என் மலர்
- கள்ளச்சாராய உயிரிழப்பு தொடர்பான வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டது.
- கள்ளச்சாராய விற்பனையில் ஈடுபட்ட அனைவரையும் கைது செய்ய முதல்வர் முக ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.
கள்ளச்சாராயம் அருந்தி உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 14 ஆக அதிகரித்து இருக்கிறது. மேலும் சிலருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில், முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனையில் கள்ளச்சாராயம் அருந்தியதால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருபவர்களை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று (மே 15) நேரில் சென்று சந்தித்து நலம் விசாரித்தார்.
கள்ளச்சாராய உயிரிழப்பு தொடர்பான வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றப்படும் என்றும், இதனை கண்காணிக்க தவறியவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று முதல்வர் முக ஸ்டாலின் தெரிவித்தார். இதோடு கள்ளச்சாராய விற்பனையில் ஈடுபட்ட அனைவரையும் கைது செய்யவும், பாதிக்கப்பட்டவர்களுக்கு முறையான சிகிச்சை அளிக்கவும் உத்தரவிட்டுள்ளார்.
இந்த நிலையில், கள்ளச்சாராய உயிரிழப்பு தொடர்பாக விழுப்புரம் எஸ்பி ஸ்ரீநாதா மற்றும் செங்கல்பட்டு எஸ்பி பிரதீப் ஆகியோரை பணிநீக்கம் செய்து முதல்வர் முக ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.
- எக்ஸ்பல்ஸ் 200 4V மாடலின் குறிப்பிடத்தக்க மாற்றமாக புதிய எல்இடி ஹெட்லைட் இருக்கும்.
- இத்துடன் மூன்று நிலைகளில் அட்ஜஸ்ட் செய்யக்கூடிய ஏபிஎஸ் சென்சிடிவிட்டி வழங்கப்படுகிறது.
ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனம் தனது எக்ஸ்பல்ஸ் 200 4V மாடல் விரைவில் அப்டேட் செய்யப்பட இருப்பதை புதிய டீசர்களின் மூலம் உறுதிப்படுத்தி இருக்கிறது. அந்த வகையில் மேம்பட்ட புதிய மாடலில் ரிடிசைன் செய்யப்பட்ட எல்இடி ஹெட்லைட், பல்வேறு நிலைகளில் ஏபிஎஸ் போன்ற அம்சங்கள் வழங்கப்படும் என்று தெரியவந்துள்ளது.
எக்ஸ்பல்ஸ் 200 4V மாடலின் குறிப்பிடத்தக்க மாற்றமாக புதிய எல்இடி ஹெட்லைட் இருக்கும் என்று தெரிகிறது. இந்த யூனிட்டில் H வடிவம் கொண்ட ரிடிசைன் செய்யப்பட்ட டேடைம் ரன்னிங் லைட்கள் வழங்கப்படுகின்றன. இத்துடன் டூயல் சேனல் ஏபிஎஸ் வழங்கப்படும் என்று தெரிகிறது. இத்துடன் மூன்று நிலைகளில் அட்ஜஸ்ட் செய்யக்கூடிய ஏபிஎஸ் சென்சிடிவிட்டி - ரோடு, ஆஃப்-ரோடு மற்றும் ரேலி வழங்கப்படுகிறது.
இதன் ரோடு வெர்ஷன் வழக்கமான டூயல் சேனல் ஏபிஎஸ் செட்டப் கொண்டிருக்கும் என்று தெரிகிறது. இரண்டு முக்கிய மாற்றங்கள் தவிர, இந்த மாடலின் தோற்றம் அதன் தற்போதைய வெர்ஷனை போன்றே காட்சியளிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ஹீரோ எக்ஸ்பல்ஸ் 200 4V மாடலில் 199.6சிசி ஏர்/ஆயில் கூல்டு என்ஜின் வழங்கப்பட்டு இருக்கிறது. இந்த என்ஜின் 19.1 ஹெச்பி பவர், 17.35 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்துகிறது. இந்த மாற்றங்களின் மூலம் ஹீரோ எக்ஸ்பல்ஸ் 200 4V மாடலின் விலை தற்போதைய வெர்ஷனை விட அதிகமாக நிர்ணயம் செய்யப்படும் என்றே தெரிகிறது.
- இம்மாத துவக்கத்தில் ஹோண்டா நிறுவனம் பதிய எஸ்யுவி மாடல் பெயரை அறிவித்தது.
- இந்த காரில் ஹோண்டா சிட்டி மாடலில் உள்ளதை போன்ற என்ஜின் வழங்கப்படுகிறது.
ஹோண்டா நிறுவனம் தனது புதிய மிட்சைஸ் எஸ்யுவி மாடல், எலிவேட் எனும் பெயரில் இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்பட இருப்பதை உறுதிப்படுத்தியது. இதைத் தொடர்ந்து புதிய எலிவேட் எஸ்யுவி மாடல் ஜூன் 6 ஆம் தேதி அறிமுகம் செய்யப்படும் என்று அறிவித்து இருக்கிறது. புதிய ஹோண்டா எலிவேட் எஸ்யுவி மாடல் ஹூண்டாய் கிரெட்டா, கியா செல்டோஸ், மாருதி சுசுகி கிராண்ட் விட்டாரா போன்ற மாடல்களுக்கு போட்டியாக அமைகிறது.

இம்மாத துவக்கத்தில் ஹோண்டா நிறுவனம் பதிய எஸ்யுவி மாடல் பெயரை அறிவித்தது. இதைத் தொடர்ந்து எலிவேட் எஸ்யுவி ஸ்பை படங்கள் இணையத்தில் வெளியாகின. புதிய எலிவேட் மாடல் 360 டிகிரி கேமரா, பெரிய டச் ஸ்கிரீன் இன்ஃபோடெயின்மெண்ட் சிஸ்டம், ஆட்டோமேடிக் கிளைமேட் கண்ட்ரோல், குரூயிஸ் கண்ட்ரோல் மற்றும் சன்ரூஃப் போன்ற அம்சங்களை கொண்டிருக்கும் என்று தெரிகிறது.
காரின் வெளிப்புறம் எல்இடி ஹெட்லேம்ப்கள், டெயில் லைட்கள், எல்இடி டிஆர்எல்கள், ஷார்க் ஃபின் ஆண்டெனா, ரியர் வைப்பர் மற்றும் வாஷர், ரூஃப் ரெயில்கள் வழங்கப்படுகின்றன. இந்த காரில் ஹோண்டா சிட்டி மாடலில் உள்ளதை போன்ற என்ஜின் வழங்கப்படும் என்று கூறப்படுகிறது. இத்துடன் ஹைப்ரிட் பவர்டிரெயின், ADAS சூட் உள்ளிட்டவை வழங்கப்படுகிறது.







