என் மலர்
சினிமா

கார்த்திக் சுப்புராஜ் படத்தில் ரஜினியின் கதாபாத்திரம் இதுவா?
கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகி வரும் புதிய படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து வரும் நிலையில், படத்தில் ரஜினியின் கதாபாத்திரம் குறித்த தகவல் வெளியாகி இருக்கிறது. #Rajinikanth
கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிக்கும் படத்தின் படப்பிடிப்பு மேற்கு வங்காளத்தில் வேகமாக நடந்து வருகிறது. வரும் 10-ஆம் தேதி தமிழகம் திரும்பும் படக்குழு அடுத்து விரைவில் மீண்டும் டேராடூனுக்கு செல்ல இருக்கிறது.
படப்பிடிப்பு இமாச்சல பிரதேசம், மேற்கு வங்காளம் பகுதிகளில் உள்ள மலைப்பகுதிகளில் நடந்து வருகிறது. ஆனால் படத்தின் கதை முழுக்க முழுக்க தமிழ்நாட்டில் நடப்பது தானாம். அதுவும் ஊட்டியில் உள்ள ஒரு கல்லூரியில் நடக்கும் கதை. இதில் கல்லூரியின் பேராசிரியராக ரஜினிகாந்த் நடித்து வருவதாக படக்குழுவில் இருந்து தகவல் வருகிறது.

இந்த படத்தில் விஜய் சேதுபதி வில்லனாகவும், பாபி சிம்ஹா முக்கிய கதாபாத்திரத்திலும் நடிக்கின்றனர். சன் பிக்சர்ஸ் பிரம்மாண்டமாக தயாரிக்கும் இந்த படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். #Rajinikanth #KarthikSubbaraj
Next Story






