டென்னிஸ்

எலீனா ரிபாகினா

பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் போட்டி - 2வது சுற்றுக்கு முன்னேறினார் ரிபாகினா, ஸ்வியாடெக்

Update: 2023-05-30 21:41 GMT
  • பிரெஞ்சு ஓபன் டென்னிசில் போலந்து வீராங்கனை இகா ஸ்வியாடெக் வென்றார்.
  • உலகின் 8-ம் நிலை வீராங்கனையான கிரீஸ் நாட்டின் மரியா சக்காரி அதிர்ச்சிகரமாக தோல்வி அடைந்தார்.

பாரீஸ்:

நான்கு வகையான கிராண்ட்ஸ்லாம் என்ற உயரிய அந்தஸ்து பெற்ற டென்னிஸ் போட்டி ஆண்டுதோறும் நடந்து வருகிறது. இதில் இரண்டாவதாக நடைபெறும் பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் தொடர் பிரான்ஸ் தலைநகர் பாரீசில் தொடங்கி நடைபெற்று வருகிறது.

முதல் சுற்று ஆட்டத்தில் கஜகஸ்தான் வீராங்கனை எலீனா ரிபாகினா, செக் வீராங்கனை பிரெண்டாவுடன் மோதினார். இதில் ரிபாகினா 6-4, 6-2 என்ற செட் கணக்கில் வென்று இரண்டாவது சுற்றுக்கு முன்னேறினார்.

மற்றொரு ஆட்டத்தில் போலந்து வீராங்கனை இகா ஸ்வியாடெக், ஸ்பெயின் வீராங்கனை கிறிஸ்டினாவுடன் மோதினார். இதில் ஸ்வியாடெக் 6-4, 6-0 என்ற செட் கணக்கில் எளிதில் வென்று அடுத்த சுற்றுக்கு முன்னேறினார்.

Tags:    

Similar News