என் மலர்
சினிமா

தீபாவளிக்கு ரஜினிகாந்த் கொடுக்கும் சிறப்பு விருந்து
ரஜினி தற்போது `2.0' மற்றும் `பேட்ட' படங்களில் நடித்து முடித்துவிட்ட நிலையில், ரஜினி நடிப்பில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கும் `2.0' படத்தின் டிரைலர் தீபாவளிக்கு ரிலீசாக இருப்பதாக கூறப்படுகிறது. #2Point0 #Rajinikanth
ரஜினிகாந்த், அக்ஷய் குமார், ஏமி ஜாக்சன் நடிப்பில் சங்கர் இயக்கத்தில் உருவாகி வரும் 2.0 படம் ரசிகர்கள் மத்தியில் பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கிறது. ஹாலிவுட் படங்களுக்கு சவால் விடும் வகையில் சுமார் ரூ.550 கோடியில் இந்த படம் 3டியில் உருவாகி வருகிறது.
நவம்பர் 29-ஆம் தேதி ரிலீஸாகவிருக்கும் இந்த படத்தின் டீசருக்கு ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு கிடைத்திருந்த நிலையில், படத்தின் டிரைலர் தீபாவளி விருந்தாக வெளியாக இருப்பதாக கூறப்படுகிறது. அதன்படி தீபாவளிக்கு முன்பாக வருகிற நவம்பர் 3-ஆம் தேதி டிரைலரை ரிலீஸ் செய்ய படக்குழு முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.

லைகா புரொடக்ஷன்ஸ் தயாரித்திருக்கும் இந்த படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்திருக்கிறார். படத்தின் இறுதிக்கட்ட பணிகள் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. #2Point0 #Rajinikanth
Next Story