என் மலர்
சினிமா

ஆட்டோ டிரைவராக நடிக்கும் சாய் பல்லவி
தியா படத்தை தொடர்ந்து `மாரி-2', `என்ஜிகே' படத்தில் பிசியாகி இருக்கும் நிலையில், மாரி-2 படத்தில் சாய் பல்லவி ஆட்டோ டிரைவராக நடிப்பதாக கூறப்படுகிறது. #Maari2 #Dhanush
மலையாள, தெலுங்கு சினிமாவை தொடர்ந்து சாய் பல்லவியின் முதல் தமிழ் படமான தியா போதிய வரவேற்பை பெறவில்லை. இந்நிலையில், சாய் பல்லவி தற்போது தனுஷ் ஜோடியாக `மாரி-2' படத்திலும், சூர்யா ஜோடியாக `என்ஜிகே' படத்திலும் நடித்து வருகிறார்.
இதில் `மாரி-2' படத்தில் சாய் பல்லவி ஆட்டோ டிரைவர் கதாபாத்திரத்தில் நடிப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. அதற்காக சாய் பல்லவி சிறப்பு பயிற்சியும் எடுத்து வருகிறாராம். பாலாஜி மோகன் இயக்கும் இந்த படத்தில் நடிகர் கிருஷ்ணா, வரலட்சுமி முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். மலையாள நடிகர் டோவினோ தாமஸ் வில்லனாக நடிக்கிறார்.

60 சதவீத படப்பிடிப்பு முடிந்துவிட்ட நிலையில், முழு படப்பிடிப்பையும் வருகிற ஜூலை மாதத்திற்குள் முடிக்க படக்குழு திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. தனுஷ் தனது வுண்டர்பார் பிலிம்ஸ் மூலம் தயாரிக்கும் இந்த படத்திற்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்கிறார்.
படம் வருகிற நவம்பரில் ரிலீசாக இருப்பதாக கூறப்படுகிறது. #Maari2 #Dhanush
Next Story






