search icon
என் மலர்tooltip icon

    கியூபா

    • பிப்ரவரி 1ம் தேதி முதல் விலை உயர்வு அமலுக்கு வருகிறது.
    • 25 பேசோ (பைசா)வில் இருந்த விலை 132 பேசோவாக உயர்கிறது.

    கடும் பொருளாதார நெருக்கடியில் சிக்கித் தவிக்கும் கியூபா - எரிபொருள் விலையை 500% உயர்த்தியுள்ளது.

    மிக மோசமான பொருளாதார நெருக்கடியால், எரிபொருள் விலையை 500 சதவீதம் உயர்த்த கியூபா அரசு முடிவு செய்துள்ளது.

    அதன்படி, பிப்ரவரி 1ம் தேதி முதல் விலை உயர்வு அமலுக்கு வருகிறது.

    25 பேசோ (பைசா)வில் இருந்த விலை 132 பேசோவாக உயர்கிறது.

    இது இந்திய மதிப்பில் ஒரு லிட்டர் ரூ.456க்கு விற்பனையாகும்.

    • ரஷியாவின் சிறப்பு ராணுவ நடவடிக்கையில் மற்ற நாட்டவர்களும் சட்ட விரோதமாக ஈடுபடுத்தப்பட்டு வருகின்றனர்.
    • அண்டை நாடான கியூபாவில் சட்ட விரோதமாக ஆட்களை சேர்க்க முயன்ற 17 பேர் கைது செய்யப்பட்டனர்.

    ஹவானா:

    உக்ரைனுக்கு எதிராக சிறப்பு ராணுவ நடவடிக்கை என்ற பெயரில் ரஷியா கடந்த ஆண்டு போர் தொடுத்தது. இதில் உக்ரைனுக்கு ஆதரவாக அமெரிக்கா மற்றும் பல ஐரோப்பிய நாடுகள் உள்ளன. அதேபோல் ரஷியாவுக்கு ஆதரவாக அதன் நட்பு நாடுகளான சீன, வடகொரியா போன்றவை செயல்படுகின்றன.

    இந்தநிலையில் ரஷியாவின் சிறப்பு ராணுவ நடவடிக்கையில் மற்ற நாட்டவர்களும் சட்ட விரோதமாக ஈடுபடுத்தப்பட்டு வருகின்றனர். அதன்படி அண்டை நாடான கியூபாவில் சட்ட விரோதமாக ஆட்களை சேர்க்க முயன்ற 17 பேர் கைது செய்யப்பட்டனர். இதுகுறித்து அந்த நாட்டின் தூதர் ஜூலியோ அன்டோனியோ கார்மென்டியா பெனா கூறுகையில், `கியூபா நாட்டவர்கள் ரஷிய ராணுவத்தில் சட்டப்பூர்வமாக சேர்ந்து பணியாற்றுவதற்கு எவ்வித தடையும் இல்லை. ஆனால் இந்த நெருக்கடியை பயன்படுத்தி பலர் பணம் சம்பாதிக்கின்றனர். எனவே இதுபோன்ற சட்ட விரோத செயல்களில் பங்கேற்பதை அனுமதிக்க முடியாது' என அவர் தெரிவித்தார்.

    • காட்டுத்தீயைக் கட்டுப்படுத்த அந்நாட்டின் பாதுகாப்புத் துறை களமிறங்கியுள்ளது.
    • 7 நாட்களாக பற்றி எரியும் காட்டுத்தீயால் சுமார் 2 ஆயிரத்து 223 ஏக்கர் பரப்பிலான வனப்பகுதி சாம்பலாகியுள்ளது.

    கியூபாவில் ஒரு வார காலமாக கட்டுக்கடங்காமல் பற்றி எரிந்து வரும் காட்டுத் தீயை அணைக்க முடியாமல் தீயணைப்பு வீரர்கள் திணறி வருகின்றனர்.

    அச்சுறுத்தி வரும் காட்டுத்தீயைக் கட்டுப்படுத்த அந்நாட்டின் பாதுகாப்புத் துறை களமிறங்கியுள்ளது.

    விமானங்கள் மற்றும் ஹெலிகாப்டர்கள் மூலம் காட்டுத்தீயை அணைக்க தீயணைப்பு வீரர்கள் போராடி வருகின்றனர்.

    ஹோல்குயினில் கிழக்கு பினாரஸ் டி மயாரி மலைப்பகுதிகளில் கிட்டத்தட்ட 7 நாட்களாக பற்றி எரியும் காட்டுத்தீயால் சுமார் 2 ஆயிரத்து 223 ஏக்கர் பரப்பிலான வனப்பகுதி சாம்பலாகியுள்ளது.

    • நடிகை சமந்தா சில தினங்களாக மையோசைட்டிஸ் என்ற நோயில் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார்.
    • தற்போது அவருக்கு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக தகவல்கள் பரவின.

    நடிகை சமந்தா சில நாட்களுக்கு முன்பு யசோதா பட வெளியீட்டிற்காக ரசிகர்களுடன் பேசிய வீடியோவில் தனக்கு மயோசிடிஸ் என்ற அரிய வகை நோயால் பாதிக்கப்பட்டு இருப்பதாக உறுதிப்படுத்தினார். இதற்காக கடந்த 3 மாதங்களாக சிகிச்சை எடுத்துக் கொண்டிருப்பதாகவும், இதனால் உயிருக்கு ஆபத்து இல்லையென்றாலும் கடுமையான வலி இருப்பதாகவும் விரைவில் நலம் பெற்று திரும்புவேன் என்றும் கண்ணீர் மல்க கூறியிருந்தார்.

     

    சமந்தா

    சமந்தா

    இந்நிலையில் நேற்று சமந்தாவுக்கு நோயின் தாக்குதல் தீவிரமானதால் ஐதராபாத்தில் இருக்கும் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப் பட்டிருப்பதாகவும், அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும் தகவல் பரவியது. இதனால் திரையுலகில் பரபரப்பு தொற்றி கொண்டது. ஊடகங்கள் பலவும் ஐதராபாத்திலுள்ள மருத்துவமனையில் குவிந்தனர்.

     

    சமந்தா

    சமந்தா

    இது தொடர்பாக சமந்தாவின் செய்தி தொடர்பாளர் சார்பில் கூறப்பட்டிருப்பதாவது, சமந்தா மருத்துவமனையில் அனுமதிக்கப்படவில்லை. வீட்டிலிருந்தே சிகிச்சை எடுத்துக் கொள்கிறார். இப்படி இருக்கையில் இந்த தவறான செய்தி எப்படி பரவியது என்றே தெரியவில்லை. சமந்தா கடந்த 3 வாரங்களாக வழக்கமான பரிசோதனைக்காககூட எந்த மருத்துவமனைக்கும் போகவில்லை என்பதே உண்மை என்று குறிப்பிடப்பட்டிருக்கிறது.

    • கமீலோ சேகுவாரா ஆய்வு மையத்தின் இயக்குனராக பணிபுரிந்து வந்தார்.
    • கியூபா நாட்டு அதிபர் இரங்கல் தெரிவித்து டுவிட்டர் பதிவு வெளியிட்டு உள்ளார்.

    உலக அளவில் இன்று வரை புரட்சிக்கும், தியாகத்திற்கும் உதாரணமாக திகழ்ந்தவர் சேகுவாரா. கியூபாவை சேர்ந்த இவர் புரட்சியாளர், மருத்துவர், அரசியல்வாதி, இலக்கியவாதி என பன்முகத்தன்மை கொண்டவர்.

    சேகுவாராவின் இளைய மகன் கமீலோ சேகுவாரா. இவர் சேகுவாரா ஆய்வு மையத்தின் இயக்குனராக பணிபுரிந்து வந்தார்.

    இந்நிலையில் கமீலோ சேகுவாரா வெனிசூலா நாட்டின் சராகவ் நகருக்கு சென்றபோது திடீரென மாரடைப்பு ஏற்பட்டது. சிறிது நேரத்தில் அவர் மரணம் அடைந்தார். அவருக்கு வயது 60 ஆகும்.

    கமீலோ சேகுவாராவின் மறைவுக்கு கியூபா நாட்டு அதிபர் இரங்கல் தெரிவித்து டுவிட்டர் பதிவு வெளியிட்டு உள்ளார்.

    • கியூபா நாட்டின் மடான்சாஸ் நகரில் இடி-மின்னலுடன் பலத்த மழை பெய்தது. இதில்
    • ஹெலிகாப்டர் மூலம் தீயணைப்பு வீரர்கள் தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர்.

    கியூபா நாட்டின் மடான்சாஸ் நகரில் இடி-மின்னலுடன் பலத்த மழை பெய்தது. இதில் அங்குள்ள எண்ணை சேமிப்பு கிடங்கு மீது மின்னல் தாக்கியது. இதனால் கிடங்கில் தீப்பிடித்து மளமளவென்று பரவியது.

    ஒரு கலனில் மின்னல் தாக்கி தீப்பிடித்தபோது அருகில் இருந்த மற்றொரு கலனுக்கு தீ பரவியதால் பயங்கரமாக வெடித்து தீப்பிடித்தது.

    பல அடி உயரத்துக்கு தீ பிழம்பு எழும்பியது. கரும் புகை வெளியேறியபடி தீ கொளுந்துவிட்டு எரிகிறது.

    இதையடுத்து ஹெலிகாப்டர் மூலம் தீயணைப்பு வீரர்கள் தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர். எண்ணை கிடங்கில் இருந்து சுமார் 100 கி.மீ. தூரத்துக்கு கரும்புகை பரவியுள்ளது.

    இந்த விபத்தில் 121 பேர் படுகாயம் அடைந்தனர். அவர்களை மீட்டு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். இதற்கிடையே மீட்பு பணியில் ஈடுபட்ட 17 தீயணைப்பு வீரர்களை காணவில்லை என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது.

    தீயணைப்பு வீரர்கள் கடுமையாக போராடி வந்தாலும் தீ கட்டுக்குள் வரவில்லை.

    எண்ணை கிடங்குக்கு அருகே உள்ள பகுதிகளில் இருந்து சுமார் 1,900 பேர் வெளியேற்றப்பட்டுள்ளனர்.

    தீயை அணைக்க நட்பு நாடுகளின் சர்வதேச நிபுணர்களின் உதவிகள் மற்றும் ஆலோசனைகளை நாடியுள்ளதாக கியூபா நாட்டு அரசு தெரிவித்து உள்ளது.

    ×