என் மலர்tooltip icon

    செய்திகள்

    திண்டுக்கல் அருகே வினோத திருவிழா: மெழுகுவர்த்தி ஏந்தி முழங்காலிட்டு தேரை சுற்றி வந்த பக்தர்கள்
    X

    திண்டுக்கல் அருகே வினோத திருவிழா: மெழுகுவர்த்தி ஏந்தி முழங்காலிட்டு தேரை சுற்றி வந்த பக்தர்கள்

    திண்டுக்கல் அருகே கையில் மெழுகுவர்த்தி ஏந்தி முழங்காலிட்டு தேரை சுற்றி பக்தர்கள் நேர்த்தி கடன் செலுத்தும் நிகழ்ச்சி நடைபெற்றது.
    திண்டுக்கல் அருகில் உள்ள மறவபட்டிபுதூரில் புனித சலேத்மாதா ஆலயம் அமைந்துள்ளது. இங்கு ஒவ்வொரு வருடமும் வைகாசி மாதம் சப்பர தேர் பவனி நடைபெறும். 131–வது ஆண்டு திருவிழா கடந்த 20–ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. அதனைத் தொடர்ந்து திருப்பலி, புதுநன்மை வழங்குதல், மின்தேர் அர்ச்சிப்பு, மின்தேர்பவனி, வாணவேடிக்கை உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடைபெற்றன.

    திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியாக நேற்று மாலை சலேத் மாதாவின் தேர் பவனி நடைபெற்றது. அப்போது தேரை சுற்றி பக்தர்கள் முழங்காலிட்டு கையில் மெழுகுவர்த்தி ஏந்தியபடி சுற்றி வந்து நேர்த்திகடன் செலுத்தினர்.


    மேலும் அங்கபிரதட்சணம் செய்தும் வழிபட்டனர். இது குறித்து பக்தர்கள் கூறுகையில், சலேத் அன்னையிடம் எந்த வேண்டுதல் வைத்தாலும் அது நிறைவேறும். எங்கள் கோரிக்கை நிறைவேறிய பிறகு நடைபெறும் திருவிழாவின்போது முழங்காலிட்டு நேர்த்தி கடன் செலுத்துகிறோம்.

    திண்டுக்கல் மட்டுமின்றி பல்வேறு ஊர்களில் இருந்தும் இந்த வினோத திருவிழாவை காணவும், பங்கேற்கவும் பொதுமக்கள் வருகின்றனர் என்று தெரிவித்தனர்.

    Next Story
    ×