தொழில்நுட்பம்
ஒப்போ எப்19எஸ்

அடுத்த வாரம் இந்தியா வரும் ஒப்போ ஸ்மார்ட்போன்

Update: 2021-09-22 10:54 GMT
ஒப்போ நிறுவனத்தின் புதிய எப்19எஸ் ஸ்மார்ட்போன் 5000 எம்.ஏ.ஹெச். பேட்டரி கொண்டிருக்கிறது.


ஒப்போ நிறுவனம் தனது எப்19எஸ் ஸ்மார்ட்போன் இந்தியாவில் செப்டம்பர் 27 ஆம் தேதி அறிமுகமாகும் என அறிவித்துள்ளது. இந்த ஸ்மார்ட்போன் 5000 எம்.ஏ.ஹெச். பேட்டரி, 33 வாட் பாஸ்ட் சார்ஜிங் வசதி கொண்டிருக்கிறது.

இது ஏ.ஜி. ஷிம்மெரிங் சேண்ட் தொழில்நுட்பம் கொண்ட இந்தியாவின் முதல் ஸ்மார்ட்போன் ஆகும். இந்த ஸ்மார்ட்போன் குளோயிங் கோல்டு நிறத்தில் கிடைக்கிறது. இதன் மற்ற அம்சங்கள் ஒப்போ எப்19 மாடலில் உள்ளதை போன்றே வழங்கப்படுகிறது.அதன்படி ஒப்போ எப்19 மாடலில் 6.43 இன்ச் புல் ஹெச்.டி. பிளஸ் சூப்பர் ஆமோலெட் ஸ்கிரீன், இன்-டிஸ்ப்ளே கைரேகை சென்சார், 16 எம்பி செல்பி கேமரா, ஸ்னாப்டிராகன் 662 பிராசஸர், 48 எம்பி பிரைமரி கேமரா, 2 எம்பி டெப்த் கேமரா, 2 எம்பி மேக்ரோ கேமரா வழங்கப்படுகிறது.

Tags:    

Similar News