என் மலர்
முன்னோட்டம்
ஹாசிம் மரிக்கார் இயக்கத்தில் ஸ்ரீகாந்த், சந்திரிகா ரவி நடிப்பில் உருவாகி இருக்கும் உன் காதல் இருந்தால் படத்தின் முன்னோட்டம்.
கேரளாவில் பிரபலமான 'மரிக்கார் ஃபிலிம்ஸ்' என்ற நிறுவனம் முதல் முதலாக தமிழில் தயாரிக்கும் படம் 'உன் காதல் இருந்தால்' என்ற படத்தை தயாரிக்கிறார்கள். தயாரிப்பாளர் ஹாசிம் மரிக்காரே இப்படத்தை டைரக்ட் செய்கிறார். இப்படத்தில் ஸ்ரீகாந்த் நாயகனாகவும், அவருடன் 3 நாயகிகளும் நடிக்கிறார்கள். சந்திரிகா ரவி, லெனா, ஹர்ஷிகா பூனாச்சா ஆகியோர் நடிக்கிறார்கள்.
ரியாஸ்கான் முதல்முறையாக நகைச்சுவை கதாபாத்திரத்தில் நடிக்கிறார். கஸ்தூரி இரட்டை வேடத்தில் நடிக்கிறார். மக்பூல் சல்மான், வையாபுரி, சிராக் ஜானி, ஜென்சன், கிரேன் மனோகர், சோனா ஹைடன், சிரியா ரமேஷ், சாக்ஷி திவிவேதி, மற்றும் காயத்ரி ஆகியோரும் நடிக்கிறார்கள். சாஜித் மேனன் ஒளிப்பதிவு செய்துள்ள இப்படத்திற்கு சாய் சுரேஷ் படத்தொகுப்பை கவனிக்கிறார். மன்சூர் அஹமத் இசையமைத்துள்ளார். பின்னணி இசையை ஸ்ரீகாந்த் தேவா மேற்கொண்டுள்ளார்.

படம் குறித்து ஹாசிம் மரிக்கார் கூறியதாவது :- 'உன் காதல் இருந்தால்' படம் ஹாரர், நகைச்சுவை, குடும்ப உறவுகள், காதல் என்று பல திருப்பங்கள் நிறைந்திருக்கும். படத்தின் நேரம் 2 மணி நேரம் தான். படம் பார்க்கும் மக்கள் படத்துடன் அவர்களைத் தொடர்புபடுத்திப் பார்க்கும் படியாக.. இன்னொரு முறை படம் பார்க்க வேண்டும் என்று தோன்றும் வண்ணம் இருக்கும். மேலும், இந்த படத்தில் ஒரே ஒரு காட்சி தான். அந்த ஒற்றைக் காட்சியின் விளக்கம் தான் முழு படம். அது தான் இந்த படத்தின் சிறப்பு. என கூறினார்.
தோட்ட கிருஷ்ணா இயக்கத்தில் ஆர்.கே.சுரேஷ், மதுபாலா நடிப்பில் உருவாகி வரும் கைலாசகிரி படத்தின் முன்னோட்டம்.
தமிழகத்தில் சமீபகாலங்களில் உலுக்கிய சிலை திருட்டு விவகாரம் கைலாசகிரி என்ற பெயரில் படமாகிறது. ஆர்.கே.சுரேஷ் முதன் முறையாக இரட்டை வேடங்களில் நடித்துள்ள இந்த படத்தில், மதுபாலா, சாகர், முரளி கிருஷ்னா, கண்டா சீனிவாசராவ், பூமாரெட்டி, மேகனா ஸ்ரீ லட்சுமி, பேபி ஹர்ஷீதா, மற்றும் பலர் நடித்துள்ளனர். இப்படத்தின் வசனம் மற்றும் பாடல்களை சாய்மோகன் குமார் எழுத, கன்ஷியாம் இசையமைக்கிறார்.
தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் என நான்கு மொழிகளில் இப்படத்தை ராவூரி வெங்கடசாமி மிகுந்த பொருட் செலவில் தயாரித்துள்ளார். தெலுங்கில் 18 வெற்றிப் படங்களை இயக்கியுள்ள தோட்ட கிருஷ்ணா கைலாசகிரி படத்தின் கதை திரைக்கதை எழுதி இயக்கி உள்ளார். நவம்பரில் வெளியிட ஏற்பாடு செய்து வருகிறார்கள்.

படத்தின் இயக்குநர் தோட்டா கிருஷ்ணா கூறியதாவது:- ஆயிரம் வருடம் பழமையானதும் அதீத சக்தி கொண்டதுமான மரகதலிங்கம் உள்ள கோவிலில் அந்த லிங்கத்தை திருடி விற்க ஒரு திருட்டு கும்பல் ஈடுபடுகின்றது. அதை தடுத்து லிங்கத்தை காப்பாற்ற ஆர்.கே.சுரேஷ் முயல்கிறார். எப்படி முறியடிக்கிறார் என்பதே கதை’ என்றார்.
ரத்ன சிவா இயக்கத்தில் ஜீவா, ரியா சுமன் நடிப்பில் உருவாகி வரும் ’சீறு’ படத்தின் முன்னோட்டம்.
விஜய் சேதுபதி நடித்த றெக்க படத்தின் இயக்குனர் ரத்ன சிவா அடுத்ததாக இயக்கும் படம் ‘சீறு’. ஜீவா நாயகனாக நடித்து வரும் இப்படத்தை வேல்ஸ் இண்டர்நேஷனல் சார்பில் ஐசரி கணேசன் இப்படத்தை தயாரிக்கிறார். இப்படத்திற்கு டி.இமான் இசையமைக்கிறார். ‘சீறு’ குடும்பங்கள் கொண்டாடும் கமர்ஷியல் படமாக உருவாகி வருகிறது.
ரியா சுமன் ஜீவாவுக்கு ஜோடியாக நடிக்கிறார். நவ்தீப் வில்லன் பாத்திரத்தில் நடிக்கிறார். பிரசன்னா எஸ் குமார் ஒளிப்பதிவு செய்ய லாரன்ஸ் கிஷோர் எடிட்டிங் செய்கிறார். கே சம்பத் திலக் கலை இயக்கம் செய்துள்ளார். ராஜு சுந்தரம் நடன அமைப்பு செய்ய பாடலகள் விவேகா எழுதியுள்ளார். படத்தின் இறுதிப்பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
சாய்ராஜ்குமார் இயக்கத்தில் சேரன், சிருஷ்டி டாங்கே நடிப்பில் உருவாகி இருக்கும் ’ராஜாவுக்கு செக்’ படத்தின் முன்னோட்டம்.
பல்லாட் கொக்காட் பிலிம்ஸ் தயாரிப்பில் உருவாகியுள்ள படம் ராஜாவுக்கு செக். இப்படத்தில் சேரன் நாயகனாக நடித்துள்ளார். அவருக்கு ஜோடியாக சராயூ மோகன், நந்தனா வர்மா நடிக்க, முக்கிய வேடத்தில் சிருஷ்டி டாங்கே நடிக்கிறார். ’ஜெயம்’ ரவி நடித்த ‘மழை’ என்கிற படத்தை இயக்கிய சாய்ராஜ்குமார் இந்தப் படத்தை இயக்கியுள்ளார். சுண்டாட்டம், பட்டாளம் உள்ளிட்ட படங்களில் நடித்துள்ள இர்பான் வில்லனாக நடித்திருக்கிறார்.

தெலுங்கில் பிரபலமாக உள்ள இசையமைப்பாளர் வினோத் யஜமானியா இந்தப் படத்தின் மூலம் தமிழுக்கு அறிமுகமாகிறார். இந்த படத்திற்கு பிரபல ஒளிப்பதிவாளர் எம்எஸ் பிரபு ஒளிப்பதிவு செய்கிறார். குற்றம் கடிதல் படத்தின் எடிட்டிங்கிற்காக பேசப்பட பிரேம் இந்த படத்தின் படத்தொகுப்பைக் கவனிக்கிறார். எமோஷனல் த்ரில்லர் என்றாலும் படத்தில் தேவையான அளவுக்கு ஆக்சன் காட்சிகளும் உண்டு. ஆக்சன் காட்சிகளை டேஞ்சர் மணி வடிவமைத்துள்ளார்.
ஷாம், அத்மையா, ஸ்ரீதேவி குமார் நடிப்பில் சாரதி இயக்கத்தில் உருவாகி இருக்கும் ‘காவியன்’ படத்தின் முன்னோட்டம்.
ஷாம் நடிப்பில் உருவாகி இருக்கும் படம் காவியன். உலகிலே அதிகம் துப்பாக்கி வைத்திருப்போர் பட்டியலில் முதல் இடம் அமெரிக்காவுக்குத் தான். அந்த அமெரிக்கத் துப்பாக்கிச் சூட்டில் அதிகம் பலியாவது இந்தியர்கள் தான். இப்படி ஒரு அதிர்ச்சிகலந்த சம்பவத்தை அடிப்படையாக வைத்துத்தான் காவியன் படத்தை உருவாக்கி இருக்கிறார்கள்.
இப்படத்தை 2M சினிமாஸ்க்காக K.V சபரிஷ் தயாரிக்கிறார். மனம் கொத்திப் பறவை படத்தில் அறிமுகமான அத்மையா ஹீரோயினாக நடிக்கிறார். மேலும் ஸ்ரீதேவி குமாரும் மற்றொரு ஹீரோயினாக அறிமுகம் ஆகிறார். முக்கியக் கதாப்பாத்திரத்தில் ஸ்ரீநாத் நடிக்க, ஹாலிவுட்டில் இருந்து ஜெஸ்டின் விகாஷ், லூக்கஸ், ஜெனிபர் ஆகிய நடிகர்களும் படத்தில் பங்கேற்கிறார்கள்.

விறுவிறுப்பான இக்கதையை அழகான திரைக்கதையாக்கி இயக்கி இருப்பவர் சாரதி. ஒளிப்பதிவு மூலம் படத்தில் தனிக்கவனம் செலுத்தி இருக்கிறார் ஒளிப்பதிவாளர் N.S. ராஜேஷ்குமார். அதிரடி இசையை ஸ்யாம் மோகன் MM வழங்க, எடிட்டராக அருண்தாமஸ் AKD பணியாற்றியுள்ளார். ஆர்ட் டைரக்டராக T.N.கபிலனும், ஆக்ஷன் சண்டைப்பயிற்சிப் பணியை ஸ்டண்ட் சிவாவும் கவனித்துள்ளனர். மோகன்ராஜ் பாடல்களை எழுதி இருக்கிறார். சவுண்ட் டிசைனராக M.J.ராஜு, மேக்கப்: P.S.குப்புசாமி, காஸ்ட்யூம் டிசைனர் ஷேர் அலி.
இந்தியத் தொழிநுட்பக் கலைஞர்களோடு ஹாலிவுட் கலைஞர்களும் பங்கெடுத்துள்ள இப்படம் இம்மாதம் 18-ம் தேதி வெளியாக இருக்கிறது. உலகெங்கும் SDC Picturez இப்படத்தை வெளியீடுகிறது.
ரஞ்சித் பாரிஜாதம் இயக்கத்தில் நடன இயக்குனர் தினேஷ் மற்றும் ஸ்ரீகாந்த் இருவரும் இணைந்து நடிக்கும் ‘சம்பவம்’ படத்தின் முன்னோட்டம்.
மைனா, சாட்டை, மொசக்குட்டி, சவுகார்பேட்டை, பொட்டு ஆகிய படங்களை தயாரித்த ஷாலோம் ஸ்டூடியோஸ் ஜான் மேக்ஸ் அடுத்து ஒரு புதிய படத்தை தயாரிக்கிறார். இத்திரைப்படத்திற்கு "சம்பவம்" என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. இந்த படத்தில் நடன இயக்குனர் தினேஷ், மற்றும் ஸ்ரீகாந்த் இருவரும் இணைந்து நடிக்க இருக்கிறார்கள்.
நாயகிகளாக பூர்ணா மற்றும் சிருஷ்டி டாங்கே நடிக்கின்றனர். மேலும் இவர்களுடன், பக்ரீத் படத்தில் நடித்த பேபி ஸ்ருதிகா, கிஷோர், இயக்குனர் ஏ.வெங்கடேஷ், தம்பி ராமையா, மொட்டை ராஜேந்திரன், ஜெயப்பிரகாஷ் மற்றும் பல முன்னணி நடிகர்கள் நடிகைகள் பங்கு பெறுகின்றனர்.
நேர்மையுடன், மனசாட்சிக்கு உட்பட்டு வாழும் ஒருவன், சந்தர்ப்ப சூழ்நிலைகளால் நேர்மைக்குப் புறம்பாக தள்ளப்படும் போது ஏற்படும் பிரச்சினைகளை மையப்படுத்தி, சில உண்மை சம்பவங்களை அடிப்படையாக வைத்து திரைக்கதை அமைக்கப்பட்டுள்ளது. படத்தை ஏ.வெங்கடேஷிடம் உதவி இயக்குனராக இருந்த ரஞ்சித் பாரிஜாதம் கதை, திரைக்கதை, எழுதி இயக்குகிறார்.
அறிமுக இயக்குநர் பிரதீப் கிளிக்கர் இயக்கத்தில் மாஸ்டர் அஹான், சிவா, தேஜஸ்வி நடிப்பில் உருவாகி இருக்கும் ’பெளவ் பெளவ்’ படத்தின் முன்னோட்டம்.
லண்டன் டாக்கீஸ் நிறுவனத்தின் சார்பில் தயாரிப்பாளர் கே.நடராஜன் தயாரித்திருக்கும் திரைப்படம் ‘பெளவ் பெளவ்’. இந்தப் படத்தில் மாஸ்டர் அஹான், சிவா, தேஜஸ்வி மற்றும் பலர் நடித்துள்ளனர். மார்க் டி மியூஸ் மற்றும் டெனிஸ் வல்லபன் இருவரும் இணைந்து இசையமைத்துள்ளனர். அறிமுக இயக்குநரான பிரதீப் கிளிக்கர் இயக்கியிருக்கும் இத்திரைப்படம் லாஸ் ஏஞ்சல்ஸின் லைஃப் சர்வதேச திரைப்பட விழா உட்பட, பலவேறு சர்வதேச திரைப்பட விழாக்களில் திரையிடப்பட்டு, பல விருதுகளை வென்றுள்ளது.

தனிமையில் இருக்கும் ஐந்து வயது சிறுவனுக்கும் ஒரு நாய்க்கும் உள்ள அன்பை பற்றி பேசும் இப்படம் உண்மைச் சம்பவங்களை மையமாக வைத்து எடுக்கப்பட்டிருக்கிறது. கலிபோர்னியாவில் நடைபெற்ற லவ் இன்டர்நேஷனல் திரைப்பட விழாவில் சிறந்த அயல் நாட்டு படத்திற்கான விருதை பெற்றுள்ளது. வங்கதேசத்தில் நடைபெற்ற குழந்தைகள் திரைப்படவிழாவில் தொடக்கத் திரைப்படமாகவும்(opening film) திரையிடப்பட்டு கெளரவிக்கப்பட்டுள்ளது பெளவ் பெளவ்.
ராஜவேல் கிருஷ்ணா இயக்கத்தில் ரமேஷ், நசாத் நடிப்பில் உருவாகி இருக்கும் ‘பிழை’ படத்தின் முன்னோட்டம்.
இயக்குனர் ராஜவேல் கிருஷ்ணா இயக்கத்தில் உருவாகியுள்ள படம் பிழை. காக்கா முட்டை புகழ் ரமேஷ், அப்பா பட புகழ் நசாத், மைம் கோபி, சார்லி, கோகுல், தர்ஷினி, கல்லூரி வினோத் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். டர்னிங் பாய்ண்ட் புரொடெக்ஷன்ஸ் சார்பில் ஆர் தாமோதரன் தயாரித்துள்ள இப்படத்திற்கு பைசல் இசையமைத்துள்ளார்.

பாக்கி ஒளிப்பதிவை கவனிக்க, ராம் கோபி படத்தொகுப்பை மேற்கொண்டுள்ளார். பள்ளிக்கூடம் தொடர்பான கதையை இப்படம் வெளிப்படுத்தியுள்ளது. அதோடு, அப்பா – மகனுக்கு இடையில் நடக்கும் பாசப் போராட்டத்தையும் இப்படம் வலியுறுத்துகிறது.
டிஸ்னி இயக்கத்தில் சந்தோஷ் பிரதாப், அர்ச்சனா ஆகியோர் நடிப்பில் உருவாகி வரும் இரும்பு மனிதன் படத்தின் முன்னோட்டம்.
ஷங்கர் மூவீஸ் இன்டர்நேஷனல் ஜோசப் பேபி தயாரிக்கும் இரண்டாவது படம் ‘இரும்பு மனிதன்’. இதில் கதை, திரைக்கதை, வசனம், இயக்கம் படத்தில் நடித்த சந்தோஷ் பிரதாப் கதாநாயகனாக நடிக்கிறார். கதாநாயகியாக அர்ச்சனா நடிக்க மதுசூதனன், கஞ்சா கருப்பு, நிஷாந்த் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். பாடல்களை மோகன்ராஜ், நிரஞ்சன் பாரதி, டிஸ்னி எழுத கே.எஸ்.மனோக் இசை அமைக்கிறார்.
கே.கோகுல் ஒளிப்பதிவு செய்ய, எஸ்.பி.அகமது படத்தொகுப்பு செய்ய, கலை கே.மதன் கவனிக்க, ஆக்ஷன் பிரகாஷ் ஸ்டன்ட் செய்ய, கதையை ஜோசப்பேபி எழுத, திரைக்கதை, வசனம், எழுதி இயக்குகிறார் டிஸ்னி. இயக்குனர் டிஸ்னி கூறுகையில், இந்த படத்தின் திரைக்கதை பல்வேறு காலகட்டங்களில் நடக்கிறது. இதை ஒரு உணர்வுபூர்வமான காதல், காமெடி, சென்டிமென்ட், ஆக்ஷன் கலந்து எடுப்பதாகவும், படப்பிடிப்புகள் சென்னை மற்றும் அதன் சுற்றுப்புறங்களில் நடத்த இருப்பதாகவும் சொல்கிறார்.
அறிமுக இயக்குனர் நட்டு தேவ் இயக்கத்தில் வருண், சம்யுதா ஹெக்டே, யோகி பாபு நடிப்பில் உருவாகியுள்ள ‘பப்பி’ படத்தின் முன்னோட்டம்.
’கோமாளி’ படத்தை தொடர்ந்து வேல்ஸ் பிலிம் இண்டர்நேஷனல் நிறுவனத்தின் தயாரிப்பில் உருவாகியுள்ள படம் பப்பி. இப்படத்தின் மூலம் வருண் நாயகனாக அறிமுகமாகியுள்ளார். இவர் ஏற்கனவே போகன், நெருப்புடா, நைட் ஷோ உள்ளிட்ட படங்களில் குணச்சித்திர வேடத்தில் நடித்திருந்தார். இவருக்கு ஜோடியாக சம்யுதா ஹெக்டே நடித்துள்ளார். நடிகர் யோகி பாபு நாயகனின் நண்பராக நடித்துள்ள இப்படத்தை அறிமுக இயக்குனர் நட்டு தேவ் இயக்கியுள்ளார்.

பப்பி திரைப்படத்திற்கு தரண்குமார் இசையமைத்துள்ளார். தீபக் குமார் ஒளிப்பதிவு பணியையும் ரிச்சர்ட் எடிட்டிங் பணியையும் மேற்கொண்டுள்ளனர். இப்படத்தின் மூலம் நடிகர் ஆர்.ஜே.பாலாஜி பாடகராக அவதாரம் எடுத்துள்ளார். இப்படத்தில் இவர் பாடியுள்ள “சோத்துமூட்டை” என்ற பாடல் சமீபத்தில் வெளியாகி ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது. அடல்ட் காமெடி ஜானரில் உருவாகியுள்ள இப்படம் அக்டோபர் 11-ந் தேதி திரைக்கு வருகிறது.
பல வெற்றி படங்களை இயக்கிய தங்கர் பச்சான், தற்போது தன் மகனை கதாநாயகனாக வைத்து டக்கு முக்கு டிக்கு தாளம் என்ற படத்தை உருவாக்கி உள்ளார்.
கிராமத்துப் பின்னணியையும் கிராமத்து வாழ்க்கையின் யதார்த்தையும் தனது திரைக்கதையின் மூலம் அழுத்தமாக பதிவு செய்த இயக்குநர் தங்கர் பச்சான், சென்னை நகரத்தை மையமாகக் கொண்டு நகைச்சுவைப் படத்தை இயக்குகிறார். அப்படத்திற்கு 'டக்கு முக்கு டிக்கு தாளம்' என்று பெயரிடப்பட்டுள்ளது.
பல முன்னணி கதாநாயகர்களை மாறுபட்ட பாத்திரத்தில் காண்பித்த தங்கர் பச்சான் இப்படத்தின் மூலம் தனது மகன் விஜித் பச்சானைக் கதாநாயகனாக அறிமுகப்படுத்துகிறார். முதல் படத்திலேயே தன் மகனை நகைச்சுவைப் பாத்திரத்தில் நடிக்க வைத்திருக்கிறார்.
விஜித் பச்சான் நாயகனாக நடிக்க, மிலனா நாகராஜ், அஸ்வினி இருவரும் நாயகிகளாக நடிக்கிறார்கள். மன்சூர் அலிகான், ஸ்டண்ட் சில்வா, யோகிராம் மூவரும் வில்லன்களாக நடிக்கிறார்கள். கதை, திரைக்கதை, வசனம், இயக்கம் - தங்கர் பச்சான். இசை - தரண்குமார். ஒளிப்பதிவு - பிரபு, தயாளன், சிவபாஸ்கரன் படத்தொகுப்பு - சாபு ஜோசப், கலை - சக்தி செல்வராஜ், நடனம் - தினேஷ், சண்டைப்பயிற்சி - ஸ்டன்ட் சில்வா தயாரிப்பு நிறுவனம் - பிஎஸ்என் என்டர்டெயின்ட்மென்ட் பிரைவேட் லிமிடெட்.
சுதிர் எம்.எல். இயக்கத்தில் யோகி பாபு நடிப்பில் உருவாகி இருக்கும் ‘பட்லர் பாலு’ படத்தின் முன்னோட்டம்.
தர்மபிரபு, கூர்கா, ஜாம்பி ஆகிய படங்களை தொடர்ந்து யோகி பாபு, ‘பட்லர் பாலு’ என்ற படத்தில் கதைநாயகனாக நடிக்கிறார். சுதிர் எம்.எல். இயக்கியுள்ள இப்படத்தில் யோகி பாபு, கல்யாண வீடுகளில் சமையல் செய்யும் சமையல்காரர் வேடத்தில் நடித்துள்ளார். இதில் ரோபோ ஷங்கர், மயில்சாமி, தாடி பாலாஜி, இமான் அண்ணாச்சி ஆகியோரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
கிருத்திகா தயாரித்துள்ள இப்படத்திற்கு கணேஷ் ராகவேந்திரா இசை அமைத்துள்ளார். யோகி பாபு சமையல் வேலைக்கு சென்ற ஒரு மண்டபத்தில், மணப்பெண்ணை யாரோ கடத்தி விடுகிறார்கள். அவரை யோகி பாபு எப்படி மீட்கிறார்? என்பது கதை.






