என் மலர்tooltip icon

    சினிமா

    டார்லிங் வருவுக்கு நன்றி - விஷால் பாராட்டு
    X

    டார்லிங் வருவுக்கு நன்றி - விஷால் பாராட்டு

    லிங்குசாமி இயக்கத்தில் `சண்டக்கோழி-2' படத்தின் படப்பிடிப்பு இறுதிக்கட்டத்தை எட்டியிருக்கும் நிலையில், டார்லிங் வருவுக்கு நன்றி என்று கூறியுள்ள விஷால் வரலட்சுமியை பாராட்டியுள்ளார். #Vishal #Sandakozhi2
    `இரும்புத்திரை' படத்தை தொடர்ந்து விஷால் தற்போது `சண்டக்கோழி-2' படத்தில் பிசியாக நடித்து வருகிறார். லிங்குசாமி இயக்கும் இந்த படத்தில் விஷால் ஜோடியாக கீர்த்தி சுரேஷ் நடிக்கிறார். வில்லியாக வரலட்சுமி சரத்குமார் நடிக்கிறார். இறுதிக்கட்ட படப்பிடிப்பு நடந்து வரும் நிலையில், வரலட்சுமி அவரது காட்சிகளை நடித்து முடித்துவிட்டதாக விஷால் அவரது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். 

    இதுகுறித்து விஷால் தெரிவித்துள்ளதாவது,

    சண்டக்கோழி-2 படப்பிடிப்பின் இறுதிக்கட்டத்துக்கு வந்துவிட்டோம். இன்றுடன் வரலட்சுமி சரத்குமாரின் காட்சிகள் முடிந்துவிட்டது. இது சிறப்பானது. கிளைமேக்ஸ் சண்டைக்காட்சிகள் அதிரவைக்கும்படியாக வந்துள்ளன. டார்லிங்க வருவுக்கு நன்றி. நான் பார்த்த சிறந்த தொழில் தெரிந்த நடிகை. அக்டோபர் 18-க்காக காத்திருப்போம்.

    இவ்வாறு கூறியுள்ளார். 

    விஷால் தனது சொந்த தயாரிப்பு நிறுவனமான விஷால் பிலிம் பாக்டரி மூலம் தயாரிக்கும் இந்த படத்திற்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்கிறார். ராஜ்கிரன், சதீஷ், சூரி, ஹரீஷ் பேரடி, அப்பானி சரத், ஹரீஷ் சிவா உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். விஷாலின் 25-வது படமாக இந்த படம் உருவாகி வருகிறது. படம் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு அக்டோபர் 18-ல் ரிலீசாக இருக்கிறது. 

    Next Story
    ×