என் மலர்tooltip icon

    முன்னோட்டம்

    ஜோதிகா நடிப்பில் கௌதம் ராஜ் இயக்கத்தில் சான் ரோல்டன் இசையில் உருவாகி இருக்கும் ராட்சசி படத்தின் முன்னோட்டம்.
    ஜோதிகா நடித்து, ட்ரீம் வாரியர்ஸ் பிக்சர்ஸ் தயாரிப்பில் புதுமுக இயக்குநர் சை.கௌதம்ராஜ் இயக்கத்தில் அடுத்து வெளிவர இருக்கும் திரைப்படம் “ராட்சசி”. 

    ஹீரோயின்களுக்கு முக்கியத்துவத்துடன் நல்ல கதைகளாகவும் தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார் ஜோதிகா. “நல்ல விமர்சனமும் கமர்சியல் ரீதியிலான வெற்றியும்” என்ற பார்முலாவில் வெற்றிகரமாக பயணித்து வருகிறார். அவரின் அடுத்த படமான ராட்சசி படத்தின் பர்ஸ்ட் லுக் மற்றும் டிரைலர் சமீபத்தில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றிருக்கிறது. 

    சான் ரோல்டன் இசையமைத்துள்ள இப்படத்திற்கு கோகுல் பெனாய் ஒளிப்பதிவு செய்துள்ளார். இப்படத்தில் ஜோதிகா கீதா ராணி கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். 
    களவாணி படத்தின் வெற்றியை தொடர்ந்து சற்குணம் இயக்கத்தில் விமல், ஓவியா நடிப்பில் உருவாகி இருக்கும் ‘களவாணி 2’ படத்தின் முன்னோட்டம்.
    இயக்குனர் சற்குணம் இயக்கிய களவாணி திரைப்படம் ஒரு எவர்க்ரீன் பொழுதுபோக்கு படம். ஒவ்வொரு முறை அந்த படத்தை பார்க்கும்போதும் மிகவும் புதிதாக பார்க்கும் உணர்வை கொடுப்பதே இதற்கு காரணம். இப்போது அதே குழு இணைந்து களவாணி 2 படத்தை உருவாக்கியிருக்கிறது. 

    கோடை விடுமுறையில் வெளியிட மிக வேகமாக பணிகள் நடந்து வருகின்றன. இந்த இரண்டாம் பாகம் முற்றிலும் புதிய கதைக்களத்தையும், அனைத்து பொழுதுபோக்கு அம்சங்களையும் அத்துடன் அழுத்தமான கதையையும் கொண்டிருக்கிறது. 



    விமல் மற்றும் ஓவியா முன்னணி கதாபாத்திரங்களில் நடிக்க, சரண்யா பொன்வண்ணன், இளவரசு, கஞ்சா கருப்பு என முதல் பாகத்தில் நடித்த அத்தனை பேரும் இந்த படத்திலும் நடிக்கிறார்கள். கூடுதலாக, மயில்சாமி போன்ற இன்னும் சில முக்கிய நடிகர்களும் படத்தில் நடித்திருக்கிறார்கள். துரை சுதாகர் இந்த படத்தில் வில்லன் கதாபாத்திரத்தை ஏற்று நடிக்கிறார், ஆனாலும் அவரது கதாபாத்திரத்தின் குணாதிசயம் வழக்கமான வில்லன் கதாபாத்திரங்களிலிருந்து முற்றிலும் வித்தியாசமானது மற்றும் தனித்துவமானது. 

    இப்படம் ஜூலை 5ம் தேதி வெளியிட படக்குழுவினர் திட்டமிட்டுள்ளனர். 
    கஸ்தூரி ராஜா இயக்கத்தில் ஜாக்கி ஷெராப், ஷாயாஜி ஷிண்டே, சுமன் நடிப்பில் உருவாகி வரும் ‘பாண்டி முனி’ படத்தின் முன்னோட்டம்.
    தனுஷ் நடித்த துள்ளுவதோ இளமை, காதல் கொண்டேன், யாரடி நீ மோகினி திருவிளையாடல் ஆரம்பம், 3 ஆகிய படங்களைத் தயாரித்த ஆர்.கே.புரொடக்‌ஷன்ஸ் பட நிறுவனம் தற்போது தயாரிக்கும் படமான பாண்டிமுனி படத்தின் படப்பிடிப்பு 15 நாட்கள் திருவண்ணாமலை அருகே உள்ள வேட்டவலம் என்ற ஊரில் நடைபெற்றது.

    இந்தப்படத்தில் ஜாக்கி ஷெராப் முனீஸ்வரசாமி என்ற அகோரி வேடத்தில் நடிக்கின்றார். நாயகிகளாக மேகாலி, ஜோதி, வைஷ்ணவி ஆகிய மூவரும் அறிமுகமாகிறார்கள். முக்கிய வேடத்தில் ஷாயாஜி ஷிண்டே, சிவசங்கர், சுமன் ஆகியோர் நடிக்கிறார்கள்.

    ஒளிப்பதிவு - மது அம்பட், இசை - ஸ்ரீ காந்த்தேவா, நடனம் - சிவசங்கர், சண்டை பயிற்சி - சூப்பர்சுப்பராயன், எடிட்டிங் - சுரேஷ் அர்ஸ், கதை திரைக்கதை வசனம் எழுதி இயக்குகிறார் கஸ்தூரி ராஜா.
    வெற்றிவேல் சரவணா சினிமாஸ் சார்பில் எம்.வெள்ளபாண்டியன் தயாரிப்பில் வி.ஜே.கோபிநாத் இயக்கத்தில் உருவாகி இருக்கும் ‘ஜீவி’ படத்தின் முன்னோட்டம்.
    'ஜீவி' படத்தின் பர்ஸ்ட்லுக் மோஷன் போஸ்டர் பெரிய தாக்கத்தை உருவாக்கியது. அதன் ஒவ்வொரு கூறுகளும் இது எப்படிப்பட்ட ஒரு படம் என்பதை அறியும் ஆர்வத்தை தூண்டியிருக்கிறது. மிகச்சிறந்த குழுவின் உழைப்பால், மொத்த படமும் குறித்த நேரத்தில் முடிவடைந்திருக்கிறது. 

    இயக்குனர் வி.ஜே.கோபிநாத் இது குறித்து கூறும்போது, "ஒரு அறிமுக இயக்குனரான எனக்கு இது ஒரு மகிழ்ச்சியான தருணம். குறிப்பாக, தங்கள் துறைகளில் புகழ்பெற்ற பிரபலங்களாக இருக்கும் இந்த உறுப்பினர்களிடம் இருந்து பாராட்டுக்களை பெற்றது எனக்கு மிக்க மகிழ்ச்சி. விஞ்ஞானம் மற்றும் மாயவித்தைகளுக்கு இடையே மனித உணர்வுகள் எப்படி ஏமாற்றப்படுகின்றன என்பதை வலியுறுத்தும் ஒரு திரில்லர் படத்தை தர முயற்சி செய்திருக்கிறோம். ஒரு சஸ்பென்ஸ் திரில்லர் அணுகுமுறையை இந்த படத்துக்கு கொடுத்திருக்கிறோம், இது பார்வையாளர்களுக்கு ஒரு வித்தியாசமான அனுபவத்தை தரும் என நம்புகிறேன்" என்றார்.



    வெற்றிவேல் சரவணா சினிமாஸ் சார்பில் எம்.வெள்ளபாண்டியன் தயாரித்துள்ள இப்படத்தை ஜூன் 28ம் தேதி வெளியிட இருப்பதாக அறிவித்திருக்கிறார்கள். சுந்தரமூர்த்தி கே.எஸ். (இசை), பிரவீன் குமார் (ஒளிப்பதிவு), பிரவீன் கே.எல். (படத்தொகுப்பு), வைரபாலன் (கலை) மற்றும் ஐ.பி.கார்த்திகேயன் (லைன் புரொடுயூசர்) ஆகியோர் தொழில்நுட்ப குழுவில் பணிபுரிய, பாபு தமிழ் கதை, திரைக்கதை எழுத வி.ஜே.கோபிநாத் படத்தை இயக்கியிருக்கிறார்.
    ஹோலி ரெடிமர்ஸ் புரொடக்சன்ஸ் பட நிறுவனம் சார்பில் முசோலினி ஹிட்லர் கதை, திரைக்கதை, வசனம் எழுதி தயாரித்து, நாயகனாக நடிக்கும் நீர்முள்ளி படத்தின் முன்னோட்டம்.
    ஹோலி ரெடிமர்ஸ் புரொடக்சன்ஸ் பட நிறுவனம் சார்பில் முசோலினி ஹிட்லர் கதை, திரைக்கதை, வசனம் எழுதி தயாரித்து, நாயகனாக நடிக்கும் படத்திற்கு “ நீர்முள்ளி“ என்று பெயரிட்டுள்ளார்.

    நாயகியாக சுமா பூஜாரி நடிக்கிறார். மற்றும் ரேகா, மெய்வாரா, பொன்னம்பலம், வாகை சந்திரசேகர், இமான் அண்ணாச்சி, நளினி, வீரலட்சுமி ஆகியோர் நடிக்கிறார்கள். இவர்களுடன் முக்கிய கதாபாத்திரத்தில் இயக்குனர் அகத்தியன் நடிக்கிறார்.

    படம் பற்றி இயக்குனர் நடிகர் முசோலினி ஹிட்லர் கூறியதாவது...

    இந்த படம் கிரைம் மற்றும் காதல் கலந்த கமர்ஷியல் படம். இன்றைய சூழ்நிலையில் சமுதாயத்தில் பெண்கள் தங்களை சார்ந்த ஆண் உறவுகளை எப்படி கையாள்கிறார்கள், அதன் மூலம் என்ன மாதிரியான விளைவுகளை சந்திக்கிறார்கள் என்பதுதான் இந்த படத்தின் திரைக்கதை. காலத்திற்கேற்ப பெண்களின் எண்ண ஓட்டம் மாறுபடுவதால் ஏற்படும் சீர்கேடு பற்றி கதை இருக்கும். பெண்களுக்கான ஒரு விழிப்புணர்வை இந்த படம் கொடுக்கும்’ என்றார்.
    லக்‌ஷ்மி ராமகிருஷ்ணன் இயக்கத்தில் பசங்க கிஷோர் மற்றும் லவ்லின் நடிப்பில் உருவாகி இருக்கும் ‘ஹவுஸ் ஓனர்’ படத்தின் முன்னோட்டம்.
    தமிழ் சினிமாவின் மிக பிரமாண்டமான மற்றும் பெருமைமிகு தயாரிப்பு நிறுவனமான ஏஜிஎஸ் சினிமாஸ் லக்ஷ்மி ராமகிருஷ்ணனின் ஹவுஸ் ஓனர் படத்தின் தமிழ்நாடு வெளியீட்டு உரிமையை கைப்பற்றியிருக்கிறது.

    படத்தை பற்றி லக்‌ஷ்மி ராமகிருஷ்ணன் கூறுகையில், "படம் மனித உறவுகளை பற்றி பேசுவதோடு, ஒரு அழகான காதல் கதையையும் கொண்டிருக்கிறது. எளிய மற்றும் யதார்த்தமான படமான இதை பார்வையாளர்கள் ரசிப்பார்கள் என நான் நம்புகிறேன்" என்றார்.

    லக்‌ஷ்மி ராமகிருஷ்ணன் எழுதி இயக்க, பசங்க கிஷோர் மற்றும் லவ்லின் முன்னணி கதாபாத்திரங்களில் நடித்துள்ள இந்த படத்தை மங்கி கிரியேட்டிவ் லேப்ஸ் சார்பில் டாக்டர் ராமகிருஷ்ணன் தயாரித்திருக்கிறார். ஜிப்ரான் இசையமைக்க, கிருஷ்ணா சேகர் டி.எஸ். ஒளிப்பதிவு செய்திருக்கிறார்.
    அருண் குமார் இயக்கத்தில் விஜய் சேதுபதி, அஞ்சலி நடிப்பில் உருவாகி இருக்கும் ‘சிந்துபாத்’ திரைப்படத்தின் முன்னோட்டம்.
    கே ப்ரொடக்ஷன்ஸ் ராஜராஜன் மற்றும் வான்சன் மூவீஸ் ஷான் சுதர்ஷன் தயாரிப்பில் விஜய் சேதுபதி நடிக்கும் ஆக்ஷன் திரில்லர் படம் ‘சிந்துபாத்’. 

    ‘பண்ணையாரும் பத்மினியும், சேதுபதி’ ஆகிய வெற்றிப் படங்களை தொடர்ந்து விஜய் சேதுபதியும், இயக்குனர் எஸ்.யூ.அருண் குமாரும், இணைந்து பணியாற்றும் மூன்றாவது அதிரடி திரைப்படம் ‘சிந்துபாத்’.

    முதன் முறையாக இப்படத்தில் விஜய் சேதுபதியின் மகன் சூர்யா தனது தந்தையுடன் ஒரு முக்கிய வேடத்தில் நடிக்க, அது ரசிகர்களிடையே ஒரு பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கிறது. தந்தையும் மகனுமாக நடிக்கவில்லை என்றாலும், இருவரின்  கதாபாத்திரமும் அவர்களிடையே நிலவும் ஒரு உன்னதமான தனித்துவ உறவுநிலையை பிரதிபலிக்கிறது.

    விஜய் சேதுபதி இப்படத்தில் சற்றே காதுகேளாத சிறுசிறு திருட்டுகளில் ஈடுபடுபவராக, ஒரு முற்றிலும் வித்தியாசமான வேடத்தில் நடித்திருக்கிறார். ஒரு பெண்ணை மையப்படுத்தியே இப்படத்தின் கதை சுழலுதால், அஞ்சலியின் கதாபாத்திரம் முக்கியத்துவம் பெறுகிறது.

    எடிட்டிர் - ரூபன், இசை - யுவன் ஷங்கர் ராஜா, ஒளிப்பதிவாளர் - விஜய் கார்த்திக் கண்ணன் 
    தர்ஷன், கீர்த்தி பாண்டியன், தீனா ஆகியோர் நடிப்பில் ஹரிஷ் ராம் இயக்கத்தில் உருவாகி இருக்கும் ‘தும்பா’ படத்தின் முன்னோட்டம்.
    ரீகல் ரீல்ஸ் (OPC) பிரைவேட் லிமிடெட் சார்பில் ரோல் டைம் ஸ்டுடியோஸ் LLP உடன் இணைந்து சுரேகா நியாபதி தயாரித்திருக்கும் படம் ‘தும்பா’. KJR ஸ்டுடியோஸ் கோட்டபாடி ஜே ராஜேஷ் உலகளாவிய வெளியீட்டு உரிமைகளை வாங்கியிருக்கிறார்.

    தர்ஷன், கீர்த்தி பாண்டியன், தீனா ஆகியோர் முன்னணி கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். ஏற்கனவே குழந்தைகளின் செல்லமாக மாறி விட்ட டைக்ரஸ் தும்பா இந்த படத்தில் முக்கிய கதாபாத்திரமாக வருகிறது. நரேஷ் இளன் (ஒளிப்பதிவு), கலைவாணன் (படத்தொகுப்பு), ஆக்‌ஷன் 100 (சண்டைப்பயிற்சி), ராம் ராகவ், ஏ ஆர் பிரபாகரன் (வசனம்), வாசுகி பாஸ்கர், பல்லவி சிங் (ஆடை வடிவமைப்பு) ஆகியோர் தொழில்நுட்ப கலைஞர்களாக பணிபுரிந்திருக்கிறார்கள்.



    ஹரிஷ்ராம் இயக்கியுள்ள இப்படம் ஜூன் 21ம் தேதி வெளியாக உள்ளது.
    ஜேசிஎஸ் மூவீஸ் என்ற பட நிறுவனம் தயாரிப்பில், விஜூ, பல்லவி டோரா நடிப்பில் ஜெகதீசன் இயக்கத்தில் உருவாகி இருக்கும் மோசடி படத்தின் முன்னோட்டம்.
    ஜேசிஎஸ் மூவீஸ் என்ற பட நிறுவனம் தயாரித்திருக்கும் படம் மோசடி. இந்த படத்தில் விஜூ நாயகனாக நடித்திருக்கிறார். நாயகியாக பல்லவி டோரா நடித்துள்ளார். மற்றும் அஜெய்குமார், விஜயன், வெங்கடாச்சலம், நீலு சுகுமாரன், சரவணன், மோகன் ஆகியோர் நடித்துள்ளனர்.

    ஒளிப்பதிவு - ஆர்.மணிகண்டன், இசை - ஷாஜகான், பாடல்கள் – மணிஅமுதவன், கே.ஜெகதீசன், எடிட்டிங் - எஸ்.எம்.வி.சுப்பு, கோபி ரா நாத், நடனம் - விமல், பாலா, தயாரிப்பு - ஜேசிஎஸ் மூவீஸ், கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்குகிறார் - கே.ஜெகதீசன்.

    இது முழுக்க முழுக்க உண்மை சம்பவத்தை அடிப்படையாக கொண்டு உருவாக்கப்பட்ட படம்.



    கடந்த 2016 ம் ஆண்டு நவம்பர் 8ம் தேதி இரவு 8 மணியளவில் 500, 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்ற அறிவிப்பு வெளியானது. அதை தொடர்ந்து பெரும் புள்ளிகள் அவர்களின் அதிகாரத்தை பயன்படுத்தி 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுக்களை எப்படி இரண்டாயிரம் ரூபாய் நோட்டுகளாக மாற்றினார்கள், அதனால் மக்கள் எப்படியெல்லாம் பாதிக்கப்பட்டார்கள், இந்த அறிவிப்பை பயன்படுத்தி எப்படி குறுக்கு வழியில் மோசடி செய்தார்கள், இந்த அறிவிப்பு சரியா? தவறா? என்பதை கிரைம் மற்றும் திரில்லருடன் கமர்ஷியல் கலந்து உருவாக்கி உள்ளேன் என்கிறார் இயக்குனர் கே.ஜெகதீசன். 
    சிவகார்த்திகேயன் தயாரிப்பில், கார்த்திக் வேணுகோபாலன் இயக்கத்தில் ரியோ நடிப்பில் உருவாகி இருக்கும் ‘நெஞ்சமுண்டு நேர்மையுண்டு ஓடு ராஜா’ படத்தின் முன்னோட்டம்.
    'நெஞ்சமுண்டு நேர்மையுண்டு ஓடு ராஜா' படக்குழுவில் உள்ள அத்தனை பேருமே "நம்ம வீட்டு பசங்க" என்ற அடைமொழிக்கு ஏற்றவர்களாக கருதப்படுகிறார்கள். அவர்கள் சின்னத்திரை மற்றும் யூடியூப் என இரண்டிலும் தங்களது பகுத்தறிவுடன் கூடிய நகைச்சுவையால் பிரபலமானவர்கள். உண்மையில், இது தான் படத்திற்கு மிகப்பெரிய எனர்ஜியை மக்களிடையே உருவாக்குகிறது. சிவகார்த்திகேயன் புரொடக்ஷன்ஸ் தயாரித்துள்ள இந்த படம் வரும் ஜூன் 14ஆம் தேதி உலகமெங்கும் வெளியாகிறது. 

    இந்த படத்தின் மூலம் அறிமுகமாகும் இயக்குனர் கார்த்திக் வேணுகோபாலன் இது குறித்து கூறும்போது, "நெஞ்சமுண்டு நேர்மையுண்டு ஓடு ராஜா காமெடி, எமோஷன் மற்றும் ஜாலியான தருணங்கள் கலந்த ஒரு கலவை. ஒவ்வொரு நாளும் இந்த படத்தை விரும்பி, ரசித்து உருவாக்கியிருந்தோம், மொத்த குழுவுக்கும் அதே அனுபவம் தான் இருந்தது. இந்த திரைப்படம் ஒரு நல்ல கருத்தை தாங்கிய ஒரு நையாண்டி படம். சிவகார்த்திகேயன் அண்ணாவிடம் இந்த ஸ்கிரிப்ட்டை விவரிக்கும்போது, அவருக்கு கதை பிடிக்குமா? படத்தை தயாரிப்பாரா? என நான் சற்று சந்தேகத்திற்குள்ளானேன். ஆனால் அவர் கதையை மிகவும் ரசித்து கேட்டது, படத்தை மிகச்சிறப்பாக தர வேண்டும் என்ற நம்பிக்கையும் பொறுப்பையும் எனக்கு கொடுத்தது. படத்தின் இறுதி வடிவத்தை பார்த்த பிறகு அவர் சொன்ன நேர்மறையான கருத்துகள் எனக்கு மன நிம்மதியை அளித்திருக்கிறது" என்றார்.



    மேலும் நடிகர்களை பற்றி அவர் கூறும்போது, ரியோ மிகுந்த அர்ப்பணிப்பு உடைய ஒரு நடிகர். தொடர்ந்து அவரது நடிப்பை மெறுகேற்றி வருகிறார். ஆர்.ஜே.விக்னேஷ்காந்த் அனைத்து தரப்பு ரசிகர்களையும் கவர்ந்து படத்துக்கு கூடுதல் ஈர்ப்பாக இருக்கிறார். படம் முழுக்க தோன்றும் ஒரு கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். மொழி தடைகளையும் தாண்டி ஷிரின் காஞ்ச்வாலா நடிப்பில் சிறந்த முயற்சிகளை மேற்கொண்டார். நாஞ்சில் சம்பத் சார் அவரின் ஆளுமையால் நிச்சயமாக அனைத்து படங்களிலும் ஒரு தவிர்க்க முடியாத சக்தியாக இருப்பார். இந்த படம் ஒரு ஜாலியான பயணம் என்பதையும் தாண்டி உணர்ச்சி பூர்வமானது. ஏனெனில் இயக்குனர் ஆகும் எனது நீண்டகால கனவு இந்த படத்தில் தான் நனவாகி இருக்கிறது" என்றார்.

    சிவகார்த்திகேயன் புரொடக்ஷன்ஸ் சார்பில் சிவகார்த்திகேயன் தயாரித்துள்ள இந்த படத்துக்கு ஷபீர் இசையமைத்துள்ளார். யு.கே.செந்தில்குமார் ஒளிப்பதிவு செய்திருக்கிறார்.
    சித்தார்த் மற்றும் கேத்ரின் தெரசா ஆகியோர் நடிக்க, சாய் சேகர் இயக்கத்தில் உருவாகி வரும் ‘அருவம்’ படத்தின் முன்னோட்டம்.
    டிரைடெண்ட் ஆர்ட்ஸ் தயாரிப்பாளர் ஆர். ரவீந்திரனிடம் இருந்து ஏதாவது ஒரு விஷயம் வருகிறது என்றால் அது மிகவும் தரமானதாக இருக்கும் என்பது உறுதி. குறிப்பாக, மிக திறமையானவர்கள் இணைந்து பணிபுரியும் "அருவம்" திரைப்படம் தமிழ் சினிமாவின் முக்கியமான திரைப்படம். சித்தார்த் மற்றும் கேத்ரின் தெரசா ஆகியோர் நடிக்க, சாய் சேகர் இயக்கியிருக்கும் இந்த படத்தின் பர்ஸ்ட்லுக் புத்தாண்டுக்கு நமக்கு ஒரு விருந்தாக வெளியானது. 

    தற்போது இப்படத்தின் டீசர் வெளியாகி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இப்படத்தில் சித்தார்த், கேத்ரின் தெரசா முன்னணி கதாபாத்திரங்களில் நடிக்க கபிர் துகன் சிங், மதுசூதன ராவ், ஸ்டண்ட் சில்வா மற்றும் போஸ்டர் நந்தகுமார் ஆகியோர் வில்லன்களாக நடித்துள்ளனர். சதீஷ், ஆடுகளம் நரேன், குமரவேல், மயில்சாமி இன்னும் பல நடிகர்கள் நடித்துள்ளனர்.



    இத்திரைப்படத்திற்கு எஸ்.எஸ். தமன் இசையமைக்க, பிரபல ஒளிப்பதிவாளர் என்.கே. ஏகாம்பரம் ஒளிப்பதிவு செய்கிறார். தேசிய விருது வென்ற பிரவீன் கே.எல். எடிட்டிங் செய்ய, ஜி துரைராஜ் கலை இயக்குனராக பணிபுரிகிறார். ஸ்டண்ட் சில்வா வில்லனாக நடிப்பதோடு, படத்தின் சண்டைப்பயிற்சியாளராகவும் பணியாற்றியிருக்கிறார்.
    ராம் பிரகாஷ் ராயப்பா இயக்கத்தில் சுசீந்திரன், மிஷ்கின், விக்ராந்த், அதுல்யா ரவி நடிப்பில் உருவாகி இருக்கும் ‘சுட்டுப்பிடிக்க உத்தரவு’ படத்தின் முன்னோட்டம்.
    'சுட்டுப்பிடிக்க உத்தரவு' அதன் தலைப்பு மற்றும் பர்ஸ்ட் லுக் எதிர்பாராத விதத்தில் வெளியாகி, மிகப்பெரிய அளவில் எதிர்பார்ப்புகளை தூண்டி விட்டிருக்கிறது. குறிப்பாக, இயக்குனர்கள் மிஷ்கின், சுசீந்திரன் ஆகியோருடன் விக்ராந்த் மற்றும் அதுல்யா ரவி ஆகியோரும் இணைந்து நடிப்பது படத்துக்கு ஒரு பெரிய ஈர்ப்பை கொடுத்துள்ளது. 

    படத்தின் காட்சி விளம்பரங்கள் இன்னும் பெரிய அளவில் சுவாரஸ்யமாக அமைந்து, படத்தை மேலும் சிறப்பாக கொண்டு சென்றது. அனைத்து பணிகளும் முடிவடைந்து ரிலீஸை நெருங்கிக் கொண்டிருக்கும் இந்த படம் தணிக்கை சான்றிதழையும் பெற்று விட்டது. சமீபத்தில் இந்த திரைப்படத்தை பார்த்த தணிக்கை குழு உறுப்பினர்கள் படத்துக்கு U/A சான்றிதழை அளித்திருக்கிறார்கள்.



    சுட்டுப்பிடிக்க உத்தரவு ஒரு தீவிர ஆக்ஷன் த்ரில்லர் படம். தினேஷ் காசி சண்டைக் காட்சிகளை வடிவமைத்திருக்கிறார். இந்த படம் ஒரு மிகச்சிறந்த ஆக்‌ஷன் படமாக இருக்கும் என உறுதியளிக்கலாம்.

    'தமிழுக்கு எண் ஒன்றை அழுத்தவும்' படத்தின் மூலம் அனைவரின் கவனத்தையும் ஈர்த்த ராம் பிரகாஷ் ராயப்பா இந்த படத்தை இயக்குகிறார். கல்பதரு பிக்சர்ஸ் சார்பில் P.K.ராம் மோகன் இந்த படத்தை தயாரிக்கிறார். சுஜீத் சாரங் (ஒளிப்பதிவு), ஜாக்ஸ் பிஜாய் (இசை) மற்றும் ஜி.ராமராவ் (படத்தொகுப்பு) ஆகியோர் டிரைலரிலேயே தங்கள் முத்திரையை பதித்து விட்டனர். இப்படம் விரைவில் வெளியாக உள்ளது. 
    ×