தொழில்நுட்பம்
ஆப்பிள்

புதிய உச்சம் தொட்ட ஆப்பிள் சந்தை மதிப்பு

Published On 2020-08-20 14:41 IST   |   Update On 2020-08-20 14:41:00 IST
ஆப்பிள் நிறுவனத்தின் சந்தை மதிப்பு புதிய உச்சத்தை தொட்டிருக்கிறது. இதன் விவரங்களை பார்ப்போம்.


ஆப்பிள் நிறுவனத்தின் சந்தை மதிப்பு 2 டிரில்லியன் டாலர்கள் அதாவது இந்திய மதிப்பில் சுமார் ரூ. 150 லட்சம் கோடியை கடந்துள்ளது. அமெரிக்க பங்கு சந்தையில் இத்தகைய மைல்கல் எட்டிய முதல் நிறுவனம் என்ற பெருமையை ஆப்பிள் பெற்று இருக்கிறது. 

முன்னதாக 2018 ஆம் ஆண்டு ஆப்பிள் நிறுவனத்தின் சந்தை மதப்பு 1 டிரில்லியன் அதாவது இந்திய மதிப்பில் சுமார் ரூ. 75 லட்சம் கோடி என கணக்கிடப்பட்டது. நேற்று ஆப்பிள் நிறுவனத்தின் ஒரு பங்கின் விலை 468.65 டாலர்களாக இருந்தது. அந்த வகையில் ஆப்பிள் நிறுவன சந்தை மதிப்பு 2 டிரில்லியன் டாலர்கள் என கணக்கிடப்பட்டது.



ஆப்பிள் நிறுவனம் துவங்கி 42 ஆண்டு ஆண்டுகள் கழித்து 1 டிரில்லியன் டாலர்கள் சந்தை மதிப்பை எட்டியது. பின் இரண்டே வருடங்களில் (23 வாரங்கள்) இதன் மதிப்பு 2 டிரில்லியன் டாலர்களாக அதிகரித்து இருக்கிறது.  

சவுதி அரேபியாவை சேர்ந்த அராம்கோ எனும் கச்சா எண்ணெய் நிறுவனம் கடந்த ஆண்டு டிசம்பரில் 2 டிரில்லியன் டாலர்கள் அளவு சந்தை மதிப்பை தொட்டது. எனினும், தற்சமயம் இதன் சந்தை மதிப்பு 1.8 டிரில்லியன் ஆகவே உள்ளது. அந்த வகையில் அமெரிக்க சந்தையில் 2 டிரில்லியன் டாலர்களை எட்டும் முதல் நிறுவனமாக ஆப்பிள் இருக்கிறது.

ஆப்பிள் நிறுவனத்திற்கு அடுத்த இடத்தில் அமேசான் மற்றும் மைக்ரோசாப்ட் போன்ற நிறுவனங்கள் சுமார் 1.6 டிரில்லியன் சந்தை மதிப்பை கொண்டுள்ளன. கூகுளின் தாய் நிறுவனமான ஆல்பபெட் சுமார் 1 டிரில்லியன் டாலர் சந்தை மதிப்பை எட்டியுள்ளது.

Similar News