனார்கள்.
சதுசேயர்கள் இயேசு வாழ்ந்த காலத்தில் மிகுந்த செல்வாக்கோடு இருந்த ஒரு பிரிவினர். கி.மு. ஐந்தாம் நூற்றாண்டு முதல் கி.பி. 70–ம் ஆண்டு வரை இவர்களுடைய குழு இருந்தது. அதன் பின்னர் இவர்கள் வரலாற்றிலிருந்து காணாமல் போய்விட்டனர்.
மோசேயின் சட்ட நூல்களான தோராவை மட்டுமே தங்கள் வாழ்க்கை நெறியாகக் கொண்டவர்கள் இவர்கள். பிற செவி வழி சட்டங்களை இவர்கள் ஏற்கவில்லை.
தோராவுடன் சேர்த்து இவர்களிடம் ‘கட்டளைகளின் நூல்’ ஒன்றும் இருந்தது. அதில் ஏராளமான கட்டளைகள் இருந்தன. யாரெல்லாம் கழுத்து நெரித்துக் கொல்லப்பட வேண்டும், யாரெல்லாம் உயிரோடு எரிக்கப்பட வேண்டும், யாரெல்லாம் தூக்கிலிடப்பட வேண்டும் என்றெல்லாம் அந்த நூல் விலாவரியாய் பேசியது.
மற்ற குழுக்களை விட பல விதங்களில் இவர்கள் வேறுபட்டிருந்தனர். முதலாவதும் முக்கியமானதும் உயிர்ப்பு சம்பந்தமானது. ஆன்மா என்பது அழிவற்றது அல்ல. மரணத்தோடு அதன் வாழ்க்கை முடிந்து போகிறது. எனவே மரணத்துக்குப் பின் வாழ்க்கை இல்லை என்பது இவர் களுடைய நம்பிக்கைகளில் முக்கியமானது. இறப்புக்கு பின் நாம் செய்த நன்மைகளுக்கான பலனோ, தீமைகளுக்கான தண்டனையோ கிடைப்பதில்லை என நம்பினார்கள்.
ஜென்ம பாவம் என்பது இல்லை. ‘பாவம்’ என்பது அவரவர் செய்வதன் அடிப்படையிலானது மட்டுமே என்பது இவர்களுடைய நம்பிக்கைகளில் இன்னொன்று. அதே போல, கடவுள் செய்ய மாட்டார் என்றும் இவர்கள் நம்பினார்கள்.
கோவில் சார்ந்த பணிகளில் இவர்கள் அதிகமாக ஈடுபட்டனர். அரசியல் சார்ந்த பணிகளிலும், ராணுவம் சார்ந்த பணிகளிலும் இவர்களுடைய ஈடுபாடு கணிசமாய் இருந்தது.
சமூக தளத்தில் சதுசேயர்கள் நல்ல வசதிபடைத்தவர்களாக இருந்தார்கள். ஆலயங்களின் அருகிலே தங்கி வந்தார்கள். செல்வச் செழிப்பான வாழ்க்கை வாழ்ந்து வந்தார்கள். பெரும்பாலான போதகர்கள் அந்தக் காலத்தில் சதுசேயர்களாகவே இருந்தார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
இயேசுவின் காலத்தில் மதகுருக்கள், அவர் மீது கொலை வெறியில் இருந்தார்கள். யூதாசுக்கு பணம் கொடுத்து இயேசுவை காட்டிக் கொடுக்க வைத்தவர்களும் அவர்களே, இயேசுவை நேரடியாய் பிடித்தவர்களும் அவர்களே, இயேசுவுக்கு எதிராய் பொய்சாட்சி சொல்லமக்களைத் தூண்டி விட்டதும் அவர்களே. இப்படி இயேசுவின் மரணத்தோடு நேரடித் தொடர்பு கொண்டவர்களாக சதுசேயர்கள் இருந்தார்கள்.
பரிசேயர்கள் மக்கள் செல்வாக்குடன் இருந்தார்கள். சதுசேயர்களோ முக்கியமான பொறுப்புகளில் இருந்தார்கள். சதுசேயர்களைப் பற்றி பைபிள் கீழ்க்கண்டவற்றைச் சொல்கிறது.
1. இயேசு இறைபணி செய்தபோதெல்லாம் ‘எந்த அதிகாரத்தில் இதையெல்லாம் செய்கிறீர்?’ என எதிர்த்து நின்றார்கள்.
2. இயேசுவின் போதனைகள் மக்களிடம் சென்றுவிடக் கூடாது என தீவிரமாய்ச் சிந்தித்தார்கள்.
3. இயேசுவின் போதனைகள், தங்களுடைய செல்வாக்கை அழித்துவிடும் என்று பயந்தார்கள். அதனால் இயேசுவின் மீது பொறாமை கொண்டார்கள்.
4. இயேசுவை மக்கள் முன்னிலையில் அவமானப்படுத்த முயற்சிகளை மேற்கொண்டார்கள்.
5. சட்டங்களை மேற்கோள் காட்டி இயேசுவை பலவீனப்படுத்த முயன்றார்கள்.
6. எல்லாம் தோல்வியில் முடிய, இயேசுவைக் கொல்ல வேண்டுமென மும்முரம் காட்டினார்கள்.
7. பிலாத்துவிடமும், மற்ற உயரதிகாரிகளிடமும் இயேசுவின் மரணத்துக்காக வாதாடினார்கள்.
8. இயேசுவின் உயிர்ப்புக்குப் பின்பும் அவர்கள் மனம் மாறவில்லை, கிறிஸ்தவத்தைப் போதித்த பவுலைக் கொல்ல மும்முரம் காட்டினார்கள்.
9. ஏழைகள் மீதும், வறியவர்கள் மீதும் சற்றும் கரிசனையின்றி இருந்தார்கள். ஆலய வருமானத்தின் மீது அதிக கவனம் இருந்தது.
10. உயிர்ப்பு, சொர்க்கம், தூதர்கள் இவற்றையெல்லாம் நம்பாததால் உலகத் தலைவர்களையே சார்ந்து வாழ்ந்து வந்தார்கள்.