search icon
என் மலர்tooltip icon

    சினிமா

    தேடு படக்குழு
    X
    தேடு படக்குழு

    தேடு

    சுசி ஈஸ்வர் இயக்கத்தில், சஞ்சய், மேக்னா நடிப்பில் உருவாகி வரும் 'தேடு' படத்தின் முன்னோட்டம்.
    கிஷோர் சினி ஆர்ட் சார்பாக சிவகாசி முருகேசன் தயாரிப்பில், இயக்குனர் சுசி ஈஸ்வர் இயக்கத்தில் உருவாகும் படம் 'தேடு'. சஞ்சய் கதாநாயகனாக நடிக்க, 'உறுதிகொள், வீராபுரம்' ஆகிய படங்களில் நடித்த மேக்னா, நாயகியாக நடிக்கிறார். இவர்களோடு சிவகாசி முருகேசன், விஜய் டிவி 'கலக்கப் போவது யாரு' புகழ் பிரபாகரன், ராணி, கமலா, சுவாமி தாஸ், காமராஜ், கல்கி ஜெகவீரபாண்டியன் மற்றும் பலர் நடித்துள்ளனர். இப்படத்திற்கு சபரி ஒளிப்பதிவு செய்ய, வில்சி படத்தொகுப்பை கவனிக்கிறார். இளைய கம்பன் பாடல்களை எழுத டி.ஜே.கோபிநாத் இசையமைத்துள்ளார்.

    தேடு

    மது மயக்கத்தில் ஒருவர், காதல் மயக்கத்தில் இளம் காதலர்கள், செல்பி மயக்கத்தில் இளம் மாணவ-மாணவியர் என முப்பரிமாணத்தில் பயணப்படும் இக்கதை, வித்தியாசமான கதைகளத்துடனும், எதிர்பாராத திருப்புமுனைகளுடனும், விறுவிறுப்பான காட்சி அமைப்புகளுடனும், ஜனரஞ்சகமாக படமாக்கப்பட்டு இருக்கிறது.  மயக்கம் கலைந்து, தவறுகள் களைந்து, இலக்கை அடைந்தார்களா என்பதே இப்படத்தின் கதைகளம்.
    Next Story
    ×