என் மலர்
முன்னோட்டம்
ஜெகதீசன் சுபு இயக்கத்தில் விக்ராந்த், வசுந்தரா நடிப்பில் உருவாகி இருக்கும் ‘பக்ரீத்’ படத்தின் முன்னோட்டம்.
விக்ராந்த் நடிப்பில் தற்போது உருவாகி இருக்கும் படம் ‘பக்ரீத்’. ஜெகதீசன் சுபு இயக்கி வரும் இப்படத்தில் விக்ராந்த்துக்கு ஜோடியாக வசுந்தரா நடித்துள்ளார். எம்10 புரொடக்சன் நிறுவனம் சார்பில் எம்எஸ் முருகராஜ் இப்படத்தினை தயாரித்துள்ளார்.
ஒட்டகத்தை மையமாக வைத்து உருவாகி இருக்கும் முதல் படம் இது. இப்படத்தின் படப்பிடிப்புகள் முடிந்து பின்னணி வேலைகள் மும்முரமாக நடைபெற்று வந்தது. உதயநிதி ஸ்டாலின் வெளியிடும் இப்படத்தின் ரிலீஸ் தேதியை விரைவில் அறிவிக்க இருக்கிறார்கள்.
ரோகிப் பதாக், மோக்லி, பேபி ஸ்ரூத்தீகா ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்கள். இப்படத்திற்கு இமான் இசையமைத்துள்ளார். பாடல்கள் - ஞானகரவேல், மணிஅமுதவன், கலை - மதன், ஒளிப்பதிவு செய்து படத்தை இயக்கி இருக்கிறார் ஜெகதீசன் சுபு.
இயக்குனர் வஸந்த் எஸ் சாய் இயக்கத்தில் பார்வதி நடிப்பில் உருவாகி வரும் ’சிவரஞ்சனியும் இன்னும் சில பெண்களும்’ படத்தின் முன்னோட்டம்.
எழுத்தாளர்கள் அசோகமித்ரன், ஆதவன் மற்றும் ஜெயமோகன் ஆகியோரின் சிறுகதைகளை கொண்டு உருவாகி வரும் படம் ‘ சிவரஞ்சனியும் இன்னும் சில பெண்களும்’. இந்திரைப்படத்தில் பார்வதி, லட்சுமி ப்ரியா சந்திரமௌலி, காளிஸ்வரி ஸ்ரீனிவாசன், கருணாகரன், ”மயக்கம் என்ன“ சுந்தர், கார்த்திக் கிருஷ்ணா, மாரிமுத்து மற்றும் மாஸ்டர் ஹமரேஷ், நேத்ரா என பல நட்சத்திரங்கள் நடித்துள்ளனர்.

இத்திரைப்படத்திற்கு என்.கே. ஏகாம்பரம் மற்றும் ரவிசங்கரன் ஆகியோர் ஒளிப்பதிவு செய்துள்ளனர். ஸ்ரீகர் பிரசாத் படத்தொகுப்பு செய்துள்ளார். எழுத்தாளர்கள் அசோகமித்ரன், ஆதவன் மற்றும் ஜெயமோகன் ஆகியோரின் சிறுகதைகளை கொண்டு திரைக்கதையாக்கி வசனம் எழுதி இயக்குனர் வஸந்த் எஸ் சாய் இத்திரைப்படத்தை இயக்கி தயாரித்துள்ளார்.
தியான் பிக்சர்ஸ் தயாரிப்பில் பிரபுராஜா இயக்கி நடிக்கும் படைப்பாளன் படத்தின் முன்னோட்டம்.
தமிழ் சினிமாவில் சமீபத்தில் நடந்த கதை திருட்டு சம்பவங்களை மையப்படுத்தி படைப்பாளன் என்ற படம் உருவாகியுள்ளது. பிரபுராஜா இயக்கி நடித்துள்ள இந்த படத்தை தியான் பிக்சர்ஸ் சார்பில் எஸ்.நட்சத்திரம் செபஸ்தியான், பிரபுலீன்பாபு, ஆண்டனி ஆகியோர் இணைந்து தயாரித்துள்ளனர்.
இந்த படத்தில் பிரபுராஜாவுடன் மனோபாலா, இயக்குனர் தருண்கோபி, ஜாக்குவார் தங்கம், பாடகர் வேல்முருகன், காக்கா முட்டை ரமேஷ் விக்கி, அஷ்மிதா, வளவன், திருச்சி வேலுச்சாமி ஆகியோர் நடித்துள்ளனர். வேல்முருகன் ஒளிப்பதிவு செய்ய கிருபாகரன் இசையமைத்துள்ளார்.
மாறன் இயக்கத்தில் ஆதிக் மாறன், ஸ்ரீமகேஷ் தீஷா, தாரா, நடிப்பில் உருவாகும் ’பச்சை விளக்கு’ படத்தின் முன்னோட்டம்.
சிவாஜி நடிப்பில் உருவாகி மிகப்பெரிய வரவேற்பை பெற்ற படம் பச்சை விளக்கு. இதே தலைப்பில் ஒரு படம் உருவாகி உள்ளது. டிஜி திங்க் மீடியா ஒர்க்ஸ் மற்றும் விண்மீன்கள் பட நிறுவனம் இணைந்து தயாரிக்கும் படம், ‘பச்சை விளக்கு’. விதி மீறிய காதலும், விதி மீறிய பயணமும் ஊர் போய் சேராது என்பதை விளக்கும் இந்தப் படத்தை கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்குகிறார், டாக்டர் மாறன்.
இந்தப் படத்தில் புதுமுகங்கள் ஆதிக் மாறன், ‘அம்மணி’ புகழ் ஸ்ரீமகேஷ் தீஷா, தாரா ஆகியோருடன் மனோபாலா, இமான் அண்ணாச்சி, நெல்லை சிவா, ‘போஸ்டர்’ நந்தகுமார், விஜய் டிவி புகழ் நாஞ்சில் விஜயன், ராதா, மடிப்பாக்கம் சுரேஷ் உட்பட பலர் நடித்துள்ளனர்.

கன்னட பட உலகில் கதாநாயகியாக நடித்து வரும் ரூபிகா இந்த படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து உள்ளார். இந்தப் படத்தில் ‘வேதம் புதிது’ பட புகழ் தேவேந்திரன் இசையில் நான்கு பாடல்கள் உருவாகி உள்ளன. பாலாஜி ஒளிப்பதிவு செய்ய, சுரேஷ் அர்ஸ் படத்தொகுப்பு செய்கிறார்.
முனுசாமி இயக்கத்தில் உதய்ராஜ், அவந்திகா நடிப்பில் உருவாகி வரும் `ரீல்' படத்தின் முன்னோட்டம்.
டி.என்.சூரஜ் எழுத, முனுசாமி இயக்கத்தில் உருவாகி வரும் படம் `ரீல்'. இந்த படத்தில் உதய்ராஜ் நாயகனாவும், அவந்திகா நாயகியாகவும் நடிக்கிறார்கள். கலக்கப்போவது யாரு சரத் காமெடி கலந்து குணச்சித்திர வேடத்தில் நடிக்கிறார்.
காதல் கலந்த காமெடி படமாக உருவாகும் இதன் படப்பிடிப்பு கோவை, மெலுகொட் கோத்தகிரி மற்றும் மைசூர் போன்ற பகுதிகளில் நடந்து வரும் நிலையில், படத்தை விரைவில் திரைக்கு கொண்டுவர படக்குழு முடிவு செய்துள்ளது.

சந்தோஷ் சந்திரன் பாடல்களையும், அச்சு ராஜாமணி பின்னணி இசையையும் கவனிக்கின்றனர். சுனல் பிரேம் ஒளிப்பதிவு செய்ய, சாய் சுரேஷ் படத்தொகுப்பை கவனிக்கிறார். ஸ்ரீ முருகா மூவி மேக்கர் இந்த படத்தை தயாரித்து வருகிறது.
என்.பி.இஸ்மாயில் இயக்கத்தில் அனீபா, விஷ்வா, பிந்து நடிப்பில் உருவாகி இருக்கும் ‘ஐ.ஆர்.8’ படத்தின் முன்னோட்டம்.
பிரண்ட்ஸ் பிக்சர்ஸ் மற்றும் ஜே.கே. இண்டர்நேஷனல் ஆகிய நிறுவனங்கள் இணைந்து தயாரித்துள்ள திரைப்படம் ‘ஐ.ஆர்.8’. இந்தப் படத்தில் அனீபா, விஷ்வா இருவரும் கதாநாயகர்களாகவும் பிந்து கதாநாயகியாகவும் நடித்துள்ளனர். மேலும், ஆர்.வி.தம்பி, ஜெயக்குமார்.T, அப்புக்குட்டி, கராத்தே ராஜா, பாபு, ராஜேஷ், கவிதா, சுப்புராஜ் ஆகியோரும் நடித்துள்ளனர்.

ஓளிப்பதிவு – கே.வி.மணி, பாடல்கள், இசை – கோண்ஸ், படத் தொகுப்பு – B.S.வாசு, சண்டை இயக்கம் – ‘நாக் அவுட்’ நந்தா, தயாரிப்பு- ஜெயக்குமார்.T, ஆயிஷா, அக்மல், கதை, திரைக்கதை, வசனம், இயக்கம் – என்.பி. இஸ்மாயில். இத்திரைப்படம் விவசாயத்தையும், விவசாயிகளின் நலனையும் முன்னிறுத்தி உருவாக்கப்பட்டுள்ளது.
கிருஷ்ணா, பிந்து மாதவி நடிப்பில் சத்யசிவா இயக்கத்தில் உருவாகி இருக்கும் ’கழுகு 2’ படத்தின் முன்னோட்டம்.
கடந்த 2012ல் கிருஷ்ணா, பிந்து மாதவி நடிப்பில் சத்யசிவா இயக்கத்தில் வெளியாகி மாபெரும் வெற்றி பெற்ற படம் ‘கழுகு’. ஏழு வருடங்களுக்கு பிறகு தற்போது இந்த படத்தின் இரண்டாம் பாகமாக இதே கூட்டணியில் 'கழுகு 2’ படம் உருவாகியுள்ளது.
மதுக்கூர் மூவி மேக்கர்ஸ் சார்பில் சிங்காரவேலன் தயாரித்துள்ள இந்தப்படத்தை ஸ்கிரீன் சீன் மீடியா என்டர்டைன்மென்ட் நிறுவனம் வெளியிடுகிறது. இந்த படத்தில் காளிவெங்கட் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். யுவன் சங்கர் ராஜா இசையமைக்க, ராஜா பட்டாசார்ஜி ஒளிப்பதிவு செய்ய, கோபிகிருஷ்ணா படத்தொகுப்பை கவனிக்கிறார்.
இப்படம் ஆகஸ்ட்-1ஆம் தேதி ரிலீசாக இருக்கிறது.
சக்ரி டோலட்டி இயக்கத்தில் நயன்தாரா, பூமிகா நடிப்பில் உருவாகி இருக்கும் ’கொலையுதிர் காலம்’ படத்தின் முன்னோட்டம்.
நயன்தாரா நடித்துள்ள `கொலையுதிர் காலம்' படம் விரைவில் திரைக்கு வர இருக்கிறது. சக்ரி டோலட்டி இயக்கியிருக்கும் இந்த படம் மர்மம் கலந்த திரில்லர் பாணியில் உருவாகி இருக்கிறது. `ஹஷ்' என்ற ஹாலிவுட் படத்தை தழுவி இந்த படம் உருவாகி இருப்பதாக கூறப்படுகிறது. தணிக்கையில் படத்திற்கு யு/ஏ சான்றிதழ் கிடைத்துள்ளது.

எக்ஸ்ட்ரா என்டர்டெயின்மெண்ட் சார்பில் வி.மதியழகன் தயாரித்துள்ள இந்த படத்திற்கு கோரி கெர்யக் ஒளிப்பதிவு செய்துள்ளார். ராமேஸ்வர் எஸ்.பகத் படத்தொகுப்பை கவனிக்கிறார். சந்தோஷ் நாராயணன் இப்படத்திற்கு இசை அமைத்திருக்கிறார். இந்த படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் பூமிகா நடித்துள்ளார்.
கல்யாண் இயக்கத்தில் ஜோதிகா, ரேவதி நடிப்பில் உருவாகி இருக்கும் ‘ஜாக்பாட்’ படத்தின் முன்னோட்டம்.
சூர்யா ஜோதிகா ஜோடி திரையில் எப்படி வெற்றிக்கொடி நாட்டியதோ அதேபோல் சூர்யா தயாரித்து ஜோதிகா நடிக்கும் கூட்டணியும் வெற்றிக்கொடி நாட்டியுள்ளது. ஏற்கெனவே சூர்யா தயாரித்து ஜோதிகா நடித்த 36 வயதினிலே, மகளிர் மட்டும் ஆகிய படங்கள் வெற்றி பெற்றுள்ளன.
தற்போது மூன்றாவது முறையாக சூர்யாவின் 2டி எண்டெர்டெயின்மெண்ட் தயாரிப்பில் ஜோதிகா நடித்துள்ள படம் தான் “ஜாக்பாட்”. இப்படத்தை இயக்குனர் கல்யாண் இயக்கியுள்ளார். இவர் ஏற்கெனவே 'குலேபகாவலி' படத்தின் மூலம் ரசிகர்களை வயிறு வலிக்க சிரிக்க வைத்தவர். இந்தப்படமும் காமெடியை அடித்தளமாக கொண்டது தான்.

படத்தில் ஜோதிகாவோடு நடிகை ரேவதி, நடிகர்கள் யோகிபாபு, ஆனந்த்ராஜ், மன்சூர் அலிகான், மொட்டை ராஜேந்திரன், ஜெகன் உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் நடித்திருக்கிறார்கள்.
இந்த ' ஜாக்பாட் ' டிற்கு ஆனந்த்குமார் ஒளிப்பதிவு செய்துள்ளார். விஷால் சந்திரசேகர் இசை அமைத்துள்ளார். படத்தின் எடிட்டர் விஜய். இத்திரைப்படம் 2டி எண்டெர்டெயின்மெண்ட்டின் 11-வது தயாரிப்பு என்பது குறிப்பிடத்தக்கது.
தமிழில் ஆரஞ்சு மிட்டாய் படத்தை இயக்கிய இயக்குநர் பிஜூ, இயக்கத்தில் உருவாகி இருக்கும் சென்னை பழனி மார்ஸ் படத்தின் முன்னோட்டம்
உலகில் பிறந்த ஒவ்வொரு மனிதனுக்குள்ளும் தான் எதையாவது சாதிக்க வேண்டும் என்ற எண்ணமும், அதை நோக்கிய கனவும் நிச்சயம் இருக்கும். ஆனால் அந்தக் கனவுகளை உண்மையாக்கும் முயற்சியில் சிலர் பாதியில் தோற்றிருக்கலாம். அல்லது போராடிப்பார்த்து விட்டிருக்கலாம். சிலர் வெற்றியும் பெற்றிருக்கலாம். அப்படிப்பட்ட ஒரு அற்புதக் கனவை பிளாக் காமெடி ஜானரில் ரசிக்க ரசிக்கச் சொல்லியிருக்கும் படம் “சென்னை பழனி மார்ஸ்”.
தமிழில் ஆரஞ்சு மிட்டாய் படத்தை இயக்கிய இயக்குநர் பிஜூ, தற்போது ஆரஞ்சு மிட்டாய் புரொடக்சன்ஸ் மற்றும் விஜய் சேதுபதி புரொடக்சன்ஸ் இணைந்து இப்படத்தை தயாரித்துள்ளார். விஜய் சேதுபதியை வைத்து ஆரஞ்சு மிட்டாய் படத்தைக் கொடுத்த இயக்குநர் பிஜூ திரைக்கதை எழுதி ஒளிப்பதிவு படத்தொகுப்பு இயக்கம் ஆகியவற்றை கவனிக்க, தனக்கேயுரிய பிளாக் காமெடி உணர்வை வசனமாக கொடுத்து படத்திற்கு மெருகேற்றியுள்ளார் விஜய் சேதுபதி.

பிரவீண் ராஜா, ராஜேஷ் கிரி பிரசாத், வசந்த் மாரிமுத்து, இம்தியாஸ் முகமது, வின் ஹாத்ரி, பாரி இளவழகன் ஆகியோர் புதுமுகங்களாக அறிமுகமாகின்றனர். இவர்களுடன் மதன்குமார் தக்சிணா மூர்த்தி, ஏ. ரவிகுமார், ஆல்வின் ராமைய்யா, ஆர். கிருஷ்ண மூர்த்தி ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். நிரஞ்சன் பாபு இசையமைப்பாளராக அறிமுகமாகிறார். பாடல்களை எழுதியுள்ளார் விக்னேஷ் ஜெயபால்.
டி.ரமேஷ் செல்வன் இயக்கத்தில் புதுமுகங்கள் மனோ, ஐரா நடிப்பில் உருவாகி இருக்கும் ‘நுங்கம்பாக்கம்’ படத்தின் முன்னோட்டம்.
விஜயகாந்த் நடித்த ‘உளவுத்துறை’, சத்யராஜ் நடித்த ‘கலவரம்’, அருண்விஜய் நடித்த ‘ஜனனம்’ உட்பட பல படங்களை இயக்கிய டி.ரமேஷ் செல்வன், இப்போது ரவிதேவன் தயாரிப்பில் புதுமுகங்கள் மனோ, ஐரா நடிப்பில் ‘நுங்கம்பாக்கம்’ என்கிற படத்தை இயக்கி இருக்கிறார். முக்கிய வேடத்தில் அஜ்மல் நடித்திருக்கிறார்.
ஒளிப்பதிவு : ஜோன்ஸ் ஆனந்த், இசை : ஷாம் டி ராஜ், கலை : ஜெய்சங்கர், எடிட்டிங் : மாரி, தயாரிப்பு நிர்வாகம் : கே.சிவசங்கர், கதை, வசனத்தை ஆர்.பி.ரவி எழுதி இருக்கிறார். திரைக்கதை அமைத்து இயக்கி இருக்கிறார் டி.ரமேஷ் செல்வன்.

நுங்கம்பாக்கம் ரெயில் நிலையத்தில் சுவாதி என்ற இளம்பெண் கொலை செய்யப்பட்ட கொடூரத்தை தான் இயக்குனர் படமாக்கியுள்ளார். இப்படத்தில் நடந்த சம்பவங்கள் அப்படியே பதிவு செய்யப்பட்டுள்ளது என்றும் மேலும், மக்களுக்கு தெரிவிக்கப்படாத நிறைய சம்பவங்கள் படத்தில் இடம்பெற்றுள்ளது என இயக்குநர் ரமேஷ் செல்வன் தெரிவித்துள்ளார்.
அறிமுக இயக்குனர் ஜான்சன் இயக்கத்தில் சந்தானம் நடிப்பில் உருவாகி இருக்கும் ‘ஏ1’ படத்தின் முன்னோட்டம்.
அறிமுக இயக்குனர் ஜான்சன் இயக்கத்தில் சந்தானம் நடித்து வெளிவர இருக்கும் திரைப்படம் ஏ1 (அக்யூஸ்டு நம்பர் 1). இந்த படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார். இந்த படத்தில் சந்தானம் ஜோடியாக இந்தி மற்றும் தெலுங்கு படங்களில் நடித்துள்ள தாரா அலிசா பெர்ரி நடித்துள்ளார்.

இந்த படத்திற்கு கோபி ஜெகதீஸ்வரன் ஒளிப்பதிவு செய்துள்ளார். லியோ ஜான் பால் படத்தொகுப்பை கவனிக்க, ஹரி தினேஷ் சண்டைக்காட்சிகளை வடிவமைத்துள்ளார். சர்க்கிள் பாக்ஸ் எண்டர்டெயின்மெண்ட் சார்பில் எஸ்.ராஜ் நாராயணன் இந்த படத்தை தயாரித்துள்ளார்.






