என் மலர்tooltip icon

    முன்னோட்டம்

    புகழ்மணி இயக்கத்தில் யோகி பாபு, ராம் சுந்தர், பிரியங்கா நடிப்பில் உருவாகும் ’காவி ஆவி நடுவுல தேவி’ படத்தின் முன்னோட்டம்.
    பதினொரு கெட்டப்புகளில் யோகி பாபு நடிக்கும் வி.சி.குகநாதன் கதையில் புகழ்மணி இயக்கத்தில் "காவி ஆவி நடுவுல தேவி" படம் உருவாகிறது. யோகி பாபு, தம்பி ராமையா, நான் கடவுள் ராஜேந்திரன், இமான் அண்ணாச்சி நால்வரும் இணைந்து கலக்கும் படம் தான் "காவி ஆவி நடுவுல தேவி". மனோன்ஸ் சினி கம்பைன் சார்பில் ஆருரான் தயாரிக்கும் இதன் கிராபிக்ஸ் காட்சிகள் பரமிப்பூட்டும் வகையில் தயாராகி உள்ளது. 

    இப்படத்தின் மூலம் ராம் சுந்தர் கதாநாயகனாக அறிமுகமாகிறார். இவருக்கு ஜோடியாக பிரியங்கா நடிக்கிறார். "காதலை சேர்த்து வைக்கும் கேரக்டரில் வரும் யோகிபாபு அதற்காக பதினொரு விதமான கெட்டப்புகளில் நடித்துள்ளார். சூப்பர் சுப்பராயன் சண்டை பயிற்சியை கவனிக்கிறார். 

    யோகி பாபு

    வி.சி.குகநாதன் கதையில் உருவாகியுள்ள இப்படத்திற்கு கணேசன் ஒளிப்பதிவு செய்ய உள்ளார். படத்தொகுப்பை ராஜ் கீர்த்தியும் | பாடல்களை டாக்டர் ஹிருதயா, ஜீவன் மயில் இருவரும் எழுத நடன பயிற்சியை சிவசங்கரும், சிவராக் சங்கரும் கவனித்துள்ளனர். தயாரிப்பு நிர்வாகத்தை கே.தமிழ்செல்வன், எம்.சரவணனும், மேற்பார்வையை ஜெ.துரையும் கவனித்துள்ளனர். விரைவில் திரைக்கு வர உள்ளது." காவி ஆவி நடுவுல தேவி". படத்தின் வசனம் எழுதி புகழ்மணி இயக்கி உள்ளார்.
    வெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ், மஞ்சு வாரியர் நடிப்பில் உருவாகி இருக்கும் ’அசுரன்’ படத்தின் முன்னோட்டம்.
    `வடசென்னை' படத்தை தொடர்ந்து தனுஷ் - வெற்றிமாறன் கூட்டணியில் உருவாகியுள்ள படம் `அசுரன்'. இந்த படத்தில் தனுஷ் ஜோடியாக மஞ்சு வாரியர் நடித்துள்ளார். பூமணியின் வெக்கை நாவலை அடிப்படையாக கொண்டு உருவாகியுள்ள இப்படத்தில் பசுபதி, கருணாஸ் மகன் கென், பாலாஜி சக்திவேல், அம்மு அபிராமி உள்ளிட்டோர் நடித்துள்ளனர். 

    தனுஷ்

    ஜி.வி.பிரகாஷ் இசையமைக்கும் இந்த படத்திற்கு வேல்ராஜ் ஒளிப்பதிவு பணிகளை கவனிக்கிறார். வி கிரியேஷன்ஸ் சார்பில், கலைப்புலி எஸ் தாணு தயாரித்துள்ளார். இந்த படத்திற்கு ராமர் படத்தொகுப்பு பணிகளை கவனிக்கிறார். ஜாக்கி கலை பணிகளை மேற்கொள்கிறார்.
    ரோஹின் வெங்கடேசன் இயக்கத்தில் தமன்னா, யோகிபாபு நடிப்பில் உருவாகி இருக்கும் ‘பெட்ரோமாக்ஸ்’ படத்தின் முன்னோட்டம்.
    அதே கண்கள் படத்தை இயக்கிய ரோஹின் வெங்கடேசன் அடுத்ததாக இயக்கியுள்ள படம் ‘பெட்ரோமாக்ஸ்’. ஹாரர் காமெடி படமாக உருவாகி உள்ள இப்படத்தில் தமன்னா கதாநாயகியாக நடித்துள்ளார். ஜிப்ரான இசையமைத்துள்ள இப்படத்தை ஈகிள்ஸ் ஐ புரொடக்‌ஷன் நிறுவனம் தயாரித்துள்ளது.

    இப்படத்தில் தமன்னாவுடன் யோகிபாபு, மன்சூர் அலிகான், பகவதி, காளி வெங்கட், சத்யன், முனீஸ் காந்த் ஆகியோரும் நடித்துள்ளனர். டானி ரேமண்ட் ஒளிப்பதிவு செய்துள்ள இப்படத்திற்கு லியோ ஜான்பால் படத்தொகுப்பு பணிகளை கவனித்துள்ளார். 2 ஆண்டுகளுக்கு முன்னர் தெலுங்கில் வெளியாகி வெற்றி பெற்ற ஆனந்தோ பிரம்மா படத்தின் ரீமேக்காக இப்படம் உருவாகியுள்ளது.
    சிரஞ்சீவி, அமிதாப் பச்சன், விஜய் சேதுபதி, நயன்தாரா, தமன்னா நடிப்பில் உருவாகி இருக்கும் ‘சைரா நரசிம்மா ரெட்டி’ படத்தின் முன்னோட்டம்.
    ராயலசீமாவில் வாழ்ந்த சுதந்திர போராட்ட வீரர் உய்யவலாடா நரசிம்மா ரெட்டி வாழ்க்கை வரலாற்றை அடிப்படையாகக் கொண்டு தயாராகி வரும் படம் ’சைரா நரசிம்மா ரெட்டி’. இப்படத்தில் சைரா நரசிம்மா ரெட்டியாக தெலுங்கு திரையுலகின் உச்ச நட்சத்திரமான சிரஞ்சீவி நடித்துள்ளார். 

    அவருடன் அமிதாப்பச்சன், விஜய் சேதுபதி, நயன்தாரா, தமன்னா உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். தமிழ், தெலுங்கு, இந்தி மொழிகளில் உருவாகியுள்ள இப்படத்தை ராம் சரண் தயாரித்துள்ளார். தமிழ் நாட்டில் இதன் வெளியீட்டு உரிமையை சூப்பர் குட் பிலிம்ஸ் நிறுவனம் பெற்றுள்ளது.

    சைரா

    ரத்னவேல் ஒளிப்பதிவு செய்துள்ள இப்படத்திற்கு அமித் திரிவேதி இசையமைத்துள்ளார். இப்படம் காந்தி ஜெயந்தியை முன்னிட்டு அக்டோபர் 2ம் தேதி வெளியாக இருக்கிறது.
    ஆர்.எஸ்.எஸ்.எஸ் பிக்சர்ஸ் தயாரிப்பில் புதியவன் ராசையா இயக்கி நடித்திருக்கும் ஒற்றைப் பனைமரம் படத்தின் முன்னோட்டம்.
    திரைப்பட வெளியீட்டில் பிரபலமான ஆர்.எஸ்.எஸ்.எஸ் பிக்சர்ஸ் எஸ்.தணிகைவேல் முதல் முறையாக தயாரித்திருக்கும் படம் ஒற்றைப் பனைமரம். ஈழத்தில் நடந்த உண்மை சம்பவத்தை அடிப்படையாக கொண்டு உருவாகி இருக்கும் ஒற்றைப் பனைமரம்  40 சர்வதேச திரைப்பட விழாக்களில் தேர்வாகி சிறந்த நடிகர், சிறந்த ஒளிப்பதிவு, சிறந்த இசை என 17 விருதுகளையும் குவித்திருக்கிறது. 

    ஒற்றைப் பனைமரம்

    அஷ்வமித்ரா இசையமைத்திருக்கும் இப்படத்திற்கு மகிந்த அபேசிங்க ஒளிப்பதிவு செய்திருக்கிறார். புதியவன் ராசையா இயக்கி இருக்கிறார். புதியவன் இராசையா, நவயுகா, அஜாதிகா புதியவன், பெருமாள் காசி, மாணிக்கம் ஜெகன், தனுவன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருக்கின்றனர்.
      
    சரண் இயக்கத்தில் ஆரவ், காவ்யா தப்பார் நடிப்பில் உருவாகி இருக்கும் ’மார்க்கெட் ராஜா எம்.பி.பி.எஸ்’ படத்தின் முன்னோட்டம்.
    சுரபி ஃபிலிம்ஸ் சார்பில் S.மோகன் தயாரித்துள்ள திரைப்படம் “மார்க்கெட் ராஜா எம்.பி.பி.எஸ்”. இயக்குநர் சரண் இயக்கியிருக்கும் இப்படத்தில் பிக்பாஸ் புகழ் ஆரவ் நாயகனாக நடித்துள்ளார். நாயகியாக காவ்யா தப்பார் நடித்துள்ளார். நாசர், ராதிகா சரத்குமார், ரோகிணி முதலான பல பிரபலங்கள் இணைந்து  நடித்துள்ளனர். கோபி கிருஷ்ணா எடிட்டிங் செய்ய, கே வி குகன் ஒளிப்பதிவு செய்துள்ளார். சைமன் கே கிங் இசையமைத்துள்ளார். 

    சரணின் வித்தியாசமான திரைக்கதை அமைப்பில் அவரது வழக்கமான பாணியில் காமெடி திரில்லர் என அனைத்தும் அடங்கிய ஆக்‌ஷன் படமாக உருவாகியுள்ளது “மார்க்கெட் ராஜா எம்.பி.பி.எஸ்”. 

    படம் குறித்து இயக்குநர் சரண் கூறியதாவது: வசூல்ராஜா எனக்கு தலை என்றால் மார்க்கெட் ராஜா எனக்கு பாதம். இனிமேல் நான் நடைபோடுவேன். இப்படத்தில்  அமர்ககளம் படத்திற்கு நேரெதிரான பாத்திரத்தில் நடித்திருக்கிறார் ராதிகா மேடம். என் படங்களில் வைரமுத்து பரத்வாஜ் இல்லாத குறையை போக்கியிருக்கிறார் இசையமைப்பாளர் சைமன் கே கிங். 

    மார்க்கெட் ராஜா எம்.பி.பி.எஸ்

    இந்தப்படத்தில் வேற லெவல் எனச் சொல்லக்கூடிய உழைப்பைத் தந்திருக்கிறார் என் தம்பி கே.வி. குகன். என் அம்மா இருந்து எங்களைப் பார்த்திருக்க வேண்டும். ஆரவ் இந்தப்படத்தில் இரு வேறு சாயலில் நடிக்க வேண்டும் ஒரு தேர்ந்த நடிகர் போல  நடித்திருக்கிறார். அவர் தமிழ் சினிமா தாதாவாக மாறுவார். இந்தப்படம் அனைவரும் ரசிக்கும்படியான கமர்ஷியல் படமாக இருக்கும் என்றார்.
    மதுமிதா இயக்கத்தில் மு.ராமசாமி, நாக் விஷால்(அறிமுகம்), யோக் ஜபி நடிப்பில் உருவாகியுள்ள ‘கே.டி’ (எ) கருப்பு துரை படத்தின் முன்னோட்டம்.
    யூட்லீ பிலிம்ஸ் தயாரிப்பில், இயக்குனர் மதுமிதா இயக்கத்தில், மு.ராமசாமி, நாக் விஷால்(அறிமுகம்), யோக் ஜபி நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ‘கே.டி’ என்கிற ‘கருப்பு துரை’.  ‘கே டி’. இப்படம்  சர்வதேச அளவில் ஒரு தமிழ் படத்தை நோக்கி உலகத்தின் கவனத்தை ஈர்த்திருக்கிறது.

    சமுதாயத்தில் இன்றளவும் நடைமுறையில் இருந்துவரும் ‘தலைக்கூத்தல்’ எனும் ஒரு பழமையான சடங்கு, ஒருவரின் வாழ்வில் ஏற்படுத்தும் தீவிரமான தாக்கத்தை, யதார்த்தம் குறையாமல், புதுமையான முறையில் மிகவும் உணர்வுபூர்வமாகப் படமாக்கியிருக்கிறார் இயக்குனர்.

    வாழ்வின் இறுதி நிலையில் இருக்கும் ஒரு 80 வயது ஆதரவற்ற முதியவரும், வாழ்வின் முதல் படியில் இருக்கும் ஒரு அநாதை 8 வயது சிறுவனும், வயது வித்தியாசம் மறந்து, நண்பர்களாய் தங்களுக்குள் நட்பு பாராட்டுவதை, இதுவரை சொல்லாத கோணத்தில், முற்றிலும் புதுமையான பரிமாணத்தில், தங்களது நிறைவேறாத ஆசைகளை வாழ்ந்து களிக்கும் விதத்தை, ஆழமாக உணர்ந்து, ரசிக்கத்தக்க சுவராஸ்யத்துடன், ஜனரஞ்சகமாகப் படைத்திருக்கிறார் இயக்குனர் மதுமிதா.

    கே.டி. என்கிற கருப்பு துரை

    மெய்யேந்திரன் கெம்புராஜ் ஒளிப்பதிவு செய்ய, சபரிவாசன் சண்முகம் திரைகதை-வசனம் எழுதியுள்ளார். கார்த்திகேயமூர்த்தி இசையமைத்திருக்கும் இப்படத்திற்கு விஜய் வெங்கடராமன் படத்தொகுப்பு பொறுப்புகளை கவனிக்கிறார். இப்படம் பல்வேறு சர்வதேச திரைப்பட விழாக்களில் கலந்துக் கொண்டு, விருதுகளை வென்று வருவது குறிப்படத்தக்கது.
    அறிமுக இயக்குனர் பி.என்.சி. கிருஷ்ணா இயக்கத்தில், புதுமுகங்கள் கிஷோர், சஸ்வதா நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘குஸ்கா’ படத்தின் முன்னோட்டம்.
    எஃப் எம் கலைக்கூடம் சார்பாக எஸ் நாராயணன் மற்றும் எஸ் சரவணகுமார் தயாரிப்பில் உருவாகியிருக்கும் இப்படத்தில், நாயகனாக கிஷோர் அறிமுகமாக, இணையாக சஸ்வதா நடிக்கிறார். இவர்களுடன் இயக்குனர்-நடிகர் பாக்கியராஜ், ரேகா, அப்புக்குட்டி, டி பி கஜேந்திரன், அனுமோகன், மயில்சாமி ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க, அறிமுக இயக்குனர் பி.என்.சி. கிருஷ்ணா இயக்கியிருக்கிறார்.

    குஸ்கா, சாலை விபத்தில் சிக்கிக் கொள்கின்ற ஒரு பெண்ணுடைய வாழ்வை பற்றிய உணர்வுபூர்வமான கதை. மிகவும் சிக்கலான ஒரு விஷயத்தை, இயக்குனர் மிகவும் நளினமாக காட்சிப்படுத்தி இருக்கிறார். இத்திரைப்படம் சாலை விபத்தின் தாக்கத்தை, இது வரை சொல்லப்படாத முற்றிலும் புதிய கோணத்தில் அணுகி இருக்கிறது. எம் எஸ் ராஜா ஒளிப்பதிவு செய்ய, ஆர் ஜி ஆனந்த் படத்தொகுப்பை கவனிக்க, கலை இயக்குனராக கே கலை நடராஜ் பங்காற்றி இருக்கிறார்.
    அறிமுக இயக்குனர் பாபு தமிழ் இயக்கத்தில் யோகேஷ், அனிகா விக்ரமன் நடிப்பில் உருவாகும் ‘க்’ படத்தின் முன்னோட்டம்.
    தர்மராஜ் பிலிம்ஸ் நவீன் தயாரிப்பில், அறிமுக நாயகன் யோகேஷ், குரு சோமசுந்தரம் நடிப்பில் உருவாகும் படம் ‘க்’. அறிமுக இயக்குனர் பாபு தமிழ் இயக்கும் இப்படத்தில் அனிகா விக்ரமன் நாயகியாக நடிக்கிறார். இப்படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமாகும் பாபு தமிழ், சமீபத்தில் வெளியாகி பாராட்டுகளையும், நல்ல விமர்சனங்களையும் பெற்றுள்ள ‘ஜீவி’ திரைப்படத்திற்கு கதை-திரைகதை-வசனம் எழுதியிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. 

    உளவியல் ரீதியாக சிக்கி தவிக்கும் ஒரு கால்பந்து வீரரின் வாழ்க்கையை மிகவும் தத்ரூபமாகவும், உணர்வுபூர்வமாகவும் படமாக்க இருக்கிறார் இயக்குனர் பாபு தமிழ். தனது முதல் பெரிய போட்டியிலேயே பலமாக காயமடைந்து விடும் ஒரு கால்பந்து வீரரின் வாழ்வில், அதன்பின் நடக்கும் சம்பவங்கள், அதன் மூலம் கிடைக்கின்ற சில நுண்ணிய தகவல்கள், தனக்கு ஏன் இப்படி நடந்தது, எதனால் இந்த கதிக்கு ஆளானோம் என அவன் ஆராய முற்படுகிறான். 

    அதன் முடிவில் அவன் தனது வாழ்வை சீரமைத்துக் கொண்டானா இல்லையா என்பதை இத்திரைப்படம் முற்றிலும் புதிய கோணத்தில், ஜனரஞ்சகமாக அனைத்து தரப்பினரும் ரசிக்கும் வகையில் தமிழ் திரையுலகிற்கு கொண்டு வரவிருக்கிறது. ராதாகிருஷ்ணன் ஒளிப்பதிவு செய்ய, ராகுல் படத்தொகுப்பை கவனிக்கிறார். அவினாஷ் கவாஸ்கர் இசை அமைக்க, சண்டை பயிற்சி ஃபயர் கார்த்திக் வசமும், கலை கல்லை தேவா வசமும் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

    தர்மராஜ் பிலிம்ஸ் சார்பில் நவீன் தயாரிக்க, அறிமுக இயக்குனர் பாபு தமிழ் இயக்கத்தில், உருவாகும் ‘க்’ திரைப்படத்தின் படப்பிடிப்பு சென்னையில் துவங்க இருக்கிறது. பெரும்பாலான காட்சிகளை சென்னையிலும், சில குறிப்பிட்ட சிறப்பு காட்சிகளை வெளிநாட்டிலும் படமாக்கப்படவுள்ளதாக படக்குழுவினர் தெரிவிக்கின்றனர். 
    பாம்பே டாக்கீஸ் நிறுவனம் தயாரிப்பில் ஆசாத், ருகி சிங், அனுஷ்கா நடிப்பில் உருவாகும் ’ராஜ்யவீரன்’ படத்தின் முன்னோட்டம்.
    இந்தியாவின் முதல் சமஸ்கிருத படமான அஹம் பிரம்மாஸ்மிமை இயக்கியவர் பிரபல இந்தி இயக்குனர் ஆசாத். பாம்பே டாக்கீஸ் நிறுவனம், அடுத்து ஆசாத்துடன் இணைந்து தமிழில் தயாரிக்கும் படம் ராஜ்யவீரன். 

    இந்த படத்தில் ஆசாத், ருகி சிங், அனுஷ்கா, ஜேமி லீவர், ஆர்யன் வைத்திய, அச்சிந்த் கொர், ராகேஷ் பேடி, மாஸ்டர் அக்சய் பட்சு, மோசின் கான், அதுல் ஸ்ரீவாஸ்தவ, விவேக் வாசுவாணி, நசிர் ஜானி, வாக்கர் கான், டீப் ராஜ் ரான, அபை பார்கவ், ராசா முரத், மனிஷ் சவுத்தரி மற்றும் ஜாகிர் ஹுசைன் ஆகியோர் நடித்துள்ளனர். 

    ராஜ்யவீரன்

    இந்திய தேசியவாத கொள்கையை ஆயுதமாக பயன்படுத்தி எதிரிகளை கையாளும் இந்த படம், அடிமைத்தனத்துக்கு எதிராகவும் குரல் கொடுக்கும். தேசப்பற்றை போற்றும் வகையில் இப்படம் உருவாகிறது. இசை: பப்பி லஹரி மற்றும் ஆசாத்; ஒளிப்பதிவாளர்: சேதுராமன், ராஜன் லியால்பூரி மற்றும் ஆகாஷ்தீப் பாண்டே; சண்டைக் காட்சிகள்: கௌஷல் மோசஸ் மற்றும் ஹனீப் கான்.
    செந்தில்குமார் இயக்கத்தில் அங்காடித்தெரு மகேஷ், மேக்னா நடிப்பில் உருவாகி இருக்கும் வீராபுரம் 220 படத்தின் முன்னோட்டம்.
    சுந்தர்ராஜ் பொன்னுசாமி தயாரிப்பில் உருவாகியுள்ள படம் வீராபுரம் 220. இப்படத்தை செந்தில்குமார் இயக்கியுள்ளார். இப்படத்தின் நாயகனாக அங்காடித்தெரு மகேஷ் நடிக்க, அவருக்கு ஜோடியாக மேக்னா நடித்துள்ளார். சதீஷ் மற்றும் பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். 

    மகேஷ், மேக்னா

    இந்த படத்திற்கு இரட்டையர்களான ரித்தேஷ்-ஸ்ரீதர் என்கிற அறிமுக இசையமைப்பாளர்கள் இசையமைத்துள்ளனர். இப்படத்தின் ஒளிப்பதிவை பிரேம்குமார் கவனிக்கிறார். மேலும் கணேஷ் படத்தொகுப்பு செய்துள்ளார். மணல் கடத்தல் கும்பலுக்கு சவுக்கடி கொடுக்கும் வகையில் படம் தயாராகி இருக்கிறது. 
    ப்ளக்ஸ் பிலிம்ஸ் தயாரிப்பில் ஏகே என்கிற அருண் கார்த்திக் இயக்கத்தில் துருவா, இந்துஜா நடிப்பில் உருவாகி இருக்கும் ‘சூப்பர் டூப்பர்’ படத்தின் முன்னோட்டம்.
    ப்ளக்ஸ் பிலிம்ஸ் தயாரிப்பில் ஏகே என்கிற அருண் கார்த்திக் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் ‘சூப்பர் டூப்பர்’. படத்தின் நாயகனாக துருவா நடித்துள்ளார். இவர் 'ஆண்மை தவறேல்' படத்தில் நாயகனாக நடித்தவர். 

    இந்துஜா அதிரடி பெண்ணாகவும், சாதாரண பெண்ணாகவும் 2 தோற்றங்களில் அசத்துகிறார். மேலும் ஷாரா, ஆதித்யா, சவுந்தர்யா ஆகியோர் நடித்துள்ளனர். 

    சூப்பர் டூப்பர் படத்தில் இந்துஜா

    இது ஒரு முழு நீள பொழுதுபோக்கு அம்சங்கள் கொண்ட பரபரப்பான த்ரில்லர் படமாக உருவாகியுள்ளது. சுந்தர் ராம் கிருஷ்ணன் ஒளிப்பதிவு செய்துள்ள இப்படத்துக்கு திவாகரா தியாகராஜன் இசையமைத்திருக்கிறார். இப்படம் செப்டம்பர் 20ம் தேதி வெளியாக இருக்கிறது.
    ×