search icon
என் மலர்tooltip icon

    கிரிக்கெட்

    டி20 தொடர்- ஆஸ்திரேலியாவை 2 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி இந்தியா வெற்றி
    X

    டி20 தொடர்- ஆஸ்திரேலியாவை 2 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி இந்தியா வெற்றி

    • ஜோஷ் இங்லிஸ் அதிரடியாக விளையாடி சதம் அடித்தார்.
    • இந்தியா சார்பில் சூர்யகுமார் யாதவ் அரைசதம் அடித்தார்.

    உலகக் கோப்பை 2023 கிரிக்கெட் தொடரில் கோப்பையை வென்ற ஆஸ்திரேலியா அணி இந்தியாவில் சுற்றுப் பயணம் மேற்கொண்டு டி20 தொடரில் விளையாடி வருகிறது. அந்த வகையில் இன்று நடைபெற்ற டி20 போட்டியில் ஆஸ்திரேலியா அணி முதலில் பேட்டிங் ஆடியது.

    ஆஸ்திரேலியா அணிக்கு துவக்க வீரராக களமிறங்கிய ஸ்டீவன் ஸ்மித் அதிரடியாக விளையாடி 52 ரன்களை குவித்தார். இவருடன் களமிறங்கிய 13 ரன்களில் ஆட்டமிழந்தார். அடுத்து களமிறங்கிய ஜோஷ் இங்லிஸ் அதிரடியாக விளையாடி சதம் அடித்தார்.

    போட்டி முடிவில் ஆஸ்திரேலியா அணி 3 விக்கெட்டுகளை இழந்து 208 ரன்களை குவித்தது. 209 ரன்களை எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய இந்திய அணிக்கு துவக்க வீரர்களான யஷஸ்வி ஜெய்ஸ்வால் 8 பந்துகளில் 21 ரன்களையும், ருதுராஜ் கெய்க்வாட் ரன் ஏதும் எடுக்காமலும் ஆட்டமிழந்தனர்.

    அடுத்து களமிறங்கிய இஷான் கிஷன் 39 பந்துகளில் 58 ரன்களை குவித்து ஆட்டமிழந்தார். இவருடன் ஆடிய கேப்டன் சூர்யகுமார் யாதவ் அதிரடியாக விளையாடி ரன்களை குவித்தார். தொர்ந்து, திலக் வர்மா 12 ரன்களில் ஆட்டமிழந்தார். பின்னர், சூர்யகுமார் 80 ரன்களை குவித்து அவுட்டானார்.

    18 ஓவர் முடிவில், ரங்கு சிங்- அசார் பட்டேல் ஜோடி களத்தில் இருந்தது. இதில், ரங்கு சிங் 21 ரன்களும், அசார் பட்டேல் 2 ரன்களும் எடுத்தனர். ரவி பிஷ்னோய் ரன் அவுட் ஆனார்.

    போட்டி முடிவில் இந்திய அணி 8 விக்கெட்டுகளை இழந்து 209 ரன்களை எடுத்து வெற்றி பெற்றது. ஆஸ்திரேலியா சார்பில் டன்வீர் சங்கா 2 விக்கெட்டுகளையும், மேத்யூ ஷார்ட் மற்றும் ஜாசன், சியான் ஆகியோர் தலா 1 விக்கெட்டையும் வீழ்த்தினர்.

    இதன் மூலம் ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் இந்திய அணி முன்னணியில் உள்ளது.

    Next Story
    ×