தொழில்நுட்பம்
ரெட்மி நோட் 11

60 நிமிடங்களில் இத்தனை லட்சம் யூனிட்களா? விற்பனையில் அசத்திய ரெட்மி நோட் 11 சீரிஸ்

Update: 2021-11-01 15:31 GMT
ரெட்மியின் சமீபத்திய நோட் 11 சீரிஸ் மாடல்கள் விற்பனையில் அமோக வரவேற்பை பெற்று இருக்கிறது.


சியோமியின் ரெட்மி பிராண்டு சமீபத்தில் நோட் 11 சீரிஸ் ஸ்மார்ட்போன்களை சீன சந்தையில் அறிமுகம் செய்தது. ரெட்மி நோட் 11, நோட் 11 ப்ரோ மற்றும் நோட் 11 ப்ரோ பிளஸ் என மூன்று மாடல்கள் ரெட்மி நோட் 11 சீரிசில் அறிமுகமாகி இருக்கிறது.

இன்று ரெட்மி நோட் 11 சீரிஸ் ஸ்மார்ட்போன்களின் விற்பனை சீனாவில் துவங்கியது. இதில் ஒரு மணி நேரத்திற்குள் 5 லட்சத்திற்கும் அதிக யூனிட்கள் விற்கப்பட்டதாக ரெட்மி அறிவித்தது. இதைத் தொடர்ந்து டபுள் 11 விற்பனை துவங்கிய 1 நிமிடம் 45 நொடிகளில் 2 பில்லியன் யுவான்களுக்கும் அதிக மதிப்புள்ள பொருட்களை ரெட்மி விற்பனை செய்தது.அம்சங்களை பொருத்தவரை ரெட்மி நோட் 11 மாடலில் 6.6 இன்ச் எல்.சி.டி. ஸ்கிரீன், 90 ஹெர்ட்ஸ் ரிப்ரெஷ் ரேட், எப்.ஹெச்.டி. பிளஸ் ஸ்கிரீன், மீடியாடெக் டிமென்சிட்டி 810 5ஜி சிப்செட் வழங்கப்பட்டு இருக்கிறது. ரெட்மி நோட் 11 ப்ரோ மற்றும் ப்ரோ பிளஸ் மாடல்களில் மீடியாடெக் டிமென்சிட்டி 920 5ஜி சிப்செட் வழங்கப்பட்டுள்ளது.
Tags:    

Similar News