என் மலர்
முன்னோட்டம்
டிஸ்னி தயாரிப்பில் ஜான் பேவரூ இயக்கத்தில் உருவாகியுள்ள ‘தி லயன் கிங்’ படத்தின் முன்னோட்டம்.
1994 ஆம் ஆண்டு வால்ட் டிஸ்னி தயாரிப்பில் வெளியான அனிமேஷன் திரைப்படம் `தி லயன் கிங்'. இந்தப் படத்திற்கு உலகம் முழுக்க ரசிகர்கள் இருக்கின்றனர். 25 ஆண்டுகள் கழித்து, இந்தப் படத்தை நவீனத் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி லைவ் ஆக்ஷன் அனிமேஷன் முறையில் தயாராகி வருகிறது. `அயர்ன் மேன்', `தி ஜங்கிள் புக்' உள்ளிட்ட படங்களை இயக்கிய ஜான் பேவரூ இந்தப் படத்தை இயக்கியுள்ளார்.

பிரமாண்டமான லைவ் ஆக்ஷன் படமான `தி லயன் கிங்' படத்தின் தமிழ் வெர்ஷனுக்கு அரவிந்த்சாமி, சித்தார்த் ஆகியோர் குரல்கொடுக்கின்றனர். தவிர, ஐஸ்வர்யா ராஜேஷ், ரோகிணி, சிங்கம்புலி, மனோபாலா, ரோபோ சங்கர் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களுக்கு பின்னணி குரல் கொடுத்துள்ளனர். மதன் கார்க்கி வசனம் எழுதுகிறார். வரும் ஜுலை 19 ஆம் தேதி தமிழ், தெலுங்கு, இந்தி, ஆங்கிலம் ஆகிய மொழிகளில் வெளியாக இருக்கிறது.
சுப்பு இயக்கத்தில் சுமன், அருள் டி ஷங்கர், அன்கிதா நவ்யா நடிப்பில் உருவாகியுள்ள ‘உணர்வு’ படத்தின் முன்னோட்டம்.
சுப்பு இயக்கத்தில் புதுமுகங்கள் அருள் டி ஷங்கர், அன்கிதா நவ்யா நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘உணர்வு’. உணர்வுகளுக்கு மட்டும் முக்கியத்தும் கொடுக்கப்பட்டு இப்படம் உருவாக்கப்பட்டுள்ளது. எந்தவித டயலாக்கும் இல்லாமல் சமீபத்தில் வெளியான உணர்வு படத்தின் டீசர் நல்ல வரவேற்பை பெற்றது.

பல சர்வதேச படவிழாக்களில் திரையிட்டு நிறைய விருதுகளை பெற்றுள்ளது. இப்படத்தை நயன்த் எலிவேஷன் நிறுவனத்தின் சார்பில் ஜே.சேகர் தயாரித்துள்ளார். நகுல் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார். டேவிட் ஜன் ஒளிப்பதிவு செய்துள்ளார். சிவாஜி படத்தில் வில்லனாக நடித்த சுமன் இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.
ராஜேஷ் எம் செல்வா இயக்கத்தில் விக்ரம், அக்ஷரா ஹாசன் நடிப்பில் உருவாகி உள்ள ‘கடாரம் கொண்டான்’ படத்தின் முன்னோட்டம்.
கமல்ஹாசனின் ராஜ்கமல் பிலிம்ஸ் மற்றும் டிரைடண்ட் ஆர்ட்ஸ் சார்பில் ஆர்.ரவீந்திரன் இணைந்து தயாரிக்கும் படம் ’கடாரம் கொண்டான்’.
ராஜேஷ் எம்.செல்வா இயக்கும் இப்படத்தில் விக்ரம் ஹீரோவாக நடித்துள்ளார். அக்ஷரா ஹாசன், அபி நாசர், மீரா மிதுன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.

இந்த படத்திற்கு ஸ்ரீநிவாஸ் ஆர்.குதா ஒளிப்பதிவு செய்துள்ளார். ஜிப்ரான் இசையமைத்துள்ளார். இந்த படத்திற்கு தணிக்கை குழு 'யூ/ஏ' சான்றிதழ் வழங்கியுள்ளது.
ரத்னகுமார் இயக்கத்தில் அமலாபால், விஜே ரம்யா, விவேக் பிரசன்னா நடிப்பில் உருவாகி இருக்கும் ’ஆடை’ படத்தின் முன்னோட்டம்.
‘மேயாத மான்’ படத்தின் மூலம் கவனம் பெற்ற இயக்குநர் ரத்னகுமார் இயக்கத்தில் அமலாபால் நடித்திருக்கும் படம் ஆடை. இந்தப் படத்தை வீ ஸ்டுடியோஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. விஜய் கார்த்திக் கண்ணா ஒளிப்பதிவில், பிரதீப் குமார் இசையமைத்துள்ளார்.
பெண் ஒருவர் ஆடையின்றி ஓர் இடத்தில் மாட்டிக் கொள்கிறார். அங்கிருந்து அவர் எப்படி தப்பிக்கிறார் என்ற பின்னணியில் இந்தக் கதை அமைக்கப்பட்டுள்ளது.

ஹீரோயினை மையப்படுத்தி நகரும் இக்கதையில் விஜே ரம்யா, விவேக் பிரசன்னா ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இந்த படத்தில் அமலா பால் நிர்வாணமாக நடித்துள்ளார். ஆதலால் இப்படத்திற்கு தணிக்கை குழு 'ஏ' சான்றிதழ் வழங்கியுள்ளது.
தனராம் சரவணன் இயக்கத்தில் சமுத்திரகனி, சங்கவி நடிப்பில் உருவாகியுள்ள ‘கொளஞ்சி’ படத்தின் முன்னோட்டம்.
சமுத்திரகனி, சங்கவி நடிப்பில் ‘மூடர்கூடம்’ நவீன் தயாரிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ‘கொளஞ்சி’. இப்படத்தை அறிமுக இயக்குனர் தனராம் சரவணன் இயக்கியுள்ளார். இப்படத்தில் ராஜாஜி, நேனா சர்வார், கிருபாகரன், நாசத் உள்ளிட்டோரும் நடித்துள்ளனர்.

‘கொளஞ்சி’ என்ற 13-வயது சிறுவனை சுற்றி நடந்த உண்மை கதையை தழுவலாக கொண்டு இப்படம் உருவாக்கப்பட்டுள்ளது. சிறுவனை பற்றிய கதை என்றாலும், இப்படம் சிறுவர் படமில்லை என்று படக்குழு தரப்பிலிருந்து தெரிவிக்கப்பட்டுள்ளது.
தீரஜ், பிரதாயினி, துஷாரா, ராதாரவி, சார்லி, அஜய் நடிப்பில் உருவாகி இருக்கும் ’போதை ஏறி புத்தி மாறி’ படத்தின் முன்னோட்டம்.
ரைஸ் ஈஸ்ட் எண்டர்டெயின்மெண்ட் ஸ்ரீநிதி சாகர் தயாரித்துள்ள ’போதை ஏறி புத்தி மாறி’ படத்தை சந்துரு கே.ஆர் இயக்கியுள்ளார். வரும் ஜூலை 12ஆம் தேதி உலகளவில் வெளியிட திட்டமிடப்பட்டுள்ளது. தீரஜ், பிரதாயினி மற்றும் துஷாரா ஆகியோர் முன்னணி கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
ராதாரவி, சார்லி, அஜய் ஆகியோர் குணச்சித்திர வேடங்களில் நடித்துள்ளனர். பாலசுப்பிரமணியம் ஒளிப்பதிவை கவனிக்க, கே.பி. இசையமைத்திருக்கிறார். வி.ஜே.சாபு ஜோசப் படத்தொகுப்பு செய்துள்ளார். கதிர் நடராசன் திரைக்கதை எழுதியுள்ளார்.

’போதை ஏறி புத்தி மாறி' திடுக்கிடும் திருப்பங்களை கொண்ட, சீட்டின் நுனிக்கே வர வைக்கும் ஒரு திரில்லர் திரைப்படம். ரசிகர்களை கவரும் அனைத்து அம்சங்களையும் கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது.
ஜீவா, ஷாலினி பாண்டே, சதீஷ், விவேக் பிரசன்னா, யோகி பாபு நடிப்பில் உருவாகி இருக்கும் 'கொரில்லா' படத்தின் முன்னோட்டம்.
ஆல் இன் பிக்சர்ஸ் பட நிறுவனம் சார்பில் தயாராகியிருக்கும் புதிய திரைப்படம் ‘கொரில்லா’. இதில் ஜீவா, ஷாலினி பாண்டே, சதீஷ், விவேக் பிரசன்னா, யோகி பாபு, மொட்டை ராஜேந்திரன், சுவாமிநாதன் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள்.
நடிகர் ராதாரவி இதில் முக்கிய கேரக்டரில் நடித்திருக்கிறார். ஆர் பி குருதேவ் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த படத்திற்கு ‘விக்ரம் வேதா’ புகழ் சாம் சி எஸ் இசையமைத்திருக்கிறார். படதொகுப்பை ரூபன் கவனிக்க, கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்கியிருக்கிறார் டான் சாண்டி.

ஜீவா, சதீஷ், விவேக் பிரசன்னா மூன்று பேரும் நண்பர்கள். இவர்களுக்கு பணத் தேவை ஏற்படுகிறது. அதற்காக வங்கி ஒன்றை கொள்ளையடிக்க திட்டமிடுகிறார்கள். அவர்கள் தங்களுடன் ஒரு சிம்பன்ஸி குரங்கையும் இணைத்துக் கொள்கிறார்கள். இந்த கூட்டணி வங்கியை கொள்ளையடித்தார்களா? அல்லது போலீஸிடம் சிக்கினார்களா? என்பதே படத்தின் கதை.
பாவெல் நவகீதன் இயக்கத்தில் அருண் ராம் கேஸ்ட்ரோ, விஷ்ணுபிரியா நடித்துள்ள ’வி1’ படத்தின் முன்னோட்டம்
வி1 எனப் பெயரிடப்பட்டிருக்கும் படத்தில் கதாநாயகனுக்கு இருட்டு என்றாலே பயம். கதைப்படி கதாநாயகன் காவல்துறையில் வேலைபார்க்கும் ஒரு போலீஸ் அதிகாரி. வி1 என்ற எண்ணை கொண்ட வீட்டில் ஒரு கொலை நடக்கிறது.
அந்த கொலைப்பற்றி விசாரிக்க வேண்டிய கட்டாயத்திற்கு கதாநாயகன் உட்படுத்தபடுகிறான். இருட்டைப் பார்த்து பயப்படும் கதாநாயகன் இந்த கொலைக்கான மர்மத்தையும் கொலைக்காரனையும் கண்டுப்பிடித்தாரா என்பதே “வி1” படத்தின் கதை.

துப்பறியும் திரில்லரான இப்படம் முழுக்க விருவிருப்பும் காட்சிக்கு காட்சி புதுப்புது யுக்திகளையும் அமைத்து கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்கியுள்ளார் பாவெல் நவகீதன். நாயகன்- அருண் ராம் கேஸ்ட்ரோ, நாயகி- விஷ்ணுபிரியா, குணச்சித்திர வேடங்கள்- லிஜீஷ், மைம் கோபி, லிங்கா ஆகியோர் நடித்துள்ளனர்.
நடிகர் தம்பி ராமையாவின் மகன் உமாபதி ராமையா, சம்ஸ்கிருதி நடிப்பில் உருவாகி வரும் ‘தண்ணி வண்டி’ படத்தின் முன்னோட்டம்.
நடிகர் தம்பி ராமையாவின் மகன் உமாபதி ராமையா நடிப்பில் உருவாகி இருக்கும் படம் தண்ணி வண்டி. ராசு மதுரவன், மனோஜ் குமார் மற்றும் தருண் கோபி ஆகியோரின் உதவியாளராக நீண்டகாலமாக பணியாற்றிய மாணிக்க வித்யா இந்த படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமாகிறார். வில் அம்பு புகழ் சம்ஸ்கிருதி நாயகியாக நடித்துள்ளார்.
இந்த படத்தில் தம்பி ராமையா நாயகன் உமாபதியின் அப்பாவாக நடிக்க, தேவதர்ஷினி, பாலசரவணன், வித்யுலேகா, சேரன் ராஜ், மனோஜ் குமார், ஜார்ஜ், பாவா லட்சுமணன், 'காதல்' சுகுமார், முல்லை, விஜய் டிவி புகழ் கோதண்டம், 'ஆடுகளம்' நரேன், கிருஷ்ணமூர்த்தி, சன் டிவி புகழ் மதுரை முத்து, 'பிச்சைக்காரன்' மூர்த்தி மற்றும் இன்னும் சில பிரபலமான நடிகர்களும் நடித்துள்ளனர்.
வெங்கட் (ஒளிப்பதிவு), வீர சமர் (கலை), ஏ.எல்.ரமேஷ் (படத்தொகுப்பு), மோசஸ் (இசை), ஏ.வி.பழனிசாமி (தயாரிப்பு நிர்வாகம்), மோகன்ராஜ் - கவிஞர் சாரதி - கதிர் மொழி (பாடல்கள்), சுப்ரீம் சுந்தர் (சண்டைப்பயிற்சி), தினேஷ் - தீனா (நடனம்), புச்சி (ஆடைகள்), மூவேந்தர் (மேக்கப்), மூர்த்தி (ஸ்டில்ஸ்) மற்றும் ஸ்ரீதர் (டிசைனர்) ஆகியோர் தொழில்நுட்ப கலைஞர்களாக பணிபுரிந்துள்ளனர்.
ஜி சரவணன் அவர்களின் ஸ்ரீ சரவணா பிலிம் ஆர்ட்ஸ் இந்த தண்ணி வண்டி திரைப்படத்தை தங்களின் 3வது தயாரிப்பாக உருவாக்கி வருகிறது.
ஜெகன், மனிஷாஜித், நிகிதா, நடிகை அஸ்மிதா ஆகியோர் நடிப்பில் உருவாகி இருக்கும் ‘எனக்கு இன்னும் கல்யாணம் ஆகல’ படத்தின் முன்னோட்டம்.
காமெடி நடிகர் ஜெகன் கதாநாயகனாக நடிக்கும் ‘எனக்கு இன்னும் கல்யாணம் ஆகல’. இந்தப் படத்தின் கதையமைப்பு வித்தியாசமாக இருப்பது போல், இந்தப்படத்தில் இடம் பெறும் காமெடி காட்சிகளையும் வித்தியாசமாகப் படமாக்கி வருகிறார்கள்.
இதில் - காமெடி நடிகர் ஜெகன், மனீஷாஜித், நிகிதா, நடிகை அஸ்மிதா, வில்லனாக கவிஞர் பிறைசூடன், இந்திரஜித், சேரன் ராஜ், வின்னர் ராமச்சந்திரன், அம்பானி சங்கர், சாம்ஸ், விவேக்ராஜ், ரவி, மற்றும் பலர் நடித்திருக்கிறார்கள்.

ஒளிப்பதிவு - சிவராஜ், இசை - கவின்சிவா, எடிட்டிங் - துரைராஜ், கலை - ராகவா குமார், மக்கள் தொடர்பு - பெருதுளசி பழனிவேல், தயாரிப்பு நிர்வாகம் - சைதை செங்குட்டுவன், கதை, திரைக்கதை, வசனம் - காரைக்குடி நாராயணன், தயாரிப்பு - ராஜாமணி தியாகராஜன், டைரக்ஷன் - முருகலிங்கம்.
கார்த்திக் ராஜூ இயக்கத்தில் சந்தீப் கிஷன் மற்றும் ஆன்யா நடிப்பில் உருவாகி வரும் கண்ணாடி படத்தின் முன்னோட்டம்.
சமீபத்தில் வெளியான 'மதுர வீரன்' திரைப்படத்தை வி ஸ்டுடியோஸ் நிறுவனம் தயாரித்திருந்தது, இதே நிறுவனம் அமலாபால் நடிப்பில் "ஆடை" எனும் திரைப்படத்தை தற்போது தயாரித்து வருகிறது. இப்படத்தின் பர்ஸ்ட் லுக் சமீபத்தில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இப்படங்களை அடுத்து "வி ஸ்டுடியோஸ்" நிறுவனம் ஸ்ரீ சரவண பவா பிலிம்ஸ் உடன் இணைந்து தமிழ், தெலுங்கு என இரு மொழிகளில் 'கண்ணாடி' எனும் திரைப்படத்தை தயாரித்து வருகிறது.
இப்படத்தில் சந்தீப் கிஷன் நாயகனாக நடிக்கிறார். இவருக்கு இப்படத்தில் ஜோடியாக ஆன்யா சிங் அறிமுகமாகிறார். சந்தீப் கிஷன் மற்றும் ஆன்யாவுடன் இணைந்து ஆனந்த் ராஜ், கருணாகரன், பூர்ணிமா பாக்யராஜ், முரளி சர்மா, பிரகதி, திவ்யா கணேஷ் மற்றும் பலர் நடிக்கின்றனர்.
'திருடன் போலிஸ்', 'உள்குத்து' ஆகிய படங்களை இயக்கிய கார்த்திக் ராஜூ இப்படத்திற்கு கதை, திரைக்கதை மற்றும் வசனங்களை எழுதி இயக்கி வருகிறார்.
இசை : தமன், ஒளிப்பதிவு: P.K.வர்மா, படத்தொகுப்பு: K.L.பிரவின், கலை: விதேஷ், ஸ்டண்ட்: 'ஸ்டன்னர்' சாம், பாடல்கள்: யுகபாரதி, நடனம்: ஷெரிஃப், சவுண்ட் டிஸைன்: சம்பத் ஆழ்வார், நிர்வாக தயாரிப்பு: கிருபாகரன் ராமசாமி, தயாரிப்பு: விஜி சுப்ரமணியன் & சாந்தி ஸ்ரீனிவாச குரு
வேகமாக உருவாகி வரும் இப்படத்தை விரைவில் வெளியிட படக்குழுவினர் முடிவு செய்துள்ளனர்.
பாண்டியராஜனின் மகன் ப்ரித்வி பாண்டியராஜன் மற்றும் சாந்தினி நடிப்பில் மாணிக்க சத்யா இயக்கத்தில் உருவாகி இருக்கும் ‘காதல் முன்னேற்ற கழகம்’ படத்தின் முன்னோட்டம்.
புளு ஹில்ஸ் புரொடக்ஷன் மலர்க்கொடி முருகன், தயாரிக்கும் படம் ‘காதல் முன்னேற்ற கழகம்’. இந்தப் படத்தில் இயக்குநரும், நடிகருமான பாண்டியராஜனின் மகன் ப்ரித்வி பாண்டியராஜன் கதாநாயகனாக நடித்துள்ளார். நாயகியாக சாந்தினி நடிக்கிறார். மற்றும் சிங்கம் புலி, கஞ்சா கருப்பு, கிஷோர்குமார், ‘நாதஸ்வரம்’ முனிஸ்ராஜா, அமீர், ஹலோ கந்தசாமி ஆகியோரும் நடித்துள்ளனர். முக்கிய கதாபாத்திரத்தில் நடிகர் சிவசேனாதிபதி நடித்திருக்கிறார்.
ஒளிப்பதிவு - ஹாரிஸ் கிருஷ்ணன், இசை - பி.சி.சிவன், பாடல்கள் - யுகபாரதி, மோகன்ராஜ், உமாசுப்ரமணியம், மாணிக்கசத்யா, எடிட்டிங் - சுரேஷ் அர்ஸ், நடனம் - அசோக்ராஜா, சண்டை பயிற்சி - அம்ரீன் பக்கர், கலை - பிரகதீஸ்வரன், தயாரிப்பு நிர்வாகம் - முத்தையா, விஜயகுமார், தயாரிப்பு - மலர்க்கொடி முருகன். கதை, திரைக்கதை, வசனம், இயக்கம் - மாணிக்க சத்யா.
படம் பற்றி இயக்குநர் மாணிக்க சத்யா பேசும்போது...
“இந்தப் படம் 1985களில் நடக்கின்ற கதை. கதாநாயகன் நடிகர் கார்த்திக்கின் தீவிர ரசிகர். அவரைப் போலவே முடியை வளர்த்துக் கொண்டு ரசிகர் மன்றம் அது, இது என்று வேலைக்கு போகாமல் அலைந்து கொண்டிருப்பவர். சாந்தினி டீச்சராக நடித்துள்ளார். துரோகத்தில் மிக கொடூரமான துரோகமாக கருதப்படுவது நம்பிக்கை துரோகம் தான்.
அதிலும் நட்புக்குள் நடக்கும் நம்பிக்கை துரோகம் மிக மிக கொடூரமானது. அதைத் தான் இதில் சொல்லி இருக்கிறோம். படம் ஜூலை 5ம் தேதி உலகம் முழுவதும் வெளியாகிறது என்றார் இயக்குனர் மாணிக்க சத்யா.






