தொழில்நுட்பம்
ரெட்மி நோட் 11டி 5ஜி

ஜியோவுடன் இணைந்து 5ஜி சோதனை நடத்தும் ரெட்மி

Published On 2021-11-22 10:50 GMT   |   Update On 2021-11-22 10:50 GMT
ரெட்மி இந்தியா நிறுவனம் ரிலையன்ஸ் ஜியோவுடன் இணைந்து 5ஜி சோதனைகளை நடத்தி வருகிறது.


ரெட்மி இந்தியா நிறுவனம் ரிலையன்ஸ் ஜியோவுடன் இணைந்து 5ஜி சோதனையை நடத்தி வருகிறது. 5ஜி சோதனை ரெட்மி நோட் 11டி 5ஜி ஸ்மார்ட்போனில் நடத்தப்படுகிறது. இந்தியாவில் ரெட்மி நோட் 11டி 5ஜி ஸ்மார்ட்போன் நவம்பர் 30 ஆம் தேதி அறிமுகமாக இருக்கிறது.

இரு நிறுவனங்கள் இணைந்து புதிய ரெட்மி ஸ்மார்ட்போனில் 5ஜி தொழில்நுட்பத்தை பல்வேறு நிலைகளில் சோதனை செய்ததாக தெரிவித்துள்ளன. இதன் மூலம் பயனர்களுக்கு மேம்பட்ட 5ஜி அனுபவம் கிடைக்கும் என இரு நிறுவனங்களும் தெரிவித்து இருக்கின்றன.



புதிய ரெட்மி நோட் 11டி 5ஜி ஸ்மார்ட்போன் மொத்தத்தில் ஏழு 5ஜி பேண்ட்களை சப்போர்ட் செய்யும். தற்போதைய சோதனைகளில் அதிவேக டவுன்லோட் வேகம் கிடைத்ததாக இரு நிறுவனங்களும் தெரிவித்துள்ளன. இது ஏற்கனவே சீன சந்தையில் ரெட்மி நோட் 11 5ஜி பெயரிலும், ஐரோப்பிய சந்தையில் போக்கோ எம்4 ப்ரோ 5ஜி பெயரிலும் அறிமுகம் செய்யப்பட்ட ஸ்மார்ட்போனாக இருக்கலாம் என கூறப்படுகிறது.
Tags:    

Similar News