என் மலர்
சினிமா செய்திகள்
இழந்த பணத்தை மீட்டு விடலாம், இழந்த புகழை மீட்டு விடலாம். இழந்த நேரம் ஒருபோதும் திரும்ப வராது என ஏ.ஆர். ரகுமான் தெரிவித்துள்ளார்.
மறைந்த பாலிவுட் நடிகர் சுஷாந்த் சிங் நடிப்பில் உருவாகி இருக்கும் ‘தில் பெச்சாரே’ என்ற திரைப்படம் நேற்று முன்தினம் வெளியானது. இப்படத்திற்கு ஏ.ஆர். ரகுமான் இசையமைத்துள்ளார்.
நீண்ட இடைவெளிக்கு பிறகு பாலிவுட் படத்தில் இசை அமைத்தது குறித்து பேட்டியளித்த ஏ.ஆர்.ரகுமான் கூறியதாவது:-
பாலிவுட்டில் என்னை பணியாற்ற விடாமல் தடுக்க ஒரு கும்பல் வேலை செய்கிறது. நல்ல படங்களை எப்போதும் நான் தவிர்ப்பதே இல்லை. ஆனால் என்னோடு கருத்து வேறுபாடு கொண்ட ஒரு கும்பல் தவறான செய்திகளை பரப்பி வருகிறது என்று நினைக்கிறேன்.
‘தில் பெச்சாரா’ படத்துக்கு இசையமைக்க இயக்குநர் முகேஷ் சாப்ரா என்னிடம் வந்தார். இரண்டு நாட்களில் அவரிடம் நான்கு பாடல்களை கொடுத்தேன். அப்போது அவர் என்னிடம், ‘‘பலர் என்னை உங்களிடம் போக வேண்டாம் என்று கூறினார்கள். அவர்கள் ஏதேதோ கதைகளை சொல்கிறார்கள்’’ என்று கூறினார். அப்போதுதான் எனக்கு புரிந்தது. அவர்களுக்கே தெரியாமல் அவர்கள் இந்த தவறை செய்துகொண்டிருக்கிறார்கள் என்று.
பரவாயில்லை. எனக்கு விதியின் மீது நம்பிக்கை இருக்கிறது. அனைத்தும் இறைவனிடமிருந்தே வருகிறது என்று நம்புபவன் நான். எனக்கு வரும் படங்களுக்கு நான் இசையமைக்கிறேன். அனைவரையுமே நான் வரவேற்கிறேன்.
இவ்வாறு ஏ.ஆர். ரகுமான் கூறியுள்ளார்.
இவ்வாறு கூறிய ரஹ்மானுக்கு சினிமா உலகம் ஆதரவு தெரிவித்து வருகிறது. சேகர் கபூர் ‘‘பாலிவுட் உங்களை கையாண்டதை விட அதிகமான திறமை உள்ளதை நிரூபித்து விட்டீர்கள்’’ என்று தெரிவித்திருந்தார்.
இந்நிலையில் ரஹ்மான் ‘‘இழந்த பணத்தை மீட்டு விடலாம், இழந்த புகழை மீட்டு விடலாம், ஆனால், நாமது வாழ்க்கையில் இழந்த முக்கியமான நேரத்தை ஒருபோதும் திரும்ப பெற முடியாது. அமைதி! இதில் இருந்து நகர்ந்து செல்ல வேண்டும். செய்வதற்கு இன்னும் சிறந்த விசயங்கள் உள்ளன’’ என்று டுவிட்டரில் தெரிவித்துள்ளார்.
புதுமுக இயக்குநர் டெல்லி பிரசாத் தீனதயாளன் இயக்கத்தில் விஜய் சேதுபதி, அதிதிராவ் நடிப்பில் உருவாகும் துக்ளக் தர்பார் படத்தின் முன்னோட்டம்.
தயாரிப்பாளர் லலித்குமாரின் 7 ஸ்கிரீன் ஸ்டுடியோஸ் மற்றும் வயகாம் 18 ஸ்டுடியோஸ் இணைந்து தயாரிக்கும் பிரம்மாண்டமான படம் ‘துக்ளக் தர்பார்’. விஜய்சேதுபதி கதாநாயகனாகவும் அதிதிராவ் நாயகியாகவும் நடிக்கிறார்கள். இயக்குநரும் நடிகருமான பார்த்திபன் இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். இப்படத்தின் கதை, திரைக்கதை அமைத்து இயக்க இருப்பவர் புதுமுக இயக்குநர் டெல்லி பிரசாத் தீனதயாளன்.
மேலும் இப்படத்திற்கு வலு சேர்க்கும் விதமாக இரண்டு இயக்குநர்கள் இணைந்துள்ளனர். நடுவுல கொஞ்சம் பக்கத்தைக் காணோம் இயக்குனர் பாலாஜி தரணிதரன் வசனங்களை எழுத, 96 படம் மூலமாக இயக்குநராக பெரியளவில் கவனம் ஈர்த்த பிரேம்குமார், இப்படத்தின் ஒளிப்பதிவாளராக பணியாற்ற இருக்கிறார்கள். கோவிந்த் வசந்தா இசை அமைப்பாளராக இணைந்திருக்கிறார்.
தமிழ் திரையுலகில் முன்னணி நடிகையாக வலம்வரும் ஹன்சிகா, உடல் எடையை குறைத்து ஆளே அடையாளம் தெரியாமல் மாறிப்போயுள்ளார்.
தமிழ் திரையுலகில் அறிமுகமான குறுகிய காலத்திலேயே, விஜய், சூர்யா, தனுஷ், சிம்பு போன்ற பிரபலங்களுக்கு ஜோடியாக நடித்து முன்னணி ஹீரோயினாக வலம் வந்தவர் ஹன்சிகா.
இவர் தற்போது `மஹா' என்ற படத்தில் நாயகிக்கு முக்கியத்துவம் உள்ள வேடத்தில் நடிக்கிறார். இது அவரது 50-வது படம். இப்படத்தில் சிம்பு கவுரவ வேடத்தில் நடிக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. கொரோனா ஊரடங்கால் படப்பிடிப்பு ரத்து செய்யப்பட்டுள்ளது. இதனால் வீட்டிலேயே முடங்கி இருக்கும் ஹன்சிகா, சமூக வலைத்தளங்களில் ஆக்டிவாக இருக்கிறார்.

இந்நிலையில், அவரின் சமீபத்திய போட்டோஷுட் ரசிகர்களை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது. காரணம், கொழுகொழுவென இருந்த ஹன்சிகா உடல் எடையை குறைத்து ஒல்லியானது தான். ஆரஞ்சு நிற மாடர்ன் உடையில் இருக்கும் ஹன்சிகாவின் இந்த புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றன.
தென்னிந்திய திரையுலகில் முன்னணி நடிகையாக இருக்கும் கீர்த்தி சுரேஷ், தனக்கு வந்த காதல் கடிதம் குறித்து தெரிவித்துள்ளார்.
'இது என்ன மாயம்' படத்தின் மூலம் தமிழில் அறிமுகமான கீர்த்தி சுரேஷ், விஜய், சூர்யா, விக்ரம் ஆகியோரின் படங்களில் நடித்ததன் மூலம் தமிழ் சினிமாவின் முன்னணி கதாநாயகியாக வளர்ந்தார். நிறைய கமர்சியல் படங்களில் நடித்த இவருக்கு, 'மகாநடி' படம் மிகப் பெரிய பெயரைப் பெற்றுக்கொடுத்தது. இப்படத்திற்காக அவர் தேசிய விருதும் பெற்றார். அடுத்ததாக ரஜினி-சிவா கூட்டணியில் உருவாகும் அண்ணாத்த படத்தில் முக்கிய வேடத்தில் நடிக்கிறார். இதுதவிர 3 தெலுங்கு படங்களையும் கைவசம் வைத்துள்ளார்.
இந்நிலையில், தனக்கு வந்த காதல் கடிதம் குறித்து கீர்த்தி சுரேஷ் சமீபத்திய பேட்டியில் பேசியுள்ளார். அவர் கூறியதாவது: நான் ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொண்டபோது என் தீவிர ரசிகர் ஒருவர் எனக்கு கிப்ட் கொடுத்தார். அந்த கிப்டை திறந்து பார்த்தபோது, அதில் என் புகைப்படங்கள் அடங்கிய ஆல்பம் மற்றும் ஒரு காதல் கடிதம் இருந்தது.

என் மீது கொண்ட காதலை அவர் அந்த கடிதத்தில் வெளிப்படுத்தியதுடன், தன்னை திருமணம் செய்து கொள்ளுமாறு கூறியிருந்தார். நான் கல்லூரியில் படித்தபோது ஒருவர் கூட எனக்கு காதல் கடிதம் கொடுத்ததில்லை. அதனால் அந்த ரசிகர் கொடுத்த காதல் கடிதத்தை தூக்கிப் போட மனமின்றி பத்திரமாக வைத்திருக்கிறேன் என கூறியுள்ளார்.
தமிழ் திரையுலகில் பிஸியான நடிகராக வலம்வரும் தனுஷ், பிரபல இயக்குனருடன் 5-வது முறையாக இணைய உள்ளதாக கூறப்படுகிறது.
தனுஷ்-வெற்றிமாறன் கூட்டணி தமிழ் சினிமாவின் பிளாக்பஸ்டர் கூட்டணியாக விளங்கி வருகிறது. இவர்கள் கூட்டணியில் வெளியான பொல்லாதவன், ஆடுகளம், வடசென்னை, அசுரன் என அனைத்துமே மாஸ்டர் பீஸ் தான்.
இந்நிலையில், மீண்டும் வெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ் நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இப்படத்தை ஆர்.எஸ்.இன்போடெயின்மெண்ட் சார்பில் எல்ரெட் குமார் தயாரிக்க உள்ளதாக கூறப்படுகிறது.
ஊரடங்குக்கு பின் வெற்றிமாறன் சூர்யாவின் வாடிவாசல் படத்தை இயக்க உள்ளதாக சொல்லப்பட்டது. அதற்கு முன் தனுஷ் படத்தை எடுத்து முடிக்க அவர் திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இதன் ஸ்கிரிப்ட் பணிகள் இறுதிக்கட்டத்தில் உள்ளதாகவும், இது வடசென்னை படத்தின் 2-ம் பாகம் இல்லை என்றும் கூறப்படுகிறது.

வெற்றிமாறன் இயக்கத்தில் சூரி நடிக்க உள்ள படத்தையும் எல்ரெட் குமார் தான் தயாரிக்கிறார். இதன் படப்பிடிப்பை வெளி மாநிலங்களில் நடத்த திட்டமிட்டு இருந்தனர். கொரோனா அச்சுறுத்தல் காரணமாக தற்போது அந்த படத்தை தொடங்க முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது. இயல்புநிலை திரும்பியதும் இதன் படப்பிடிப்பை நடத்த திட்டமிட்டு உள்ளனர்.
இசையமைப்பாளர், பாடகர், நடிகர் என பன்முகத்திறமை கொண்ட விஜய் ஆண்டனிக்கு ஜோடியாக நடிக்க உள்ளதாக ரித்திகா சிங் தெரிவித்துள்ளார்.
சுதா கொங்கரா இயக்கத்தில் மாதவன் நடித்த இறுதிச்சுற்று படத்தின் மூலம் அறிமுகமானவர் ரித்திகா சிங். இயல்பிலேயே கிக் பாக்சிங் விளையாட்டு வீராங்கனையான ரித்திகா, அந்த படத்தில் அதே வேடம் என்பதால் கனகச்சிதமாக பொருந்தினார். இறுதிச்சுற்று படத்தில் நடித்ததற்காக அவருக்கு தேசிய விருது வழங்கப்பட்டது.
சமீபத்தில் அவர் நடிப்பில் வெளியான ஓ மை கடவுளே திரைப்படம், பிளாக்பஸ்டர் ஹிட்டானது. தமிழ் மட்டும் இன்றி தெலுங்கு மற்றும் இந்தி படங்களிலும் ரித்திகா நடித்து வருகிறார். அடுத்ததாக தமிழில், அருண் விஜய்யின் பாக்சர், அரவிந்த் சாமியின் வணங்காமுடி போன்ற படங்களில் அவர் நடிக்கிறார்.

இந்நிலையில், ரித்திகா சிங் அடுத்ததாக விஜய் ஆண்டனிக்கு ஜோடியாக நடிக்க உள்ளதாக அறிவித்துள்ளார். பாலாஜி குமார் இயக்கும் இப்படத்தை இன்பினிட்டி பிலிம்ஸ் மற்றும் லோட்டஸ் பிக்சர்ஸ் இணைந்து தயாரிக்க உள்ளது.
கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட நடிகர் விஷால் அதிலிருந்து விரைவாக குணமடைந்தது எப்படி என்பது குறித்து விளக்கம் அளித்துள்ளார்.
தமிழகத்தில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் உள்ளது. சினிமா பிரபலங்களும் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு உள்ளனர். அந்தவகையில் விஷாலும், அவரது தந்தையும் கொரோனாவால் பாதிக்கப்பட்டதாகவும், பின்னர் ஆயுர்வேத சிகிச்சை எடுத்துக்கொண்டு அதிலிருந்து மீண்டதாகவும் தகவல் வெளியானது.
இந்நிலையில், அதனை உறுதிப்படுத்திய நடிகர் விஷால், இதுகுறித்து டுவிட்டரில் பதிவிட்டுள்ளதாவது: எனது தந்தைக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது உண்மை தான். தமக்கும் அதிக சளி, காய்ச்சல், இருமல் போன்ற அறிகுறிகள் காணப்பட்டது. எனது மேலாளருக்கும் இதே நிலை தான் இருந்தது.
மூவரும் ஆயுர்வேத மருந்து எடுத்துக்கொண்டதால், ஒரு வார காலத்திற்குள் அபாய கட்டத்தை தாண்டிவிட்டோம். தற்போது நலமாக உள்ளோம். மேலும் இந்த தகவலை பகிர்ந்து கொள்வதில் மகிழ்ச்சி அடைகிறேன் என்று விஷால் அந்த பதிவில் குறிப்பிட்டுள்ளார்.
Yes it’s True, my Dad was tested Positive, by helping him I had the same symptoms of High Temperature, Cold, Cough & was the same for my Manager.
— Vishal (@VishalKOfficial) July 25, 2020
All of us took Ayurvedic Medicine & were out of Danger in a week’s time. We are now Hale & Healthy.
Happy to Share this....GB
பாலிவுட்டில் என்னை இசையமைக்க விடாமல் தடுக்க ஒரு கும்பல் வேலை செய்கிறது என்று பிரபல இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான் பேட்டியளித்துள்ளார்.
மறைந்த பாலிவுட் நடிகர் சுஷாந்த் சிங் நடிப்பில் உருவாகி இருக்கும் ‘தில் பெச்சாரே’ என்ற திரைப்படம் நேற்று வெளியானது. இப்படத்திற்கு ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்துள்ளார். நீண்ட இடைவெளிக்கு பிறகு பாலிவுட் படத்தில் இசை அமைத்தது குறித்து பேட்டியளித்த ஏ.ஆர்.ரகுமான் கூறியதாவது:-
பாலிவுட்டில் என்னை பணியாற்ற விடாமல் தடுக்க ஒரு கும்பல் வேலை செய்கிறது. நல்ல படங்களை எப்போதும் நான் தவிர்ப்பதே இல்லை. ஆனால் என்னோடு கருத்து வேறுபாடு கொண்ட ஒரு கும்பல் தவறான செய்திகளை பரப்பி வருகிறது என்று நினைக்கிறேன்.

‘தில் பெச்சாரா’ படத்துக்கு இசையமைக்க இயக்குநர் முகேஷ் சாப்ரா என்னிடம் வந்தார். இரண்டு நாட்களில் அவரிடம் நான்கு பாடல்களை கொடுத்தேன். அப்போது அவர் என்னிடம், ‘பலர் என்னை உங்களிடம் போக வேண்டாம் என்று கூறினார்கள். அவர்கள் ஏதேதோ கதைகளை சொல்கிறார்கள்’ என்று கூறினார். அப்போதுதான் எனக்கு புரிந்தது. அவர்களுக்கே தெரியாமல் அவர்கள் இந்த தவறை செய்துகொண்டிருக்கிறார்கள் என்று பரவாயில்லை.
எனக்கு விதியின் மீது நம்பிக்கை இருக்கிறது. அனைத்தும் இறைவனிடமிருந்தே வருகிறது என்று நம்புபவன் நான். எனக்கு வரும் படங்களுக்கு நான் இசையமைக்கிறேன். அனைவரையுமே நான் வரவேற்கிறேன். இவ்வாறு ஏ.ஆர்.ரகுமான் கூறியுள்ளார்.
நித்தின் சத்யா தயாரிப்பில் வெங்கட் பிரபு, வைபவ், வாணி போஜன் நடிப்பில் உருவாகி இருக்கும் லாக்கப் படத்தின் முன்னோட்டம்.
நடிகர் நித்தின்சத்யா தயாரிக்கும் இரண்டாவது படமான ‘லாக்கப்’ படத்தின் சிலிர்க்க வைக்கும் டீசர் வெளியானது முதலே எதிர்பார்ப்பு ஏகத்துக்கும் எகிறியுள்ளது. தற்போது இப்படம் ஆக்ஸ்ட் 14 அன்று ஜி5 தளத்தில் வெளியாக தயாராகவுள்ளது.
மிகப்பெரிய கான்டெக் நிறுவனமான ஜி5, பல்வேறு மொழிகளைச் சேர்ந்த, பல வகையான சிறந்த படைப்புகளை தொடர்ச்சியாக பார்வையாளர்களுக்கு வழங்கி வருகிறது. ஜி5-ன் சமீபத்திய ஒரிஜினல் திரைப்படமான ‘லாக்கப்’ மிகச்சிறந்த, சிலிர்க்க வைக்கும் திரில்லருடன் சீட்டின் நுனிக்கு பார்வையாளர்களை கொண்டுவரும் அனுபவங்களை உள்ளடக்கியதாக இருக்கும்.
இந்த த்ரில்லர் படத்தில் இதற்கு முன் பார்த்திராத ஒரு கதாபாத்திரத்தில் இயக்குநர் வெங்கட் பிரபு நடிக்கிறார். அறிமுக இயக்குனரான எஸ்.ஜி.சார்லஸ் இயக்கியுள்ள இப்படத்தில் முதன்மை கதாபாத்திரங்களில் நடிகர் வைபவ் மற்றும் வாணி போஜன் நடித்துள்ளனர். அவர்களை தவிர்த்து, இப்படத்தில் பூர்ணா மற்றும் ஈஸ்வரி ராவ் உள்ளிட்ட பல பிரபலமான நடிகர்களும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
இப்படத்தை நித்தின்சத்யாவின் ஸ்வேத் - எ நித்தின்சத்யா புரோடக்ஷன் ஹவுஸ் தயாரிப்பு நிறுவனம் தயாரித்துள்ளது. அரோல் கொரேலி இப்படத்துக்கு இசையமைத்துள்ளார். சந்தானம் சேகரின் ஒளிப்பதிவில் ஆனந்த் ஜெரால்ட் எடிட்டிங் செய்துள்ளார்.
பல்வேறு துறைகளை சேர்ந்தவர்கள் சினிமாவில் திறமைகளை காண்பித்து வரும் நிலையில், ஐஏஎஸ் அதிகாரி ஒருவர் பாடல் மூலம் கவனம் பெற்றிருக்கிறார்.
பல்வேறு துறைகளைச் சேர்ந்தவர்கள் சினிமாவில் நுழைந்து பல திறமைகளை வெளிப்படுத்தி வருகின்றனர். அப்படி ஐஏஎஸ் அதிகாரியான அபிஷேக் சிங் பாலிவுட்டில் நடிகராக அறிமுகமாகி பிரபலமாகி வருகிறார். இவருடைய நடிப்பில் தற்போது ‘தில் தோட் கே’ என்ற பாடல் வெளியாகி சமூக வலைத்தளத்தில் வைரலாகி இருக்கிறது. இந்த பாடல் வீடியோ வெளியாகி நான்கு நாட்களில் 25 மில்லியன் பேர் பார்த்துள்ளனர்.

ஒரு ஐஏஎஸ் அதிகாரி சிறந்த நடிகராகவும் இருப்பது பலருடைய கவனத்தை ஈர்த்துள்ளது. இவர் ஏற்கனவே சார் பந்த்ரா என்ற படத்தின் மூலம் அருமையான நடிப்பு திறனையும், ரொமான்டிக் பக்கத்தையும் வெளிக்காட்டியிருந்தார். அடுத்ததாக இவருடைய நடிப்பில் வெளியாக இருக்கும் டெல்லி கிரைம் 2 என்ற தொடரை பார்க்க ரசிகர்கள் ஆவலுடன் காத்துக்கொண்டிருக்கின்றனர்.
மறைந்த பாலிவுட் நடிகர் சுஷாந்த் சிங் நடிப்பில் தற்போது வெளியாகி இருக்கும் படத்தை ரஜினிகாந்த் ரசிகர்கள் சமூக வலைத்தளத்தில் கொண்டாடி வருகிறார்கள்.
பிரபல பாலிவுட் நடிகர் சுஷாந்த் சிங் கடந்த ஜூன் 14-ந் தேதி திடீரென தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இந்த சம்பவம் திரையுலகினரிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அவர் கடைசியாக நடித்த படம் 'தில் பெச்சாரா'. பாலிவுட் மட்டுமில்லாமல் உலக ரசிகர்கள் பலரும் எதிர்ப்பார்த்த இப்படம் நேற்று ஓடிடியில் ரிலீஸ் ஆனது.
இந்தப் படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. காரணம், தில் பெச்சாரா படத்தில் சுஷாந்த் சிங், ரஜினியின் தீவிர ரசிகராக நடித்திருக்கிறார். ரஜினிகாந்த் போன்று ஒரு நடிகராக வேண்டும் என்று ஆசைப்படுகிறார். அவரது நண்பர் இயக்கும் படத்தில் ரஜினிகாந்த் போன்று நடித்திருக்கிறார். சுஷாந்த் சிங் பயன்படுத்தும் செல்போன் கவரில் கூட ரஜினியின் படத்தை ஒட்டி வைத்திருக்கிறார். நான் ரஜினியை வணங்குகிறேன் என்றும் படத்தில் கூறுகிறார்.

சமூக வலைதளங்களில் தில் பெச்சாரா படம் குறித்து நெட்டிசன்கள் புகழ்ந்து வருகின்றனர். மேலும் ரஜினியின் ரசிகர்கள் தில் பெச்சாரா படத்தையும் சுஷாந்தையும் கொண்டாடி வருகின்றனர்.
நடிகைகள் தமன்னா மற்றும் லாவண்யா திரிபாதி மீது அவதூறு பரப்பிய நடிகர் கைது செய்யப்பட்டுள்ளார்.
தமிழில் சசிகுமாரின் பிரம்மன் படத்தில் கதாநாயகியாக நடித்தவர் லாவண்யா திரிபாதி. மாயவன் படத்திலும் நடித்துள்ளார். தற்போது அதர்வாவுடன் புதிய படத்தில் நடித்து வருகிறார். தெலுங்கு இணைய தள நடிகர் சுனிஷித் அளித்த பேட்டியொன்றில் 2015-ல் லாவண்யா திரிபாதியை திருமணம் செய்து கொண்டேன்.
பிறகு என்னோடு வாழப்பிடிக்காமல் விவாகரத்து செய்து கொண்டார். மூன்று முறை கருக்கலைப்பும் செய்தார். தமன்னா உள்ளிட்ட மேலும் சில நடிகைகளுடனும் எனக்கு தொடர்பு இருந்தது” என்று கூறியிருந்தார். இது தெலுங்கு சினிமாவில் பரபரப்பை ஏற்படுத்தியது.

இதனை மறுத்த லாவண்யா திரிபாதி மலிவான விளம்பரத்துக்காக தனது பெயருக்கும் புகழுக்கும் களங்கம் ஏற்படுத்தி உள்ள சுனிஷித் மீது நடவடிக்கை எடுக்கும்படி சைபர் கிரைம் போலீசில் புகார் அளித்தார். சைபர் கிரைம் உதவி கமிஷனர் பிரசாத் கூறும்போது புகாரை பதிவு செய்து விசாரித்து வருகிறோம் என்றார். சுனிஷித் தலைமறைவாகி விட்டார் அவரை தேடி வந்தனர். இந்த நிலையில் சுனிஷித்தை போலீசார் கைது செய்தனர்.






