என் மலர்tooltip icon

    சினிமா செய்திகள்

    ஏ.ஆர்.ரகுமானுடன் கலந்துரையாடிய கமல், தான் ஒரே வாரத்தில் தேவர்மகன் படத்தின் ஸ்கிரிப்டை தயார் செய்ததாக கூறியுள்ளார்.
    தேவர்மகன் முதல் பாகம் 1992–ல் திரைக்கு வந்து வெற்றிகரமாக ஓடியது. இதில் கமல்ஹாசனுடன் சிவாஜி கணேசன், நாசர், ரேவதி, கவுதமி நடித்து இருந்தனர். பரதன் இயக்கிய இப்படத்திற்கு கமல் திரைக்கதை எழுதி இருந்தார். இந்த படத்துக்கு தேசிய விருதும் கிடைத்தது. இந்தி, கன்னட மொழிகளிலும் ரீமேக் செய்யப்பட்டன. 

    தேவர்மகன் 2-ம் பாகத்தை தலைவன் இருக்கின்றான் என்ற பெயரில் படமாக்க உள்ளனர். இப்படத்திற்கு ஏ.ஆர்.ரகுமான் இசையமைக்க உள்ளார். மேலும் விஜய் சேதுபதி, வடிவேலு ஆகியோரும் இப்படத்தில் கமலுடன் நடிக்க உள்ளனர்.

    கமல்ஹாசன், சிவாஜி

    இந்நிலையில், சமீபத்தில் ஏ.ஆர்.ரகுமானுடன் கலந்துரையாடிய கமல், தேவர்மகன் படம் குறித்த சுவாரஸ்யமான தகவலை வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியதாவது: தேவர் மகன் படத்தின் இயக்குனர் பரதன், ஒரே வாரத்தில் படத்தின் ஸ்கிரிப்டை தரவில்லை என்றால் தான் இந்த படத்திலிருந்து விலகிவிடுவதாக கூறியதால், அதை ஒரு சவாலாக எடுத்துக் கொண்டு 7 நாட்களில் தேவர் மகன் படத்தின் ஸ்கிரிப்டை எழுதி முடித்ததாக கமல் கூறினார். மேலும் இப்போது என்னிடம் பெட்டி பெட்டியாக பணத்தைக் கொடுத்தாலும் ஒரு வாரத்தில் ஸ்கிரிப்ட் எழுத சொன்னால் தன்னால் முடியாது என்றும் கமல் தெரிவித்துள்ளார்.
    அரவிந்தசாமி, ஸ்ரேயா நடிப்பில் உருவாகி இருக்கும் நரகாசூரன் படத்தின் பெயரை இயக்குனர் கார்த்திக் நரேன் மாற்றியுள்ளார்.
    துருவங்கள் 16 படத்தின் மூலம் பிரபலமானவர் கார்த்திக் நரேன். இவர் இயக்கத்தில் உருவாகி உள்ள படம் நரகாசூரன். இதில் அரவிந்தசாமி, ஸ்ரேயா ஜோடியாக நடித்துள்ளனர். இதன் படப்பிடிப்பு 2 வருடங்களுக்கு முன்பே முடிந்து விட்டது. ஆனாலும் படத்தின் தயாரிப்பாளர் கவுதம் மேனனுக்கு ஏற்பட்ட பண பிரச்சினையால் படம் திரைக்கு வரவில்லை.

    இதனால் கவுதம் மேனனும், கார்த்திக் நரேனும் டுவிட்டரில் மோதிக் கொண்டனர். அதன்பிறகு பல தடவை படத்தின் வெளியீட்டு தேதியை அறிவித்தும் ரிலீசாகாமல் தள்ளி வைத்தனர். 

    கார்த்திக் நரேனின் இன்ஸ்டாகிராம் பதிவு

    இந்நிலையில், இயக்குனர் கார்த்திக் நரேன், தமிழ்நாட்டின் ஊர்ப் பெயர்களின் ஆங்கில உச்சரிப்பை மாற்றியதை கிண்டலடித்து தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். கோயம்பத்தூர் என்பதற்கு (Coimbatore) என பயன்படுத்தப்பட்டு வந்த நிலையில், தற்போது (Koyampuththoor) என மாற்றி வெளியிடப்பட்ட அரசாணையை பார்த்து, "அட பாவிங்களா" என கலாய்த்துள்ளார். 

    மேலும் தான் இயக்கியுள்ள நரகாசூரன் படத்திற்கு தற்போது ஆங்கிலத்தில்  (Naragasooran) என பெயர் வைக்கப்பட்டிருக்கும் நிலையில், அதை (Narakasuran) என மாற்றி வைத்தால் ஒருவேளை அந்த படமும் ரிலீஸ் ஆகுமா என்று பதிவிட்டுள்ளார். 
    தமிழ், தெலுங்கு, மலையாளம் உள்ளிட்ட மொழிகளில் 50க்கும் மேற்பட்ட படங்களுக்கு ஒளிப்பதிவாளராக பணியாற்றிய கண்ணன் இன்று காலமானார்.
    பிரபல ஒளிப்பதிவாளர் கண்ணன் (69). இவர் தமிழ், தெலுங்கு, மலையாளம் உள்ளிட்ட மொழிகளில் 50க்கும் மேற்பட்ட படங்களுக்கு ஒளிப்பதிவாளராக பணியாற்றி உள்ளார். பாரதிராஜாவின் 40 படங்களுக்கு இவர் ஒளிப்பதிவாளராக இருந்திருக்கிறார். 

    சில தினங்களுக்கு முன்பு உடல்நிலை சரியில்லாமல் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட இவருக்கு இதய அறுவை சிகிச்சை செய்துள்ளனர். இருப்பினும் அவரது உடல்நிலையில் முன்னேற்றம் இல்லாததால் இன்று(ஜுன் 13) மதியம் அவரது உயிர் பிரிந்தது.

     கண்ணனின் உடல் ஆழ்வார்பேட்டையில் உள்ள அவருடைய இல்லத்தில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது. நாளை (ஜுன் 14) பெசன்ட் நகர் மயானத்தில் இறுதிச்சடங்கு நடக்கிறது. கண்ணனின் மறைவுக்கு திரைப்பிரபலங்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். 
    நடிகை ரம்யா கிருஷ்ணன் சென்ற காரில் நூற்றுக்கணக்கான மதுபாட்டில்கள் பறிமுதல் செய்திருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளது.
    கொரோனா அச்சுறுத்தலால் சென்னையைத் தவிர்த்து பிற பகுதிகளில் மதுபானக் கடைகள் திறக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. சிலர் சென்னையைத் தாண்டிச் சென்று மதுபாட்டில்கள் வாங்கி வருவதைத் தடுக்க சோதனைச் சாவடிகளில் வாகன சோதனையில் போலீசார் ஈடுபட்டுள்ளனர்.

     இந்நிலையில் கிழக்கு கடற்கரைச்சாலையில் முட்டுக்காட்டில் உள்ள சோதனைச் சாவடியில் வாகனசோதனை செய்துக் கொண்டிருந்த கானத்தூர் போலீசார், அங்கு வந்த காரை மறித்து, சோதனை செய்தனர்.

     அப்போது அந்த காரில் நடிகை ரம்யா கிருஷ்ணன், அவரது சகோதரி வினயா கிருஷ்ணன் ஆகியோர் இருந்துள்ளனர். 

    சோதனையில் அந்த காரில் 96 பீர் பாட்டில்கள், 8 மதுப்பாட்டில்கள் இருந்ததாக செய்திகள் வெளியாகியுள்ளது. இது தொடர்பாக அந்த கார் டிரைவரை கைது செய்து, வழக்குப் பதிவு செய்தனர். பின்னர் டிரைவர் சொந்த ஜாமீனில் விடுவிக்கப்பட்டார்.
    பிரபல தயாரிப்பாளர் தயாரித்த 3 படங்கள் நேரடியாக ஓடிடியில் ரிலீசாக இருப்பதாக அறிவித்திருக்கிறார்கள்.

    தமிழகத்தில் கொரோனா வைரஸின் அச்சுறுத்தல் காரணமாக திரையரங்குகள், வணிக வளாககங்கள் திறப்பதற்கு இன்னும் அனுமதியளிக்கவில்லை.


    இதனால் சில படங்கள் நேரடியாக ஓடிடி எனப்படும் டிஜிட்டல் பிளாட்ஃபார்மில் வெளியாகி வருகின்றன. சூர்யா தயாரிப்பில் ஜோதிகா முதன்மை வேடத்தில் நடித்திருந்த 'பொன்மகள் வந்தாள்' திரைப்படம் கடந்த மே 29 ஆம் தேதி நேரடியாக அமேசான் பிரைமில் வெளியானது.

    ஜேஎஸ்கே ட்விட்


    அதனைத் தொடர்ந்து கார்த்திக் சுப்புராஜ் தயாரிப்பில் கீர்த்தி சுரேஷ் நடித்துள்ள 'பெண்குயின்' திரைப்படம் வருகிற ஜூன் 19 ஆம் தேதி வெளியாகவிருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.


    இந்நிலையில் பிரபல தயாரிப்பாளர் ஜே.எஸ். சதீஷ்குமார் தனது ட்விட்டர் பக்கம் மூலம் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், ''எங்கள் ஜேஎஸ்கே பிலிம் கார்பரேசன் தயாரித்துள்ள படங்களான 'அண்டாவக் காணோம்', 'வா டீல்', 'மம்மி சேவ் மீ' ஆகிய படங்கள் நேரடியாக ஓடிடியில் வெளியாகவுள்ளதை அறிவிப்பதில் மகிழ்ச்சி. மேலும் நாங்கள் அடுத்ததாக தயாரிக்கவிருக்கும் 3 படங்களின் நடிகர்கள் தொழில்நுட்பக்கலைஞர்களின் அறிவிப்பையும் விரைவில் வெளியிடவிருக்கிறோம். எப்பொழுதும் போல் உங்கள் ஆதரவு தேவை'' என்று குறிப்பிட்டுள்ளார்.

    நடிகர் சிவகுமார் 55 வருடங்களுக்கு முன்பு தான் வசித்த வீட்டின் முன்னால் புகைப்படம் எடுத்து வெளியிட்டிருக்கிறார்.
    சிவகுமார் நடிகராவதற்கு முன்பு ஓவிய கல்லூரியில் பயின்றார். ஓவியராகவும் பணியாற்றினார். அப்போது சென்னை புதுபேட்டையில் தங்கி இருந்தார். அந்த பழைய வீட்டை தற்போது நேரில் சென்று பார்த்து அதன் முன்னால் நின்று புகைப்படம் எடுத்து சமூக வலைத்தளத்தில் வெளியிட்டு உள்ளார்.

    புகைப்படத்தின் கீழே, “1958 முதல் 1965 வரை மாதம் ரூ.15 வாடகை கொடுத்து வாழ்ந்த புதுப்பேட்டை வீடு இது. 7 ஆண்டுகள் இந்த வீட்டில் வாழ்ந்தபோது வரைந்தவைதான் எனது அத்தனை ஓவியங்களும். இந்தியாவில் டெல்லி முதல் கன்னியாகுமரி வரை சுற்றி ஓவியம் தீட்ட அக்காலத்தில் ஆன மொத்த செலவு ரூ.7500. குறைந்த தேவைகளுடன் உயர்ந்த லட்சியத்துடன் வாழ்ந்த நாட்கள். பொன்னான நாட்கள்” என்று குறிப்பிட்டு உள்ளார். இந்த புகைப்படம் வைரலாகிறது.

    இது குறித்து சிவகுமார் கூறும்போது, “சென்னையில் 55 வருடத்துக்கு முன்பு 7 வருடங்கள் நான் வாழ்ந்த இந்த வீட்டை என்னுடைய தாஜ்மகால் என்பேன். இந்த வீட்டை பார்க்க வேண்டும் என்று நீண்ட நாட்கள் ஆசைப்பட்டேன். எனது மனைவியுடன் சென்று பார்த்து அருகில் நின்று புகைப்படம் எடுத்துக்கொண்டேன். அந்த வீடு அப்படியேதான் உள்ளது. யாரும் குடியில்லாமல் பூட்டிக்கிடக்கிறது.” என்றார்.
    தனிமைப்படுத்தப்பட்டதால் தன் மகளை தொட முடியாமல் தவிப்பதாக பிரபல நடிகை கூறியிருக்கிறார்.
    ஆடுஜீவிதம் படப்பிடிப்புக்காக ஜோர்டான் சென்று விட்டு கேரளா திரும்பிய மலையாள நடிகர் பிருத்விராஜை 14 நாட்கள் தனிமைப்படுத்தினர். தற்போது தனிமைப்படுத்தல் முடிந்து அவருக்கு பரிசோதனை செய்தபோது கொரோனா தொற்று இல்லை என்பது உறுதியாகி மனைவி, குழந்தையை சந்தித்தார். இதுபோல் வெளிநாட்டில் இருந்து கேரளா திரும்பிய நடிகை அஞ்சலி நாயரும் தனிமைப்படுத்தப்பட்டு உள்ளார். இவர் தமிழில் நெல்லு, கோட்டி, உன்னையே காதலிப்பேன், இதுவும் கடந்து போகும் ஆகிய படங்களில் நடித்துள்ளார். 

    தற்போது டிஜிபூட்டி என்ற மலையாள படத்தில் நடிக்கிறார். இதன் படப்பிடிப்புக்காக அஞ்சலி நாயர் உள்பட 70 பேர் கொண்ட படக்குழுவினர் ஆப்பிரிக்கா சென்று இருந்தனர். கொரோனா ஊரடங்கினால் விமானங்கள் நிறுத்தப்பட்டதால் அவர்கள் நாடு திரும்ப முடியாமல் தவித்தனர். தற்போது சிறப்பு விமானம் மூலம் அவர்கள் கேரளா அழைத்து வரப்பட்டனர். அஞ்சலி நாயர் உள்பட அனைவரும் 14 நாட்கள் தனிமைப்படுத்தப்பட்டு உள்ளனர். 

    குழந்தையுடன் அஞ்சலி நாயர்

    இதுகுறித்து அஞ்சலி நாயர் கூறும்போது, ‘’ஊர் திரும்ப முடியாமல் 2 மாதங்கள் வெளிநாட்டில் தவித்தேன், இப்போது ஊருக்கு வந்த பிறகும் எனது மகளை தொட முடியாமலும் கட்டிப்பிடிக்க முடியாமலும் தவிக்கிறேன். மூடப்பட்ட அறைக்குள் 14 நாட்கள் தனிமைப்படுத்தப்பட்டு இருக்கிறேன்“ என்றார்.
    நடிகர் விஜய் உட்பட பல பிரபலங்களுக்கு பாதுகாவலராக பணியாற்றியவர் திடீர் மரணமடைந்துள்ளார்.
    தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் விஜய். இவரின் பாதுகாவலராக பணியாற்றி வந்த தாஸ் என்பவர் தற்போது மரணமடைந்துள்ளார். அனைவராலும் தாஸ் சேட்டன் என்று பாசத்துடன் அழைக்கப்பட்ட இவரின் மரணத்திற்கான பின்னணி இன்னும் வெளியாகவில்லை. 

    இவர் நடிகர்கள் விஜய், பவன் கல்யாண் உள்ளிட்ட பல பிரபலங்களுக்கு பாதுகாவலராக பணியாற்றி வந்தார். 

    பாதுகாவலர் தாஸ்

    இவரது மறைவுக்கு மம்முட்டி, மோகன்லால், பிரித்திவிராஜ், துல்கர் சல்மான், டோவினோ தாமஸ், நிவின் பாலி, மஞ்சு வாரியர் உள்ளிட்ட பிரபலங்கள் தங்கள் சமூக வலைதளங்களில் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். 
    கொரோனா பாதிப்பு காரணமாக மணிரத்னம் பட நடிகையின் குடியிருப்புக்கு சீல் வைக்கப்பட்டுள்ளது.
    கொரோனா பரவலை தடுக்க இந்தியா முழுவதும் மத்திய மாநில அரசுகள் தீவிர நடவடிக்கை எடுத்து வருகின்றன. ஆனாலும் நோய் தொற்றை கட்டுப்படுத்த முடியவில்லை. பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்த நிலையில் மும்பையில் பிரபல இந்தி நடிகை மலைக்காவின் பக்கத்து வீட்டில் வசிப்பவருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டது. 

    நடிகை மலைக்கா

    இதையடுத்து சுகாதார துறை அதிகாரிகள் மலைக்கா வசித்த அடுக்கு மாடி குடியிருப்பையே தனிமைப்படுத்தி சீல் வைத்து விட்டனர். இதனால் மலைக்கா தவிப்பில் உள்ளார். இது பட உலகில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 

    இதுகுறித்து நடிகை மலைக்கா கூறும்போது, என் வீட்டில் யாருக்கும் கொரோனா பாதிப்பு இல்லை. என் வீட்டில்  கிருமி நாசினி மட்டுமே தெளிக்கப்பட்டது என்று விளக்கமளித்துள்ளார்.

     இவர் மணிரத்னம்  இயக்கத்தில் தமிழில் உயிரே என்ற பெயரிலும் இந்தியில் தில்சா பெயரிலும் வெளியான படத்தில் ‘தைய தையா‘ என்ற பாடலுக்கு மலைக்கா நடனம் ஆடி உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
    பிரபல நடிகை, தனது தாய் உடைகளை தர மறுத்ததால் தந்தையின் உடைகளை அணிந்து போஸ் கொடுத்து இருக்கிறார்.
    துள்ளுவதோ இளமை படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானவர் ஷெரின். முதல் படத்திலேயே பலருடைய கவனத்தை ஈர்த்தவர், சில படங்களுக்கு பிறகு நடிக்கவில்லை. பின்னர் கமல் தொகுத்து வழங்கிய பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு மிகவும் பிரபலமானார். இ

    தந்தையுடன் ஷெரின்

    இவர் அடிக்கடி சமூக வலைத்தளத்தில் புகைப்படங்களை வெளியிட்டு வருவார். தற்போது வேஷ்டி சட்டை அணிந்த புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ளார். "எனது தாய் தனது உடைகளை தர மறுக்கிறார். எனவே தந்தையின் உடைகளை எடுத்துக் கொண்டேன்" என்று வேடிக்கையாக கூறியுள்ளார். இந்த புகைப்படம் தற்போது வைரலாகி வருகிறது.
    தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக இருக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் ரசிகரிடம் சத்தியம் வாங்கி இருக்கிறார்.
    தமிழ் சினிமாவில் நல்ல கதைகளை தேர்ந்தெடுத்து நடித்து தனக்கென்று ஒரு இடத்தைப் பிடித்திருப்பவர் ஐஸ்வர்யா ராஜேஷ். இவரது நடிப்பில் தற்போது உருவாகியுள்ள க/பெ ரணசிங்கம்’ என்ற திரைப்படம் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது.

     இந்த நிலையில் ஐஸ்வர்யா ராஜேஷ் சமீபத்தில் தனது அட்டகாசமான புகைப்படம் ஒன்றை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவு செய்தார். இந்த புகைப்படத்திற்கு கமெண்ட் அளித்த ஒரு ரசிகர், ‘உங்களுடைய தீவிர ரசிகன் நான். உங்களுக்காக நான் சாகத் தயார்’ என்று கூறியிருக்கிறார். 

    ஐஸ்வர்யா ராஜேஷின் பதிவு

    இதற்கு ஐஸ்வர்யா ராஜேஷ், ‘உங்கள் அன்புக்கு மிக்க நன்றி. ஆனால் தயவுசெய்து இதுபோன்ற வார்த்தைகளை பயன்படுத்த வேண்டாம். வாழ்க்கை என்பது சாவதற்கு இல்லை. நான் என்றும் உங்கள் நண்பராக இருப்பேன். எனவே இதுபோன்ற வார்த்தைகளை மீண்டும் சொல்ல மாட்டேன் என்று எனக்கு சத்தியம் செய்யுங்கள்’ என்று பதிலளித்துள்ளார். 
    தமிழ் நடிகை ஒருவர் கவச உடை அணிந்து விமானத்தில் பயணம் செய்த புகைப்படம் சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.
    கொரோனா அச்சம் காரணமாக இந்தியாவில் உள்நாட்டு, வெளிநாட்டு விமான போக்குவரத்து சேவைகள் நீண்ட காலமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. நீண்ட நாட்களுக்குப் பிறகு தற்போது ஊரடங்கில் சில தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், மீண்டும் உள்நாட்டு விமான போக்குவரத்து சேவை இந்தியாவில் துவங்கப்பட்டுள்ளது.

      இந்த நிலையில் நடிகை ரகுல் பிரீத் சிங் மும்பையில் இருந்து டெல்லிக்கு விமான பயணம் மேற்கொண்டுள்ளார். வைரஸ் தொற்று ஏற்படாத வகையில் தகுந்த பாதுகாப்புடன் அவர் விமான பயணம் மேற்கொண்ட அனுபவம் குறித்து தனது சமூக வலைதளப் பக்கத்தில் பகிர்ந்திருக்கிறார். 

    ரகுல் பிரீத் சிங்

     மாஸ்க், கையுறை, முகத்தை மறைக்கும் ஷீல்ட் மட்டுமல்லாமல் உடல் முழுவதையும் பாதுகாக்கும் விதமான கவச உடையில் ரகுல் பிரீத் சிங் இருக்கிறார். ‘மிஷன் பிளைட்’ என்று தனது பயணத்திற்கு அவர் பெயரை வைத்து முழு கவச உடையில் தான் இருக்கும் புகைப்படத்தையும் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ரகுல் பிரீத் சிங் பகிர்ந்திருக்கிறார்.  
    ×