தொழில்நுட்பம்
ஆப்பிள் மெரினா பே சாண்ட்ஸ்

பயன்பாட்டிற்கு வந்தது தண்ணீரில் மிதக்கும் ஆப்பிள் ஸ்டோர்

Published On 2020-09-14 09:29 IST   |   Update On 2020-09-14 18:37:00 IST
உலகின் முதல் மிதக்கும் ஆப்பிள் ஸ்டோர் மெரினா பே சாண்ட்ஸ் எனும் பெயரில் சிங்கப்பூரில் திறக்கப்பட்டு உள்ளது.

ஆப்பிள் நிறுவனம் தண்ணீரில் மிதக்கும் ஆப்பிள் ஸ்டோரை சிங்கப்பூரில் திறந்துள்ளது. இது மெரினா பே சாண்ட்ஸ் என அழைக்கப்படுகிறது. தண்ணீரில் மிதக்கும் இந்த ஆப்பிள் ஸ்டோர் அழகிய உருளை வடிவம் கொண்டு கண்ணாடி குவிமாடத்தால் உருவாக்கப்பட்டு இருக்கிறது.

சிங்கப்பூரில் இது ஆப்பிள் நிறுவனத்தின் மூன்றாவது விற்பனையகம் ஆகும். முற்றிலும் தண்ணீரின் மேல் மிதக்கும் இந்த விற்பனையகம் நகரின் அழகை முற்றிலும் வேறொரு கோணத்தில் பார்த்து ரசிக்க வழி செய்கிறது. 



உருளை வடிவம் கொண்ட மிதக்கும் விற்பனையகத்தில் மொத்தம் 114 கண்ணாடி துண்டுகளும், செங்குத்தாக நிற்கும் பத்து தூண்களும் பயன்படுத்தப்பட்டு இருக்கின்றன. இதன் உள்புறம் ரம்மியமான லைட்னிங் பெறும் வகையில் மிக நேர்த்தியாக வடிவமைக்கப்பட்டுள்ளது.

ஆப்பிள் மெரினா பே சாண்ட்ஸ் விற்பனையகத்தில் 23 மொழிகளில் பேசும் திறன் கொண்ட சுமார் 150 ஊழியர்கள் வாடிக்கையாளற்களை வரவேற்கின்றனர்.

Similar News