என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    இயேசுவின் திருஇருதய ஆலய குடும்ப விழா நாளை தொடங்குகிறது
    X

    இயேசுவின் திருஇருதய ஆலய குடும்ப விழா நாளை தொடங்குகிறது

    நாகர்கோவில் இயேசுவின் திருஇருதய ஆலய குடும்ப விழா நாளை தொடங்குகிறது.
    நாகர்கோவில் இயேசுவின் திரு இருதய ஆலய குடும்ப விழா நாளை (வெள்ளிக்கிழமை) தொடங்கி அடுத்த மாதம் 5-ந் தேதி வரை நடக்கிறது. விழாவில் நாளை காலையில் திருப்பலி, மாலையில் செபமாலை, இயேசுவின் திரு இருதய புகழ்மாலை, திருக்கொடியேற்றம், திருப்பலி ஆகியவை நடக்கிறது. 28-ந் தேதி காலையில் திருப்பலி, மாலையில் செபமாலை, இயேசுவின் திரு இருதய புகழ்மாலை, திருப்பலி நடக்கிறது.

    தொடர்ந்து அடுத்த மாதம் 3-ந் தேதி இரவில் சமபந்தி விருந்தும், 4-ந் தேதி காலையில் திருமுழுக்கு திருப்பலியும், 5-ந் தேதி காலையில் முதல் திருவிருந்து விழாவும், பெருவிழாத் திருப்பலியும், மாலையில் கொடியிறக்கமும் நடைபெறுகிறது. விழா நாட்களில் தினமும் காலையில் திருப்பலியும், மாலையில் செபமாலையும், இயேசுவின் திரு இருதய புகழ்மாலையும், திருப்பலியும் நடக்கிறது.
    Next Story
    ×