டென்னிஸ்

டேனில் மெத்வதேவ்

பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் - முதல் சுற்றில் மெத்வதேவ் அதிர்ச்சி தோல்வி

Update: 2023-05-30 17:17 GMT
  • பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் தொடரின் முதல் சுற்றில் ரஷிய வீரர் மெத்வதேவ் பிரேசில் வீரருடன் மோதினார்.
  • இதில் உலகின் நம்பர் 2 வீரரான மெத்வதேவ் அதிர்ச்சி தோல்வி அடைந்தார்.

பாரீஸ்:

கிராண்ட்ஸ்லாம் அந்தஸ்து பெற்ற பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் போட்டி பாரீஸ் நகரில் நடந்து வருகிறது. களிமண் தரை போட்டியான இதில் இன்றும் முதல் சுற்று ஆட்டங்கள் நடந்தன.

ஆண்கள் ஒற்றையர் பிரிவில் உலகின் நம்பர் 2 வீரரான ரஷியாவின் டேனில் மெத்வதேவ், 172-ம் நிலை வீரரான பிரேசிலின் தியாகோ செபோத் வைல்டுடன் மோதினார்.

முதல் செட்டை தியாகோ 7-6 என கைப்பற்றினார். இரண்டாவது மற்றும் மூன்றாவது செட்டை மெத்வதேவ் 7-6, 6-2 என வென்று பதிலடி கொடுத்தார்.

இதையடுத்து சுதாரித்துக் கொண்ட தியாகோ 4 மற்றும் 5வது செட்டை 6-3, 6-4 என வென்று அடுத்த சுற்றுக்கு முன்னேறினார்.

சுமார் 4 மணி 15 நிமிடங்கள் நடைபெற்ற இந்த ஆட்டத்தில் உலகின் நம்பர் 2 வீரரான மெத்வதேவ் முதல் சுற்றில் தோல்வி அடைந்து வெளியேறினார்.

Tags:    

Similar News