search icon
என் மலர்tooltip icon

    கிரிக்கெட்

    T20-யில் ரோகித் சர்மா, விராட் கோலியின் எதிர்காலம்?
    X

    T20-யில் ரோகித் சர்மா, விராட் கோலியின் எதிர்காலம்?

    • டி20 கிரிக்கெட்டில் ரோகித் சர்மா, விராட் கோலி நீண்ட காலத்திற்கு விளையாடுவதற்கான வாய்ப்பு குறைவு.
    • டி20 கிரிக்கெட்டில் தங்களது எதிர்காலம் குறித்து முடிவு எடுக்க பிசிசிஐ இருவருக்கும் சுதந்திரம் வழங்கியுள்ளது.

    இந்திய கிரிக்கெட்டின் தலைசிறந்த வீரர்களாக இந்திய அணி கேப்டன் ரோகித் சர்மா, முன்னாள் கேப்டன் விராட் கோலி ஆகியோர் திகழந்து வருகிறார்கள்.

    நடைபெற்று முடிந்த 50 ஓவர் உலகக் கோப்பையை எப்படியாவது வென்றுவிட வேண்டும் என்ற வேட்கையுடன் விளையாடினார்கள். தொடர் முழுவதும் அசத்திய இருவரால் உலகக் கோப்பையை வென்று கொடுக்க முடியவில்லை. இறுதிப் போட்டியில் இந்திய அணி ஆஸ்திரேலியாவிடம் தோல்வியடைந்து ஏமாற்றம் அடைந்தது.

    ஒவ்வொரு உலகக்கோப்பை தொடருக்குப் பின்னரும் அணியின் எதிர்காலம் குறித்து யோசிக்கப்படும். ரோகித் சர்மாவுக்கு தற்போது 36 வயதாகிறது. விராட் கோலிக்கு 35 வயதாகிறது.

    டி20 கிரிக்கெட்டில் இருவரின் ஆட்டத்தில் எந்த தொய்வும் இல்லை. என்றபோதிலும், இந்திய கிரிக்கெட் வாரியம் இந்திய டி20 கிரிக்கெட் அணியின் எதிர்காலம் குறித்து யோசிக்கிறது.

    அடுத்த வருடம் டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் நடைபெறுகிறது. அதன்பின் 2026-ல் நடக்கிறது. 2024-ம் ஆண்டு உலகக் கோப்பைக்கான இந்திய அணியை வழி நடத்தும் வகையில் ஹர்திக் பாண்ட்யாவை டி20 அணி கேப்டனாக பிசிசிஐ நியமித்துள்ளது.

    தற்போது 2024-ம் ஆண்டு உலகக் கோப்பைக்கு ரோகித் சர்மா, விராட் கோலியுடன் செல்ல வெண்டுமா? என்பதைத்தான் பிசிசிஐ எடுக்க வேண்டிய முக்கியமான முடிவு.

    உலகக் கோப்பை தோல்வியில் இருந்து இந்திய வீரர்கள் இன்னும் மீண்டு வரவில்லை. இதற்குள் இந்த கேள்வியை எழுப்பினால் சரியாக இருக்காது என பிசிசிஐ இதுகுறித்து தகவல் ஏதும் தெரிவிக்கவில்லை.

    இருந்தபோதிலும், டி20 கிரிக்கெட்டில் உங்களுடைய எதிர்காலம் குறித்து நீங்களே முடிவு எடுத்துக் கொள்ளலாம் என பிசிசிஐ அவர்கள் முடிவுக்கே விட்டுவிட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

    ஒருவேளை 2024 உலகக்கோப்பை வரை விளையாட விரும்புகிறோம் என்று இருவரும் தெரிவித்தால், அதற்கான சாத்தியக்கூறுகள் குறித்து பிசிசிஐ ஆராயும். இதில் பிசிசிஐ-க்கு உடன்பாடு இல்லை என்றால், அதிரடி நடவடிக்கைகள் எடுக்கப்படும்.

    ரோகித் சர்மா 148 போட்டிகளில் 140 இன்னிங்சில் 4 சதம், 29 அரைசதங்களுடன் 3863 ரன்கள் அடித்துள்ளார். சராசரி 31.32 ஆகும்.

    விராட் கோலி 115 டி20 போட்டிகளில் 107 இன்னிங்சில் பேட்டிங் செய்து 1 சதம், 37 அரைசதங்களுடன் 4008 ரன்கள் குவித்துள்ளார். சராசரி 52.73 ஆகும்.

    Next Story
    ×