என் மலர்
ஆன்மிகம்

இரு வேறு தண்ணீர் குவளைகளும்! துடைக்கும் துண்டுகளும்!
பிலாத்துவின் தண்ணீர் குவளையானது பதவி வெறியினாலும், பயந்தாங்கொள்ளித் தனத்தாலும், சுய சேவையாலும் நிரம்பிய அழுக்கு நீரைக் கொண்டது.
ஒரே வாரத்தில் ஒரே மாதிரியான பொருட்களை வைத்து நிகழ்த்தப்பட்ட இரு வேறு நிகழ்வுகள், ஆனால் அவை கொடுத்தது இருவேறு அர்த்தங்கள். அந்த இரு வேறு பொருட்கள் தண்ணீர் குவளையும், துடைக்கும் துண்டும் ஆகும். ஆண்டவர் ஏசு தம் சீடர்களுடன் இறுதி இரவு உணவு உண்ணும் போது சீடர்களின் பாதங்களை கழுவ ஒரு தண்ணீர் குவளையும், ஒரு துடைக்கும் துண்டையும் பயன்படுத்துகின்றார்.
“ஏசு பந்தியிலிருந்து எழுந்து, தம் மேலாடையைக் கழற்றி வைத்துவிட்டு ஒரு துண்டை எடுத்து இடுப்பில் கட்டிக்கொண்டார். பின்னர் ஒரு குவளையில் தண்ணீர் எடுத்து சீடர்களுடையை காலடிகளைக் கழுவி இடுப்பில் கட்டி யிருந்த துண்டால் துடைக்கத் தொடங்கினார்”. (யோவான் 13:4-5).
இதே வாரத்தில் ஆண்டவர் ஏசுவை விசாரணை செய்த யூதேயாவின் ஆளுநராக இருந்த பொந்தியு பிலாத்து ஏசு குற்றமற்றவர் என்பதை உணர்ந்தும் யூத மத தலைவர்களின் அச்சுறுத்தலுக்குப் பயந்து அவரின் சாவு பழியில் இருந்து தப்பிக்க தன்னுடைய கைகளைக் கழுவ பயன்படுத்திய தண்ணீர் குவளையும் துடைக்கும் துண்டும்.

“கூட்டத்தினரின் முன்னிலையில் தண்ணீரை எடுத்து, “இவனது ரத்தப்பழியில் எனக்கு பங்கில்லை. நீங்களே பார்த்துக்கொள்ளுங்கள்” என்று கூறி தன் கைகளைக் கழுவினான்” (மத் 27:24) இருவேறு நிகழ்வுகளிலும் பயன்படுத்தப்படுகின்ற பொருட்கள் ஒன்றாயினும் அவை சொல்லும் செய்திகள் வேறு வேறு. ஆண்டவர் ஏசு மண்டியிட்டு தன் சீடர்களின் பாதங்களை தண்ணீரால் கழுவி துண்டால் துடைத்தார். கடவுளானவர் அடிமையின் பணியை செய்கிறார் ( பிலிப் 2:7-8).
ஆனால், மனிதனான பிலாத்து சிம்மாசனத்தில் அமர்ந்து தண்ணீரால் தன்னுடைய கைகளை கழுவி துண்டால் துடைக்கின்றார். ஆண்டவரின் தண்ணீர் குவளை, இரக்கத்தாலும் மன்னிப்பினாலும் பிறர் சேவையினாலும் நிரம்பிய தூய நீரால் ஆனது. பிலாத்துவின் தண்ணீர் குவளையானது பதவி வெறியினாலும், பயந்தாங்கொள்ளித் தனத்தாலும், சுய சேவையாலும் நிரம்பிய அழுக்கு நீரைக் கொண்டது.
- அருட்தந்தை.தேவதாஸ், கும்பகோணம்.

Next Story