என் மலர்
கிறித்தவம்
ஆபிரகாமுக்காக ஆட்டுக் கடாவை ஆயத்தப்படுத்திய கர்த்தர், தாவீதுக்காக அபிஷேகத்தை ஆயத்தப்படுத்திய கர்த்தர் உங்கள் எல்லா சத்துருக்கள் மத்தியிலும் உங்களுக்கு ஒரு பந்தியை ஆயத்தப் படுத்தி உங்களை சந்தோஷப்படுத்துவார்.
‘என் சத்துருக்களுக்கு முன்பாக நீர் எனக்கு ஒரு பந்தியை ஆயத்தப்படுத்தி, என் தலையை எண்ணெயால் அபிஷேகம் பண்ணுகிறீர். என் பாத்திரம் நிரம்பி வழி கிறது’ (சங்கீதம் 23:5).
பிரியமானவர்களே! ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் அன்பின் வாழ்த்துக்கள்! இம்மட்டும் உங்களோடு இருந்தவர் இனிமேலும் உங்களோடு இருந்து உங்கள் மன விருப்பத்தை நிறைவேற்றி உங்களுக்கு விரோதமாய் இருக்கும் சகல சத்துருவின் கிரியைகளை அழித்து உங்களுக்காக அவர் ஆயத்தப்படுத்தியுள்ள ஆசீர்வாதங்களை நீங்கள் அனுபவிக்க உங்களுக்கு உதவி செய்வார்.
இவ்வுலகில் பலவிதங்களில் சத்துரு நமக்கு விரோதமாய்ப் போராடி வருகிறான். குடும்பத்திற்கு விரோதமாக, பொருளாதாரத்திற்கு விரோதமாக, சரீர சுகத்திற்கு விரோதமாக அவன் போராடுகிறான் என்பதை நாம் ஒவ்வொருவரும் அறிவோம்.
அவனுடைய போராட்டங்கள் ஒருபக்கம் நம்மை மோதினாலும் மறுபக்கம் அப்போராட்டங்களிலிருந்து விடுதலையையும் ஆசீர்வாதத்தையும் கர்த்தர் நமக்காக ஆயத்தப்படுத்தியிருக்கிறார் என்பதை மறந்து போகாதீர்கள்.
‘தேவன் தம்மில் அன்புகூருகிறவர்களுக்கு ஆயத்தம் பண்ணினவைகளைக் கண் காணவுமில்லை, காது கேட்கவுமில்லை அவைகள் மனுஷனுடைய இருதயத்தில் தோன்றவுமில்லை’ (1.கொரிந்தியர் 2:9).
மேற்கண்ட வசனத்தின்படி தேவன் ஆயத்தப்படுத்தின ஆசீர்வாதங்களை அறிந்து கொள்ளுங்கள்.
‘ஆபிரகாம் தன் கண்களை ஏறெடுத்துப் பார்க்கும் போது, இதோ, பின்னால் புதரிலே தன் கொம்புகள் சிக்கிக் கொண்டிருந்த ஒரு ஆட்டுக்கடாவைக் கண்டான். அப்பொழுது ஆபிரகாம் கடாவைப் பிடித்து, அதைத் தன் மகனுக்குப் பதிலாகத் தகன பலியிட்டான்’ (ஆதியாகமம் 22:13)
அன்பான சகோதரனே! சகோதரியே! இச்செய்தியை நீங்கள் ஜெபத்தோடும், விசுவாசத்தோடும் வாசியுங்கள். உங்கள் வாழ்க்கையில் வரும் ஒவ்வொரு போராட்டங்களின் மத்தியிலும் நீங்கள் சோர்ந்து போகாமல், போராடுவதற்கு பெலனை கொடுக்கும் கர்த்தரை நோக்கிப் பாருங்கள்.
நம்முடைய ஒரே பேரான குமாரனை பலி செலுத்த ஆபிரகாமுக்கு ஆண்டவர் கட்டளையிட்டபோது அவன் இருதயம் எவ்வளவாய் போராடியிருக்கும். ஒரு பிள்ளைக்காக பல ஆண்டுகள் விசுவாசத்தோடு காத்திருந்து பெற்ற தன்னுடைய மகனை பலி செலுத்துவது எளிதான காரியமல்ல. என்றாலும், போராட்டங்களின் முடிவில் ஆபிரகாமின் இருதயம் கர்த்தரையே சார்ந்திருந்தது என்பதை ஆதியாகமம் 22:8-ல் வாசிக் கிறோம்.
“ஆபிரகாம்: ‘என் மகனே, தேவன் தமக்குத் தகனபலிக்கான ஆட்டுக்குட்டியைப் பார்த்துக்கொள்வார்’ என்றான்”.
எந்த சூழ்நிலையிலும் கர்த்தர் பார்த்துக்கொள்வார் என்ற நிலைமைக்கு வந்து விட்டால் நிச்சயமாய் உங்களுக்கு விரோதமாக எழும்பும் எல்லா சத்துருக்கள் மத்தியில் கர்த்தர் அற் புதங்களை செய்து தப்பிச் செல்ல வழியை ஆயத்தம் பண்ணுகிறார் நம் ஆண்டவர்.

ஆபிரகாம் வாழ்வில் இந்த மாபெரும் அனுபவம் உண்டானதன் விளைவுதான் ‘யேகோவாயீரே’ என்ற பலிபீடம் உண்டானது. ‘யேகோவாயீரே’ என்பதற்கு ‘கர்த்தர் பார்த்துக் கொள்வார்’ என்று அர்த்தம்.
அந்த ஆண்டவர் எல்லா பிரச்சினைகளிலும் உங்களைப் பாதுகாத்து கிருபையாய் வழிநடத்த வல்லவராயிருக்கிறார்.
“உன் பிள்ளைகள் இவ்வளவுதானா என்று ஈசாயைக் கேட்டால், அதற்கு அவன்: இன்னும் எல்லாருக்கும் இளையவன் ஒருவன் இருக்கிறான். அவன் ஆடுகளை மேய்த்துக்கொண்டிருக்கிறான் என்றான். அப்பொழுது சாமுவேல் ஈசாயை நோக்கி: ஆள் அனுப்பி அவனை அழைப்பி. அவன் இங்கே வருமட்டும் நான் பந்தியிருக்க மாட்டேன். ஆள் அனுப்பி அவனை அழைப்பித்தான். அவன் சிவந்தமேனியும், அழகிய கண்களும் நல்ல ரூபமுள்ளவனுமாயிருந்தான். அப்பொழுது கர்த்தர் இவன்தான், நீ எழுந்து இவனை அபிஷேகம் பண்ணு என்றார்.” மி.சாமுவேல் 16:11,12
எனக்கன்பான சகோதரனே! சகோதரியே! பழைய ஏற்பாட்டில் சவுலுக்கு பதில் வேறொருவரை ராஜாவாய் ஆண்டவர் தெரிந்துகொள்ளத் தீர்மானித்த போது பெத்லெகேமில் உள்ள ஈசாயின் வீட்டிற்கு கர்த்தர் சாமுவேல் தீர்க்கதரிசியை அனுப்பினார். ஈசாய்க்கு 8 குமாரர்கள் இதில் 7 குமாரரையும் கர்த்தர் தெரிந்துக்கொள்ளாமல் நிராகரித்தார்.
இந்தச் சூழ்நிலையில் ஈசாயின் மகனாகிய எலியாபை சாமுவேல் கண்டபோது இவன் தான் கர்த்தர் தெரிந்து கொண்ட ராஜாவாக இருப்பான் என அவனுடைய முகத்தையும், சரீர வளர்ச்சியையும் பார்த்து நினைத்துக்கொண்டான். கர்த்தரோ அவனை நோக்கி மனுஷன் முகத்தைப் பார்க்கிறான், நானோ இருதயத்தைப் பார்க்கிறேன் எனக்கூறி எலியாபை ஆண்டவர் நிராகரித்தார்.
உன் பிள்ளைகள் இவ்வளவுதானா என சாமுவேல் ஈசாயை கேட்க எல்லாருக்கும் இளையவன் ஒருவன் இருக்கிறான். அவன் ஆடுகளை மேய்த்துக் கொண்டிருக்கிறான் எனக் கூறி அவனை அழைத்து வரும்படி ஆள் அனுப்பினான். சாமுவேல் தீர்க்கதரிசி தாவீதைக் கண்டபோது இவன்தான் நீ எழுந்து இவனை அபிஷேகம் பண்ணு என்று கர்த்தர் கூறி அவனுடைய சகோதரர்கள் நடுவிலே தாவீதை சாமுவேல் தீர்க்கதரிசியின் மூலமாய் அபிஷேகம் பண்ணினார்.
எனக்கன்பானவர்களே! தகப்பனே தன் குமாரனாகிய தாவீதை மறந்தாலும், கர்த்தர் தாவீதை மறக்கவில்லை. தாவீது வனாந்தரத்தில் ஆடுகளுக்குப் பின்னால் அலைந்து கொண்டிருந்தாலும் அவனே அறியாத ஒரு ராஜரீக அபிஷேகம் அவனுக்காக ஆண்டவரால் ஆயத்தப்படுத்தப்பட்டது.
அதுபோல நீங்கள் வனாந்தரமான சூழ்நிலையில் எல்லாராலும் மறக்கப்பட்ட நிலையில் இருந்தாலும் உங்களை அழைத்த தேவன் உங்களுக்காக பரலோக அபிஷேகத்தை ஆயத்தப் படுத்தி வைத்திருக்கிறார். என்றைக்கு தாவீதின் மேல் அபிஷேகம் ஊற்றப்பட்டதோ, அன்று முதல் கர்த்தர் அவனைப் பயன்படுத்த ஆரம்பித்தார். அசுத்த ஆவிகளை துரத்துகிற அதிகாரத்தையும் அவனுக்குத் தந்தார். சத்துருக்களை மேற்கொள்கிற யுத்தவீரனாய் மாற்றினார். எல்லாவற்றிற்கும் மேலாக இஸ்ரவேலிலே ராஜாவாக உயர்த்தினார். அந்த தாவீதின் சந்ததியில் தான் நம் அருமை ஆண்டவராகிய இயேசு இவ்வுலகத்திற்கு வந்தார்.
ஆகவே தேவபிள்ளையே! ஆபிரகாமுக்காக ஆட்டுக் கடாவை ஆயத்தப்படுத்திய கர்த்தர், தாவீதுக்காக அபிஷேகத்தை ஆயத்தப்படுத்திய கர்த்தர் உங்கள் எல்லா சத்துருக்கள் மத்தியிலும் உங்களுக்கு ஒரு பந்தியை ஆயத்தப் படுத்தி உங்களை சந்தோஷப்படுத்துவார்.
சகோ.ஜி.பி.எஸ். ராபின்சன்,
இயேசு சந்திக்கிறார் ஊழியங்கள், சென்னை-54.

அகத்தால் ஏற்படும் பிரகாசம், அறியாமை என்ற இருளைப் போக்க வேண்டும். இவ்வுலகில் புறக்கண் அற்றவரும், நற்செயல்களால் ஒளி பெற்றவரே என்பதையும் எண்ணிப் பார்க்க வேண்டும்.
மத்தேயு எழுதிய இந்த நற்செய்தியை மிகவும் கவனமாகக் கவனிப்போம். இந்த உலகம் யாருக்கும் நிரந்தரமானதல்ல என்ற கருத்தை அவர் வலியுறுத்துகிறார். இந்தச் செய்தி, அனைவருக்கும் தெரிந்த ஒன்றுதான். இருந்தாலும் அதற்குத் தக்கவாறு வாழ்க்கையை அமைத்துக் கொள்பவர் எத்தனை பேர்?
‘நெருநல் உளனொருவன் இன்றில்லை யென்னும்
பெருமை உடைத்திவ் உலகு’ என்பது திருக்குறள்.
நேற்று இருந்தவன் இன்று இல்லை என்ற பெருமை, உலகத்திற்கு இருக்கிறது என் கிறார் வள்ளுவப் பெருந்தகை. எப்படி?
நேற்று உயிரோடு இந்த உலகத்தில் இருந்தவன், இன்று இல்லை.
இதில் இருந்து நாம் அறிந்து கொள்வதென்ன?
உலகத்தை வெற்றி கொள்வதாகச் சொல்லும் ஒருவனைப் பார்த்து, உன்னால் உலகத்தை வெற்றி கொள்ள முடியாது. அப்படி எண்ணினால் நீ தோற்று விடுவாய். உன்னை உலகம் வெற்றி கொண்டு விடும். நேற்று இருந்தவன் இன்றில்லை என்று சொல்வதன் பொருள் இதுதான்.
நிரந்தரமில்லாத இந்த உலகத்தை நாடாதே என்ற கருத்தை மையமாகக் கொண்டு இந்த நற்செய்தி அருளப்படுகிறது.
அக்காலத்தில் இயேசு பிரான் தம் சீடரை நோக்கிக் கூறுகிறார்:
‘மண்ணுலகில் உங்களுக்கென்று செல்வத்தைச் சேமித்து வைக்க வேண்டாம். இங்கே பூச்சியும், துருவும் அழித்து விடும். திருடரும் அதை கன்னமிட்டு திருடுவர். அதனால் விண்ணுலகில் உங்கள் செல்வத்தைச் சேமித்து வையுங்கள். அங்கே பூச்சியோ துருவோ அழிப்பதில்லை. திருடரும் கன்னமிட்டு திருடுவதில்லை. உங்கள் செல்வம் எங்கு உள்ளதோ அங்கே உங்கள் உள்ளமும் இருக்கும்.
கண் தான் உடலுக்கு விளக்கு. கண் நலமாயிருந்தால் உங்கள் உடல் முழுவதும் ஒளி பெற்றிருக்கும். அது கெட்டுப்போனால், உங்கள் உடல் முழுவதும் இருளாய் இருக்கும்.
இந்த நற்செய்தியை மிகவும் ஆழமாகக் கவனித்துப் பாருங்கள். மண்ணுலகில் சேமித்து வைக்கப் பலர் அலைந்து கொண்டிருக்கிறார்கள். அதனால் பயன் என்ன? என்ற வினாவைத் தொடுக்கிறார். பூச்சிகள் அழித்து விடுகின்றன. அதுமட்டுமா? திருடர்கள் நோட்டமிட்டுத் திருடி விடுகின்றனர்.

விண்ணுலகு என்பதைப் பற்றி உணர வேண்டுமானால், இறப்பிற்குப் பிறகுதான், அப்படி ஓர் உலகைக் காண முடியும். அங்கே சேமித்து வையுங்கள். எதை? நற்செயல் களால், நீங்கள் ஈட்டிய செய்கைகளை எல்லாம், சேமித்து வைக்க வேண்டிய இடம் அதுதான் என்கிறார். அங்கே சேர்த்து வைக்கும் செல்வம், பூச்சியால் அழியாது. திருடர்களும் திருட மாட்டார்கள். இவ்வுலகில் வாழும் ஒவ்வொரு மனிதரும், நற்செயல்களால் நிரப்பப்பட்டவர்களாக இருக்க வேண்டும் என்று போதிக்கிறார்.
அடுத்து வரும் சிந்தனைகளை நுட்பமாகக் கவனியுங்கள்.
உடலிலே பல உறுப்புகள் இருக்கின்றன என்பதை நாம் அறிவோம். எல்லா உறுப்புகளிலும் மிகவும் முக்கியமானது ‘கண்’ என்ற உறுப்பாகும். கண்தான் உடலுக்கு விளக்கு என்கிறார், இயேசு பிரான். உடல் முழுவதும் ஒளி பெற வேண்டுமானால் அதற்கு அடிப் படையான ‘கண்’ ஒளி பெற வேண்டும். அறிவு ஒளியைத்தான் இப்படிக் கூறுகிறார். அக்கண்ணானது கெட்டுப் போய் விட்டால், உடல் முழுவதும் இருளாகி விடும் என்கிறார்.
ஆகவே ஒளி தரும் கண்ணைக் காப்பாற்ற வேண்டியது நம் கடமை என்பதை உணர வேண்டும்.
புறக்கண் அற்றவர்களை எப்படிப் பொருத்திப் பார்ப்பது என்ற கேள்வி எழுகிறது அல்லவா? இயேசு பிரான் சொல்வது கல்வி ஒளியை ஏற்றி அறியாமையை அகற்றி விடு என் பதுதான்.
அறியாமை என்பது ஒரு கொடிய நோய் ஆகும். ஆகவே அறியாமை என்ற நோயைக் களைய, அறிவு ஒளியை ஏற்றி வை என்பதுதான் அவருடைய அடிப்படைக் கொள்கையாகும். ஆகவே அறிவு ஒளி பெறுவோம், அறியாமை என்னும் இருளைப் போக்குவோம். நற்செய்தியை மீண்டும் ஒருமுறை படித்து சிந்தித்துப் பாருங்கள்.
இந்த நற்செய்தியில் இருந்து நாம் உணர்ந்து கொள்ள வேண்டியது என்ன?
உலகத்தில் பிறந்த எந்த உயிரும் உலகை வெற்றி கொள்ள முடியாது. இவ்வுலகம் நிரந்தரமல்ல என்பதை மனிதராகப் பிறந்தவர்கள் உணராமல் இல்லை. உணர்ந்தாலும் உலக ஆசைகள், அவர்கள் வாழும்பொழுது விட்டபாடில்லை. தேவைக்கு மேல் சேர்த்து வைப்பதும், அதைப் பாதுகாக்கவும், பாதுகாப்பதற்கு மேலும் மேலும் செலவு செய்யவும் நாம் பாடு படுகிறோம். அதனால் என்ன பயன்? இவ்வுலகில் சேர்த்து வைக்கும் பொருள், பூச்சிகளாலும், துருக்களாலும் அழிக்கப்படுகிறது. திருடர்களும் சமயம் பார்த்து மொத்தமாகத் திருடிச் சென்று விடுகின்றனர். உங்கள் செல்வம் இருக்க வேண்டிய இடம் இவ்வுலகம் அன்று. விண்ணுலகம். அங்கே இப்படிப்பட்ட நிலை ஏற்படாது. நற்செயல்களால், நல்ல செல்வங் களைச் சேகரித்து மகிழுங்கள்.
எல்லா உறுப்புகளுக்கும் மேலானதாகக் ‘கண்’ எனும் உறுப்பு விளங்குகிறது. உடலுக்கு விளக்காக திகழ்கிறது. உடல் முழுவதும் ஒளி பெற்றிருக்கும் நிலையை உருவாக்கும் கண்ணைப் பாதுகாப்பாய் வைக்க வேண்டும். அதனால் ஏற்படும் ஒளி, அர்த்தம் உள்ளதாக இருக்க வேண்டுமானால், அகக்கண் பிரகாசிக்க வேண்டும். அகத்தால் ஏற்படும் பிரகாசம், அறியாமை என்ற இருளைப் போக்க வேண்டும். இவ்வுலகில் புறக்கண் அற்றவரும், நற்செயல்களால் ஒளி பெற்றவரே என்பதையும் எண்ணிப் பார்க்க வேண்டும்.
நற்செய்தி என்பது உலகம் உள்ளவரை, மனித சமுதாயம் இருக்கும் வரை, மக்களுக்கு நல்வழிகாட்டக் கூடியதாக இருக்கிறது.
- செம்பை சேவியர்.

நாகர்கோவில் கிருஷ்ணன்கோவில், மேலத்தெருக்கரை புனித அந்தோணியார் ஆலய திருவிழா கடந்த 5-ந் தேதி தொடங்கி வருகிற 14-ந் தேதி வரை நடக்கிறது.
நாகர்கோவில் கிருஷ்ணன்கோவில், மேலத்தெருக்கரை புனித அந்தோணியார் ஆலய திருவிழா கடந்த 5-ந் தேதி தொடங்கியது. திருவிழா வருகிற 14-ந் தேதி வரை நடக்கிறது. விழாவின் முதல் நாளில் கொடியேற்றம், திருப்பலி ஆகியன நடந்தது.
இன்று (புதன்கிழமை) மாலை 5 மணிக்கு ஜெபமாலை, 6 மணிக்கு கூட்டுத்திருப்பலி தொடர்ந்து நற்செய்தி கூட்டம் நடைபெறுகிறது. வருகிற விழா நாட்களில் மாலையில் ஜெபமாலை, திருப்பலி, மறையுரை, கலை நிகழ்ச்சிகள் போன்றவை நடக்கிறது.
வருகிற 13-ந் தேதி காலை 10 மணிக்கு மார்த்தாண்டம் மறைமாவட்ட ஆயர் வின்சென்ட் மார் பவுலோஸ் தலைமையில் திருப்பலி, மாலை 6.30 மணிக்கு தேர்ப்பவனி, இரவு 9 மணிக்கு அன்பின் விருந்து ஆகியவை நடைபெறுகிறது.
14-ந் தேதி மாலை 5 மணிக்கு ஜெபமாலை, 6 மணிக்கு கூட்டுத்திருப்பலி, இரவு 8 மணிக்கு நாடகம் ஆகியன நடக்கிறது. இதற்கான ஏற்பாடுகளை விழா குழுவினர் செய்துள்ளனர்.

இயேசுவின் சீடரான தோமையார், இயேசுவின் பிறப்பு-இறப்பு அதிசயங்களை எடுத்துரைத்ததோடு, இந்தியாவில் பல தேவாலயங்களையும் கட்டினார்.
“பிதா என்னை அனுப்பியது போல நானும் உங்களை அனுப்புகிறேன்” என்று இயேசுநாதர் கட்டளையிட்டதை ஏற்றுக்கொண்ட அவரது 12 சீடர்கள், இயேசுவின் அதிசயங்களை பரப்ப உலகம் முழுக்க பயணப்பட்டனர். அதில் இயேசுவின் சீடர்களில் சந்தேக சீடரான தோமையார், கி.பி. 53-ம் ஆண்டு இந்தியாவிற்கு வந்தார். இயேசுவின் பிறப்பு-இறப்பு அதிசயங்களை எடுத்துரைத்ததோடு, இந்தியாவில் பல தேவாலயங்களையும் கட்டினார்.
கேரளாவில் மாலியங்கரை, பாலையூர், கோக்கமங்கலம், கொல்லம், தங்கசேரி, நிலைக்கல், சாயல் என்ற ஏழு இடங்களில் ஆலயம் அமைத்தவர், எட்டாவதாக திரு விதாங்கோட்டில் அரப்பள்ளி என்ற சிறிய தேவாலயத்தை கட்டினார். இந்தத் திருத்தலம் மிகவும் சிறியதாக இருப்பதாலும், அரை குறையாக கட்டிமுடிக்கப் பட்டதாலும் இதனை ‘அரப்பள்ளி’ கோவில் என்கிறார்கள்.
கேரள பாணியில் கட்டப்பட்ட ஓர் இந்துக்கோவில் போலவே காட்சியளிக்கும் அரப்பள்ளி தேவாலயம், கி.பி.63-ம் ஆண்டு கட்டிமுடிக்கப்பட்டது. புனித தோமையாரின் கைவண்ணத்தில் அமைதி தவழும் சூழலில் எழுப்பப்பட்டிருக்கும் இந்தத் திருத்தலத்தை இப்பகுதியினர் புனித மேரி மாதா தேவாலயம் என்றும், தோமையார் கோவில் என்றும், தரீஸா கோவில் என்றும் அழைக்கிறார்கள்.
அரப்பள்ளி தேவாலயம் மிகவும் வித்தியாசமானது. மற்ற ஆராதனை ஆலயங்களைப் போல் இது இல்லை. 25 அடி நீளமும், 16 அடி அகலமும், 10 அடி உயரமும் கொண்ட, ஓடுகளால் வேயப்பட்ட சிறிய கோவில். இதன் சுவர்கள் கருங்கல்லால் அமைக்கப்பட்டுள்ளது. 2.5 அடி அகலம் கொண்ட வலிமையான சுவரால் எழுப்பப்பட்டிருக்கிறது. இன்னும் 50 ஆண்டுகள் கழிந்தால் 2000-வது ஆண்டு விழா கொண்டாடப்போகிறது என்பதே இதன் பாரம்பரியத்தை பறைசாற்றுகிறது.

கோவில் முன் வாசல் அருகே ஒரே கல்லில் செதுக்கப்பட்ட காணிக்கை உண்டியல் உள்ளது. அதேபோன்று கோவிலின் உள்ளே கருங்கல்லினால் செய்யப்பட்ட ஞானஸ்தான தொட்டி ஒன்றும் உள்ளது. யோர்தான் ஆற்றங்கரையில் யோவான் இயேசுவிற்கு ஞானஸ்தானம் செய்து கொடுத்ததை போல, இந்த தொட்டியிலும் சிறு குழந்தைகளுக்கு ஞானஸ்தானம் கொடுக்கப்படுகிறது. அதேபோல் ஆலயத்தின் வெளியிலும் கல்லால் செதுக்கப்பட்ட வட்ட வடிவ கல் நீர்த் தொட்டியும், பாதங்களை கழுவுவதற்கு பழங்கால தொட்டியும் உள்ளன.
பீடத்தின் வலது பக்க சுவரில் சிறிய சிலுவை செதுக்கப்பட்டுள்ளது. இது புனித தோமையாரின் திருக்கரங் களால் செதுக்கப்பட்டது.
இங்கு தோமையாரின் திரு உருவம் பாதுகாக்கப்பட்டு வருகிறது. இதைத்தவிர இயேசுவின் உருவமோ, மாதாவின் உருவமோ, படங்களோ அங்கில்லை. அதனால் இது தற்போதைய வழிபாட்டு முறைகள் எல்லாம் தொடங்குவதற்கு முன்பே உருவான தேவாலயம் என்று கணிக்கப்பட்டுள்ளது.
பீடத்தின் முன்னால் உள்ள மரப்பெட்டியின் ஒரு கதவில் சாவியை கையிலேந்தியபடி புனிதர் பீட்டரின் உருவமும், மறு கதவில் வாளை ஏந்தியபடி புனிதர் பாலின் உருவமும் காட்சி தருகின்றன. இந்தப் பெட்டி பிற்காலத்தில் போர்ச்சுகீசியர்களால் அன்பளிப்பாக கொடுக்கப்பட்டவை என்ற வரலாற்று செய்தியும் உலவுகிறது. இது மட்டுமல்லாமல் பஞ்சலோகத்தில் செய்யப்பட்ட சின்ன தூபகலசமும் கொடுத்திருக்கிறார்கள்.
இப்படி பல சிறப்புகள் கொண்ட அரப்பள்ளி தேவாலயம் பல ஆண்டுகளாக கவனிக்கப்படாமல் இருந்தது. ஒருமுறை திருவிதாங்கோட்டில் கொள்ளை நோய் ஒன்று பரவியது. ஏராளமான மக்கள் இறந்தனர். பலர் ஊரைக் காலி செய்தனர். இதனால் தேவாலயம் கவனிப்பாரற்றுக் கிடந்தது. 1927-ல் கருங்கல் கூரையைப் பிரித்து ஓடுகளால் கூரையை மேவினார்கள். ஏனெனில் மேற்கூரையின் இடுக்கில் அபாயகரமான ஓர் ஆலமரம் வளர்ந்திருந்தது. அதன் காரணமாக தான் பழைய கல் கூரையை அகற்றிவிட்டு ஓடுகளால் ஆன கூரையை மாற்றியிருக் கிறார்கள்.
சிறிது காலம் கழித்து மீண்டும் கோவில் கவனிப்பாரற்று போனது. 1941-ல் மீண்டும் புதுப்பிக்கப்பட்டது. அத்துடன் திருப்பலிக்கு தேவையான பலி பீடமும் மற்ற கட்டிடங்களும் கட்டப்பட்டது. காலங்கள் உருண்டோட, மீண்டும் கோவிலை கவனிக்க ஆளின்றி புதர் மண்டியது. கோவிலை புதுப்பிப்பதும், பின்னர் பராமரிப்பின்றி பாழடைந்து போவதும் மாறி மாறி நடந்து கொண்டிருந்தது. 2007-ம் ஆண்டு புனித தோமையார் உருவாக்கிய 8 கோவில்களும் சர்வதேசத் திருத்தலமாக அறிவிக்கப்பட்டது. அன்றிலிருந்து அவர் உருவாக்கிய அனைத்து தேவாலயங்களும் உலக அங்கீகாரம் பெற்றன. இதனால் அரப்பள்ளி தேவாலயம் புதுப்பொலிவு பெற்றது. புனித தோமையாருடைய நற் செய்தியின் அடையாளமாக திருவிதாங்கோடு இருப்பது சர்வதேச ஆலய அறிவிப்பின் மூலம் உலகின் பார்வைக்கு வந்திருக்கிறது.

பிலாத்துவின் தண்ணீர் குவளையானது பதவி வெறியினாலும், பயந்தாங்கொள்ளித் தனத்தாலும், சுய சேவையாலும் நிரம்பிய அழுக்கு நீரைக் கொண்டது.
ஒரே வாரத்தில் ஒரே மாதிரியான பொருட்களை வைத்து நிகழ்த்தப்பட்ட இரு வேறு நிகழ்வுகள், ஆனால் அவை கொடுத்தது இருவேறு அர்த்தங்கள். அந்த இரு வேறு பொருட்கள் தண்ணீர் குவளையும், துடைக்கும் துண்டும் ஆகும். ஆண்டவர் ஏசு தம் சீடர்களுடன் இறுதி இரவு உணவு உண்ணும் போது சீடர்களின் பாதங்களை கழுவ ஒரு தண்ணீர் குவளையும், ஒரு துடைக்கும் துண்டையும் பயன்படுத்துகின்றார்.
“ஏசு பந்தியிலிருந்து எழுந்து, தம் மேலாடையைக் கழற்றி வைத்துவிட்டு ஒரு துண்டை எடுத்து இடுப்பில் கட்டிக்கொண்டார். பின்னர் ஒரு குவளையில் தண்ணீர் எடுத்து சீடர்களுடையை காலடிகளைக் கழுவி இடுப்பில் கட்டி யிருந்த துண்டால் துடைக்கத் தொடங்கினார்”. (யோவான் 13:4-5).
இதே வாரத்தில் ஆண்டவர் ஏசுவை விசாரணை செய்த யூதேயாவின் ஆளுநராக இருந்த பொந்தியு பிலாத்து ஏசு குற்றமற்றவர் என்பதை உணர்ந்தும் யூத மத தலைவர்களின் அச்சுறுத்தலுக்குப் பயந்து அவரின் சாவு பழியில் இருந்து தப்பிக்க தன்னுடைய கைகளைக் கழுவ பயன்படுத்திய தண்ணீர் குவளையும் துடைக்கும் துண்டும்.

“கூட்டத்தினரின் முன்னிலையில் தண்ணீரை எடுத்து, “இவனது ரத்தப்பழியில் எனக்கு பங்கில்லை. நீங்களே பார்த்துக்கொள்ளுங்கள்” என்று கூறி தன் கைகளைக் கழுவினான்” (மத் 27:24) இருவேறு நிகழ்வுகளிலும் பயன்படுத்தப்படுகின்ற பொருட்கள் ஒன்றாயினும் அவை சொல்லும் செய்திகள் வேறு வேறு. ஆண்டவர் ஏசு மண்டியிட்டு தன் சீடர்களின் பாதங்களை தண்ணீரால் கழுவி துண்டால் துடைத்தார். கடவுளானவர் அடிமையின் பணியை செய்கிறார் ( பிலிப் 2:7-8).
ஆனால், மனிதனான பிலாத்து சிம்மாசனத்தில் அமர்ந்து தண்ணீரால் தன்னுடைய கைகளை கழுவி துண்டால் துடைக்கின்றார். ஆண்டவரின் தண்ணீர் குவளை, இரக்கத்தாலும் மன்னிப்பினாலும் பிறர் சேவையினாலும் நிரம்பிய தூய நீரால் ஆனது. பிலாத்துவின் தண்ணீர் குவளையானது பதவி வெறியினாலும், பயந்தாங்கொள்ளித் தனத்தாலும், சுய சேவையாலும் நிரம்பிய அழுக்கு நீரைக் கொண்டது.
- அருட்தந்தை.தேவதாஸ், கும்பகோணம்.

அலட்சியமான வாழ்வு என்பது கல்லறைக்குள் அடங்கி அழிந்து போன வாழ்வு ஆகிறது. பிறரை வாழ வைப்பவருக்கு கல்லறையில் இடமில்லை. அவர், பிறரின் வாழ்வில் வாழ்கிறார்.
அவருக்கு பிறக்க இடம் கிடைக்கவில்லை. ஏனெனில் அவர், அனைவரின் மனதிலும் பிறக்க வேண்டும் என்பதற்காக. அவரை, அடக்கம் செய்ய ஒரு இடம் கிடைக்கவில்லை. காரணம் அவர், அனைவரின் வாழ்விலும் அடக்கம் செய்யப்பட்டு உயிர்த்தெழ வேண்டும் என்பதற்காக. அவரின் பிறப்பும், இறப்பும் பொதுவாக இருந்ததற்கு முக்கிய காரணம் இருக்கிறது.
அனைவரும் அவரிலே பிறக்க வேண்டும், அதேபோல் அனைவரும் அவரிலே இறந்து அடக்கம் செய்யப்பட்டு உயிர்த்தெழ வேண்டும் என்பதற்காகத்தான். நம் வாழ்வின் சிறப்பு, பிறரின் வாழ்வில் தான் அடங்கி உள்ளது. பிறர் வாழ வேண்டும் என்பதற்காக தன் ரத்தத்தையும், சதையையும் கொடுத்தவர் இயேசு.
“நானே வாழ்வு“ என்ற இயேசுவை புதைத்து அடக்க முடியுமோ? அவர், வாழ்வின் சக்தி. அந்த சக்திக்கு அழிவில்லை. சாக்ரடீஸ் விஷத்தில் சாக வேண்டும். அதை அவர், ஆனந்தமாக அதை ஏற்றுக்கொண்டார். அப்போது அவரின் சீடர்கள் அழ ஆரம்பித்தனர். அதற்கு சாக்ரடீஸ், சீடர்களே அழாதீர்கள்.

இது மரணத்தை படிக்க அரிய வாய்ப்பு என்று சொல்லி கொண்டே, “என் கால்கள் மரத்து போகிறது, ஆனால் நான் சாகவில்லை. என் கைகள் செத்து போகின்றன, ஆனால், நான் சாகவில்லை. மரணம் என்பது என் புறத்தில் தான் நடக்கிறது. என் (நான்) ஆன்மா அழியாமல் அப்படியே இருக்கிறது என்றாராம். சோடை போன விதை மட்கித்தான் போகும். வீரியமுள்ள விதை மட்டுமே முளைத்து எழும்.
இயேசு வீரியமான விதை. வாழ்வின் சக்தியாக வலம் வந்தவர். அவர், எப்படி சாக முடியும்? பிறரின் கண்ணீரையும், சுமைகளையும் சுமக்க மறந்தவன், மறுத்தவன் மரணம் வரும் முன்னே மரித்து போவான். பிறர் வாழ, வாழ்வின் சக்தியாக வலம் வந்த இயேசுவின் உடலை கிழித்தனர், ஆனால் அவரின் உள்ளத்தை கிழிக்க முடியவில்லை. அவரின் இதயத்தை சிதைத்தார்கள், ஆனால் அவரின் லட்சியத்தை சிதைக்க முடியவில்லை.
எனவே, லட்சியமுள்ள வாழ்வு அழிவதில்லை, இன்னொன்றாக தோன்றுவதற்காக அது மறைகிறது. ஆனால் அலட்சியமான வாழ்வு என்பது கல்லறைக்குள் அடங்கி அழிந்து போன வாழ்வு ஆகிறது. பிறரை வாழ வைப்பவருக்கு கல்லறையில் இடமில்லை. அவர், பிறரின் வாழ்வில் வாழ்கிறார்.
அருட்திரு. ஜான் நெப்போலியன், செயலர்,
புனித அந்தோணியார் பாலிடெக்னிக் கல்லூரி, திண்டுக்கல்.

அன்பர்களே, நீங்கள் துன்பத்தை தாங்குவதிலும் பொறுமையை கடைபிடிப்பதிலும் ஆண்டவரின் பெயரால் பேசிய இறைவாக்கினரை உங்களுக்கு மாதிரிகளாக கொள்ளுங்கள் (யாக்கோபு 5:10).
காட்டில் மூங்கில் ஒரு நாள் வெட்டப்பட்ட போதும், செப்புக்கம்பியால் அதை துளைத்த போதும் “ஐயோ வலிக்கிறதே” என்று அழுதது. “கொஞ்சம் பொறுத்துக்கொள் “ என்று மூங்கிலைப்பார்த்து ஆறுதல் சொன்னது காற்று. மூங்கில் புல்லாங்குழல் ஆனது. மேடையில் உலகமே வியக்கும் வண்ணம் இசையை பொலிந்து கொண்டிருந்தது. புல்லாங்குழலை பார்த்து மேனி சிலிர்த்தது காற்று. எல்லோரும் புல்லாங்குழலை பாராட்டினார்கள். மூங்கில் முணுமுணுத்தது. துன்பம் இல்லையேல் இன்பம் இல்லை என்று.
நிலத்தை துளைத்தால் தான் விதை முளைக்கும். தங்கத்தை சுட்டால் தான் நகை கிடைக்கும். அதுபோல மனத்தை சுட்டால் தான் மனிதம் கிடைக்கும். வாழ்க்கை என்பது இறைவன் தந்த ஓவியம். வாழ்வது என்பது மனிதன் படைக்கும் காவியம் ஆகும்.
“அன்புக்குரியவர்களே, துன்பத்தீயில் நீங்கள் சோதிக்கப்படும் போது, ஏதோ எதிர்பாராதது நேர்ந்து விட்டதென வியக்காதீர்கள். மாறாக, கிறிஸ்துவின் துன்பங்களில் நீங்கள் இத்துணை பங்கு கொள்கிறீர்கள் என எண்ணி மகிழுங்கள். அப்பொழுது கிறிஸ்துவின் மாட்சி வெளிப்படும் வேளையில் இன்னும் மகிழ்ந்து பேருவகை கொள்வீர்கள்” (1 பேதுரு 4:12-13).

“கிறிஸ்துவும் உங்களுக்காக துன்புற்று ஒரு முன்மாதிரியை வைத்துச்சென்றுள்ளார். எனவே நீங்கள் அவருடைய அடிச்சுவடுகளை பின்பற்றுங்கள்; இதற்காகவே அழைக்கப்பட்டுள்ளீர்கள். வன்செயல் எதுவும் அவர் செய்ததில்லை; வஞ்சனை எதுவும் அவர் வாயில் இருந்ததில்லை. பழிக்கப்பட்ட போது பதிலுக்கு பலிக்கவில்லை; துன்புறுத்தப்பட்ட போது அச்சுறுத்தவில்லை; நியாயமாக தீர்ப்பு வழங்குவோரிடம் தம்மை ஒப்படைத்தார்” (1 பேதுரு 2:21-23).
அன்பர்களே, நீங்கள் துன்பத்தை தாங்குவதிலும் பொறுமையை கடைபிடிப்பதிலும் ஆண்டவரின் பெயரால் பேசிய இறைவாக்கினரை உங்களுக்கு மாதிரிகளாக கொள்ளுங்கள் (யாக்கோபு 5:10). விழிப்பாயிருங்கள்; நம்பிக்கையில் நிலைத்திருங்கள்; துணிவுடன் நடந்து கொள்ளுங்கள்; வலிமையுடன் செயல்படுங்கள். அனைத்தையும் அன்போடு செய்யுங்கள் (1 கொரிந்தியர் 16:13-14).
அருட்திரு. வி.டேவிட்ராஜ், பங்குத்தந்தை, ஒட்டன்சத்திரம்.

இறைவனிடம் இருக்கும் அதே நற்குணங்களை அடையும் உறுதி இருந்தால் மட்டுமே, அதாவது விதையை தொடர்ந்து ஆழமாக வேர்விட அனுமதித்தால் மட்டுமே, நற்போதனைகளை வாழ்க்கையில் செயல்படுத்த முடியும்.
உலகத்தில் கண் முன்பு காட்டப்படும் ஒவ்வொரு நிகழ்வும் நமக்கு ஒரு படிப்பினையை கற்றுத்தரும் சம்பவமாக உள்ளது. உதாரணமாக, அதிக வேகத்தில் வாகனத்தை செலுத்தினால் விபத்து நிகழும் என்ற பாடத்தை, பலரது உரையாடல், செய்திகள் மூலமாக மட்டுமல்ல நேரில் பார்த்தும் கற்றிருக்கிறோம்.
ஆனால் நாம் வாழ்க்கையில் அதை செயல்படுத்தாமல் விட்டுவிட்டோம் என்றால் நாம் கண்டும், கேட்டும் உணராமல் இருப்பவர்களாக கருதப்படுவோம். அதுமட்டுமல்லாமல், நாமும் ஒரு கட்டத்தில் அதுபோன்ற நிகழ்வை சந்திக்க வைக்கப்படுவோம் என்பதும் கசப்பான உண்மையாக உலகத்தில் நியமிக்கப்பட்டுள்ளது.
அதுபோலத்தான், அநியாயத்தால் சேர்க்கும் செல்வமும் மற்றவர்களின் ஏளனத்தைத்தான் பெற்றுத்தருமே தவிர, அவனுக்கோ அவனது வாரிசுகளுக்கோ மனப்பூர்வமான உதவியை செய்ய மற்றவர்களுக்கு தூண்டுதலை ஏற்படுத்தாது. மறைந்த பிறகும் அவனும் அவன் வாரிசுகளும் மனிதருக்குள் அவமானச் சொல்லாகத்தான் இருப்பார்கள்.
எவ்வளவு பெரும் செல்வமும், செல்வாக்கும், பணமும் ஒருவனை மரணத்தில் இருந்து விடுவிக்கும் அளவுக்கு அதிகாரம் பெற்றவை அல்ல என்பதை உணர்த்த நம்மைச்சுற்றி எத்தனையோ சம்பவங்கள் நடந்து வருகின்றன. ஆனால் பணத்தை அடைவதற்காக அநியாய வழிகளை நாடுவதை மனிதன் விடாதிருப்பதும், அதே நிலையை அடையும்போது, உணர்ந்து திருந்துவதற்கு பெரும்பாலும் வாய்ப்பு கிடைக்காமல் போவதும் கசப்பான உண்மையாகவே உள்ளது.
இதுபோன்ற நற்போதனைகளை கேட்டு அதை வாழ்க்கையில் செயல்படுத்த முற்படும் உள்ளங்களை இயேசு 4 வகைகளாகப் பிரிக்கிறார். அதில் முதல் வகை, பலரும் சென்று வரும் ஒரு வழி அல்லது பாதையைப் போன்றதாக இருப்பதாகக் குறிப்பிடுகிறார் (மத்.13:4,19).
பாதை குறித்து ஆராய்ந்தால், அதில் எதுவுமே நிரந்தரமாக இருக்காது. ஒரு திசைக்கு மட்டுமல்லாமல் நேர் எதிர்த்திசைக்கும் அது கொண்டு செல்லும். அதில் யார் வேண்டுமானாலும் வரலாம், போகலாம். பலரும் வந்து செல்வதால் அதில் குப்பைக்கூளங்களுக்கு பஞ்சம் இருக்காது. எனவே மிருகங்கள், பறவைகள், பூச்சிகளுக்கு அந்தப் பாதை வசிப்பிடமாக அமையும்.

இப்படிப்பட்ட மனதை உடையவர்கள், ஒரு நிலையான கொள்கையை உடை யவர்களாக இருக்கமாட்டார்கள். சூழ்நிலைக்கு ஏற்ப மாற்றிப் பேசும் அல்லது வேறுபட்டு செயல்படும் நிலையில் இருப்பார்கள். இவர்கள் உள்ளத்தில் எதுவுமே நிலையாகத் தங்காது.
இப்படிப்பட்டவர்களுக்கு கூறப்படும் போதனைகள், வழியருகே விதைக்கப்படும் விதைகளுக்குச் சமம் என்று இயேசு கூறுகிறார். ஓரிடத்தில் விதை விழுந்தால், அது அங்கேயே கிடந்து, ஈரப்பதத்தை ஏற்று வேர்விடும். ஆனால் அதுபோன்ற பாதையில் விதை விழுந்துவிட்டால் அது அங்கேயே கிடக்க முடியாது. போவோர் வருவோரின் கால்களில் மிதிபட்டு நசுங்குவதும், இடறப்படுவதுமாக இருப்பதால் ஈரப்பதத்தில் நிலைத்து வேர்விடமுடியாமல் போய்விடுகிறது.
அதாவது நற்போதனையை செயல்படுத்துவதற்கு வழியில்லாத அளவுக்கு வேறு போதனைகள் மூலம் நற்போதனையை சிதறடித்துவிடுகிறார்கள். பக்தியை உண்டாக்கும் இறைபோதனைகள் செயல்படத் தொடங்குவதற்கு முன்பாகவே, அப்படிப்பட்டவர்களின் உள்ளத்தில் இருந்து அதை இறைவனுக்கும் மனிதவர்க்கத்துக்கும் எதிரான சாத்தான் மாற்று வழியில் எளிதாக எடுத்துச் செல் கிறான்.
இப்படிப்பட்ட மனநிலையைக் கொண்டவர்கள், நற்போதனையை உணர்வதற்கான வாய்ப்பை பயன்படுத்திக் கொள்வதில்லை. ஏனென்றால், அதை நீர்த்துப் போகச் செய்வதுபோன்ற மற்றொரு போதனையை சாத்தான் மற்ற நபர்கள் மூலம் போடும்போது அதற்குச் செவியைச் சாய்த்துவிடுகிறார்கள். ஆக, எந்த போதனையுமே அப்படிப்பட்டவர்களின் உள்ளத்தில் நிரந்தர இடம் பிடிப்பதில்லை.
உலகத்தில் இன்று எல்லா இடங்களிலுமே மேடைக்கு மேடை நற்போதனைகள் விதைக்கப்பட்டுக் கொண்டிருக்கின்றன. உள்ளம் கசியும் அளவுக்கு வார்த்தைகளை கனிவாக பேச்சாளர்கள் கூறும்போது பலரும் கண்ணீர் பெருக்கெடுத்து கைதட்டி ஆமோதிக்கின்றனர். ஆனால் வீட்டுக்குப் போன பிறகு அதே பழைய வாழ்க்கையையே தொடர்கின்றனர்.
அதே பழைய பகைகள், சண்டைகள், போட்டிபொறாமைகள், விட்டுக் கொடுக்காமை, மன்னிக்காதிருத்தல், பொய்கள் என அனைத்து தீயகுணங் களிலும் கொஞ்சமும் குறைவதில்லை. நற்குணங்களை மட்டுமே செயல்படுத்தும் வழிகளை நாடும் உணர்வைப் பெறுவது பற்றி யோசிப்பதும் இல்லை.
நடைமுறை வாழ்க்கையில் நற்குணங்களை மட்டுமே செயல்படுத்துவதற்கு இறைவனின் உதவியும், அவர் தரும் பலமும் அவசியம். உதாரணத்துக்கு இயேசு கூறிய மன்னிப்பு என்ற ஒரு நற்குணத்தை எடுத்துக் கொண்டோம் என்றால், பழிப்பவனை, அடித்தவனை, பகைத்தவனை, துரோகியை மன்னிக்க அவர் தரும் பலமும், உதவியும் தேவை.
அந்த உதவி கிடைப்பதை கெடுப்பதற்காகத்தான் சாத்தான் மாற்றுவழிகளில் முயற்சிக்கின்றான். இறைவனிடம் இருக்கும் அதே நற்குணங்களை அடையும் உறுதி இருந்தால் மட்டுமே, அதாவது விதையை தொடர்ந்து ஆழமாக வேர்விட அனுமதித்தால் மட்டுமே, நற்போதனைகளை வாழ்க்கையில் செயல்படுத்த முடியும்.

‘தர்மம்‘ செய்யும் போது, பிறருடன் பகிர்வதன் வழியாக இறைவனுக்கே செய்கிறோம். ‘ஜெபம்‘ செய்யும் போது இறைவனோடு உள்ள உறவை ஆழப்படுத்துகின்றோம்.
நாம் கடந்து வந்த வாழ்க்கை பாதையில் விழுந்த, எழுந்த, தவறிய, தடுமாறிய தருணங்களை எல்லாம் ஆழமாக எடைபோட்டு பார்த்து, திருந்துவதற்கும், நம்மை திருத்தி கொள்வதற்கும் ஏற்ற காலத் தான் தவக்காலம்.
சாலையில் நாம் பயணிக்கும் போது “நில்-கவனி-செல்“ என்ற அடையாள விளக்குகளை பார்த்திருப்போம். நம் வாழ்வில் நின்று கவனித்து, திருத்த வேண்டியவைகளை திருத்தி, புதிய வாழ்வை நோக்கி செல்ல இந்த தவக்காலம் நமக்கு அழைப்பு விடுக்கின்றது. “மாற்றங்கள் இன்றி ஏற்றமில்லை. மாற்றம் மனதிலும் வேண்டும், மண்ணிலும் வேண்டும், தனி மனிதனிலும், இத்தரணி மக்களிலும் வேண்டும்“. இதற்கான அழைப்பு தான் தவக்காலம்.
கிறிஸ்தவர்களாகிய நமக்கு நம்பிக்கையின் அச்சாரமாகவும், ஆணிவேராகவும் விளங்குவது கிறிஸ்துவின் பாடுகளும், உயிர்ப்பும் தான். “இயேசுவின் பாடுகளைப்பற்றி சிந்தித்து, உருகி கண்ணீர் விட்டு அழுவதற்கோ, பரிதாபப்படுவதற்கோ உரிய காலமல்ல. மாறாக, கிறிஸ்துவின் பாடுகள், மரணம் நம் வாழ்வை மறு ஆய்வு செய்யவும், நம் எண்ணங்கள், சொற்கள், செயல்பாடுகளில் மாற்றங்கள் கொண்டு வரவும் தகுந்த காலம் இதுவே“ என பவுல் அடியார் கூறுகிறார்.

முழு மனமாற்றத்திற்கான மூன்று வழிமுறைகளை இக்காலம் நமக்கு எடுத்துரைக்கின்றது. அவை ஜெபம், நோன்பு, தவம் ஆகும். இவை மூன்றும் ஒன்றையன்று நிறைவு செய்கின்றன. ‘நோன்பு‘ இருக்கும் போது உணவு, உடை, அடிப்படை தேவைகளில் ஒறுத்தல் செய்கிறோம். இதனால் நாம் இறைப்பற்றுதலையும், தியாக உணர்வையும் வெளிப்படுத்துகிறோம். ‘தர்மம்‘ செய்யும் போது, பிறருடன் பகிர்வதன் வழியாக இறைவனுக்கே செய்கிறோம். ‘ஜெபம்‘ செய்யும் போது இறைவனோடு உள்ள உறவை ஆழப்படுத்துகின்றோம்.
இவ்வாறு செய்வதன் வழியாக இறைவனின் மாட்சியில் பங்கேற்பாளர்களாகின்றோம். நமது தவக்கால முயற்சிகளும், தூய வாழ்வும், நம் ஆன்ம ஈடேற்றத்திற்கும், பிறர் நலத்திற்கும் பயன்பட, இன்றே நம் வாழ்வை மேம்படுத்துவோம்.
அருட்திரு. ஜான்பேப்டிஸ்ட், சலேசியன் சபை,

மூன்றடைப்பு அருகே உள்ள மலையன்குளம் வியத்தகு வியாகுல அன்னை ஆலய பெருவிழாவை முன்னிட்டு தினமும் நற்கருணை பவனி நடந்தது.
மூன்றடைப்பு அருகே உள்ள மலையன்குளம் வியத்தகு வியாகுல அன்னை ஆலய பெருவிழா கடந்த 20-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. 10 நாட்கள் நடந்த விழாவில் தினமும் மறையுரை, ஜெபமாலை, நற்கருணை ஆசீர், நற்கருணை பவனி நடந்தது. 9-ம் திருநாளன்று மாலை சிறப்பு ஆராதனையும், 10-ம் திருநாளில் காலை 7 மணிக்கு தூத்துக்குடி மறை மாவட்ட ஆயர் இவோன் அம்புரோஸ் தலைமையில் திருவிழா கூட்டுத்திருப்பலியும் நடந்தது.
2 நாட்கள் அன்னையின் தேர்ப்பவனியும், அன்னதானமும் நடந்தது. விழாவில் நெல்லை, தூத்துக்குடி, கன்னியாகுமரி மாவட்டங்களை சேர்ந்த ஏராளமான கிறிஸ்தவர்கள் கலந்துகொண்டனர். 10-ம் திருநாள் மதியம் 2.30 மணிக்கு கொடியிறக்கத்துடன் விழா நிறைவு பெற்றது. ஏற்பாடுகளை திருத்தல பங்குத்தந்தை எம்.ஜி.விக்டர், உதவி பங்குத்தந்தை கிங்ஸ்லி மற்றும் நிதிக்குழுவினர், ஆலய இறை மக்கள் செய்திருந்தனர்.

ஏசாயா 1:18-ல் உங்கள் பாவங்கள் சிவேரென்றிருந்தாலும் உறைந்த மழையைப்போல் வெண்மையாகும், அவைகள் ரத்தாம்பர சிவப்பாயிருந்தாலும் பஞ்சைப்போலாகும்
உமது நாமத்தை நான் துதிக்கும்படி என் ஆத்மாவை காவலுக்கு நீங்கலாக்கிவிடும். சங்கீதம் 142:7
பாவமும், பாவசெயல்களும், பாவத்தை தூண்டிவிடும் காட்சிகள் தினமும் பெருகி வருகிறது. அக்கிரமங்கள் பெருகி வருகிறது. அனைவரும் பயத்தோடும், கலக்கத்தோடும் இருக்கிறார்கள். மக்கள் இந்த அளவுக்கு மோசம்போக காரணம் என்ன? இதற்கு பரிகாரம் உண்டா? அறிவும், அறிவியலும் அதன் உச்சகட்டம் தாண்டியும் பலன் இல்லை.
இங்கேதான் யாவையும் படைத்த தேவனுடைய வல்லமை விளங்குகிறது. பரிசுத்த வேதாகமத்தில் 2 தீமோத்தேயு 3:1 சொல்கிறது. கடைசி நாட்களில் கொடிய காலங்கள் வருமென்று அறிவாயாக. இப்படி பாவத்தில் மூழ்கின மக்கள் நிம்மதியை இழந்தவர்களாகவும், வாழ்க்கையை வெறுத்தவர்களாகவும், பாவ செயல்களில் ஈடுபடுகிறவர்களாகவும் காணப்படுகிறார்கள். வேதம் கூறுகிறது பாவத்தின் சம்பளம் மரணம்.
ரோமர் 6:23 பாவத்தின் சம்பளமாகிய மரணத்தை எதிர்பார்த்துக்கொண்டே செத்து பிழைத்து கொண்டேயிருக்கிற எண்ணிக்கையற்ற கைதிகள் இந்த உலகத்தில் வாழ்கிறார்கள். அந்த நிலையில் இருந்த ஒரு கைதியைப்பற்றி பைபிள் கூறுகிறது பாருங்கள். லூக்கா 23:19, யோவான் 18:40 பரபாஸ் என்பவன் நகரத்தில் நடந்த ஒரு கொலைபாதகத்தினிமித்தமும், கலகத்தினிமிந்தமும் காவலிலே வைக்கப்பட்டிருந்தான். மரண சாசனம் எதிர்பார்த்துக் கொண்டேயிருந்த பரபாசை விடுவிக்க ஒருவருமில்லை. பரபாசின் நாட்கள் எண்ணப்பட்டிருந்தது. அவன் கதறி அழுகி றான். என்னை யார் விடுதலையாக்குவார். ரோமர் 7:24.

வருத்தப்பட்டு பாரம் சுமக்கிறவர்களே நீங்கள் எல்லோரும் என்னிடத்தில் வாருங்கள் நான் உங்களுக்கு இளைப்பாறுதல் தருவேன். மத்தேயு 11:28 உன்னை நான் என் உள்ளங்கையில் வரைந்துள்ளேன். நீ எனக்குரியவன் என்று ஏசு கூறுகிறதும் அல்லாமல் உன் பாவங்களின் தண்டனை அனைத்தையும் நான் ஏற்றுக்கொண்டேன் என்று சொல்லி பரபாஸ் என்கிற கைதியை சிறையினின்று விடுதலை பண்ணுகிறார்.
நாம் தேவனுடைய பிள்ளைகள் என்று அழைக்கப்படுவதினாலே பிதாவானவர் நமக்காக பாராட்டின அன்பு எவ்வளவு பெரிதென்று பாருங்கள். 1 யோவான் 3:1. இனிமேல் பரபாஸ் என்பவன் கைதி இல்லை. அவன் நீதிமான் என்று தீர்க்கப்பட்டார். அவனுக்காக ஏசு தண்டிக்கப்பட்டார். யார் இந்த பரபாஸ்? நானும் நீங்களும்தான். நமக்காக அவர் தமது உடம்பிலே 5 விதமான காயங்கள் ஏற்றுக்கொண்டார். அவருடைய உடல் நமக்காக நொறுக்கப்பட்டது. ஆம் இந்த சிலுவை நமக்காகத் தான்.
ஏசாயா 1:18-ல் உங்கள் பாவங்கள் சிவேரென்றிருந்தாலும் உறைந்த மழையைப்போல் வெண்மையாகும், அவைகள் ரத்தாம்பர சிவப்பாயிருந்தாலும் பஞ்சைப்போலாகும். ஆதலால் நாம் பரிசுத்தமாக்கப்படுவதற்காகவும், பாவ சிறைக்கு நீங்கலாக்கப்படவும் அவர் சிலுவையை ஏற்றுக் கொண்டார்.
- பாஸ்டர். புராவத்து.

இந்த நற்செய்தியின் வாசகத்தை மீண்டும் மீண்டும் படிப்போம். பிறருக்கும் எடுத்துரைப்போம். அன்பையும், சமாதானத்தையும் அகிலம் முழுவதும் பரப்ப உழைப்போம்.
இந்த வாரம் சிந்திக்கத் தூண்டும் நற்செய்தியைப் புனைந்திருப்பவர், ‘புனித மத்தேயு’ என்ற நற்செய்தியாளர்.
அந்தக் காலத்தில் இயேசு பிரான், தம் சீடரை நோக்கிக் கூறினார்:
“மறைநூல் அறிஞர், பரிசேயர் ஆகியோரின் நெறியை விட, உங்கள் நெறி சிறந்ததாக இருக்கட்டும். இல்லாவிட்டால் விண்ணரசுக்குள் புக முடியாது என உங்களுக்குச் சொல்கிறேன். கொலை செய்யாதே! கொலை செய்கிறவர் எவரும் தண்டனைத் தீர்ப்புக்கு ஆளாவர் என்று முற்காலத்தில் கூறப்பட்டிருப்பதைக் கேள்விப்பட்டிருப்பீர்கள்”.
“ஆனால் நான் உங்களுக்குச் சொல்கிறேன். நம் சகோதர சகோதரிகளிடம் சினம் கொள்கிறவர், தண்டனைத் தீர்ப்புக்கு ஆளாவார். தம் சகோதரரையோ, சகோதரியையோ, ‘முட்டாளே’ என்பவர் தலைமைச் சங்கத் தீர்ப்புக்கு ஆளாவார். ‘அறிவிலியே’ என்பவர், எரி நரகத்திற்கு ஆளாவார்”.
“ஆகையால் நீங்கள் உங்கள் காணிக்கையைப் பலி பீடத்தில் செலுத்த வரும்பொழுது, உங்கள் சகோதரர், சகோதரிகள் எவருக்கும் உங்கள் மேல் ஏதோ மனத்தாங்கல் உண்டென அங்கே நினைவு கூர்ந்தால், அங்கேயே பலி பீடத்தின் முன், உங்கள் காணிக்கையை வைத்து விட்டு, முதலில் அவரிடம் போய் நல்ல உறவை ஏற்படுத்திக் கொள்ளுங்கள். பின்பு வந்து உங்கள் காணிக்கையைச் செலுத்துங்கள். உங்கள் எதிரி உங்களை நீதிமன்றத்துக்குக் கூட்டிச் செல்லும்போது வழியிலேயே அவருடன் விரைவாக உடன்பாடு செய்து கொள்ளுங்கள். இல்லாவிட்டால் உங்கள் எதிரி, நடுவரிடம் உங்களை ஒப்படைத்து விடுவார். நடுவர், காவலரிடம் ஒப்படைப்பார். நீங்கள் சிறைக்குள் அடை படுவீர்கள். கடைசி காசு வரை, திருப்பிச் செலுத்தாமல் அங்கிருந்து வெளியேற மாட்டீர்கள் என உறுதியாக உங்களுக்குச் சொல்கிறேன்” என்றார்.
இயேசு பிரானின் இந்த வாசகத்தை மேலும் ஆழமாகப் படியுங்கள். அவர் பழைய ஏற்பாட்டின் நிகழ்வையும், புதிய ஏற்பாட்டின் செயலையும் விளக்கமாக எடுத்துரைக்கிறார். கொலை செய்தால், முற்காலத்தில் தண்டனைத் தீர்ப்புக்கு ஆளாக வேண்டும். புதிய ஏற்பாட்டின்படி, கொலைக்கு காரணமான சினம் கொண்டாலே, தண்டனை உண்டு என்கிறார்.
எல்லாவற்றுக்கும் காரணம் ‘சினம்’ தான். திருவள்ளுவர்கூட, ‘சினம் என்னும் சேர்ந்தாரைக் கொல்லி’ என்கிறார். அதாவது, சினம் என்பது தம்மைச் சார்ந்தவரைக் கொல்லும் நெருப்பு’ என்கிறார்.
‘ஆறுவது சினம்’ என்றாள், அவ்வைப் பாட்டி. இதைத்தான் இயேசு பிரான் அன்றே எடுத்தியம்பி இருக்கிறார். தன் சகோதர, சகோதரிகளை மதிக்கக் கற்றுக்கொள்ள வேண்டும் என்கிறார். அவர்களை, ‘முட்டாள்’ என்றும், ‘அறிவற்றவர்கள்’ என்றும் கூறக்கூடாது என்கிறார். அப்படியெல்லாம் சொன்னால் தண்டிக்கப்படுவீர்கள். எரி நரகத்தில் தள்ளப்படுவீர்கள் என்றும் கூறுகிறார்.

பலி பீடத்தில் காணிக்கை செலுத்த வரும்போது, தூய்மையாக வா; சமாதானமாக வா. யாரோடும் பகை கொண்டு வராதே! பீடத்தின் அருகில் அருகில் வரும்போது, உன் சகோதரன், சகோதரியோடு மனத்தாங்கல் இருந்தால், பீடத்தில் காணிக்கையை வைத்து விட்டு, முதலில் பகை கொண்டோரிடம் உறவாடி விட்டு, பிறகு வந்து காணிக்கையைச் செலுத்து என் கிறார்.
எதிரி, உங்களை நீதிமன்றத்திற்குக் கூட்டிச் செல்லும் பொழுது, முதலில் அவனோடு சமாதானம் செய்து கொள் என்கிறார். இல்லையென்றால் தப்ப முடியாது என்கிறார். இறுதிக் காசு உள்ளவரை அதைச் செலுத்தி விட்டுத்தான் வர முடியும் என்றும் கூறுகிறார்.
இந்த வாசகம் உணர்த்துவது என்ன? முற்றிலும் சமாதானத்தை விரும்புபவராக இயேசு பிரான் காட்சி தருகிறார். இவ்வுலகில் மனித சமூகம் நிம்மதியாக வாழ வேண்டும் என்றால், சினம் கொள்ளாமல், சகோதர சகோதரிகளை மதித்தும், அவர்களோடு சமாதானம் கொண்டும் வாழ வேண்டும் என்பதை வலியுறுத்துகிறார்.
முதலில் இயேசுவைப் பின்பற்றுவோர் இவற்றை ஏற்று நடக் கிறார்களா? அவர்கள் வாழ்க்கையில் கடைப்பிடித்து ஒழுகுவோராக இருக்கிறார்களா? பிறருக்கு முன்மாதிரியாக வாழ்கிறார் களா? என்பதை எண்ணிப் பார்த்துக் கொள்ள வேண்டும்.
பீடத்தில் காணிக்கை செலுத்துவது முக்கியமானது என்றாலும், அதைவிட முக்கியமானது மனத்தாங்கல் கொள்ளாமல் இருக்க வேண்டும். குறிப்பாக நம்மோடு உறவாடவும், உரையாடவும் கூடிய சகோதர சகோதரிகளோடு மனத்தாங்கல் இருக்கக் கூடாது என்கிறார். அவர்கள் மேல் கோபம் கொள்ளக் கூடாது; அவர்களை இழிவாகப் பேசக்கூடாது; அவர்களை முட்டாள் என்றும் அறிவற்றவர்கள் என்றும் பேசக்கூடாது. அப்படிப் பேசினால் எரிகிற நரகத்திற்கு ஆளாகி விடுவீர்கள் என்கிறார்.
முதலில் சகோதர சகோதரியோடு உறவாடு. பிறகு உன் காணிக்கையைச் செலுத்து என்பதற்குப் பொருள் என்ன என்பதை ஒரு கணம் சிந்திப்போம். அன்புடனும், நட்புடனும் வாழ்ந்தால்தான் இவ்வுலகில் அமைதியை ஏற்படுத்த முடியும். ஒருவர் மற்றவரோடு இணக்கமாகவும் வாழ முடியும்.
பழைய ஏற்பாட்டிற்கும், புதிய ஏற்பாட்டிற்கும் உள்ள நடை முறைப் பழக்கங்களில் ஒன்றை, எடுத்துக்காட்டாகக் கூறுகிறார். கொலை செய்தால், தண்டனைத் தீர்ப்புக்கு ஆளாக நேரிடும் என்பது பழைய ஏற்பாட்டின் முறையாகும். கொலைக்குக் காரணமாக இருக்கக் கூடிய சினத்தைக் கொண்டாலே தண்டனை உண்டு என்பது புதிய ஏற்பாட்டின் கோட்பாடாகும்.
கொலை செய்வதற்கு முன் ஏற்படும் கோபம் மிகவும் மோசமானது. கொலை செய்யத் தூண்டுவது கோபம் என்பதை இக்காலத்திலும் பல்வேறு நிலைகளில் உணர முடிகிறது. ஆகவே கோபம் கொள்ளாதே என்ற கருத்தை வலியுறுத்த, அதற்கு உரிய சட்டம் என்ன? என்பதை கூறும் வகையில் கோபத்திற்கே தண்டனை உண்டு என்று கூறுகிறார்.
கோபத்தை அடக்கினாலே எல்லாம் சரியாகி விடும். சமாதானமும் அன்பும் பெருக்கெடுத்து ஓடும்.