தொழில்நுட்பம்
பிஎஸ்என்எல்

ரூ. 485 விலையில் புதிய பிஎஸ்என்எல் சலுகை அறிவிப்பு

Published On 2021-02-01 09:36 IST   |   Update On 2021-02-01 09:36:00 IST
ரூ. 485 விலையில் புதிய பிரீபெயிட் சலுகையை பிஎஸ்என்எல் அறிமுகம் செய்து இருக்கிறது. இதன் விவரங்களை பார்ப்போம்.


பிஎஸ்என்எல் நிறுவனம் ரூ. 485 விலையில் புதிய பிரீபெயிட் சலுகையை அறிவித்து உள்ளது. இந்த சலுகை 90 நாட்கள் வேலிடிட்டி கொண்டுள்ளது. மேலும் இதில் தினமும் 1.5 ஜிபி டேட்டா வழங்கப்படுகிறது.

டேட்டா மட்டுமின்றி அன்லிமிடெட் வாய்ஸ் கால், தினமும் 100 எஸ்எம்எஸ் உள்ளிட்ட பலன்களும் வழங்கப்படுகிறது. முன்னதாக பிஎஸ்என்எல் காம்போ சலுகை பலன்கள் மாற்றப்பட்டு தினமும் 250 நிமிடங்களுக்கு வாய்ஸ் கால் வழங்கப்பட்டது.



புதிய சலுகையை ஏர்டெல் ரூ. 598 சலுகையுடன் ஒப்பிடும் போது, பயனர்களுக்கு தினமும் 1.5 ஜிபி டேட்டா 84 நாட்களுக்கு வழங்கப்படுகிறது. இதேபோன்று வி ரூ. 555 சலுகையும் 84 நாட்கள் வேலிடிட்டி கொண்டுள்ளது. இந்த வரிசையில் பிஎஸ்என்எல் மட்டுமே குறைந்த விலையில் அதிக வேலிடிட்டி வழங்குகிறது.

4ஜி நெட்வொர்க் இல்லாததால் பல வாடிக்கையாளர்கள் பிஎஸ்என்எல் சேவையில் இருந்து விலக துவங்கி உள்ளனர். இந்நிலையில், மத்திய டெலிகாம் ஒழுங்குமுறை ஆணையமான டிராய் விரைவில் பிஎஸ்என்எல் 4ஜி சேவைக்கு அனுமதி வழங்க இருக்கிறது.

Similar News