என் மலர்
சினிமா செய்திகள்
நடிகர் பரத் பாலிவுட்டில் அறிமுகமாகும் ராதே படத்தை பிரபுதேவா இயக்கி உள்ளார், சல்மான் கான் இப்படத்தில் ஹீரோவாக நடித்துள்ளார்.
பாலிவுட்டில் பிரம்மாண்டமாக உருவாகி இருக்கும் படம் ‘ராதே’. பிரபுதேவா இயக்கும் இப்படத்தில் சல்மான் கான் ஹீரோவாக நடித்துள்ளார். இப்படத்தில் நடிகர் பரத்தும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். அவர் நடிக்கும் முதல் பாலிவுட் படம் இதுவாகும். ராதே படத்தின் படப்பிடிப்பு முடிந்து பின்னணி பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது.
இப்படத்தை கடந்தாண்டு ரம்ஜான் பண்டிகையன்று வெளியிட திட்டமிட்டிருந்தனர். கொரோனா அச்சுறுத்தல் காரணமாக திரையரங்குகள் மூடப்பட்டதால் படம் ரிலீசாகவில்லை.
இதனிடையே படத்தை ஓடிடி-யில் வெளியிட பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாக கூறப்பட்டதால் திரையரங்க உரிமையாளர்கள் அதிர்ச்சி அடைந்தனர். படத்தை திரையரங்குகளில் தான் வெளியிட வேண்டும் என கோரிக்கை வைத்தனர்.

பின்னர் திரையரங்க உரிமையாளர்களின் கோரிக்கையை ஏற்று ராதே படத்தை திரையரங்குகளில் தான் வெளியிடுவேன் என சல்மான் கான் கடந்த சில மாதங்களுக்கு முன்பு அதிரடி அறிவிப்பு ஒன்றை வெளியிட்டார்.
இந்நிலையில், ராதே படத்தின் அதிகாரப்பூர்வ ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி வருகிற மே 13-ந் தேதி ரம்ஜான் பண்டிகையையொட்டி இப்படம் திரையங்குகளில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
நெஞ்சில் துணிவிருந்தால், நோட்டா போன்ற படங்களில் நடித்துள்ள நடிகை மெஹ்ரீன் பிர்சாடா, தனுஷின் ‘பட்டாஸ்’ படத்தில் நடித்ததன் மூலம் மிகவும் பிரபலமானார்.
சுசீந்திரன் இயக்கத்தில் வெளியான ‘நெஞ்சில் துணிவிருந்தால்’ படத்தின் மூலம் தமிழில் ஹீரோயினாக அறிமுகமானவர் மெஹ்ரீன் பிர்சாடா. இதையடுத்து விஜய் தேவரகொண்டாவின் நோட்டா படத்தில் நடித்தார். பின்னர் ‘பட்டாஸ்’ படத்தில் தனுஷுக்கு ஜோடியாக நடித்து பிரபலமானார். தெலுங்கிலும் முன்னணி நடிகர்களுடன் நடித்துள்ளார்.
நடிகை மெஹ்ரீன் பிர்சாடா, அரியானா மாநில முன்னாள் முதல்வர் பஜன் லாலின் பேரன் பவ்யா பிஷ்னோயை காதலித்து வந்தார். இவர்களது காதலுக்கு குடும்பத்தினர் சம்மதம் தெரிவித்ததை அடுத்து, தற்போது இவர்கள் இருவருக்கும் திருமணம் நிச்சயம் ஆகி உள்ளது.

ஜெய்ப்பூரில் உள்ள அரண்மனையில் நேற்று இரவு இவர்களது நிச்சயதார்த்தம் குடும்பத்தினர் முன்னிலையில் நடைபெற்றது. இந்தாண்டு இறுதிக்குள் இவர்களது திருமணம் நடைபெறும் என கூறப்படுகிறது. மெஹ்ரீன் பிர்சாடாவின் காதலர் பவ்யா பிஷ்னோயும் அரசியலில் ஈடுபட்டு வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
லெஜண்ட் சரவணன் ஹீரோவாக அறிமுகமாகும் படத்தை இரட்டை இயக்குனர்களான ஜேடி மற்றும் ஜெர்ரி இயக்குகின்றனர்.
தமிழ் சினிமாவில் நடிகராகவும் தயாரிப்பாளராகவும் லெஜண்ட் சரவணன் அறிமுகமாகிறார். அவர் நடிப்பில் பிரம்மாண்டமாக உருவாகும் படத்தை இரட்டை இயக்குனர்களான ஜேடி மற்றும் ஜெர்ரி இயக்குகின்றனர். இவர்கள் ஏற்கனவே உல்லாசம், விசில் போன்ற படங்களை இயக்கியுள்ளனர். மேலும் இந்த திரைப்படத்தில் பிரபு, விவேக், ரோபோ சங்கர் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.

இந்நிலையில், இப்படத்தில் ஹீரோயினாக நடிக்கப்போவது யார் என்பது குறித்த தகவல் வெளியாகி உள்ளது. அதன்படி பிரபல பாலிவுட் நடிகையான ஊர்வசி ரவ்துலா, லெஜண்ட் சரவணனுக்கு ஜோடியாக நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது. இப்படத்தின் படப்பிடிப்பு மணாலியில் நடைபெற்று வருகிறது. பிரபல இசையமைப்பாளர் ஹாரிஸ் ஜெயராஜ் இந்த திரைப்படத்திற்கு இசை அமைக்கிறார். வேல்ராஜ் ஒளிப்பதிவு பணிகளை கவனிக்கிறார்.
சீரியல் நடிகையான வாணி போஜன், கடந்தாண்டு வெளியான ‘ஓ மை கடவுளே’ படம் மூலம் திரையுலகில் நடிகையாக அறிமுகமானார்.
விக்ரம், துருவ் விக்ரம் இணைந்து நடிக்கும் படம் ‘சியான் 60’. கார்த்திக் சுப்புராஜ் இப்படத்தை இயக்குகிறார். இப்படத்தின் நடிக்கும் பிரபலங்கள் குறித்த அறிவிப்பு கடந்த சில தினங்களாக வெளியிடப்பட்டு வருகிறது. அதன்படி சிம்ரன், பாபி சிம்ஹா ஆகியோர் இப்படத்தில் நடிக்க உள்ளதாக அறிவித்தனர்.
இந்நிலையில், நடிகை வாணி போஜன் இப்படத்தில் இணைந்துள்ளதை படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இதற்காக படக்குழுவுக்கு நன்றி தெரிவித்துள்ள வாணி போஜன், சியான் 60 படத்தில் ஒரு அங்கமாக இருப்பது உற்சாகம் அளிப்பதாக தெரிவித்துள்ளார்.

விக்ரமின் கோப்ரா படத்தை தயாரிக்கும் லலித்குமார் தனது 7 ஸ்கிரீன் ஸ்டூடியோ நிறுவனம் மூலம் ‘சியான் 60’ படத்தையும் பிரம்மாண்டமாக தயாரிக்கிறார். கேங்ஸ்டர் கதையம்சம் கொண்ட இப்படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
Excited to be a part ❤️ thank u so much #Chiyaan60https://t.co/64F5GPcnNo
— Vani Bhojan (@vanibhojanoffl) March 13, 2021
மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள இயக்குனர் எஸ்.பி.ஜனநாதனை பார்க்க வந்தபோது நடிகர் விஜய் சேதுபதி கண்கலங்கினாராம்.
இயக்குனர் எஸ்.பி.ஜனநாதன், கடந்த இரு தினங்களுக்கு முன்பு வீட்டில் சுயநினைவின்றி மயங்கி கிடந்தார். இதையடுத்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள இயக்குனர் எஸ்.பி.ஜனநாதனை பார்க்க வந்தபோது நடிகர் விஜய் சேதுபதி கண்கலங்கியதாக, நடிகை சரண்யா சமீபத்திய பேட்டியில் தெரிவித்துள்ளார்.
அதில் அவர் கூறியதாவது: “சுயநினைவின்றி இருந்த எஸ்.பி.ஜனநாதன் சாரை விஜய் சேதுபதி தட்டி எழுப்பி பாத்தாரு. அருகில் இருந்தவர்கள், ஏன் இவ்ளோ வேகமா தட்டுறீங்கன்னு கேட்டதும், விஜய் சேதுபதிக்கு கோபம் வந்திருச்சு. ‘அவர் என்னுடைய டைரக்டர், நான் தட்டுனா அவருக்கு என் குரல் கேட்கும், அவர் எழுந்திருச்சிருவார்’ அப்டினு சொன்னார். ஆனால் விஜய் சேதுபதி தட்டியும் அவர் கண்முழிச்சி பார்க்கவே இல்லை. அதுக்கப்புறம் கண்கலங்கியபடி விஜய் சேதுபதி அங்கிருந்து சென்றார்” என சரண்யா தெரிவித்துள்ளார்.

மேலும் எஸ்.பி.ஜனநாதனின் உடல்நிலை குறித்து யாரும் தவறான செய்திகளை பரப்ப வேண்டாம் என கேட்டுக்கொண்டுள்ள சரண்யா. அவருக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும், உணர்வுகள்ல முன்னேற்றம் இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்ததாகவும் கூறி உள்ளார்.
நடிகை சரண்யா, காதல், எஸ்.பி.ஜனநாதன் இயக்கிய பேராண்மை போன்ற படங்களில் நடித்துள்ளார். தற்போது எஸ்.பி.ஜனநாதனின் அலுவலகத்தில் பணியாற்றி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
தெலுங்கில் கீதா கோவிந்தம், டாக்சிவாலா, நோட்டா, டியர் காம்ரேட் உள்ளிட்ட படங்களில் நடித்து வெற்றி நாயகனாக வலம் வருகிறார் விஜய் தேவரகொண்டா.
தெலுங்கில் வெளியான அர்ஜுன் ரெட்டி படத்தின் மூலம் பிரபலமானவர் விஜய் தேவரகொண்டா. அந்த படத்தை தொடர்ந்து கீதா கோவிந்தம், டாக்சிவாலா, நோட்டா, டியர் காம்ரேட் உள்ளிட்ட படங்களில் நடித்து வெற்றி நாயகனாக வலம் வருகிறார். தற்போது பாலிவுட் படங்களிலும் நடித்து வருகிறார்.
நடிகர் விஜய் தேவரகொண்ட அவ்வப்போது காதல் சர்ச்சைகளிலும் சிக்குவதுண்டு. ஏற்கனவே நடிகை ராஷ்மிகா மந்தனாவை அவர் காதலிப்பதாக பரபரப்பாக பேசப்பட்டது. இருப்பினும் இதனை இருவரும் திட்டவட்டமாக மறுத்தனர்.
இந்நிலையில், தற்போது நடிகர் விஜய் தேவரகொண்டா, பிரபல நடிகரின் மகளை காதலிப்பதாக தகவல் பரவி வருகிறது. இந்தி நடிகர் சயீப் அலிகான் மகளும், நடிகையுமான சாரா அலிகானுக்கும், விஜய்தேவரகொண்டாவுக்கும் காதல் மலர்ந்துள்ளதாக தகவல் பரவி வருகிறது.

மேலும் விஜய்தேவரகொண்டாவுடன் நெருக்கமாக எடுத்த செல்பி புகைப்படத்தை நடிகை சாரா அலிகான் சமீபத்தில் பகிர்ந்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. ஏற்கனவே நடிகை சாரா அலிகான், மறைந்த நடிகர் சுஷாந்த் சிங், இந்தி நடிகர் கார்த்திக் ஆர்யன் ஆகியோரை காதலித்து பின்னர் காதலை முறித்துக்கொண்டதாக கூறப்படுகிறது.
வாலியின் நாடகம் ஒன்றுக்குத் தலைமை தாங்கிய எம்.ஜி.ஆர்., "சென்னைக்கு வாருங்கள். உங்கள் தமிழ், திரை உலகுக்குத் தேவை'' என்று அழைப்பு விடுத்தார்.
வாலியின் நாடகம் ஒன்றுக்குத் தலைமை தாங்கிய எம்.ஜி.ஆர்., "சென்னைக்கு வாருங்கள். உங்கள் தமிழ், திரை உலகுக்குத் தேவை'' என்று அழைப்பு விடுத்தார். ஓவியக் கல்லூரி படிப்பை ஓராண்டுடன் முடித்துக்கொண்ட வாலி,
திருச்சியில் நாடகங்கள் எழுதி மேடை ஏற்றுவதில் முழு மூச்சுடன் ஈடுபட்டார்.
ஸ்ரீரங்கம் உயர்நிலைப்பள்ளியில் இவர் நடத்திய "மிஸ்டர் சந்தோஷம்'' என்ற நாடகத்துக்கு, திரைப்பட நடிகரும், டைரக்டருமான ஜாவர் சீதாராமன் தலைமை தாங்கினார். நாடகத்தை அவர் வானளாவப் புகழ்ந்து பேசியதால், வாலி உற்சாகம் அடைந்தார்.
நாடகங்கள் எழுதியதோடு, "கலைமகள்'', "குமுதம்'' முதலான பத்திரிகைகளில் கதைகளும் எழுதினார், வாலி.
அந்தக் காலத்தில், வானொலியில் எழுத்தாளர்களின் சிறுகதைகளை படிக்கும் நிகழ்ச்சி இடம் பெற்றிருந்தது. வாலி எழுதி அனுப்பிய "வராளி வைகுண்டம்'' என்ற சிறுகதை, வானொலியால் ஏற்றுக்கொள்ளப்பட்டு ஒலிபரப்பப்பட்டது. அந்தக் கதை சிறப்பாக இருந்ததால், தொடர்ந்து கதைகள் எழுதும்படி வானொலி நிலையத்தில் உயர் அதிகாரியாகப் பணியாற்றிய எழுத்தாளரும், கவிஞருமான "துறைவன்'' உற்சாகப்படுத்தினார். அதனால், வாலி நிறைய கதைகளும், நாடகங்களும் வானொலிக்கு எழுதினார்.
வானொலியின் பொங்கல் விழா சிறப்பு நிகழ்ச்சிக்கு பாடல் எழுதினார், வாலி. அந்தப் பாடலை டி.எம்.சவுந்தரராஜன் பாடினார். "நிலவுக்கு முன்னே...'' என்று தொடங்கும் அந்தப் பாடலை டி.எம்.எஸ். வெகுவாக ரசித்தார். "சென்னைக்கு வந்து, திரைப்படத் துறையில் நுழையுங்கள். கவிஞராகப் புகழ் பெறலாம்'' என்று வாலியிடம் கூறினார், டி.எம்.எஸ்.
ரேடியோவில் நாடகங்கள் எழுதி வந்த அதே காலக்கட்டத்தில், மேடை நாடகங்களையும் வாலி தொடர்ந்து எழுதி வந்தார்.
பிற்காலத்தில் எம்.ஜி.ஆரின் மந்திரிசபையில் அமைச்சராக பதவி வகித்த திருச்சி சவுந்தரராஜன், வாலியின் நாடகத்தில் நடித்தவர்.
அம்பிகாபதி -அமராவதி காதலை வைத்து வாலி எழுதிய "கவிஞனின் காதலி'' என்ற நாடகத்தில் திருச்சி சவுந்தரராஜன் அம்பிகாபதியாகவும், புலியூர் சரோஜா அமராவதியாகவும், நடிகை சந்திரகாந்தாவின் சகோதரர் சண்முகசுந்தரம் கம்பராகவும் நடித்தனர்.
வாலி ஸ்ரீரங்கத்தில் இருந்தபோது, இந்த நாடகம் சென்னையில் நடந்தது. திருச்சி சவுந்தரராஜனின் முயற்சியால், இந்த நாடகத்துக்கு எம்.ஜி.ஆர். தலைமை தாங்கினார். மூன்று மணி நேரமும் அமர்ந்து நாடகத்தை பார்த்தார்.
முடிவில், நாடகத்தைப் பாராட்டி எம்.ஜி.ஆர். பேசும்போது, வாலியை வெகுவாக புகழ்ந்தார். "நாடகத்தை எழுதிய வாலி, ஸ்ரீரங்கத்தில் இருக்கிறாராம். அவர் எப்போது சென்னைக்கு வந்தாலும் என்னைப் பார்க்கலாம். அவருடைய தமிழ், சினிமாவுக்குத் தேவை'' என்று குறிப்பிட்டார்.
திருச்சியில் "கோமதிராணி பிக்சர்ஸ்'' என்ற சினிமா கம்பெனியை ராஜ்குமார் என்பவர் தொடங்கி, வாலியின் நாடகம் ஒன்றை படமாக்கும் முயற்சியில் இறங்கினார். அது வெற்றி பெறவில்லை.
ராஜ்குமார் மூலமாக வாலிக்கு எம்.ஏ.ராஜாராம் என்ற திரைப்பட இயக்குனர் அறிமுகமானார். அவர் அவ்வப்போது சென்னையில் இருந்து வாலிக்கு 10 ரூபாய் மணியார்டர் அனுப்புவார். ஸ்ரீரங்கத்தில் வசித்து வந்த வாலி, சென்னைக்கு ரெயிலில் சென்று, ராஜாராம் தயாரிக்கத் திட்டமிட்டிருந்த படத்துக்கு வசனம் எழுதிக் கொடுத்து விட்டு வருவார்.
அப்போது (1956) சில பாடல்களையும் வாலி எழுதினார். அவற்றை சி.என்.பாண்டுரங்கன் இசை அமைப்பில் ஏ.எம்.ராஜா, சீர்காழி கோவிந்தராஜன், சூரமங்கலம் ராஜலட்சுமி ஆகியோர் பாட, ரேவதி ஸ்டூடியோவில் ஒலிப்பதிவு செய்யப்பட்டன.
(ராஜாராம் படம் எடுக்க இயலாததால், இந்தப்பாடல்கள் அப்போது பயன்படுத்தப்படவில்லை. எனினும், பிற்காலத்தில் அவர் தயாரித்த "புரட்சி வீரன் புலித்தேவன்'' என்ற படத்தில் பயன்படுத்திக்கொண்டார்.)
1956-ம் ஆண்டு தீபாவளிக்கு மாடர்ன் தியேட்டர்ஸ் தயாரிப்பான "பாசவலை'' படம் வெளியாயிற்று.
அந்தப் படத்தில் பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் எழுதிய "குட்டி ஆடு தப்பி வந்தா குள்ள நரிக்கு சொந்தம்; குள்ள நரி தப்பி வந்தா குறவனுக்கு சொந்தம்; தட்டுக்கெட்ட மனிதர் கண்ணில் பட்டதெல்லாம் சொந்தம்; சட்டப்படி பார்க்கப்போனா எட்டடிதான் சொந்தம்'' என்ற பாடலில், மனதைப் பறிகொடுத்தார், வாலி.
அதுபற்றி அவர் எழுதியிருப்பதாவது:-
"குணங்குடி மஸ்தானும், சித்தர் பெருமக்களும் யாத்தளித்துள்ள எத்தனையோ தத்துவப் பாடல்களை, அடியேன் அந்த நாளிலேயே அறிவேன். ஆயினும், பாசவலை படப்பாட்டில், பாமரனுக்கும் புரியுமாறு போதிக்கப்பட்டிருந்த தத்துவ வரிகள் இருக்கின்றனவே, அவை ஒரு ஞானக்கோவையை சாறு பிழிந்தெடுத்து, வெள்ளித்திரை மூலம் ஊருக்கெல்லாம் விநியோகித்தது போலிருந்தது.
இந்தப் பாடல்களை எழுதியிருந்தவர் பட்டுக்கோட்டை. அடேயப்பா! சவுக்கெடுத்து சொடுக்கி விட்டது போல என்ன சொல் வீச்சு? அசந்து போனேன். அன்றைய படவுலகுக்குப் புதிய வரவான பட்டுக்கோட்டையின் மேல், என்னையும் அறியாமலே காதலாகி கசிந்துருகிப்போனேன்.
பாசவலை படத்தை, பத்து தடவை பார்த்தேன்; பாடல்களுக்காகத்தான்!
பட்டுக்கோட்டையின் பாடல், என்னுள் பூசிக் கிடந்த சிறுகதை எழுதும் ஆசை, ஓவியம் வரையும் ஆசை, நாடகம் எழுதும் ஆசை அனைத்தையும் ஒருசேர ஒரே நாளில் கழுவி விட்டது.
பாடல்கள் எழுத வேண்டும், அதுவும் படப்பாடல்களை எழுத வேண்டும், இந்த முயற்சியையே ஒரு தவமாகப் பழகி, இதில் காரியசித்தி பெற வேண்டும் என்னும் புதியதோர் வேட்கை வேர்விட்டது.''
இவ்வாறு வாலி எழுதியுள்ளார்.
"பாசவலை'' படத்தில் எம்.கே.ராதா, ஜி.வரலட்சுமி, எம்.என்.ராஜம் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்திருந்தாலும், இளம் கதாநாயகனாக நடித்தவர் வி.கோபாலகிருஷ்ணன்.
அவர் நடிப்பு வாலிக்கு மிகவும் பிடித்திருந்தது. அவரை பாராட்டி கடிதம் எழுதினார். அதற்கு கோபாலகிருஷ்ணன் பதில் எழுதினார்.
கடிதப் போக்குவரத்து, அவர்கள் இடையே நட்புறவை வளர்த்தது. இந்த நட்புறவு, வாலியின் திரை உலகப் பிரவேசத்துக்கு வழி வகுத்தது.
தமிழில் ஒரு சில படங்களில் நடித்த தேஜ், தற்போது ரீவைண்ட் என்ற படம் மூலம் மீண்டும் தமிழுக்கு திரும்பி இருக்கிறார்.
தமிழில் கேடி குஞ்சுமோன் தயாரித்த காதலுக்கு மரணமில்லை படத்தில் அறிமுகமானவர் நடிகர் தேஜ். அதை தொடர்ந்து கொஞ்சம் வெயில் கொஞ்சம் மழை, காந்தம் ஆகிய படங்களில் நடித்தார். இயக்குநர், தயாரிப்பளர் என பன்முகம் கொண்ட இவர், தற்போது ‘ரீவைண்ட்’ என்கிற படத்தை தமிழ் மற்றும் கன்னடம் என, இருமொழி படமாக தயாரித்து இயக்கியுள்ளார். இந்தப்படம் வரும் ஏப்-16ஆம் தேதி ரிலீஸாகிறது.
அதுமட்டுமல்ல சுமார் நாற்பது கோடி பட்ஜெட்டில் இந்தியா முழுமைக்குமான காட் என்ற படத்தை இயக்கவுள்ளார் தேஜ்.
ரஜினி நடித்த பில்லா படத்தை தாண்டிய ஒரு படமாக, அதாவது 2021ல் பில்லா போன்ற ஒரு டான் இருந்தால் அவன் எப்படி இருப்பான் என்பதை மையப்படுத்தி இந்த படம் உருவாகிறது.

இந்த படத்தின் நட்சத்திர தேர்வு நடைபெற்று வருகிறது. கதாநாயகியாக ஹாலிவுட் கதாநாயகி ஒருவரை நடிக்க வைக்க பேசி வருகிறார்கள். விரைவில் இந்த படத்தின் படப்பிடிப்பு தொடங்க இருக்கிறது.
பரியேறும் பெருமாள் திரைப்படம் மூலம் பலருடைய கவனத்தை ஈர்த்த இயக்குனர் மாரி செல்வராஜ்க்கு குழந்தை பிறந்துள்ளது.
தமிழ் சினிமாவில் பரியேறும் பெருமாள் என்ற படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் மாரி செல்வராஜ். தனது முதல் படத்திலையே ரசிகர்களின் மனதில் இடம் பிடித்த இவர் தற்போது தனுஷின் கர்ணன் படத்தினை இயக்கி முடித்துள்ளார். இந்த திரைப்படம் ஏப்ரல் 9-ம் தேதி வெளியிட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
அதனை தொடர்ந்து மாரி செல்வராஜ் அடுத்ததாக துருவ் விக்ரம் நடிக்கும் படத்தினை இயக்க உள்ளார். சமீபத்தில் மாரி செல்வராஜின் மனைவி திவ்யாவிற்கு வளைக்காப்பு நிகழ்ந்துள்ளது. இந்நிலையில் அவர்களுக்கு ஆண் குழந்தை பிறந்துள்ளது. இதற்கு ரசிகர்கள் பலரும் வாழ்த்து தெரிவித்து வருகிறார்கள்.

ஏற்கனவே இவர்களுக்கு ஒரு பெண் குழந்தை உள்ள நிலையில், தற்போது இரண்டாவது ஆண் குழந்தை பிறந்துள்ளது.
முன்னணி இசையமைப்பாளராக இருக்கும் ஏ.ஆர்.ரகுமானின் முக்கியமான நாளான இன்று ரசிகர்கள் பலரும் வாழ்த்துகளை தெரிவித்து வருகிறார்கள்.
'ரோஜா' திரைப்படம் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமாகி திறமையை நிரூபித்தவர் ஏ.ஆர்.ரகுமான். இவர் 'ஸ்லம்டாக் மில்லியனர்' படத்திற்காக இரண்டு ஆஸ்கார் விருதுகளைப் பெற்று இந்தியாவுக்கு பெருமை சேர்த்தார். மேலும் பல விருதுகளையும் பெற்றுள்ளார். இவரது இசைக்கு உலகம் முழுவதும் ரசிகர்கள் இருக்கிறார்கள்.
ஏ.ஆர்.ரகுமான் தனது மனைவியுடன் திருமண நாளை இன்று கொண்டாடி வருகிறார். இது இவர்களின் 25வது திருமண நாள். இந்த சிறப்பு தினத்தை முன்னிட்டு, மனைவியுடன் தான் இருக்கும் அழகியப் படத்தை வெளியிட்டு அதில் ’25 + 1’ எனக் குறிப்பிட்டுள்ளார். இதைப்பார்த்த ரசிகர்கள் அவருக்கு வாழ்த்துகளை தெரிவித்து வருகிறார்கள்.
25+1 ======🌺🎂🎻 pic.twitter.com/NXdS8l50aJ
— A.R.Rahman (@arrahman) March 12, 2021
ஏ.ஆர்.ரகுமான் மற்றும் சைரா பானு ஆகியோருக்கு கதீஜா ரகுமான், ரஹிமா ரகுமான் மற்றும் அமீன் ரகுமான் ஆகிய மூன்று குழந்தைகள் இருக்கிறார்கள்.
பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் மிகவும் பிரபலமான தர்ஷன் மற்றும் லாஸ்லியா இருவரும் முதல் கட்டத்தை முடித்து அடுத்த கட்டத்திற்கு செல்ல இருக்கிறார்கள்.
பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் மிகவும் பிரபலமானவர்கள் தர்ஷன் - லாஸ்லியா. இவர்கள் இருவரும் இணைந்து ‘குகூள் குட்டப்பன்’ என்ற படத்தில் நடித்து வருகிறார்கள். இந்த படத்தை கே.எஸ்.ரவிகுமார் தயாரிப்பதோடு, தர்ஷனின் தந்தை கதாபாத்திரத்திலும் நடிக்கிறார்.
மலையாளத்தில் கடந்த 2019-ம் ஆண்டு வெளியாகி சூப்பர் ஹிட்டான ‘ஆன்ட்ராய்டு குஞ்சப்பன் வெர்ஷன் 5.25’ என்ற படத்தின் தமிழ் ரீமேக்காக இப்படம் உருவாகி வருகிறது. சமீபத்தில் பூஜையுடன் தொடங்கிய இப்படத்தின் முதல் கட்ட படப்பிடிப்பு தற்போது முடிந்துள்ளதாக படக்குழுவினர் அறிவித்துள்ளனர்.

இப்படத்தில் நகைச்சுவை நடிகர் யோகிபாபு, யூடியூப் பிரபலம் ராகுல் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். அறிமுக இயக்குனர்கள் சரவணன், சபரி ஆகியோர் இப்படத்தை இயக்கி வருகின்றனர். ஜிப்ரான் இப்படத்திற்கு இசையமைக்கிறார்.
பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு பல படங்களில் பிசியாக இருக்கும் யாஷிகா ஆனந்த், பாம்பை தோளில் போட்டு தடவிய வீடியோ ஒன்று வைரலாகி வருகிறது.
தமிழில் கவலை வேண்டாம் படம் மூலம் அறிமுகமானவர் யாஷிகா ஆனந்த். இவர் கவர்ச்சியாக நடித்த இருட்டு அறையில் முரட்டு குத்து திரைப்படம் அவருக்கு திருப்புமுனையாக அமைந்தது. மேலும் இவர் பாடம், துருவங்கள் பதினாறு, உள்ளிட்ட படங்களிலும் நடித்து இருக்கிறார்.
கமல் தொகுத்து வழங்கிய பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்று மிகவும் பிரபலமானார். தற்போது கடமையை செய், பாம்பாட்டம், சல்பர் ஆகிய படங்களில் நடித்து வரும் யாஷிகா, சமூக வலைத்தள பக்கத்தில் தனது கவர்ச்சி புகைப்படங்களை தொடர்ந்து வெளியிட்டு வருகிறார்.
தற்போது வீடியோ ஒன்றை பதிவு செய்திருக்கிறார். அதில், துபாய் பார்க்கில் இருக்கும் ஒட்டகம் மற்றும் கரடிக்கு உணவு கொடுப்பது, சிங்கத்தை கயிறு கட்டி இழுப்பது, பாம்பை தோளில் தூக்குவது என்று விலங்குகளுடன் கொஞ்சி விளையாடும் வீடியோவை வெளியிட்டு இருக்கிறார். இந்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.






