search icon
என் மலர்tooltip icon

    சினிமா

    சாமி ஸ்கொயர்
    X

    சாமி ஸ்கொயர்

    ஹரி இயக்கத்தில் விக்ரம் - கீர்த்தி சுரேஷ் நடிப்பில் உருவாகி இருக்கும் `சாமி ஸ்கொயர்' படத்தின் முன்னோட்டம். #SaamySquare #Vikram #KeerthySuresh
    தமீன்ஸ் பிலிம்ஸ் சார்பில் சிபு தமீன்ஸ் தயாரிப்பில் உருவாகி இருக்கும் படம் `சாமி ஸ்கொயர்'.

    விக்ரம் நாயகனாக நடித்துள்ள இந்த படத்தில் அவருக்கு ஜோடியாக கீர்த்தி சுரேஷ், ஐஸ்வர்யா ராஜேஷ் நடித்துள்ளனர். பிரபு, ஜான் விஜய், ஓ.கே.சுந்தர், சூரி, சஞ்சீவ், இமான் அண்ணாச்சி, உமா ரியாஸ் கான் உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

    ஒளிப்பதிவு - ப்ரியன், வெங்கடேஷ் அங்குராஜ், இசை - தேவி ஸ்ரீ பிரகாஷ், எடிட்டிங் - வி.டி.விஜயன், டி.எஸ்.ஜெய், பாடலாசிரியர் - விவேகா, கலை - பி.சண்முகம், பி.வி.பாலாஜி, சண்டைப்பயிற்சி - கனல் கண்ணன், ஸ்டன்ட் சில்வா, ஆடை வடிவமைப்பு - நீராஜா கோனா, தயாரிப்பு - சிபு தமீன்ஸ், ஸ்ரீனிவாச சித்தூரி, எழுத்து, இயக்கம் - ஹரி.



    படத்தின் இசை வெளியீட்டு விழாவில் ஹரி பேசியதாவது,

    தொடர்ந்து எனது படத்தை தயாரித்தவர் இயக்குநர் பாலச்சந்தர். இந்த தருணத்தில் அவருக்கு நன்றி சொல்ல கடமைப்பட்டிருக்கிறேன். சிபுவும் சிறந்த தயாரிப்பாளர். படத்திற்கான வெற்றி, தோல்வியை வெளிப்படையாக கூறுவார். இந்த படத்திற்காக அதிகமாக செலவு செய்திருக்கிறார். 5 மாநிலங்களுக்கு சென்று, பல முக்கிய இடங்களில் படத்தை உருவாக்கி இருக்கிறோம். 

    சாமி படத்தை 2003-ல் உருவாக்கினோம். அப்போவே சாமியின் வேட்டை தொடரும் என்று போட்டிருந்தேன். அப்போது ஒரு ஒன்லைன் இருந்தது. அதை அடுத்தடுத்து எடுத்த போலீஸ் படங்களில் அதை எடுத்துவிட்டேன். ஒரு நல்ல கதை இருந்தால் மட்டும் தான் பண்ண முடியும் என்று சொல்வேன். எனவே 14 வருடங்கள் காத்திருந்தோம். அப்போது தான் கதை அமைந்தது. நிறைய பேர், புதுசு புதுசாக கதை சொல்கிறார்கள், ரொம்ப யோசிக்க வேண்டாம், கதையை நானே சொல்கிறேன். பெருமாள் பிச்சை குடும்பத்துக்கும், ஆறுச்சாமி குடும்பத்துக்கும் நடக்கும் போராட்டம் தான் சாமி ஸ்கொயர் படத்தின் கதை. என்றார். 

    `சாமி ஸ்கொயர்' உலகமெங்கும் நாளை (செப்டம்பர் 21-ஆம் தேதி) ரிலீசாக இருக்கிறது. #SaamySquare #Vikram #KeerthySuresh

    சாமி ஸ்கொயர் படத்தின் டிரைலர்:

    Next Story
    ×