என் மலர்

  சினிமா

  முதல்முறையாக ரஜினியுடன் இணைந்த இரு பிரபலங்கள் - அதிகாரப்பூர்வ அறிவிப்பு
  X

  முதல்முறையாக ரஜினியுடன் இணைந்த இரு பிரபலங்கள் - அதிகாரப்பூர்வ அறிவிப்பு

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்து வரும் புதிய படத்தில் ரஜினியுடன் முதல்முறையாக இரண்டு முக்கிய பிரபலங்கள் இணைந்திருப்பதாக படக்குழுவினர் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர். #Rajinikanth
  ரஜினிகாந்த் தற்போது கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் பெயரிடப்படாத படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு டேராடூனில் நடந்து முடிந்த நிலையில், இரண்டாம் கட்ட படப்பிடிப்பு தற்போது டேராடூனில் விறுவிறுப்பாக நடந்து வருகிறது.

  ரஜினிகாந்த் நேற்று முன்தினம் படப்பிடிப்பில் கலந்து கொண்டார். இதில் ரஜினிக்கு ஜோடியாக சிம்ரன் நடித்து வருவதாக நேற்று தெரிவித்திருந்தோம். இந்த நிலையில், படக்குழு அந்த தகவலை உறுதிப்படுத்தியுள்ளது. 

  இதுகுறித்து படத்தின் தயாரிப்பு நிறுவனமான சன் பிக்சர்ஸ் அதன் டுவிட்டர் பக்கத்தில் நடிகை சிம்ரன் மற்றும் பாலிவுட் நடிகர் நவாசுதீன் சித்திக் இருவரும் ரஜினியுடன் முதல்முறையாக இணைவதாக அறிவித்துள்ளது. இந்த படத்தில் வில்லனாக விஜய் சேதுபதியும், முக்கிய கதாபாத்திரங்களில் பாபி சிம்ஹா, அஞ்சலி, மேகா ஆகாஷ், முனிஷ் காந்த், சனத் ரெட்டி, தீபக் பரமேஷ் உள்ளிட்ட பலரும் நடிக்கின்றனர்.

  அனிருத் இந்த படத்திற்கு இசையமைக்கிறார். ரஜினி இந்த படத்தில் பேராசிரியராக நடிப்பதாகவும், மாணவர்களை நல்வழிப்படுத்தும் கதாபாத்திரத்தில் வலம் வருவதாகவும் தகவல்கள் வெளியாகி இருக்கின்றன.

  ரஜினி நடிப்பில் அடுத்ததாக `2.0' வருகிற நவம்பர் 29-ஆம் தேதி ரிலீசாகவிருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. #Rajinikanth #Simran #NawazuddinSiddiqui

  Next Story
  ×