என் மலர்

  சினிமா

  கருணாநிதி மறைவையொட்டி விஜய்யின் சர்கார் படப்பிடிப்பு நிறுத்தம்
  X

  கருணாநிதி மறைவையொட்டி விஜய்யின் சர்கார் படப்பிடிப்பு நிறுத்தம்

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  திமுக தலைவர் கருணாநிதி மறைவையொட்டி, விஜய் நடிப்பில் உருவாகி வரும் `சர்கார்' படத்தின் படப்பிடிப்பு நிறுத்தப்பட்டதாக படக்குழு அறிவித்துள்ளது. #Karunanidhi #RIPKarunanidhi #கருணாநிதி #RIPkalaingar #KamalHaasan #Vijay #Sarkar
  காவேரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்த திமுக தலைவர் கருணாநிதி நேற்று மாலை காலமானார். அவரது மறைவுக்கு ஜனாதிபதி, பிரதமர் உள்பட அரசியல் தலைவர்கள், சினிமா பிரபலங்கள் உள்ளிட்ட பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். 

  ராஜாஜி அரங்கத்தில் வைக்கப்பட்டுள்ள கருணாநிதியின் உடலுக்கு ரஜினிகாந்த், கமல்ஹாசன், அஜித், சூர்யா, விஜய் சேதுபதி, சிவகார்த்திகேயன் உள்ளிட்ட பல்வேறு நடிகர்கள் நேரில் அஞ்சலி செலுத்தினர். `சர்கார்' படப்பிடிப்புக்காக நடிகர் விஜய் அமெரிக்கா சென்றுள்ளதால் அவர் அஞ்சலி நிகழ்ச்சியில் கலந்து கொள்ளவில்லை.   மேலும் கருணாநிதி மறைவுக்கு மரியாதை செலுத்தும் விதமாக, `சர்கார்' படத்தின் படப்பிடிப்பும் பாதியில் நிறுத்தப்பட்டதாக படக்குழுவி அறிவித்துள்ளது. 

  முன்னதாக அமெரிக்காவில் சிகிச்சை பெற்று வரும் விஜயகாந்த்தும் கண்ணீர் மல்க கருணாநிதிக்கு இரங்கல் தெரிவித்து வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். #Karunanidhi #RIPKarunanidhi #கருணாநிதி #RIPkalaingar #KamalHaasan #Vijay #Sarkar

  Next Story
  ×