என் மலர்
நீங்கள் தேடியது "sivaranjaniyum innum sila pengalum"
- 68- வது தேசிய திரைப்பட விருதுகள் அறிவிக்கப்பட்டன.
- 2020-ம் ஆண்டு வெளியான திரைப்படங்களுக்கு விருதுகளை அறிவித்தது மத்திய அரசு.
கடந்த இரண்டு ஆண்டுகளாக கொரோனா தாக்கம் இருந்ததால் தேசிய விருது அறிவிப்புகள் தள்ளிப்போனது. இந்நிலையில், 2020-ம் ஆண்டு வெளியான திரைப்படங்களுக்கான 68-வது தேசிய திரைப்பட விருதுகள் அறிவிக்கப்பட்டன.
இயக்குனர் வசந்த் இயக்கத்தில் உருவான ஆந்தாலஜி படமான 'சிவரஞ்சனியும் இன்னும் சில பெண்களும்' படத்திற்கு மூன்று விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளது.

சிவரஞ்சனியும் இன்னும் சில பெண்களும்
இதில், சிறந்த உறுதுணை நடிகர் விருது லக்ஷ்மி பிரியா சந்திரமௌலிக்கும் பெஸ்ட் எடிட்டிங் விருது எடிட்டர் ஸ்ரீகர் பிரசாத்துக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. அதுமட்டுமல்லாமல் இப்படத்திற்கு சிறந்த தமிழ் படத்துக்கான விருதும் அறிவிக்கப்பட்டுள்ளது.






