என் மலர்tooltip icon

    முன்னோட்டம்

    சுதர் இயக்கத்தில் கயல் சந்திரன், சாத்னா டைட்டஸ், பார்த்திபன் நடிப்பில் உருவாகி இருக்கும் திட்டம் போட்டு திருடுற கூட்டம் படத்தின் முன்னோட்டம்.
    2 மூவி ஃபப்ஸ் சார்பில் ரகுநாதன் மற்றும் அக்ராஸ் பிலிம்ஸ் சார்பில் பிரபு வெங்கடாசலம் இணைந்து தயாரித்திருக்கும் படம் ‘திட்டம் போட்டு திருடுற கூட்டம்‘.  அறிமுக இயக்குனர் சுதர் இயக்கியிருக்கும் இந்த படத்தில் கயல் சந்திரன், சாத்னா டைட்டஸ், பார்த்திபன் முன்னணி கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். சந்திரமௌலி சுப்ரமணியன், சாம்ஸ், டேனியல் அனி போப், பிரின்ஸ் நித்திக் உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். அஷ்வத் இசை அமைத்திருக்கிறார்.

    படம் குறித்து இயக்குனர் கூறியதாவது: கிரிக்கெட் உலகக் கோப்பையை திருடுவதே ஒரு தனித்துவமான யோசனை தான், அதையும் தாண்டி திட்டம் போட்டு திருடுற கூட்டத்தில் நான் என்ன தனித்துவம் பார்கிறேன் என்றால், இதில் எல்லா காட்சிகளும் இதுவரை யாரும் பார்க்காத காட்சிகளாக இருக்கும்.  

    திட்டம் போட்டு திருடுற கூட்டம் படக்குழு

    பொதுவாக மற்ற  படங்களில் சென்டிமென்ட்  காட்சியோ, காதல் காட்சியோ தான் பொதுவாக இருக்கும், நடிகர்கள் மட்டும் தான் ஒவ்வொரு படத்திற்கும் மாறிக் கொண்டிருப்பாரகள். ஆனால் இந்த படத்தில் காட்சிக்கு காட்சி புதுமை இருக்கும், ஒரு காட்சியையும் வேறு எந்த படத்திலும் எந்த வடிவிலுமே பார்த்திருக்காத வகையில் இருக்கும் என்றார்.  
    முருகானந்தம், ஜெமினி ராகவா, சங்கீதா, ரோஜா, ஐஸ்வர்யா பழனி, மஹிரா, ரேஷ்மி, மூர்த்தி, இளங்கோ ஆகியோர் நடிப்பில் உருவாகி இருக்கும் ஆண்கள் ஜாக்கிரதை படத்தின் மூன்னோட்டம்.
    ஜெமினி சினிமாஸ் மற்றும் ஜெம்ஸ் பிக்சர்ஸ் பட நிறுவனங்கள் இனணந்து தயாரித்துள்ள படம் ‘ஆண்கள் ஜாக்கிரதை’. இந்த படத்தில் முருகானந்தம், ஜெமினி ராகவா, சங்கீதா, ரோஜா, ஐஸ்வர்யா பழனி, மஹிரா, ரேஷ்மி, மூர்த்தி, இளங்கோ ஆகியோர் நடிக்கிறார்கள்.

    ஒளிப்பதிவு - சிவகுமார், இசை - பாலகணேஷ், எடிட்டிங் - G.V.சோழன், விளம்பர வடிவமைப்பு - அயனன், இணை தயாரிப்பு – க.முருகானந்தம், தயாரிப்பு – ஜெமினி ராகவா, கதை, திரைக்கதை, வசனம், இயக்கம் - K.S.முத்துமனோகரன்

    படம் பற்றி இயக்குனர் முத்து மனோகரன் கூறும்போது, ‘இது ஒரு வித்தியாசமான திரில்லர் படம். வழக்கமாக பேய் படங்களில் வரும் பங்களாவில் கதவு, ஜன்னல் கண்டிப்பாக இருக்கும். ஆனால் இதல் வித்தியாசமான காட்டவேண்டும் என்பதற்காக அந்த பங்களாவில் இருந்த கதவு, ஜன்னல்கள் அனைத்தையும் பல லட்சம் செலவு செய்து அப்புறபடுத்தி, பின் படப்பிடிப்பு முடிந்தவுடன் மீண்டு வைத்துக் கொடுத்தோம். கதவு, ஜன்னல்கள் இல்லா பேய்படம் இது. ராஜா காலத்து பங்களா என்பதால் அனைத்தும் தேக்கு மரங்களால் வைக்கப்பட்டிருந்தன.

    முழுக்க முழுக்க இரவு நேரத்தில் மட்டும் தான் அந்த பங்களாவில் படப்பிடிப்பை நடத்தினோம். இது மிரட்டலான திரில்லர் படம் மட்டுமல்லாமல் இன்றைய இளைய சமுதாயத்தின் நாடித்துடிப்பை எகிற வைக்கும் படமாக இந்த ஆண்கள் ஜாக்கிரதை இருக்கும் என்றார் இயக்குனர்.
    ஜே.பார்த்திபன் இயக்கத்தில் ஸ்ரீகாந்த், ராய் லட்சுமி நடிப்பில் உருவாகி இருக்கும் ‘மிருகா’ படத்தின் முன்னோட்டம்.
    ஜாக்குவார் ஸ்டுடியோஸ்’ பி வினோத் ஜெயின் தயாரிப்பில் அறிமுக இயக்குனர்  ஜே பார்த்திபன் இயக்கத்தில் ஸ்ரீகாந்த், ராய் லட்சுமி நடிப்பில் ‘மிருகா’. இப்படத்தில் தேவ் கில், நைரா, வைஷ்ணவி சந்திர மேனன், த்விதா, பிளேக் பாண்டி மற்றும் பலர் நடித்துள்ளனர். எம்.வீ.பன்னீர்செல்வம் கதை, திரைக்கதை, ஒளிப்பதிவு செய்ய, இயக்குனர் பாலாவின் ‘நான் கடவுள்’ திரைப்படத்தில் பணியாற்றிய
    ஜே பார்த்திபன் இயக்கியிருக்கிறார்.

    சுதர்சன் படத்தொகுப்பை கவனிக்க, மிலன் மற்றும் எஸ்.ராஜாமோகன் கலை இயக்கத்திற்கு பொறுப்பேற்க, அதிரடி சண்டை காட்சிகளை தளபதி தினேஷ் மற்றும் ஸ்ரீதர் அமைத்திருக்கிறார்கள். அருள் தேவ் இப்படத்திற்கு இசை அமைத்திருக்கிறார். ஜாக்குவார் ஸ்டுடியோஸ் தயாரிப்பில் பொள்ளாச்சி, மூணாறு, தலைக்கோணம், சென்னை, ஊட்டி, மற்றும் கொடைக்கானல் ஆகிய இடங்களில் அருமையான காட்சியமைப்புகளுடன் உருவாகியிருக்கிறது.

    மிருகா

    இத்திரைப்படம் ஒரு வித்தியாசமான குரூர எண்ணங்கொண்ட ஒரு கொலைகாரன், தனது அழகு, பண்பு ஆகியவற்றை முதலீடாக வைத்து, ஒரு ஒட்டுண்ணி போல பெண்களை ஏமாற்றி, வாழ்ந்து வருகிறான். அப்படி ஒரு முயற்சியின் போது, ஒரு பெண்ணை, காதலித்து திருமணமும் செய்து கொள்கிறான்.  அவளையும் ஏமாற்றிட நினைக்கும் போது, விதி வேறு விதமாக நினைக்கிறது. இப்படி ஒரு பூனையும் எலியும் கதை போல வேகமாக நகரும் கதை, ஒரு கட்டத்தில் இவனது எல்லை மீறுகிறது. ஒரு பெண் தனக்கு சிக்கலான சூழல் ஏற்படுமானால், எதையும் எதிர்த்து நிற்பாள் என்பதை அழுத்தமாக பதிவு செய்திருக்கிறது ‘மிருகா
    ஏ.டி.ஞானம் இயக்கத்தில் அஜ்மல், பல்லவி சுபாஷ், அக்ஷதா சோனவானே நடிப்பில் உருவாகும் “செகண்ட் ஷோ” படத்தின் முன்னோட்டம்.
    அஞ்சாதே, கோ உள்ளிட்ட பல படங்களில் நடித்த நடிகர் அஜ்மல் கதாநாயகனாக நடிக்கும் படம் “செகண்ட் ஷோ”. முழுக்க முழுக்க லண்டனில் படமாக்கபடவுள்ள இப்படத்தை பெரும் பொருட்செலவில் பிரம்மாண்டமாக டார்க் ரூம் கிரியேசன்ஸ் நிறுவனம் தயாரிக்கின்றது.

    சஸ்பென்ஸ், த்ரில்லர், பேண்டஸியாக உருவாகும் இப்படத்தை ஏ.டி.ஞானம் கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்குகிறார். அஜ்மல் கதாநாயகனாக நடிக்க உடன் பல்லவி சுபாஷ், அக்ஷதா சோனவானே, பூஜா மான்டலே, ஹேமல், வித்யா, பிளாக் பாண்டி, இஷா சப்ரா உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர்.

    தொழில்நுட்ப கலைஞர்கள் விவரம்: தயாரிப்பு - டார்க் ரூம் கிரியேசன்ஸ், இயக்கம் - ஏ.டி.ஞானம், ஒளிப்பதிவு – எல்.கே.விஜய், படத்தொகுப்பு – ரங்கிஸ், பாடல் - பா.விஜய், நடனம் - சூரஜ் நந்தா, மக்கள் தொடர்பு – சதிஷ்.
    டென்னிஸ் மஞ்சுநாத் இயக்கத்தில் பிரவீன், சுனைனா நடிப்பில் உருவாக இருக்கும் டிரிப் படத்தின் முன்னோட்டம்.
    யோகி பாபு, கருணாகரன் இணைந்து நடிக்கும் சயின்ஸ்பிக்‌ஷன் டார்க் காமெடி படம் டிரிப். பிரவீன் நாயகனாக நடிக்கும் இப்படத்தில் நாயகியாக சுனைனா நடிக்க உள்ளார். சாம் ஆண்டனியிடம் உதவியாளராக இருந்த இயக்குநர் டென்னிஸ் மஞ்சுநாத் இப்படத்தை எழுதி இயக்குகிறார். சிவப்பு மஞ்சள் பச்சை படம் மூலம் புகழ் பெற்ற இசையமைப்பாளர் சித்து குமார் இப்படத்திற்கு இசையமைக்கிறார். உதய சங்கர் ஒளிப்பதிவை மேற்கொள்ள தீபக் எடிட்டிங் செய்கிறார்.

    ஒரு பயணத்தின் போது ஏற்படும் எதிர்பாராத குழப்பமான சம்பவங்களை காமெடி கலந்து சொல்வதாக இருக்கும். யோகிபாபுவும், கருணாகரனும் பெயிண்ட் அடிக்கும் வேலைக்காக ஒரு பயணம் மேற்கொள்ள, இடையில் குறுக்கிடும் 5 பசங்களும் 4 பெண்களும் இணைந்த ஒரு டூரிஸ்ட் செல்லும் கும்பல் என இவர்களுக்கும், ஒரு காட்டுக்குள் நடக்கும் சம்வங்களை மையமாக கொண்டதே இப்படத்தின் கதை. தமிழுக்கு புதிதான ஒரு படமாக சயின்ஸ்பிக்‌ஷன் டார்க் காமெடி கலந்து அனைவரையும் கவரும் வகையில் இப்படம் இருக்கும் என்றார் இயக்குநர்.
    'சிட்டிசன்’ மணி இயக்கத்தில் புதுமுகங்கள் ஜெயம், மதுனிக்கா நடிப்பில் உருவாகி வரும் ‘பெருநாளி’ படத்தின் முன்னோட்டம்.
    அஜித்தின் ‘சிட்டிசன்’ படத்தின் மூலம் நடிகராக அறிமுகமான மணி, அப்படத்தை தொடர்ந்து விஜய், விக்ரம், சூர்யா என பல முன்னணி நடிகர்களின் படங்களில் நடித்ததோடு, வடிவேலுவின் காம்பினேஷனில் பல காமெடிக் காட்சிகளில் தனது காமெடி திறமையை மூலம் காமெடி நடிகர் ‘சிட்டிசன்’ மணியாக பிரபலமானவர், தற்போது ‘பெருநாளி’ என்ற படத்தின் மூலம் இயக்குநர் அவதாரம் எடுத்திருக்கிறார். 

    ரோஷினி கிரியேஷன்ஸ் சார்பில் மார்கிரேட் அந்தோணி தயாரிக்கும் இப்படத்தில் ஹீரோவாக ஜெயம் என்ற புதுமுகம் நடிக்க, ஹீரோயினாக மதுனிக்கா நடிக்கிறார். முக்கிய வேடத்தில் கிரேன் மனோகர், சிசர் மனோகர், கார்த்திக், ஆனந்த் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். 

    பெருநாளி

    குடும்ப சென்டிமெண்டுடன், காதல், ஆக்‌ஷன், நகைச்சுவை என அனைத்தையும் கலந்து சொல்லும் கமர்ஷியல் படமாக உருவாகியுள்ள இப்படத்தில், மாமா - மருமகள் சென்டிமெண்டை இதுவரை சொல்லப்படாத வகையில் சொல்லியிருக்கிறார்களாம்.
    ரா.சுப்ரமணியன் இயக்கத்தில் சீமான், ஆர்கே சுரேஷ் மற்றும் அனு சித்தாரா நடிப்பில் உருவாகி வரும் அமீரா படத்தின் முன்னோட்டம்.
    சீமான் மற்றும் ஆர்கே சுரேஷ் கதாநாயகர்களாக நடிக்கும் படம் அமீரா. பிரபல மலையாள நடிகை அனு சித்தாரா கதாநாயகியாக நடிக்கும் இப்படத்தை சீமானிடம் உதவி இயக்குநராகப் பணியாற்றிய ரா.சுப்ரமணியன் என்பவர் இயக்கியுள்ளார். மேலும் எம்.எஸ்.பாஸ்கர், இளவரசு, கூத்துப்பட்டறை ஜெயகுமார், வினோதினி மற்றும் பலர் இதில் நடித்து வருகின்றனர்.  

    அமீரா

    பல சர்வதேச விருதுகளைக் குவித்த டூலெட் படத்தின் இயக்குநரும் ஒளிப்பதிவாளருமான செழியன் ஒளிப்பதிவு செய்யும் இப்படத்திற்கு விஷால் சந்திரசேகர் இசையமைக்கிறார். அமீரா என்றால் இளவரசி என அர்த்தம். இஸ்லாமியப் பெண் ஒருவரைச் சுற்றி நடக்கும் பிரச்சனைகளைப் பற்றிய கதை இது என்பதால் அமீரா என பெயர் வைத்துள்ளனர். 
    கே.வி.ஆனந்த் இயக்கத்தில் சூர்யா, சாயிஷா, ஆர்யா நடிப்பில் உருவாகி இருக்கும் காப்பான் படத்தின் முன்னோட்டம்.
    என்.ஜி.கே.வை தொடர்ந்து சூர்யா நடித்துள்ள படம் ’காப்பான்’. இப்படத்தை கே.வி.ஆனந்த் இயக்கியுள்ளார். இவர் ஏற்கனவே சூர்யாவை வைத்து அயன், மாற்றான் உள்ளிட்ட படங்களை இயக்கியுள்ளார். சூர்யாவுக்கு ஜோடியாக சாயிஷா சய்கல் நடித்துள்ளார். மோகன்லால் இந்த படத்தில் பிரதமராக நடித்துள்ளார். பிரதமரை பாதுகாக்கும், பாதுகாப்பு அதிகாரியாக சூர்யா நடித்துள்ளார். 

    காப்பான்

    முக்கிய கதாபாத்திரங்களில் ஆர்யா, சமுத்திரக்கனி, பொம்மன் இரானி, சிரக் ஜனி என பல்வேறு பிரபலங்கள் நடித்துள்ளனர். தீவிரவாதத்தை மையமாக வைத்து இப்படம் உருவாகி உள்ளது. லைகா புரொடக்‌ஷன்ஸ் பிரம்மாண்டமாக தயாரித்துள்ள இந்த படத்திற்கு ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைத்துள்ளார். 

    கிருஷ்ணா இயக்கத்தில் கிச்சா சுதீப், சுனில் ஷெட்டி, ஆகன்க்ஷா சிங் நடிப்பில் உருவாகி உள்ள ‘பயில்வான்’ படத்தின் முன்னோட்டம்.
    கிருஷ்ணா இயக்கத்தில் கிச்சா சுதீப் நடித்துள்ள படம் “பயில்வான்”. இப்படத்தில் கிச்சா சுதீப் குஸ்தி வீரராக நடித்துள்ளார். பாலிவுட்டின் முன்னணி நடிகரான சுனில் ஷெட்டி இப்படத்தில் சுதீப்பின் பயிற்சியாளராக நடித்துள்ளார். தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் மற்றும் இந்தி மொழிகளில் இப்படம் உருவாகி உள்ளது.  “ஹெபுல்லி” படத்தின் வெற்றியைத் தொடர்ந்து நடிகர் சுதீப் மற்றும் இயக்குனர் கிருஷ்ணா இருவரும் இணையும் இரண்டாவது படம் இந்த “பயில்வான்”. 

    பயில்வான்

    ஆர்.ஆர்.ஆர். மோஷன் பிக்சர்ஸ் நிறுவனத்தின் ஸ்வப்ன கிருஷ்ணா இப்படத்தை தயாரித்துள்ளர். ஆகன்க்ஷா சிங், சுஷந்த் சிங், கபீர் துஹன் சிங், சரத் லோஹிதாஸ் மற்றும் பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் இப்படத்திற்கு கிருஷ்ணா, மாது மற்றும் கண்ணன் ஆகியோர் திரைக்கதை அமைத்துள்ளனர். 
    சசி இயக்கத்தில் சித்தார்த், ஜி.வி.பிரகாஷ் குமார் நடிப்பில் உருவாகி இருக்கும் சிவப்பு மஞ்சள் பச்சை படத்தின் முன்னோட்டம்.
    ‘பிச்சைக்காரன்’ பட வெற்றியை தொடர்ந்து இயக்குநர் சசி இயக்கத்தில் உருவாகி உள்ள படம் ‘சிவப்பு மஞ்சள் பச்சை’. சித்தார்த் - ஜி.வி.பிரகாஷ் குமார், லிஜோமோள் முன்னணி கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

    அக்காள்-தம்பி பாசத்தை ஒரு புதிய கோணத்தில் சொல்லும் படமாக உருவாகி இருக்கும் இந்த படத்தில் போக்குவரத்து போலீஸ் இன்ஸ்பெக்டராக சித்தார்த்தும், பைக் ரேசராக ஜி.வி.பிரகாஷும் நடித்துள்ளனர். கதாநாயகியாக காஷ்மீரா அறிமுகமாகிறார்.மதுசூதனன் முக்கிய வேடத்தில் நடித்துள்ளார்.

    சிவப்பு மஞ்சள் பச்சை

    அபிஷேக் பிலிம்ஸ் சார்பில் ரமேஷ் பி.பிள்ளை இந்த படத்தை தயாரித்துள்ள இப்படத்தை, பிரசன்னா எஸ்.குமார் ஒளிப்பதிவு செய்துள்ளார். இப்படத்தின் மூலம் சித்து குமார் இசையமைப்பாளராக அறிமுகம் ஆகிறார்.
    சாந்தகுமார் இயக்கத்தில் ஆர்யா, இந்துஜா, மகிமா நம்பியார் நடிப்பில் உருவாகி இருக்கும் மகாமுனி படத்தின் முன்னோட்டம்.
    `கஜினிகாந்த்' படத்திற்கு பிறகு ஆர்யா கதாநாயகனாக நடித்திருக்கும் படம் ‘மகாமுனி’. சாந்தகுமார் இயக்கி இருக்கும் இப்படத்தில் மகிமா நம்பியார், இந்துஜா நாயகிகளாக நடித்துள்ளனர். ஜூனியர் பாலையா, ஜெயபிரகாஷ், அருள்தாஸ், ஜி.எம்.சுந்தர், காளி வெங்கட் உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். அருண் பத்மநாபன் ஒளிப்பதிவு செய்துள்ள இந்த படத்திற்கு எஸ்.எஸ்.தமன் இசையமைத்துள்ளார். 

    ஆர்யா, மகிமா நம்பியார்

    பாடல்களை கவிஞர் முத்துலிங்கம் எழுதுகிறார். தேசிய விருதுப்பெற்ற வி.ஜே.சாபு ஜோசப் படத்தொகுப்பை கவனிக்கிறார். மௌன குரு படத்திற்கு பிறகு சாந்தகுமார் இயக்கியிருக்கும் இந்த படம் க்ரைம் திரில்லர் பாணியில் உருவாகி இருக்கிறது. படத்தின் திரைக்கதை அனைத்து தரப்பினரையும் கவரும் வகையில் பரபரப்பாக அமைக்கப்பட்டிருக்கிறது.
    ஆர்.டி.எம். இயக்கத்தில் சுரேஷ், ரவீனா நடிப்பில் உருவாகும் ’காவல்துறை உங்கள் நண்பன்’ படத்தின் முன்னோட்டம்.
    பி.ஆர். டாக்கீஸ் தயாரிப்பில் ஆர்.டி.எம். இயக்கத்தில் உருவாகியுள்ள படம் ’காவல்துறை உங்கள் நண்பன்’. இப்படத்தில் சுரேஷ் நாயகனாகவும் ரவீனா ரவி நாயகியாகவும் நடித்துள்ளார்கள். மைம் கோபி முக்கியமான பாத்திரத்தில் நடித்துள்ளார். ஆதித்யா, சூர்யா இசையமைக்கும் இப்படத்திற்கு விஷ்ணு ஸ்ரீ ஒளிப்பதிவு செய்துள்ளார். 

    பெண்கள் இன்றைய சமூகத்தில் எதிர்கொள்ளும் பிரச்சனையை மையமாக கொண்டது தான் இப்படத்தின் கரு. ஒரு காவல் அதிகாரிக்கும், உணவு கொண்டு சேர்க்கும் டெலிவரி பாய்க்கும் இடையில் உருவாகும் நிகழ்வுகளை பின்னணி களமாக கொண்டு படத்தின் கதை சொல்லப்பட்டிருக்கிறது. 

    காவல்துறை உங்கள் நண்பன்

    படம் குறித்து ரவீந்தர் சந்திரசேகரன் கூறியதாவது: "காவல்துறை உங்கள் நண்பன்" படம் மிக அழுத்தமான கதையையும், அதே நேரம் மக்களை ஈர்க்க கூடிய வகையில் கமர்ஷியல் அம்சங்கள் நிறைந்ததாகவும் உள்ளது. இப்படத்தினை பார்த்த உடனே இதை எந்த வகையிலும் விட்டுவிடக் கூடாது என முடிவு செய்து விட்டேன். இப்படத்தினை எளிமையும் தத்ரூபமும் கூடியதாகவும், அதே நேரத்தில் அனைத்து மக்களையும் கவரும் வகையிலும் படைத்திருக்கிறார் இயக்குநர் ஆர்.டி.எம்..
    ×