தொழில்நுட்பம்
ஏர்டெல்

பயனர் விவரங்கள் லீக் ஆனதா ? ஏர்டெல் விளக்கம்

Published On 2021-02-04 06:56 GMT   |   Update On 2021-02-04 06:56 GMT
ஏர்டெல் நிறுவனம் தனது பயனர் விவரங்கள் வெளியானதாக கூறும் தகவல்களுக்கு பதில் அளித்து இருக்கிறது.


இணையத்தில் பயனர் விவரங்கள் அம்பலமாகும் சம்பவங்கள் நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே வருகிறது. தனிநபர் துவங்கி ஒவ்வொரு நிறுவனங்களும் டேட்டாவை பாதுகாப்பாக வைத்துக் கொள்ள பெரும் முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றன.

இந்த நிலையில், ஏர்டெல் பயனர் விவரங்கள் இணையத்தில் வெளியானதாக தகவல் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதில் ஏர்டெல் வாடிக்கையாளர்களில் சுமார் 26 லட்சம் பேர் பாதிக்கப்பட்டதாகவும் கூறப்பட்டது.



இத்தனை லட்சம் ஏர்டெல் வாடிக்கையாளர்களின் முகவரி, நகரம், ஆதார் எண் மற்றும் பாலிணம் போன்ற விவரங்கள் இணையத்தில் விற்பனைக்கு வைக்கப்பட்டு இருந்ததாக கூறப்பட்டது.

இதுகுறித்து பதில் அளித்த ஏர்டெல் நிறுவனம், பயனர் விவரங்கள் வெளியானதாக கூறும் தகவல்களில் துளியும் உண்மையில்லை என திட்டவட்டமாக தெரிவித்து உள்ளது. இணையத்தில் விற்பனைக்கு வந்ததாக கூறும் விவரங்கள் ஏர்டெல் நிறுவனத்திற்கு சொந்தமானவை கிடையாது என அந்நிறுவனம் மேலும் தெரிவித்தது.

வாடிக்கையாளர்களின் விவரங்களை பாதுகாப்பதில் ஏர்டெல் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருவது பெருமையாக உணர்கிறது என்றும் அந்நிறுவனம் தெரிவித்தது. இதுகுறித்து சம்மந்தப்பட்ட அதிகாரிகளுக்கு தகவல் கொண்டு சேர்க்கப்பட்டதாகவும் ஏர்டெல் தெரிவித்துள்ளது.
Tags:    

Similar News