என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    இடைவிடா சகாய அன்னை ஆலய திருவிழா நாளை தொடங்குகிறது
    X

    இடைவிடா சகாய அன்னை ஆலய திருவிழா நாளை தொடங்குகிறது

    வழுக்கம்பாறை இடைவிடா சகாய அன்னை ஆலய திருவிழா நாளை தொடங்கி 10 நாட்கள் நடக்கிறது.
    நாகர்கோவில் - கன்னியாகுமரி தேசிய நெடுஞ்சாலையில் வழுக்கம்பாறையில் இடைவிடா சகாய அன்னை திருத்தலம் உள்ளது. இந்த திருத்தல திருவிழா நாளை (வெள்ளிக்கிழமை) தொடங்கி வருகிற 22-ந் தேதி வரை 10 நாட்கள் நடக்கிறது. நாளை மாலை 6 மணிக்கு கொட்டாரம் பங்கு அருட்பணியாளர் வலேரியன் தலைமையில் ஜெபமாலை, கொடியேற்றம் நடக்கிறது. சின்னமுட்டம் பங்கு அருட்பணியாளர் கிறிஸ்துராஜ் அருளுரை நிகழ்த்துகிறார்.

    தொடர்ந்து வருகிற திருவிழா நாட்களில் ஜெபமாலை, திருப்பலி, கலை நிகழ்ச்சிகள் நடக்கிறது.

    வருகிற 15-ந் தேதி மாலை 6 மணிக்கு கோட்டார் மறைமாவட்ட ஆயர் பீட்டர் ரெமிஜியூஸ் தலைமையில் ஜெபமாலை, திருப்பலி, அருளுரை நடக்கிறது. வருகிற 21-ந் தேதி மாலை 6 மணிக்கு மறைமாவட்ட பொருளாளர் பிரான்சிஸ்போர்ஜியோ தலைமையில் ஜெபமாலை, திருப்பலி நடக்கிறது. வாவாத்துறை பங்கு அருட்பணியாளர் ஜாண் ஜோர்கென்சன் அருளுரை வழங்குகிறார். இரவு 8 மணிக்கு நாடகம் நடக்கிறது.

    திருவிழா இறுதி நாளான 22-ந் தேதி அதிகாலை 5 மணிக்கு திருப்பலியும், காலை 8 மணிக்கு கோட்டார் மறைமாவட்ட ஒப்புரவாளர் அருட்பணியாளர் டயனீஷியஸ் தலைமையில் திருவிழா சிறப்பு திருப்பலியும், முதல் திருவிருந்து வழங்கும் நிகழ்ச்சியும் நடக்கிறது. மாலை 6 மணிக்கு திருப்பலியும், கொடியிறக்கமும் தொடர்ந்து இன்னிசை நிகழ்ச்சியும் நடக்கிறது.

    இதற்கான ஏற்பாடுகளை பங்கு அருட்பணியாளர் ஜார்ஜ் வின்சென்ட் தலைமையில் பங்குபேரவை உறுப்பினர்கள், பங்கு மக்கள் செய்து வருகிறார்கள்.
    Next Story
    ×