என் மலர்
முன்னோட்டம்
பொன்னிமோகன் இயக்கத்தில் அப்புக்குட்டி, வசுந்தரா நடிப்பில் உருவாகி இருக்கும் வாழ்க விவசாயி படத்தின் முன்னோட்டம்.
விவசாயிகள் சார்ந்த பிரச்சனைகளை மையமாக வைத்து உருவாகி இருக்கும் படம் 'வாழ்க விவசாயி'. விவசாயிகள் வாழ்ந்தால் தான் நாடு வாழும் என்கிற கருத்தை மையப்படுத்தி இப்படம் உருவாகியிருக்கிறது. இந்தப் படத்தில் தேசிய விருது வென்ற நடிகர் அப்புக்குட்டி நாயகனாக நடித்திருக்கிறார்.
மேலும் வசுந்தரா, ஹலோ கந்தசாமி, ஸ்ரீகல்கி, முத்துராமன், திலீபன், மதுரை சரோஜா, குழந்தை நட்சத்திரங்கள் சந்தியா, வினோத், ஆனந்தரூபிணி மற்றும் விஜயன், கராத்தே கோபாலன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். பொன்னிமோகன் இயக்கியிருக்கும் இப்படத்திற்கு ஜெய்கிருஷ் இசையமைத்துள்ளார். ரதன் சந்தாவத் ஒளிப்பதிவை கவனிக்கிறார்.

படம் குறித்து அப்புக்குட்டி கூறுகையில், இந்தப் படம் விவசாயம் பற்றிய படம் தான். நம் அனைவருக்கும் பிடித்த கதையாக இருக்கும். 'வாழ்க விவசாயி 'படம் என்னை வாழ வைக்கும் படமாக இருக்கும் என்று நம்புகிறேன். இந்தப் படம் விவசாயிகளை திரும்பிப்பார்க்க வைக்கும் படம் என்று சொல்வதைவிட எல்லா மக்களையும் விவசாயிகள் பக்கம் திரும்பிப் பார்க்க வைக்கும் ஒரு படமாக இருக்கும் என்று உறுதியாகக் கூறலாம் என தெரிவித்துள்ளார்.
எம்.பிரேம்குமார் இயக்கத்தில் பிரியங்கா நாயர் நடிப்பில் உருவாகி இருக்கும் கானல் நீர் படத்தின் முன்னோட்டம்.
ஒரு பரபரப்பான நகரின் மத்தியில் வாழும், வீடில்லாத பெண் மற்றும் அவரது குழந்தையின் போராட்டமான வாழ்க்கையை சித்தரிக்கும் திரைப்படமாக ’கானல் நீர்’ உருவாகி உள்ளது. திரைப்படத்தின் நாயகியாக பிரியங்கா நாயர் நடித்துள்ளார். குழந்தை நட்சத்திரம் காலை ஹரீஷ் பெரேடி முக்கிய வேடத்தில் நடித்திருக்கிறார்.
டி.எஸ்.சுரேஷ் பாபு திரைக்கதை எழுதியிருக்கிறார். சோகன் ராய், தயாரித்திருக்கிறார். இந்த திரைப்படம் சி.எஸ்.ஆர் ( நிறுவன சமூக பொறுப்புணர்வு) பிரிவில் தயாரிக்கப்பட்டுள்ள உலகின் முதல் நன்கொடை திரைப்படமாகும் . இந்த திரைப்படம் ஆஸ்கர் விருதுக்கான சிறந்த திரைப்படம் பிரிவில் நாமினேஷனுக்கு போட்டியிடுகிறது.
இந்த திரைப்படத்தின் மூலம் கிடைக்கும் லாபம் அனைத்தும் நிலமில்லாதவகள் மறுவாழ்வுக்கு மற்றும் பெண்கள் அதிகாரமளிக்கும் திட்டங்களுக்கு பயன்படுத்தப்படும். இந்த இரண்டு கருப்பொருள்களும் திரைப்படத்தில் பிரதானமாக கையாளப்பட்டுள்ளது. கேரள மாநிலம் கொச்சியில் பாலம் ஒன்றின் கீழ் வசிக்க நேர்ந்த குடும்பம் பற்றி பிரபல நாளிதழில் வெளியான செய்திக்கட்டுரையை அடிப்படையாக கொண்டு கானல்நீர் படம் அமைந்துள்ளது.
சாம் இம்மானுவேல் இயக்கத்தில் மோகன் நடிப்பில் உருவாகும் நெஞ்சம் நிமிர்த்து படத்தின் முன்னோட்டம்.
ஜெ.ஆர். பிலிம் இண்டர்நேஷனல் நிறுவனத்தின் தயாரிப்பில் உருவாகி வரும் படம் நெஞ்சம் நிமிர்த்து. இப்படத்தின் மூலம் மோகன் கதாநாயகனாக அறிமுகமாகிறார். கதாநாயகி, மற்றும் படத்தின் முக்கிய கதாபாத்திரங்களின் தேர்வு நடந்து வருகிறது. கதை, திரைக்கதை, வசனம் எழுதி சாம் இம்மானுவேல் இயக்குகிறார்.
படம் குறித்து பேசும் போது ’தனி மனிதனுக்கான உரிமை, அதிகாரம், ஜனநாயகம் எல்லாவற்றையும் பேசும் படம் இது. நிச்சயமாக சூழ்நிலை ஒருவனை மாற்றும். அப்படி ஒருவனை மாற்றி எங்கெங்கோ கொண்டு போய் வைக்கிற கதைதான் இது. நான் சந்தித்த சில மனிதர்களின் வாழ்க்கையில் நடந்த சம்பவங்களின் புனைவு, நாம் ஒவ்வொரு வரும் அதிகாரத்துக்கு முன்பாக, ஒன்றும் செய்ய இயலாதவர்களாக வாழ்க்கைமுழுக்க நமக்கே தெரியாமல் போராடித்தவிக்கிறோம்.
வாழ்க்கை நம்மை புரட்டிப் போட்டால் எல்லாமே மாறும். அப்போது மனிதர்களைத் தெரிந்துக்கொள்கிற விந்தையும் நடக்கும். நிகழ்கிற அற்புதங்களும் அபத்தங்களும்தான் இந்தக்கதை’ என்றார்.
வெங்கி நிலா இயக்கத்தில் ரத்தன் மௌலி, மஞ்சு தீக்ஷித் நடிப்பில் உருவாகி வரும் ‘மல்லி’ படத்தின் முன்னோட்டம்.
முத்து சன்னதி பிலிம்ஸ் மானப்ப வஜ்சல் வழங்க ரேணுகா ஜெகதீஷ் தயாரித்திருக்கும் படம் “ மல்லி “. வெங்கி நிலா இயக்கும் இப்படத்தில் ரத்தன் மௌலி கதாநாயகனாக நடித்துள்ளார். அவருக்கு ஜோடியாக மஞ்சு தீக்ஷித் நடித்துள்ளார். மேலும் டெலிப்போன் ராஜ், ரவிச்சந்திரன், அருண்ராஜா நாகேஷ், சைமன், அம்சவேலு ஆகியோரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். வில்லனாக ஜெ.வி.ஆர் நடித்துள்ளார்.
தாஸ் ஒளிப்பதிவு செய்யும் இப்படத்திற்கு பஷீர் இசையமைத்துள்ளார். சிதம்பரநாதன், பாண்டிதுரை ஆகியோர் பாடல்களை எழுதியுள்ளனர். பி.எஸ்.வாசு எடிட்டிங்கை கவனிக்கிறார்.
படம் பற்றி இயக்குனர் கூறுகையில், “பெற்றோரின் காதல் எதிர்ப்புக்கு பயந்து வீட்டை விட்டு ஓடிவரும் காதல் ஜோடி ஒரு காட்டு பங்களாவில் தங்குகிறார்கள்.அவர்களுக்கு ஊரில் இருந்த நண்பர்கள் மூன்று பேர் அங்கு வந்து உதவி செய்து அவர்களை ராஜா – ராணி போல் பார்த்துக் கொள்கிறார்கள்.

மர்மமான முறையில் காதலர்கள் நிஜமாகவே ராஜா ராணி ஆகிறார்கள். அது எப்படி ஆனார்கள், உதவ வந்தவர்கள் யார்? அவர்கள் யாருக்கு? - எப்படி? - அரசாட்சி செய்கிறார்கள். அவர்களுடைய மக்கள் யார்? என்ற கோணத்தில் திரைக்கதை இருக்கும். இறுதியில் அதிலிருந்து அவர்கள் எப்படி மீண்டு ஊர் திரும்புகின்றனர் என்ற வினாக்களுக்கு முடிவு பதில் சொல்லும்.
முழுக்க முழுக்க திகிலும், காமெடியும் கலந்து வித்தியாச கோணத்தில் காட்சிகள் அமைக்கப்பட்டிருக்கின்றது. அது ரசிகர்களுக்கு நிச்சயம் பிடிக்கும். படப்பிடிப்பு முழுவதும் வேலூர் ஏலகிரி பெங்களூர் மைசூர் போன்ற இடங்களில் நடைபெற்றிருக்கிறது. மல்லி விரைவில் அனைவருக்கும் வாசம் வீச வர இருக்கிறது” என்றார்
சுசி ஈஸ்வர் இயக்கத்தில், சஞ்சய், மேக்னா நடிப்பில் உருவாகி வரும் 'தேடு' படத்தின் முன்னோட்டம்.
கிஷோர் சினி ஆர்ட் சார்பாக சிவகாசி முருகேசன் தயாரிப்பில், இயக்குனர் சுசி ஈஸ்வர் இயக்கத்தில் உருவாகும் படம் 'தேடு'. சஞ்சய் கதாநாயகனாக நடிக்க, 'உறுதிகொள், வீராபுரம்' ஆகிய படங்களில் நடித்த மேக்னா, நாயகியாக நடிக்கிறார். இவர்களோடு சிவகாசி முருகேசன், விஜய் டிவி 'கலக்கப் போவது யாரு' புகழ் பிரபாகரன், ராணி, கமலா, சுவாமி தாஸ், காமராஜ், கல்கி ஜெகவீரபாண்டியன் மற்றும் பலர் நடித்துள்ளனர். இப்படத்திற்கு சபரி ஒளிப்பதிவு செய்ய, வில்சி படத்தொகுப்பை கவனிக்கிறார். இளைய கம்பன் பாடல்களை எழுத டி.ஜே.கோபிநாத் இசையமைத்துள்ளார்.

மது மயக்கத்தில் ஒருவர், காதல் மயக்கத்தில் இளம் காதலர்கள், செல்பி மயக்கத்தில் இளம் மாணவ-மாணவியர் என முப்பரிமாணத்தில் பயணப்படும் இக்கதை, வித்தியாசமான கதைகளத்துடனும், எதிர்பாராத திருப்புமுனைகளுடனும், விறுவிறுப்பான காட்சி அமைப்புகளுடனும், ஜனரஞ்சகமாக படமாக்கப்பட்டு இருக்கிறது. மயக்கம் கலைந்து, தவறுகள் களைந்து, இலக்கை அடைந்தார்களா என்பதே இப்படத்தின் கதைகளம்.
சுஜீத் இயக்கத்தில் பிரபாஸ், ஷ்ரத்தா கபூர், அருண் விஜய் நடிப்பில் உருவாகி இருக்கும் “சாஹோ” படத்தின் முன்னோட்டம்.
தமிழ், தெலுங்கு, இந்தி மற்றும் மலையாளம் மொழிகளில் பிரம்மாண்டமாக உருவாகி இருக்கும் படம் “சாஹோ”. இப்படத்தில் பிரபாஸ் ஹீரோவாக நடித்துள்ளார். அவருக்கு ஜோடியாக ஷ்ரத்தா கபூர் நடித்திருக்கிறார். மேலும் ஜாக்கி ஸ்ரொப், நெய்ல் நிதின் முகேஷ், அருண் விஜய், லால், முரளி ஷர்மா, வெண்ணீலா கிஷோர், பிரகாஷ் பெலாவாடி, எவெலின் ஷர்மா, சுப்ரீத் லால், சங்கி பாண்டே, மந்திரா பேடி, மகேஷ் மஞ்ச்ரேகர், டின்னு ஆனந்த் மாறும் பலர் இப்படத்தில் நடித்துள்ளனர்.

கென்னி பாட்ஸ், பெங் ழங், திலிப் சுப்புராயன், ஸ்டன்ட் சில்வா, பாப் பிரவுன் மற்றும் ராம்-லக்ஷ்மன் இப்படத்தில் சண்டை காட்சிகளை வடிவமைத்துள்ளனர். இப்படத்திற்கு மதி ஒளிப்பதிவு செய்ய, ஸ்ரீகர் பிரசாத் எடிடிங் செய்துள்ளார். சாபு சீரில் தயாரிப்பு மேற்பார்வை பார்த்துள்ளார். கமலக்கண்ணன் விஷுவல் எபக்ட்ஸ் செய்துள்ளார். வைபாவி மெர்ச்சன்ட் மற்றும் ராஜு சுந்தரம் நடன இயக்குனர்களாக பணியாற்றியுள்ளனர். ஜிப்ரான் இப்படத்திற்கு பின்னணி இசை அமைத்துள்ளார்.
இப்படத்தை எழுதி இயக்கியுள்ளார் சுஜீத் அவர்கள். பிரம்மாண்டமான பொருட்செலவில் “சாஹோ” படத்தை யு.வி.கிரியேஷன்ஸ் சார்பாக வம்ஷி மற்றும் பிரமோத் தயாரித்துள்ளனர்.

கென்னி பாட்ஸ், பெங் ழங், திலிப் சுப்புராயன், ஸ்டன்ட் சில்வா, பாப் பிரவுன் மற்றும் ராம்-லக்ஷ்மன் இப்படத்தில் சண்டை காட்சிகளை வடிவமைத்துள்ளனர். இப்படத்திற்கு மதி ஒளிப்பதிவு செய்ய, ஸ்ரீகர் பிரசாத் எடிடிங் செய்துள்ளார். சாபு சீரில் தயாரிப்பு மேற்பார்வை பார்த்துள்ளார். கமலக்கண்ணன் விஷுவல் எபக்ட்ஸ் செய்துள்ளார். வைபாவி மெர்ச்சன்ட் மற்றும் ராஜு சுந்தரம் நடன இயக்குனர்களாக பணியாற்றியுள்ளனர். ஜிப்ரான் இப்படத்திற்கு பின்னணி இசை அமைத்துள்ளார்.
இப்படத்தை எழுதி இயக்கியுள்ளார் சுஜீத் அவர்கள். பிரம்மாண்டமான பொருட்செலவில் “சாஹோ” படத்தை யு.வி.கிரியேஷன்ஸ் சார்பாக வம்ஷி மற்றும் பிரமோத் தயாரித்துள்ளனர்.
அறிமுக இயக்குநர் சாச்சி இயக்கத்தில் வைபவ், பல்லக் லல்வாணி, சதீஷ் உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகி இருக்கும் ‘சிக்சர்’ படத்தின் முன்னோட்டம்.
வால்மேட் எண்டர்டெயிண்மெண்ட் சார்பில் தினேஷ் கண்ணன் மற்றும் கே.ஶ்ரீதர் தயாரித்திருக்கும் திரைப்படம் ‘சிக்சர்’. வைபவ் கதைநாயகானக நடித்திருக்கும் இப்படத்தினை அறிமுக இயக்குநர் சாச்சி இயக்கியுள்ளார். பல்லக் லல்வாணி நாயகியாக நடிக்கிறார். ராதாரவி, சதீஷ், ராமர், இளவரசு, ஆர்.என்.ஆர்.மனோகர், ஏ.ஜே, ஶ்ரீரன்சனி முக்கிய பாத்திரங்களில் நடித்துள்ளார்கள்.
ஜிப்ரான் இசையமைக்க, ஒளிப்பதிவை பிஜி.முத்தையா கையாள, ஜோமின் படத்தொகுப்பு செய்துள்ளார். இரவு நேரங்களில் கண் தெரியாத இளைஞனின் வாழ்வை காமெடியாக சொல்லும் திரைக்கதையில் கமர்ஷியலாக இப்படம் உருவாகியுள்ளது.
இப்படத்தின் அனைத்து பணிகளும் முடிந்து ஆகஸ்ட் 30ல் ரிலீஸாக உள்ளது.
புவன் நல்லான் இயக்கத்தில் யோகிபாபு, யாஷிகா ஆனந்த், நடிப்பில் உருவாகி இருக்கும் ‘ஜாம்பி’ படத்தின் முன்னோட்டம்.
'மோ' என்ற திகில் கலந்த நகைச்சுவை படம் மூலம் புகழ்பெற்றவர் இயக்குனர் புவன் நல்லான். இவர் அடுத்ததாக 'ஜாம்பி' என்ற படத்தை உருவாக்கியுள்ளார். இப்படத்தை 'எஸ்3' பிக்சர்ஸ் சார்பில் வசந்த் மகாலிங்கம் மற்றும் வி.முத்துக்குமாரும் இணைந்து தயாரித்திருக்கிறார்கள்.
யோகிபாபுவும், யாஷிகா ஆனந்தும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்கள். இவர்களுடன் கோபி சுதாகர், டி.எம்.கார்த்திக், மனோபாலா, அன்பு தாசன், பிஜிலி ரமேஷ், ராமர், 'லொள்ளு சபா' மனோகர், சித்ரா ஆகியோருடன் மற்றும் பலர் நடிக்கிறார்கள். இவர்கள் அனைவரும் சமூக வலைத்தளங்கள், தொலைக்காட்சி மற்றும் திரைப்படங்கள் மூலம் நகைச்சுவையில் பிரபலமானவர்கள்.
இப்படம் வரும் ஆகஸ்ட் 30ம் தேதி வெளியாக இருக்கிறது.
மோத்தி.பா இயக்கத்தில் விக்கி ஆத்தியா, வைசாக், ஹரிணி நடிப்பில் உருவாகி இருக்கும் “கோலா“ படத்தின் முன்னோட்டம்.
மோத்தி ஆர்ட்ஸ் என்ற பட நிறுவனம் சார்பில் மோத்தி முகமது தயாரித்திருக்கும் படம் “கோலா“. மோத்தி.பா இயக்கியுள்ள இப்படத்தில் விக்கி ஆத்தியா, வைசாக் இருவரும் கதாநாயகர்களாக நடித்துள்ளனர். கதாநாயகியாக ஹரிணி நடித்துள்ளார். மேலும் மோத்தி முகமது, தருண் மாஸ்டர், பாபூஸ், சந்தான லக்ஷ்மி, ஜீவா ரவி, ஜெய சுவாமிநாதன், கிருஷ்ணன், குமார், ஜெய்கணேஷ், அமுதவாணன், ஜுங்கா பாலா, ஸ்ரீகோ உதயா ஆகியோர் நடித்துள்ளனர்.
ஒளிப்பதிவு - கமில் ஜே.அலெக்ஸ்; இசை - கண்மணி ராஜா; பின்னணி இசை - எஸ்.எம்.பிரஷாந்த்; பாடல்கள் - காதல் மதி, டாக்டர் கிருதியா, மோத்தி.பா; கலை - ராம்ஜி; எடிட்டிங் - தீபக்; நடனம் - ராதிகா; தயாரிப்பு மேற்பார்வை - லினா மோத்தி, எம்.எல்.பிஸ்மி; தயாரிப்பு - மோத்தி முகமது; கதை, திரைக்கதை, வசனம், இயக்கம் - மோத்தி.பா.

படம் பற்றி மோத்தி.பா கூறியதாவது:- போதை இந்த ரெண்டெழுத்து சொல்தான் வெகுகலாமாக இந்த உலகை ஆட்டிப் படைத்துக் கொண்டிருக்கிறது. அதில் பல வகை உண்டு பணக்கார போதை, அதிகார போதை, பெண் போதை, மது போதை, கடைசியாக புகழ் போதை. மனிதன் தன் கடைசி மூச்சு நிற்கும் வரை புகழ் போதைக்கு ஆசைப்படுகிறான்.
அதை அனுபவிக்கவும் செய்கிறான்.உலகத்திலுள்ள அத்தனை மனிதர்களும் ஏதாவது ஒரு போதையின் அடிமைகள்தான். விளக்கின் வெளிச்சத்தை தேடிச்சென்று விழும் விட்டில் பூச்சிகள் போல் சிலர் போதையில் சிக்கிக் கொள்கிறார்கள். உண்மையில் போதை என்பதே ஒரு மாயை தான். இவ்வாறு அவர் கூறினார்.
வி.சி.துரை இயக்கத்தில் சுந்தர்.சி, தன்ஷிகா நடிப்பில் உருவாகி வரும் `இருட்டு' படத்தின் முன்னோட்டம்.
ஸ்க்ரீன் சீன் மீடியா என்டர்டெயின்மெண்ட் நிறுவனம் தயாரிப்பில் வி.சி.துரை இயக்கத்தில் உருவாகி வரும் திகில் திரைப்படம் `இருட்டு'. திகில் கலந்த காமெடி படமான `அரண்மனையின்' படத்தின் இரண்டு பாகங்களை இயக்கியுள்ள சுந்தர்.சி, இந்த படத்தில் போலீஸ் அதிகாரியாக நடிக்கிறார்.
படத்தில் சுந்தர்.சி உடன் முக்கிய கதாபாத்திரங்களில் தன்ஷிகா, சாக்சி பர்வீந்தர், வி.டி.வி கணேஷ், யோகிபாபு ஆகியோர் நடிக்கிறார்கள். கிரிஷ் கோபாலகிருஷ்ணன் இப்படத்துக்கு இசையமைக்கிறார். இ.கிருஷ்ணசாமி ஒளிப்பதிவு பணிகளை மேற்கொள்ள, ஆர்.சுதர்ஷன் படத்தொகுப்பை கவனிக்கிறார்.

படத்தை பற்றி இயக்குனர் கூறியதாவது, `இது புதுமையான ஹாரர் படமாக இருக்கும். பேயே இல்லாத ஹாரர் படம் இது. எனக்கு பேயே இல்லாத ஹாரர் படம் ஒன்றை இயக்க வேண்டும் என்று ஆசை. அதை நான் இப்படத்தில் சரியாக செய்துள்ளேன் என்று நினைக்கிறேன்' என்றார்.
இயக்குநர் பார்த்திபன் தயாரித்து, எழுதி, இயக்கி, நடித்திருக்கும் 'ஒத்த செருப்பு சைஸ் 7' படத்தின் முன்னோட்டம்.
இயக்குநர் பார்த்திபன் தயாரித்து, எழுதி, இயக்கி, நடித்திருக்கும் திரைப்படம் ஒத்த செருப்பு சைஸ் 7. உலக அளவில் ஒரே ஒரு கதாபாத்திரம் மட்டுமே இடம்பெறும் படியாக 12 படங்கள் உண்டு. இத்தனை துறைகளையும் அவரே கையாண்டதால், அதையும் தாண்டிய சிறப்பை இந்த படம் பெற்றிருக்கிறது.

இப்படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைக்க, ராம்ஜி ஒளிப்பதிவு செய்திருக்கிறார். சுதர்சன் படத்தொகுப்பை கவனிக்கும் இப்படத்துக்கு, ஆஸ்கர் விருது வென்ற ரசூல் பூக்குட்டி கலை இயக்குநராகவும், அம்ரித் ப்ரீத்தம் சவுண்ட் டிசைனராகவும் பணியாற்றியுள்ளனர். பாடல்களை விவேகா எழுதியிருக்கிறார்.
ஆர்.ஏ.ஆனந்த் இயக்கத்தில் பிர்லா, பவித்ரா நடிப்பில் உருவாகி உள்ள ’ஊர காணோம்’ படத்தின் முன்னோட்டம்
வடிவேலு கிணத்த காணோம் காமெடியை நம்மால் மறக்க முடியாது. இப்போது ’ஊர காணோம்’ என்ற பெயரில் ஒரு படம் தயாராகிறது. இந்தப் படத்தை செவிலி, மோகனா போன்ற படத்தை இயக்கிய ஆர்.ஏ.ஆனந்த் இயக்கிவருகிறார். மேற்கு தொடர்ச்சி மலையில் உள்ள ஒரு குக்கிராமத்தில் நடந்த உண்மையான காதல் கதையையும் அதிர்ச்சியூட்டும் சம்பவங்களையும் அடிப்படையாகக் கொண்டது.
இதற்காக நவம்பர் மாத பனிப்பொழிவில் இந்தப்படத்தின் முக்கியமான காட்சிகள் மலைகிராமத்தில் படமாக்கப்பட்டது. இதில் பிர்லா, ஷா, பவித்ரா, நெல்லைசிவா, தவசி, தங்கதுரை, மும்பைசீனுஜி, சசி, மகேஷ் ஏட்டா, “பிச்சைக்காரன் ஜான்”, குணாஜி, வெங்கல்ராவ், கீதா, ஜெயக்குமார் மற்றும் பலர் நடித்து வருகிறார்கள்.

படத்திற்கான இசையை ஒரு புதிய பெண் இசையமைப்பாளர் சந்திரா சத்யராஜ் அமைக்கிறார். பாடல்களை பிரியாகிருஷ்ணன், பரிமளாதேவி என்ற இரண்டு பெண்கவிஞர்கள் எழுதியிருக்கிறார்கள். தயாரிப்பு கே.எஸ்.சரவணகுமார். இணைத்தயாரிப்பு சகுந்தலா. கதை, திரைக்கதை, வசனம், ஒளிப்பதிவு, இயக்கம்- ஆர்.ஏ.ஆனந்த்.






