என் மலர்

  சினிமா

  கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் ரஜினிக்கு ஜோடியான பிரபல நடிகை
  X

  கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் ரஜினிக்கு ஜோடியான பிரபல நடிகை

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகி வரும் படத்தில் ரஜினி ஜோடியாக சிம்ரன் நடித்து வருவதாக தகவல் வெளியாகி இருக்கிறது. #Rajinikanth
  காலா படத்திற்கு பின்னர் ரஜினிகாந்த், கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் நடித்து வருகிறார். இன்னும் படத்தின் தலைப்பு முடிவு செய்யப்படாத நிலையில், படத்திற்கான முதற்கட்ட படப்பிடிப்பு மேற்கு வங்க மாநிலத்தில் நடந்து முடிந்து, தற்போது அடுத்த கட்ட படப்பிடிப்பு உத்தரகாண்ட்டில் துவங்கி இருக்கிறது.

  இதில் ரஜினிக்கு ஜோடியாக சிம்ரன் நடித்து வருவதாக தகவல் வெளியாகி இருக்கிறது. வில்லனாக விஜய் சேதுபதியும், முக்கிய கதாபாத்திரங்களில் பாபி சிம்ஹா, அஞ்சலி, மேகா ஆகாஷ், முனிஷ் காந்த், சனத் ரெட்டி, தீபக் பரமேஷ் உள்ளிட்ட பலரும் நடிக்கின்றனர்.  சன் பிக்சர்ஸ் தயாரிக்கும் இந்த படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். விரைவில் ரஜினி, விஜய் சேதுபதி சந்திக்கும் காட்சிகளையும், 2 வாரங்களில் ரஜினி மொத்த சம்பந்தப்பட்ட காட்சிகளையும் முடித்துவிட்டு ஓரிரு மாதங்களில் முழு படப்பிடிப்பையும் முடிக்க படக்குழு திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது. #Rajinikanth #Simran

  Next Story
  ×