search icon
என் மலர்tooltip icon

    சினிமா

    படக்குழுவுடன் அமெரிக்கா செல்லும் விஜய்
    X

    படக்குழுவுடன் அமெரிக்கா செல்லும் விஜய்

    ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடித்து வரும் தளபதி 62 படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து வரும் நிலையில், அடுத்தகட்ட படப்பிடிப்புக்காக விஜய் அமெரிக்கா செல்லவிருக்கிறார். #Vijay62 #Thalapathy62
    துப்பாக்கி, கத்தி ஆகிய படங்களுக்குப் பிறகு விஜய்யுடன் இணைந்திருக்கிறார் ஏ.ஆர். முருகதாஸ். விஜய்யின் 62-வது படமாக உருவாகிவரும் இந்தப் படம் சமகால அரசியலைப் பேசும் படமாக உருவாகி வருகிறது. பைரவா படத்தைத் தொடர்ந்து விஜய்க்கு ஜோடியாக கீர்த்தி சுரேஷ் நடிக்கிறார்.

    வரலட்சுமி முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துவருகிறார். அரசியல் சம்பந்தமாக உருவாகும் இந்தப் படத்தில் பழ.கருப்பையா, ராதாரவி இருவரும் இருபெரும் அரசியல் தலைவர்களாக நடிக்கின்றனர். இப்படம் பற்றிய தகவல்களை அடிக்கடி வீடியோவாக படக்குழுவினர் வெளியிட்டு வருகின்றனர்.

    அந்த வகையில் தற்போது படப்பிடிப்புத் தளத்தில் பேண்ட் செட் வாத்தியக்காரர்களுடன் இணைந்து இயக்குநர் முருகதாஸ் இசைக்கும் வீடியோ காட்சியை வெளியிட்டுள்ளனர். மேலும் அந்த வீடியோவின் பின்னணியில் பழ.கருப்பையாவை வரவேற்பது போன்ற பிளக்ஸ் போர்டுகளும், அரசியல் கொடிகளும் காணப்படுகின்றன.



    இந்தப் படம் அரசியல் சார்ந்த படம்தான் என சொல்லப்பட்டாலும், இந்தக் காட்சிகள் மேலும் அதை உறுதிப்படுத்துகின்றன. கிட்டத்தட்ட 70 சதவிகிதம் படப்பிடிப்பு முடிவடைந்துள்ள நிலையில், ஜூலை மாத இறுதிக்குள் படப்பிடிப்பை முடிக்கத் திட்டமிட்டுள்ளனர். அடுத்த கட்ட படப்பிடிப்பிற்காக அமெரிக்கா செல்கிறது விஜய் டீம். விஜய்யின் பிறந்த நாளான ஜூன் 22-ஆம் தேதி படத்தின் பர்ஸ்ட்லுக் போஸ்டரை வெளியிடத் திட்டமிட்டுள்ளனர். #Vijay62 #Thalapathy62 

    Next Story
    ×