தொழில்நுட்பம்
ரெட்மி கே40

இந்த ஸ்மார்ட்போன் போக்கோ 5ஜி மாடலாக வெளியாகும் என தகவல்

Published On 2021-02-26 07:48 GMT   |   Update On 2021-02-26 07:48 GMT
இந்த ஸ்மார்ட்போன் போக்கோ 5ஜி மாடலாக அறிமுகம் செய்யப்படலாம் என தகவல் வெளியாகி உள்ளது.


ரெட்மி கே40 ஸ்மார்ட்போன் சர்வதேச சந்தையில் போக்கோ போன் மாடலாக அறிமுகம் செய்யப்படலாம் என தகவல் வெளியாகி உள்ளது. சீன சந்தையில் ரெட்மி கே40 சீரிஸ் நேற்று (பிப்ரவரி 25) அறிமுகம் செய்யப்பட்ட நிலையில் இந்த தகவல் வெளியாகி இருக்கிறது. ரெட்மி கே40 சீரிஸ்- ரெட்மி கே40, கே40 ப்ரோ மற்றும் கே40 ப்ரோ பிளஸ் என மூன்று மாடல்களை கொண்டது.

தற்சமயம் ரெட்மி கே40 மாடல் நம்பரை தழுவிய மற்றொரு ஸ்மார்ட்போன் போக்கோ பிராண்டிங்குடன் சான்றளிக்கும் வலைதளத்தில் இடம்பெற்று இருக்கிறது. அந்த வகையில் இந்த ரெட்மி ஸ்மார்ட்போன் சர்வதேச சந்தையில் ரி-பிராண்டு செய்யப்பட்டு போக்கோ மாடலாக வெளியிடப்படலாம். முன்னதாக பல மாடல்கள் இவ்வாறு ரி-பிராண்டு செய்யப்பட்டு அறிமுகமாகி இருக்கின்றன.



புதிய தகவல்களில் M2012K11 AG எனும் மாடல் நம்பர் கொண்ட ஸ்மார்ட்போன் போக்கோ பிராண்டிங் கொண்டிருக்கிறது. இது ரெட்மி கே40 மாடல் அம்சங்களை கொண்டிருக்கும் என தெரிகிறது. சீன சந்தையில் அறிமுகம் செய்யப்பட்ட ரெட்மி கே40 சர்வதேச வெளியீடு பற்றி எந்த தகவலும் வழங்கப்படவில்லை. புதிய ஸ்மார்ட்போன் பற்றி போக்கோ சார்பில் எந்த தகவலும் வழங்கப்படவில்லை.
Tags:    

Similar News