என் மலர்
சினிமா

சில கார்ப்பரேட் நிறுவனங்கள் நாம் நினைப்பதை விட கொடூரமானவை - கார்த்திக் சுப்புராஜ்
ஸ்டெர்லைட் போராட்டம் தமிழகம் முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருக்கும் நிலையில், சில கார்ப்பரேட் நிறுவனங்கள் நாம் நினைப்பதை விட கொடூரமானவை என்று இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் தெரிவித்துள்ளார். #Bansterlite #SaveThoothukudi
தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட தூத்துக்குடி மக்கள் கடந்த 100 நாட்களாக தொடர்ந்து போராடி வருகின்றனர். போராட்டத்தின் 100-வது நாளான நேற்று ஆயிரக்கணக்கான மக்கள் மாவட்ட ஆட்சிர் அலுவலகத்தை நோக்கி ஊர்வலமாக சென்றனர். அப்போது நடத்தப்பட்ட துப்பாக்கிச்சூட்டில் பொதுமக்களில் 11 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். இதனால் தூத்துக்குடியில் பதற்றமான சூழல் நிலவுகிறது.
இந்த சம்பவத்திற்கு பல்வேறு தரப்பினரும் கண்டங்களை பதிவு செய்து வரும் நிலையில், இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் இந்த சம்பவத்திற்கு கண்டனங்களை பதிவு செய்திருக்கிறார். இதுதொடர்பாக அவர் டுவிட்டர் பக்கத்தில் கூறுயதாவது,

`தூத்துக்குடியில் போலீசார் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் அப்பாவி மக்கள் கொல்லப்பட்டது வேதனையளிக்கிறது. நமது அரசு மற்றும் ஆட்சியாளர்கள் மீது பயம் வருகிறது. சில கார்ப்பரேட் நிறுவனங்கள் நாம் நினைப்பதை விட ரொம்ப கொடூரமானவயாக இருக்கின்றன.'
இவ்வாறு குறிப்பிட்டிருக்கிறார். #Bansterlite #SaveThoothukudi #SterliteProtest #KarthikSubbaraj
Next Story






