என் மலர்
முன்னோட்டம்
அறிமுக இயக்குனர் கே.மகேந்திரன் இயக்கத்தில் அபிஷேக், மனோ சித்ரா, அஞ்சு கிருஷ்ணா நடிப்பில் உருவாகி வரும் ’தண்டகன்’ படத்தின் முன்னோட்டம்.
ராயல் பிலிம் பேக்டரி சார்பில் வி.இளங்கோவன் தயாரித்திருக்கும் படம் ’தண்டகன்’. அறிமுக இயக்குனர் கே.மகேந்திரன் இயக்கியிருக்கும் இப்படத்தில் அபிஷேக் கதாநாயகனாகவும், மனோ சித்ரா, அஞ்சு கிருஷ்ணா ஆகியோர் கதாநாயகிகளாகவும் நடித்துள்ளனர். மேலும் ராட்சசன் வில்லன் 'நான்' சரவணன், எஸ்.பி.கஜராஜ், சூப்பர் குட் சுப்பிரமணி, ஆதவ், ராம், வீரா மற்றும் பலர் நடித்திருக்கிறார்கள்.

இந்திய இதிகாசங்களில் புகழ்பெற்ற ராமாயணத்தில் 4638 கதாபாத்திரங்கள் உள்ளன. அதில் ஒரு கதாபாத்திரத்தின் பெயர் தான் 'தண்டகன்'. இந்தப் பெயரில் ஒரு தமிழ்ப் படம் உருவாகியிருக்கிறது. தண்டகனின் புதிரான குணச்சித்திரம் எப்படி இருக்கும்? அதன் மன இயல்பு எத்தகையது என்பதை விறுவிறுப்பான திரைக்கதையாக உருவாக்கி உள்ளனர்.
இப்படத்திற்கு ஒளிப்பதிவு - தளபதி ரத்னம், இசை - ஷ்யாம் மோகன், எடிட்டிங் - வசந்த் நாகராஜ், சண்டைப் பயிற்சி - பில்லா ஜெகன், நடனம் - ஸ்ரீசெல்வி, மக்கள் தொடர்பு - சக்தி சரவணன்.
எம்.சித்திக் இயக்கத்தில் மகேஷ், அனிஷா நடிப்பில் உருவாகும் தேனாம்பேட்டை மகேஷ் படத்தின் முன்னோட்டம்.
ஜி.எஸ்.எம் பிலிம்ஸ் சார்பில் பூர்வீகன் தயாரிப்பில் உருவாகும் படம் ‘தேனாம்பேட்டை மகேஷ்’. இப்படத்திற்கு கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்குகிறார் எம்.சித்திக். இதில் அங்காடித்தெரு மகேஷ் கதாநாயகனாக நடிக்கிறார். கதாநாயகியாக பிச்சுவாகத்தி நடிகை அனிஷா நடிக்கிறார்.
இப்படம் குறித்து இயக்குனர் எம்.சித்திக் கூறும்போது, ‘எதற்கெடுத்தாலும் பயப்படுவது, பலரிடம் அடிவாங்குவது என்று இருக்கிறார் மகேஷ். இவரை எப்போதும் திட்டிக் கொண்டிருக்கிறார் இவரது தந்தை. ஆனால், பிற்பாதியில் மகேஷ் யார் என்பது அவரது தந்தைக்கு தெரிய வருகிறது. அதன்பின் மகேஷின் வாழ்க்கை எப்படி செல்கிறது என்பதை திரைக்கதையாக உருவாக்கி இருக்கிறேன்.

இப்படத்தில் மகேஷ் வாட்டர் கேன் சப்ளை செய்யும் வாலிபராகவும் பெண் கதாபாத்திரத்திலும் நடிக்கிறார். இவருடன் அம்பானி சங்கர், மகாநதி சங்கர், எம்.எஸ்.பாஸ்கர், இமான் அண்ணாச்சி, கமலா தியேட்டர் ஓனர் சி.டி.கணேசன், ‘குட்டிபுலி’ ராஜசிம்மன் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்கள்.
இப்படத்தில் ஒளிப்பதிவு - முனீஷ், இசை - ஸ்ரீ சாய் தேவ், எடிட்டர் - பாசில், கலை - கார்த்திக், நடனம் - தீனா, பாடலாசிரியர் - சிவசங்கர், சண்டை பயிற்சி - எஸ்.ஆர்.முருகன் ஆகியோர் தொழில் நுட்ப கலைஞர்களாக பணியாற்றுகிறார்கள்.
எஸ்.ஏ.பாஸ்கரன் இயக்கத்தில் ஐஸ்வர்யா ராஜேஷ், நிக்கி சுந்தரம் நடிப்பில் உருவாகி இருக்கும் ’மெய்’ படத்தின் முன்னோட்டம்.
கமல்ஹாசன், சித்திக், ஜீத்து ஜோசப் ஆகியோரிடம் உதவி இயக்குநராக பணிபுரிந்த எஸ்.ஏ.பாஸ்கரன் ’மெய்’ படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குநராக அறிமுகமாகிறார். ஐஸ்வர்யா ராஜேஷ் ஹீரோயினாக நடிக்கும் இந்தப் படத்தில் நிக்கி சுந்தரம் கதாநாயகனாக அறிமுகமாகிறார். இவர்களுடன் சார்லி, கிஷோர் சார்லி, கிஷோர் ஆகிய இருவரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கிறார்கள்.

வி.என்.மோகன் ஒளிப்பதிவு செய்ய, அணில் பிரித்வி குமார் இசையமைக்கிறார். சுந்தரம் புரொடக்ஷன்ஸ் இந்தப் படத்தைத் தயாரிக்கிறது. படம் குறித்து இயக்குனர் கூறுகையில், ‘‘மனிதர்களின் உயிர் காக்கும் மருத்துவ துறையில் மலிந்து போய் கிடக்கும் ஊழல்களை இந்த படம் வெளிச்சம் போட்டு காட்டும். சமுதாய விழிப்புணர்ச்சியை ஏற்படுத்தும்’’ என்று கூறுகிறார், டைரக்டர் எஸ்.ஏ.பாஸ்கரன்.
பிரதீப் ரங்கநாதன் இயக்கத்தில் ஜெயம்ரவி, காஜல் அகர்வால் நடிப்பில் உருவாகி இருக்கும் ‘கோமாளி’ படத்தின் முன்னோட்டம்.
பிரதீப் ரங்கநாதன் இயக்கத்தில் ஜெயம்ரவி, காஜல் அகர்வால் ஜோடியாக நடித்துள்ள படம் கோமாளி. வேல்ஸ் பிலிம் இண்டர்நேஷனல் சார்பில் ஐசரி கணேஷ் தயாரித்துள்ளார். படத்தின் இன்னொரு கதாநாயகியாக சம்யுக்தா ஹெக்டே நடிக்கிறார். கே.எஸ்.ரவிகுமார், யோகி பாபு இருவரும் முக்கிய வேடங்களில் நடிக்கிறார்கள். பிஜிலி ரமேஷ், பொன்னம்பலம் காமெடி வேடங்களில் வர, ஆர்.ஜே ஆனந்தி இந்த படத்தில் மூலம் தமிழில் அறிமுகமாகிறார்.
ஜெயம்ரவி இதில் ராஜா, ஆதிவாசி, பிரிட்டீஷ் காலத்து அடிமை, 1990-களில் வாழ்ந்த இளைஞர் உள்பட 9 வேடங்களில் அவர் நடிக்கிறார். இந்த 4 வேடங்கள் தவிர மற்ற வேடங்கள் ரகசியமாக வைக்கப்பட்டுள்ளன. இப்படத்திற்கு ஹிப்ஹாப் ஆதி இசையமைத்துள்ளார். ரிச்சர்ட் எம் நாதன் ஒளிப்பதிவு செய்ய, பிரவீன் கேஎல் படத்தொகுப்பை கவனிக்கிறார்.

படம் குறித்து இயக்குனர் பிரதீப் ரங்கநாதன் கூறுகையில், ’இது காமெடி மற்றும் எமோஷன் கலந்த ஒரு குடும்பப் படம். இது சமூக ஊடகங்களில் பரவி வரும் எதிர்மறை கருத்துகளை பற்றி பேசும் படம், இறுதியில் நல்ல ஒரு கருத்தையும் சொல்லியிருக்கிறோம். இப்படத்தில் 9 வித்தியாசமான தோற்றங்களில் ஜெயம்ரவி தோன்றுவார், 90களின் பின்னணியில் அவரின் தோற்றம் இன்னும் சுவாரஸ்யமாக இருக்கும்’ என கூறினார்.
அறிமுக இயக்குனர் ஜெகன் சக்தி இயக்கத்தில் அக்ஷய் குமார், வித்யா பாலன், டாப்சி நடிப்பில் உருவாகி இருக்கும் 'மிஷன் மங்கல்' படத்தின் முன்னோட்டம்.
ஃபாக்ஸ் ஸ்டார் ஸ்டுடியோஸ், கேப் ஆஃப் குட் பிலிம்ஸ் மற்றும் ஹோப் புரொடக்ஷன்ஸ் தயாரப்பில் அக்ஷய் குமார் மற்றும் வித்யா பாலன் முன்னணி பாத்திரங்களில் நடித்து திரைக்கு வரவிருக்கும் திரைப்படம் 'மிஷன் மங்கல்'. இப்படத்தை அறிமுக இயக்குனர் ஜெகன் சக்தி இயக்கியுள்ளார்.
மேலும் இப்படத்தில் டாப்ஸி பன்னு, சோனாக்ஷி சின்ஹா, நித்யா மேனன், கீர்த்தி குல்ஹாரி மற்றும் ஷர்மன் ஜோஷி ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். ரவி வர்மன் ஒளிப்பதிவு செய்துள்ள இப்படத்திற்கு அமித் திரிவேதி இசையமைத்துள்ளார்.
சந்தன் அரோரா எடிட்டிங்கை கவனிக்கிறார்.

படம் குறித்து இயக்குனர் ஜெகன் சக்தி கூறுகையில், நடைமுறை வாழ்க்கையில் எளிமையாக வாழும் சாதாரண ஆண்களும் பெண்களும் எப்படி அசாதாரணமானவர்களாக இருக்கிறார்கள் என்பது பற்றிய கதை இது. இந்த மிஷன் மங்கல் படம் இஸ்ரோ வெற்றி கண்ட மங்கல்யான் பற்றியது, இந்த பணி ஒரு கூட்டு வெற்றியாகும், மேலும் அதன் வெற்றி அனைவரது வெற்றி என்பதால் இந்தப் படம் சுயசரிதையாக மாற்றவில்லை என கூறினார்.
அறிமுக இயக்குநர் கோபி இயக்கத்தில் அட்டகத்தி தினேஷ் நடிப்பில் உருவாகி வரும் ‘நானும் சிங்கிள் தான்’ படத்தின் முன்னோட்டம்.
அட்டகத்தி தினேஷ் நடிக்கும் புதிய படம் காமெடி கலந்த காதல் கதையாக உருவாகியுள்ளது. அறிமுக இயக்குநர் கோபி இயக்கும் இந்தப் படத்திற்கு ‘நானும் சிங்கிள் தான்’ எனப் பெயரிடப்பட்டுள்ளது. தீப்தி திவேஸ் கதாநாயகியாக நடித்துள்ளார். மொட்ட ராஜேந்திரன், மனோபாலா, செல்வேந்திரன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். லண்டனில் உள்ள தமிழ் டான் கதாபாத்திரத்தில் மொட்டை ராஜேந்திரன் நடித்துள்ளார்.

டேவிட் ஆனந்தராஜ் ஒளிப்பதிவு செய்யும் இப்படத்துக்கு ஹித்தேஷ் மஞ்சுநாத் இசையமைத்துள்ளார். இவர் ஏ.ஆர்.ரகுமானிடம் உதவி இயக்குநராக பணியாற்றியுள்ளார். ஜெயக்குமார் தயாரித்துள்ளார். சென்னை, லண்டன் மற்றும் ஐரோப்பாவில் பல இடங்களில் இதன் படப்பிடிப்பு நடத்தப்பட்டுள்ளது. தற்போது இறுதிகட்டப் பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வரும் இப்படத்தை அக்டோபர் மாதம் வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளது.
மன்சூரலிகான் இயக்கம் மற்றும் தயாரிப்பில் அவரது மகன் அலிகான் துக்ளக் நடிப்பில் உருவாகி இருக்கும் ‘கடமான் பாறை’ படத்தின் முன்னோட்டம்.
மன்சூரலிகான் தனது ராஜ்கென்னடி பிலிம்ஸ் பட நிறுவனத்தின் சார்பாக எழுதி இயக்கி, தயாரித்திருக்கும் படம் கடமான்பாறை. இந்த படத்தில் இளம் கதாநாயகனாக மன்சூர் அலிகானின் மகன் அலிகான் துக்ளக் அறிமுகமாகிறார்.
இந்த படத்தில் மன்சூரலிகான் ஒரு முக்கிய வேடத்தில் நடிக்கிறார். கதாநாயகியாக அனுராகவி நடிக்கிறார். இன்னொரு நாயகியாக ஜெனி பெர்ணாண்டஸ் நடிக்கிறார். மற்றும் சிவசங்கர், சார்மி, தேவி தேஜு, பிளாக் பாண்டி, அமுதவாணன், முல்லை, கோதண்டம், பழனி, கனல்கண்ணன், போண்டாமணி, பயில்வான் ரங்கநாதன், லொள்ளுசபா மனோகர், வெங்கல்ராவ், ஆதி சிவன், விசித்திரன், கூல்சுரேஷ் ஆகியோர் நடித்திருக்கிறார்கள்.
ஒளிப்பதிவு - T.மகேஷ், இசை - ரவிவர்மா, பாடல்கள் - விவேகா, சொற்கோ, டோலக் ஜெகன், மன்சூரலிகான், கதை, திரைக்கதை, தயாரிப்பு இயக்கம் - மன்சூரலிகான்.
நகைச்சுவை கலைந்த திரில்லர் படமாக கடமான் பாறை உருவாகி இருக்கிறது. மாடர்ன் டெக்னாலஜி இன்று மாணவர்களை எப்படி தவறான பாதைக்கு அழைத்துச் செல்கிறது, அதனால் இளைஞர்கள் எவ்வாறு வாழ்கையில் தடம் மாறுகிறார்கள் என்பதுதான் இந்த படத்தின் திரைக்கதை. இப்படம் இம்மாதம் 23ம் தேதி தமிழகமெங்கும் வெளியாக உள்ளது.
இரட்டை இயக்குநர்கள் ஆர்.எல்.ரவி மற்றும் ஸ்ரீஜித் இயக்கத்தில் ஜித்தன் ரமேஷ் நடிப்பில் உருவாக்கி வரும் 'ஒங்கள போடணும் சார்' படத்தின் முன்னோட்டம்.
ஜித்தன் ரமேஷ் நடிப்பில் தற்போது உருவாகி வரும் படம் ‘ஒங்கள போடணும் சார்’. இதில் இவருடன் சனுஜா சோமநாத், ஜோனிட்டா, அனு நாயர், பரிட்சித்தா, வைஷாலி ஆகிய 5 அறிமுக கதாநாயகிகள் நடிக்கிறார்கள். கமர்சியல் என்டர்டெயினராக இப்படம் உருவாகி வருகிறது.

இந்த படத்திற்கு தலைப்பு யோசிக்கும்போது, சட்டென்று ரீச் ஆகிற மாதிரி இளைய தலைமுறைக்குப் பிடித்த தலைப்பாக இருக்கவேண்டும் என்று யோசித்தோம். அப்படி யோசிக்கும்போது "நானும் ரௌடி தான்" படத்தில் நயன்தாரா பேசிய "ஒங்கள போடணும் சார்" வசனம், நினைவுக்கு வந்தது. அதையே தலைப்பாக வைத்துவிட்டோம், நயன்தாராவுக்கு நன்றி… என்று கூறுகிறார்கள் இரட்டை இயக்குநர்கள்.
ஸிக்மா பிலிம்ஸ் பட நிறுவனத்தின் சார்பில் மனோஜ் தயாரிப்பில் உருவாகி இப்படத்தை இரட்டை இயக்குநர்கள் ஆர்.எல்.ரவி மற்றும் ஸ்ரீஜித் இயக்கி வருகிறார்கள். பாடலாசிரியர் முருகன் மந்திரம், இப்படத்தில் பாடல்கள் மற்றும் வசனத்தை எழுதி இருப்பதோடு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்தும் இருக்கிறார்.

இந்த படத்திற்கு தலைப்பு யோசிக்கும்போது, சட்டென்று ரீச் ஆகிற மாதிரி இளைய தலைமுறைக்குப் பிடித்த தலைப்பாக இருக்கவேண்டும் என்று யோசித்தோம். அப்படி யோசிக்கும்போது "நானும் ரௌடி தான்" படத்தில் நயன்தாரா பேசிய "ஒங்கள போடணும் சார்" வசனம், நினைவுக்கு வந்தது. அதையே தலைப்பாக வைத்துவிட்டோம், நயன்தாராவுக்கு நன்றி… என்று கூறுகிறார்கள் இரட்டை இயக்குநர்கள்.
சுசீந்திரன் இயக்கத்தில் பாரதிராஜா, சசிகுமார் நடிப்பில் உருவாகி இருக்கும் ‘கென்னடி கிளப்’ திரைப்படத்தின் முன்னோட்டம்.
நான் மகான் அல்ல, பாண்டிய நாடு உள்ளிட்ட பல வெற்றி படங்களை இயக்கியவர் சுசீந்திரன். இவர் இயக்கத்தில் தற்போது ‘கென்னடி கிளப்’ திரைப்படம் உருவாகியுள்ளது. இதில் சசிகுமார், பாரதிராஜா முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கும் இந்த படம் மகளிர் கபடியை கருவாக கொண்டு உருவாகி உள்ளது.
சமுத்திரக்கனி, சூரி, முனீஸ்காந்த், காயத்ரி மற்றும் புதுமுகங்கள் மீனாட்சி, நீது, சவும்யா, ஸ்ம்ர்தி, சவுந்தர்யா உள்ளிட்ட பலரும் நடித்துள்ள இந்த படத்திற்கு டி.இமான் இசையமைத்துள்ளார். நல்லுசாமி பிக்சர்ஸ் சார்பாக தாய் சரவணன் இந்த படத்தை தயாரித்துள்ளார். இந்த படம் வருகிற ஆகஸ்ட் 22 ஆம் தேதி வெளியாக இருக்கிறது.
எச்.வினோத் இயக்கத்தில் அஜித்தின் நடிப்பில் உருவாகி உள்ள ‘நேர்கொண்ட பார்வை’ படத்தின் முன்னோட்டம்.
எச்.வினோத் இயக்கத்தில் அஜித்தின் நடிப்பில் உருவாகி உள்ள படம் ‘நேர்கொண்ட பார்வை’. இந்தியில் அமிதாப்பச்சன் நடித்த பிங்க் படத்தின் தமிழ் ரீமேக்காக இந்த படம் உருவாகி இருக்கிறது. இந்த படத்தை போனி கபூர் தயாரித்துள்ளார்.
இதில் அஜித் ஜோடியாக வித்யா பாலன், முக்கிய வேடங்களில் ஷ்ரத்தா ஸ்ரீநாத், ஆதிக் ரவிச்சந்திரன், அர்ஜூன் சிதம்பரம், அபிராமி வெங்கடாசலம், ஆண்ட்ரியா தரியங், அஸ்வின் ராவ், சுஜித் சங்கர், டெல்லி கணேஷ் உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர்.

யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்துள்ள இந்த படத்திற்கு நிரவ் ஷா ஒளிப்பதிவு செய்கிறார். படத்தொகுப்பு- கோகுல் சந்திரன், கலை- K.கதிர், சண்டைப்பயிற்சி- திலீப் சுப்பராயன், பாடல்கள்- பா.விஜய், நாகார்ஜுன், உமாதேவி, யூநோஹு, நடனம்- கல்யாண், பிருந்தா, தயாரிப்பு ஒருங்கிணைப்பு- S.P. சொக்கலிங்கம், நிர்வாக தயாரிப்பு- ஜெயராஜ் P பிச்சைய்யா
ரகுமான் நடிப்பில் அறிமுக இயக்குனர் ப்ராஷ் இயக்கத்தில் உருவாகி வரும் ’ஆபரேஷன் அரபைமா’ படத்தின் முன்னோட்டம்.
துருவங்கள் 16 படத்தின் மிக பிரமாண்டமான வெற்றிக்குப் பிறகு ரகுமான் முற்றிலும் மாறுபட்ட கதாபாத்திரத்தில் நடித்து வரும் திரைப்படம், “ஆபரேஷன் அரபைமா”. ப்ராஷ் இப்படத்தை இயக்குகிறார். இவர் இந்திய இராணுவத்தில் அட்வெஞ்சர் பைலட்டாக பணி புரிந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
இப்படத்தில் ரகுமான், நாடோடிகள் அபிநயா, டினி டாம், கௌரி லஷ்மி ஷிஹாத், அரவிந்த் கலாதர், சஜி சுரேந்திரன், நேகா சக்சேனா, சாம்சன் டி.வில்சன், அனூப் சந்திரன், பாலாஜி, ரமேஷ், டேனி, மோகிதா பட்டக், மணிஷா மற்றும் பலர் நடித்துள்ளனர். இசை : ராகேஷ் பிரம்மானந்தம், ஒளிப்பதிவு : ஃபீனிக்ஸ் உதயன், படத்தொகுப்பு: விஜயகுமார், ஷைஜூ, பாடல்கள் : முருகன் மந்திரம், வசனம் : ப்ராஷ், அரவிந்த் கலாதர், முருகன் மந்திரம், இணை இயக்குநர் : சஜி சுரேந்திரன், சண்டைப் பயிற்சி : கேப்டன் அனில்குமார், மற்றும் கமாண்டோ அஜித்குமார்.

டைம் அண்ட் டைடு ப்ரேம்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பாக உருவாகி வரும், இப்படத்தைப் பற்றி இயக்குநர் ப்ராஷ் கூறுகையில், நேர்மையும் துணிச்சலும் கொண்ட ஒரு கடற்படை அதிகாரியின் கதையை கருவாகக் கொண்ட சஸ்பென்ஸ் த்ரில்லர் படம் இது, சில உண்மைச் சம்பவங்களின் அடிப்படையில் திரைக்கதையை உருவாக்கி இருக்கிறேன். தமிழ், தெலுங்கு இருமொழிகளில் மிகுந்த பொருட்செலவில் நவீன தொழில் நுட்பங்களுடன் வேகமாக உருவாகி வருகிறது, “ஆபரேஷன் அரபைமா”.
நவீன் நயனி இயக்கத்தில் தருண் தேஜ், லாவண்யா நடிப்பில் உருவாகி இருக்கும் “ பூவே போகாதே“ படத்தின் முன்னோட்டம்.
கோல்ட் டைம் இன் பிக்சர்ஸ் என்ற பட நிறுவனம் சார்பில் “சத்யபிரமீலா தயாரிக்கும் படம் “ பூவே போகாதே“ . இந்த படத்தில் தருண் தேஜ் கதாநாயகனாக நடித்துள்ளார். கதாநாயகியாக லாவண்யா நடித்துள்ளார். மற்றும் கிடார் ஷங்கர், அஜெய் கோஸ், சீனியர் சூர்யா, சத்யகிருஷ்ணன், ஆகியோர் நடித்துள்ளனர்.
படம் பற்றி இயக்குனர் கூறியதாவது:- இது 1980 களில் நடந்த உண்மைச் சம்பவங்களை வைத்து உருவாக்கப்பட்ட காதல் திரைப்படம் இது. முழுக்க முழுக்க நாயகன், நாயகியை சுற்றி நடக்கும் திரைக்கதை இது.கல்லூரியில் படிக்கும் நாயகன், நாயகி இருவருக்கும் காதல் மலர்கிறது. அதனால் அவர்களுக்கு ஏற்பட இடையூறுகள் மற்றும் எதிர்ப்புகளை எப்படி கையாள்கிறார்கள்.

அந்த காலகட்டத்தில் காதலை இந்த சமூகம் எப்படி பார்த்தது என்பதை அழுத்தமாக பதிவிடுள்ளோம். தங்களின் காதலுக்கு வந்த எதிர்ப்புக்களை மீறி எப்படி காதல் ஜோடி சேர்ந்தார்கள் என்பதை கமர்ஷியலாக சொல்லியிருக்கிறோம் என்கிறார் இயக்குனர் நவீன் நயனி.
ஒளிப்பதிவு - ஸ்ரீனிவாஸ் வின்னகொட்டா, இசை - சபு வர்கீஸ், பாடல்கள் - விவேகா, டாக்டர் லிங்கேஸ்வர், எடிட்டிங் - ஜே.பி, நடனம்- நரேஷ் ஆனந்த், ஸ்டன்ட் - ராம் சுங்கரா, நபா சுப்பு, கதை, திரைக்கதை, வசனம், இயக்கம் – நவீன் நயனி.






