என் மலர்
சினிமா செய்திகள்
ஜேம்ஸ் பாண்ட் பட வரிசையில் 25-வது படமாக உருவாகி வரும் 'நோ டைம் டூ டை’ படத்தின் ரிலீஸ் தேதி மீண்டும் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
பிரிட்டனின் ரகசிய உளவாளியான ஜேம்ஸ் பாண்டின் ரகசிய குறிப்பெண் 007. ஜேம்ஸ் பாண்ட் கதாபாத்திரத்தை அடிப்படையாகக் கொண்டு பல ஆங்கிலத் திரைப்படங்கள் வெளிவந்து வெற்றி பெற்றுள்ளன. இந்த படங்களுக்கு உலகம் முழுவதும் ரசிகர்கள் உள்ளனர். வசூலிலும் பல்வேறு சாதனைகள் படைக்கிறது.
ஜேம்ஸ் பாண்ட் பட வரிசையில் இதுவரை மொத்தம் 24 படங்கள் வெளியாகி உள்ளன. தற்போது 25-வது படமாக 'நோ டைம் டூ டை’ தயாராகி வருகிறது. இதில் ஜேம்ஸ் பாண்ட் கதாபாத்திரத்தில் டேனியல் கிரேக் நடித்துள்ளார். ராய்ல்ப் பியென்னஸ், நவோமி ஹாரிஸ், ராமி மலேக், ஜெப்ரி ரைட் உள்பட மேலும் பலர் நடிக்கும் இந்த படத்தை கேரி ஜோஜி புகுனகா இயக்கியுள்ளார்.

இந்தப் படம் வரும் ஏப்ரல் 3-ம் தேதி இங்கிலாந்திலும், ஏப்ரல் 8-ம் தேதி அமெரிக்கா உள்பட உலகின் மற்ற நாடுகளில் வெளியாகும் என தெரிவிக்கப்பட்டிருந்த நிலையில், கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக இப்படத்தின் ரிலீஸ் தேதி மாற்றம் செய்யப்பட்டது. அதன்படி இப்படம் வருகிற நவம்பர் மாதம் 12-ந் தேதி இங்கிலாந்திலும், நவம்பர் 25-ந் தேதி அமெரிக்காவிலும் ரிலீசாகும் என தெரிவிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில், இப்படத்தின் ரிலீஸ் தேதி மீண்டும் மற்றம் செய்யப்பட்டுள்ளது. அதன்படி நவம்பர் 25-ந் தேதிக்கு பதிலாக நவம்பர் 20-ந் தேதி அமெரிக்க உள்பட உலகின் மற்ற நாடுகளில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இங்கிலாந்தில் திட்டமிட்டபடி நவம்பர் 12-ந் தேதி வெளியாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
The return of old friends in NO TIME TO DIE.
— James Bond (@007) June 13, 2020
In cinemas 12th November UK, 20th November US. pic.twitter.com/GkXugGEAba
வாலு பட இயக்குனர் விஜய் சந்தர் இயக்கும் புதிய படத்தில் சிம்பு ஹீரோவாக நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
விஜய் சந்தர் இயக்கத்தில் கடந்த 2015-ம் ஆண்டு வெளியான படம் வாலு. சிம்பு, ஹன்சிகா, சந்தானம், விடிவி கணேஷ் ஆகியோர் நடித்திருந்த இப்படத்தை நிக் ஆர்ட்ஸ் நிறுவனம் தயாரித்திருந்தது. இதன் பின்னர் விஜய் சந்தர் இயக்கத்தில் ஸ்கெட்ச், சங்கத் தமிழன் போன்ற படங்கள் வெளியாகின. தற்போது அவர் மீண்டும் சிம்புவை வைத்து படம் இயக்க உள்ளதாக கூறப்படுகிறது. இதற்கான முதற்கட்ட பேச்சுவார்த்தை நடைபெற்றிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளன.

கொரோனா பிரச்னை முடிந்த பின்னர் அடுத்தகட்ட பேச்சுவார்த்தை நடத்தப்பட உள்ளது. பின்னர் இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாக்கக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது. முன்னதாக சிம்பு - விஜய் சந்தர் கூட்டணி டெம்பர் எனும் தெலுங்கு படத்தின் தமிழ் ரீமேக்கில் இணைவதாக இருந்து, சில காரணங்களால் அது கைவிடப்பட்டது. சிம்பு கைவசம் வெங்கட் பிரபுவின் மாநாடு, மிஷ்கின் இயக்கும் பெயரிடப்படாத படம், மஹா போன்ற படங்கள் உள்ளன.
அறிமுக இயக்குனர் எஸ்.ஜி. சார்லஸ் இயக்கத்தில் வைபவ், வாணி போஜன் நடிப்பில் உருவாகி இருக்கும் லாக்கப் படத்தின் முன்னோட்டம்.
ஷ்வேத் புரடெக்ஷன் ஹவுஸ் சார்பாக நித்தின் சத்யா தயாரிப்பில் வைபவ் நாயகனாக நடித்துள்ள படம் லாக்கப். அவருக்கு ஜோடியாக வாணி போஜன் நடித்துள்ளார். பிரபல இயக்குனரும் நடிகருமான வெங்கட்பிரபு முற்றிலும் மாறுபட்ட முக்கிய கதாபாத்திரத்தில் இப்படத்தில் நடித்துள்ளார். இயக்குனர் மோகன்ராஜாவிடம் பணியாற்றிய எஸ்.ஜி. சார்லஸ் இப்படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமாகிறார்.

பல படங்களில் நகைச்சுவை கலந்த படங்களில் இணைந்து வந்த வைபவ் - வெங்கட்பிரபு கூட்டணி முதல் முறையாக முற்றிலும் மாறுபட்ட சீரியஸான கதாபாத்திரத்தில் "லாக்கப்" திரைப்படத்தில் நடித்துள்ளனர். மேலும் இப்படத்தில் ஈஸ்வரி ராவ், பூர்ணா ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க உடன் பல நடிகர்கள் நடித்துள்ளனர். இசையமைப்பாளர் ஆரோல் கரோலி இசையமைக்க, சந்தானம் சேகர் ஒளிப்பதிவை மேற்கொள்கிறார்.
பாலிவுட் நடிகரான சுஷாந்த் சிங் ராஜ்புட் மறைவிற்கு டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்சா சமூக வலைதளத்தில் இரங்கல் தெரிவித்துள்ளார்.
பாலிவுட் நடிகரான சுஷாந்த் சிங் ராஜ்புட், மும்பையில் உள்ள தனது வீட்டில் நேற்று தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். அவரின் மறைவு திரையுலகினரிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. சுஷாந்த் சிங் மன அழுத்தத்தால் தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது. 34 வயதாகும் சுஷாந்தின் திடீர் மறைவுக்கு பிரபலங்கள் பலரும் டுவிட்டர் உள்ளிட்ட சமூக வலைத்தளங்கள் வாயிலாக இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
அந்த வகையில், டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்சா, சுஷாந்த் குறித்து டுவிட்டரில் பதிவிட்டுள்ளதாவது: "சுஷாந்த் மனம் உடைந்துவிட்டது. ஒரு நாள் நீயும் நானும் சேர்ந்து டென்னிஸ் விளையாடலாம் என கூறினாய். எப்போதும் சிரிப்புடன் இருக்கும் நபர் நீ. செல்லும் இடமெல்லாம் அனைவருக்கும் சந்தோசத்தை பரப்பினாய். ஆனால் நீ இவ்வளவு வலியுடன் இருந்தாய் என்பது எங்களுக்கு தெரியாமல் போய்விட்டது. இந்த உலகம் உன்னை நிச்சயம் மிஸ் பண்ணும் என் நண்பரே." என உருக்கமாக பதிவிட்டுள்ளார்.
Sushant 💔 💔 you said we would play tennis together one day .. you were so full of life and laughs .. spreading smiles everywhere you went.. we didn’t even know you were hurting this bad 😞 the world will miss you .. shaking while I write this .. RIP my friend
— Sania Mirza (@MirzaSania) June 14, 2020
படுக்கைக்கு சம்மதிப்பதால் மும்பை நடிகைகளுக்கு பட வாய்ப்புகள் அதிகம் வருவதாக தெலுங்கு நடிகை தேஜஸ்வி பகீர் குற்றச்சாட்டு தெரிவித்துள்ளார்.
தமிழில் ‘நட்பதிகாரம் 79‘ எனும் படத்தில் நடித்தவர் தேஜஸ்வி மடிவாடா. ஆந்திராவை சேர்ந்த இவர் தெலுங்கில் மனம், ஹார்ட் அட்டாக், ஸ்ரீமந்துடு, சுப்ரமணியம் பார் சேல் உள்பட பல படங்களில் நடித்து இருக்கிறார். தெலுங்கு பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு மேலும் பிரபலமானார்.
இவர் அளித்துள்ள பேட்டியில் கூறியதாவது: “நடிக்க வாய்ப்பு தருவதாக கூறி சில தயாரிப்பாளர்களும், இயக்குனர்களும் பெண்களை தவறாக பயன்படுத்தும் சம்பவங்கள் சினிமாவில் நடக்கின்றன. நானும் அந்த பிரச்சினையை எதிர்கொண்டேன். இதனால் சினிமாவை விட்டே விலக நினைத்தேன். பல நடிகைகள் இதனை எதிர்கொள்கின்றனர்.

சினிமா துறையில் 90 சதவீதம் இந்த பிரச்சினை உள்ளது. மும்பை நடிகைகள் பட வாய்ப்புகளை பெறுவதற்காக மனரீதியாக இதற்கு உடன்பட தயாராகி விடுகிறார்கள். இதனால் தான் அவர்களுக்கு பட வாய்ப்புகள் அதிகமாக கிடைக்கின்றன. தென்னிந்திய நடிகைகள் பிகினி உடை, முத்தகாட்சி போன்றவற்றில் நடிக்கவே கூச்சப்படுகின்றனர். சினிமா பட வாய்ப்புக்காக படுக்கைக்கு அழைப்பது தென்னிந்திய நடிகைகளுக்கு தெரியும். ஆனால் அவர்கள் அதற்கு சம்மதிப்பது இல்லை.
நான் ஒருவரை காதலித்தேன். திருமணத்துக்கும் தயாரானோம். அதன்பிறகு சினிமாவில் படுக்கைக்கு அழைக்கும் வழக்கம் இருப்பதை அறிந்து காதலை முறித்து என்னை திருமணம் செய்து கொள்ள அந்த நபர் மறுத்துவிட்டார். படுக்கைக்கு அழைப்பதை சினிமாவில் இருந்து முற்றிலும் ஒழிக்க வேண்டும்.” இவ்வாறு அவர் கூறியுள்ளார். தேஜஸ்வியின் குற்றச்சாட்டு திரையுலகில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
நடிகர் சுஷாந்த் சிங்கிற்கு வாழ்வில் 50 ஆசைகள் இருந்துள்ளது, ஆனால் அவை முழுமையாக நிறைவேறுவதற்குள் அவர் தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
பவித்ரா ரிஸ்தா என்ற சின்னத்திரை தொடர் மூலம் பிரபலமானவர் சுஷாந்த் சிங் ராஜ்புட், கடந்த 2013ம் ஆண்டு வெளிவந்த கை போ சே படத்தின் மூலம் பாலிவுட்டில் அறிமுகமானார். 2016-ம் ஆண்டில் இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் மகேந்திர சிங் தோனியின் வாழ்க்கை வரலாற்றை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்பட்ட திரைப்படத்தில் அவரது அபார நடிப்பு அனைவரையும் அசரவைத்தது.

தோனியின் ஸ்டைல், சிரிப்பு, கிரிக்கெட் ஆட்டமுறை என்று அவரின் அனைத்தையும் கண்முன்னே கொண்டுவந்திருப்பார். அப்படத்தில், இளைஞர்கள் வாழ்வில், தங்களது ஆசையையும், லட்சியத்தையும் அடைய கடுமையாக போராட வேண்டும் என இளைஞர்களுக்கு உணர்த்திய நடிகர் சுஷாந்த் சிங்கிற்கும் வாழ்வில் 50 ஆசைகள் இருந்துள்ளது. ஆனால் அவை முழுமையாக நிறைவேறுவதற்குள் சுஷாந்த் தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

தற்கொலை செய்துகொண்ட நடிகர் சுஷாந்த், கடந்த 2019-ம் ஆண்டு தனது வாழ்வின் 50 கனவுகளை டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்து அதனை நிறைவேற்றி கொள்ளப்போவதாக தெரிவித்திருந்தார். அதில், விமானத்தை இயக்க வேண்டும், விண்வெளி குறித்து அறிந்துகொள்ள 100 சிறு குழந்தைகளை நாசாவுக்கு அனுப்ப வேண்டும், கைலாய மலையில் தியானம் செய்ய வேண்டும், வெடிக்கும் எரிமலை அருகே படம்பிடிக்க வேண்டும், ஆயிரம் மரங்கள் நட வேண்டும், பண்ணை தொழில் கற்க வேண்டும், லாம்போர்கினி கார் வாங்க வேண்டும், விவேகானந்தர் குறித்து ஆவணப்படம் எடுக்க வேண்டும், இலவச புத்தகங்கள் கிடைக்க சேவை செய்ய வேண்டும், உள்ளிட்ட 50 கனவுகளை நடிகர் சுஷாந்த் வெளியிட்டு இருந்தார்.

தான் குறிப்பிட்ட 50ல் 12 கனவுகளை கடந்தாண்டே நிறைவேற்றிய நடிகர் சுஷாந்த் அது குறித்த வீடியோக்கள் மற்றும் புகைப்படங்களை தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டு மகிழ்ந்துள்ளார். ஆனால் அதன் பின்னர் டுவிட்டரில் பதிவுகள் ஏதும் செய்யவில்லை. கடைசியாக 2019-ம் ஆண்டு டிசம்பர் 27ம-ந் தேதியன்று புகைப்படம் ஒன்றை பதிவிட்டுள்ளார். இந்நிலையில் அவரின் மீதி கனவுகளை நிறைவேற்றினாரா என்பதும், அவர் தற்கொலை செய்துகொண்டது ஏன் என்பதும் ரசிகர்களை குழப்பத்தில் ஆழ்த்தியுள்ளது.
தோனியின் வாழ்க்கை வரலாற்று படத்தில் ஹீரோவாக நடித்திருந்த பாலிவுட் நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புட் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் தோனியின் வாழ்க்கை வரலாற்று படமான "M.S. Dhoni: The Untold Story" படத்தில் நடித்திருந்த பாலிவுட் நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புட் தற்கொலை செய்துகொண்டுள்ளார். அவருக்கு வயது 34. மும்பை பாந்த்ரா பகுதியில் அமைந்துள்ள அவரது இல்லத்தில் சுஷாந்த் சிங் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
சுஷாந்த் சிங்கின் இந்த திடீர் மரணம் பாலிவுட் திரையுலகில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. தற்கொலைக்கான காரணம் இதுவரை தெரியவில்லை. இதுகுறித்து போலீசார் அப்பகுதியில் விசாரணை மேற்கொண்டுள்ளனர். கடந்த இரு தினங்களுக்கு முன்பு இவருடைய மேலாளர் தற்கொலை செய்துகொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
வேல்மதி இயக்கத்தில் ஸ்ரேயாரெட்டி முதன்மை கதாபாத்திரத்தில் நடித்துள்ள அண்டாவ காணோம் படத்தின் முன்னோட்டம்.
ஜேஎஸ்கே பிலிம் கார்பரேஷன் சார்பில் ஜே.சதீஷ்குமார் மற்றும் லியோ விஷன் ராஜ்குமார் இணைந்து தயாரித்திருக்கும் படம் ‘அண்டாவ காணோம்‘. ஸ்ரேயாரெட்டி முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் இந்த படத்தை அறிமுக இயக்குனர் வேல்மதி இயக்கியிருக்கிறார். அஸ்வமித்ரா இசை அமைத்திருக்கிறார். பி.வி.சங்கர் இப்படத்திற்கு ஒளிப்பதிவு செய்துள்ளார்.
படம் குறித்து நடிகை ஸ்ரேயா ரெட்டி கூறியதாவது: “இயக்குனர் கதை சொன்னபோது எனக்கு புரியவே இல்லை. ‘திமிரு’ அளவுக்கு இருக்குமா எனக் கேட்டேன். இயக்குனர் மிகவும் தன்னம்பிக்கையோடு ‘திமிரு’ பத்தி பேசாதீங்க, இது உங்களோட மிகச்சிறந்த படமாக இருக்கும்னு சொன்னார். நீங்க ஒண்ணும் தயங்க வேண்டாம், நேரா ஷூட்டிங்குக்கு வாங்கன்னார். மிகவும் பொறுமையாக பக்கத்தில் உட்கார்ந்து மதுரை வட்டார பழக்க வழக்கங்களை சொல்லி கொடுத்தார்” என்றார்.
நயன்தாராவின் புகைப்படம் பூஜை அறையில் இருப்பதுபோன்ற மீம் சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது.
நடிகை நயன்தாரா நடிப்பில் தற்போது உருவாகி இருக்கும் படம் ‘மூக்குத்தி அம்மன்’. இப்படத்திற்கு கதை, திரைக்கதை, வசனம் எழுதியுள்ள ஆர்.ஜே.பாலாஜி, இயக்குனர் என்.ஜே.சரவணனுடன் இணைந்து இயக்கி உள்ளார். நயன்தாரா இப்படத்தில் அம்மனாக நடித்துள்ளார். இப்படத்திற்காக அவர், 48 நாட்கள் விரதம் இருந்து நடித்தார். வேல்ஸ் பிலிம் இன்டர்நேஷனல் சார்பில் ஐசரி கணேஷ் இப்படத்தை தயாரித்துள்ளார்.
இப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டருக்கு நல்ல வரவேற்பு கிடைத்தது. இதுதவிர நயன்தாரா அம்மன் தோற்றத்தில் இருக்கும் புகைப்படங்கள் சமீபத்தில் வெளியாகி வைரலாகின.
இந்நிலையில், நயன்தாராவின் தீவிர ரசிகன் ஒருவன், அவர் அம்மன் தோற்றத்தில் இருக்கும் புகைப்படத்தை தனது வீட்டு பூஜை அறையில் வைத்து பூ மாலை போட்டு கும்பிட்டு வந்துள்ளார். இதுதொடர்பான மீம் சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது.
ஷங்கர் தயாரிப்பில் அறிவழகன் இயக்கி வெற்றி பெற்ற ஈரம் படத்தின், இரண்டாம் பாகம் உருவாக உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
தமிழில் 2ம் பாகம் படங்கள் அதிகம் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்றுள்ளன. எந்திரன், காஞ்சனா, திருட்டுப்பயலே, சாமி, பில்லா, வேலைஇல்லா பட்டதாரி, அரண்மனை, சண்டக்கோழி, விஸ்வரூபம், கோலி சோடா, மாரி, தமிழ் படம், கலகலப்பு உள்ளிட்ட பல படங்கள் 2ம் பாகமாக வந்துள்ளன. சிங்கம் 3 பாகங்கள் வந்துள்ளன.
இவற்றில் சில படங்கள் நல்ல வசூல் பார்த்தன. சில படங்கள் தோல்வி அடைந்தன. தற்போது அரண்மனை படத்தின் 3ம் பாகம் தயாராகிறது. விஜய் சேதுபதியின் சூதுகவ்வும் மற்றும் இன்று நேற்று நாளை ஆகிய படங்களின் இரண்டாம் பாகத்தை எடுக்கும் முயற்சிகளும் நடக்கின்றன.

இந்த நிலையில் ஈரம் பேய் படத்தின் இரண்டாம் பாகமும் தயாராக உள்ளது. ஈரம் படம் 2009-ல் திரைக்கு வந்தது. கொலையுண்ட ஒரு பெண்ணின் ஆவி தண்ணீர் வடிவத்தில் வந்து கொலையாளிகளை பழிதீர்ப்பதே கதை. இதில் ஆதி, நந்தா, சிந்து மேனன் ஆகியோர் நடித்து இருந்தனர். அறிவழகன் இயக்கி இருந்தார். ஷங்கர் தயாரித்து இருந்தார்.
இந்த படம் வெற்றிகரமாக ஓடி வசூல் சாதனை நிகழ்த்தியது. அறிவழகன் கூறும்போது, ஈரம் படத்தின் இரண்டாம் பாகத்தை எடுக்கும் திட்டம் உள்ளது. இதற்கான கதையை தயார் செய்துள்ளேன். ஷங்கர் தயாரிக்க தயாராகும்போது ஈரம் 2ம் பாகம் உருவாகும்“ என்றார்.
ஏ.ஆர்.ரகுமானுடன் கலந்துரையாடிய கமல், தான் ஒரே வாரத்தில் தேவர்மகன் படத்தின் ஸ்கிரிப்டை தயார் செய்ததாக கூறியுள்ளார்.
தேவர்மகன் முதல் பாகம் 1992–ல் திரைக்கு வந்து வெற்றிகரமாக ஓடியது. இதில் கமல்ஹாசனுடன் சிவாஜி கணேசன், நாசர், ரேவதி, கவுதமி நடித்து இருந்தனர். பரதன் இயக்கிய இப்படத்திற்கு கமல் திரைக்கதை எழுதி இருந்தார். இந்த படத்துக்கு தேசிய விருதும் கிடைத்தது. இந்தி, கன்னட மொழிகளிலும் ரீமேக் செய்யப்பட்டன.
தேவர்மகன் 2-ம் பாகத்தை தலைவன் இருக்கின்றான் என்ற பெயரில் படமாக்க உள்ளனர். இப்படத்திற்கு ஏ.ஆர்.ரகுமான் இசையமைக்க உள்ளார். மேலும் விஜய் சேதுபதி, வடிவேலு ஆகியோரும் இப்படத்தில் கமலுடன் நடிக்க உள்ளனர்.

இந்நிலையில், சமீபத்தில் ஏ.ஆர்.ரகுமானுடன் கலந்துரையாடிய கமல், தேவர்மகன் படம் குறித்த சுவாரஸ்யமான தகவலை வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியதாவது: தேவர் மகன் படத்தின் இயக்குனர் பரதன், ஒரே வாரத்தில் படத்தின் ஸ்கிரிப்டை தரவில்லை என்றால் தான் இந்த படத்திலிருந்து விலகிவிடுவதாக கூறியதால், அதை ஒரு சவாலாக எடுத்துக் கொண்டு 7 நாட்களில் தேவர் மகன் படத்தின் ஸ்கிரிப்டை எழுதி முடித்ததாக கமல் கூறினார். மேலும் இப்போது என்னிடம் பெட்டி பெட்டியாக பணத்தைக் கொடுத்தாலும் ஒரு வாரத்தில் ஸ்கிரிப்ட் எழுத சொன்னால் தன்னால் முடியாது என்றும் கமல் தெரிவித்துள்ளார்.
அரவிந்தசாமி, ஸ்ரேயா நடிப்பில் உருவாகி இருக்கும் நரகாசூரன் படத்தின் பெயரை இயக்குனர் கார்த்திக் நரேன் மாற்றியுள்ளார்.
துருவங்கள் 16 படத்தின் மூலம் பிரபலமானவர் கார்த்திக் நரேன். இவர் இயக்கத்தில் உருவாகி உள்ள படம் நரகாசூரன். இதில் அரவிந்தசாமி, ஸ்ரேயா ஜோடியாக நடித்துள்ளனர். இதன் படப்பிடிப்பு 2 வருடங்களுக்கு முன்பே முடிந்து விட்டது. ஆனாலும் படத்தின் தயாரிப்பாளர் கவுதம் மேனனுக்கு ஏற்பட்ட பண பிரச்சினையால் படம் திரைக்கு வரவில்லை.
இதனால் கவுதம் மேனனும், கார்த்திக் நரேனும் டுவிட்டரில் மோதிக் கொண்டனர். அதன்பிறகு பல தடவை படத்தின் வெளியீட்டு தேதியை அறிவித்தும் ரிலீசாகாமல் தள்ளி வைத்தனர்.

இந்நிலையில், இயக்குனர் கார்த்திக் நரேன், தமிழ்நாட்டின் ஊர்ப் பெயர்களின் ஆங்கில உச்சரிப்பை மாற்றியதை கிண்டலடித்து தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். கோயம்பத்தூர் என்பதற்கு (Coimbatore) என பயன்படுத்தப்பட்டு வந்த நிலையில், தற்போது (Koyampuththoor) என மாற்றி வெளியிடப்பட்ட அரசாணையை பார்த்து, "அட பாவிங்களா" என கலாய்த்துள்ளார்.
மேலும் தான் இயக்கியுள்ள நரகாசூரன் படத்திற்கு தற்போது ஆங்கிலத்தில் (Naragasooran) என பெயர் வைக்கப்பட்டிருக்கும் நிலையில், அதை (Narakasuran) என மாற்றி வைத்தால் ஒருவேளை அந்த படமும் ரிலீஸ் ஆகுமா என்று பதிவிட்டுள்ளார்.






