என் மலர்
சினிமா
நயன்தாராவுக்காக புதிய அவதாரம் எடுத்த சிவகார்த்திகேயன்
தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் நடிகர்களுள் ஒருவரான நடிகர் சிவகார்த்திகேயன், நயன்தாராவுக்காக புதிய அவதாரம் எடுத்திருக்கிறார். #CoCo #Nayanthara
தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் நடிகர் சிவகார்த்திகேயன். நடிகராக அறிமுகமான சிவா சமீபத்தில் தயாரிப்பாளராகவும் அவதாரம் எடுத்திருந்த நிலையில், தற்போது பாடலாசிரியராக புதிய அவதாரம் எடுத்திருக்கிறார்.
நெல்சன் இயக்கத்தில் நயன்தாரா நடிப்பில் உருவாகி வரும் படம் ‘கோலமாவு கோகிலா’. லைகா புரொடக்ஷன்ஸ் தயாரிக்கும் இந்த படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். இந்த படத்தில் `கல்யாண வயசு' என்ற பாடல் வரிகளை நடிகர் சிவகார்த்திகேயன் எழுதியிருக்கிறார். இந்த பாடல் வருகிற 17-ஆம் தேதி வெளியாக இருக்கிறது.
இந்த படத்தில் இருந்து ஏற்கனவே வெளியாகிய `எதுவரையோ' பாடலுக்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

`வேலைக்காரன்' படத்தை தொடர்ந்து `எஸ்.கே.13' படத்திலும் சிவகார்த்திகேயன் ஜோடியாக நயன்தாரா நடிக்க இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. #CoCo #Sivakarthikeyan #Nayanthara #KalyanaVayasu
Next Story






