தொழில்நுட்பம்
சாம்சங்

மூன்று வேரியண்ட்களில் உருவாகும் கேலக்ஸி டேப் எஸ்7 லைட்

Published On 2021-01-25 05:52 GMT   |   Update On 2021-01-25 05:52 GMT
சாம்சங் நிறுவனத்தின் புதிய கேலக்ஸி டேப் எஸ்7 லைட் மூன்று வேரியண்ட்களில் உருவாகி வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.


சாம்சங் நிறுவனம் கேலக்ஸி டேப் எஸ்7 லைட் மாடலை உருவாக்கி வருவதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்த டேப்லெட் மூன்று வேரியண்ட்களில் கிடைக்கும் என்றும் கூறப்படுகிறது. இவை SM-T730, SM-T735 மற்றும் SM-T736B / SM-T736N எனும் மாடல் நம்பர்களில் முறையே வைபை, எல்டிஇ மற்றும் 5ஜி வேரியண்ட் என கூறப்படுகிறது. 

இதுமட்டுமின்றி சாம்சங் நிறுவனம் மற்றொரு கேலக்ஸி டேப் எஸ்7 லைட் / டேப் எஸ்8இ வேரியண்ட்டை உருவாக்கி வருவதாகவும் கூறப்படுகிறது. இது பிளஸ் அல்லது எக்ஸ்எல் எனும் பெயரில் அறிமுகம் செய்யப்படலாம் என தெரிகிறது. இது உண்மையாகும் பட்சத்தில் லைட் வேரியண்ட்டை விட பெரிய டிஸ்ப்ளே கொண்டிருக்கும் என கூறப்படுகிறது.

முன்னதாக கடந்த ஆண்டு முதல் அரையாண்டு காலக்கட்டத்தில் சாம்சங் கேலக்ஸி டேப் எஸ்6 லைட் மாடலை அறிமுகம் செய்தது. அந்த வகையில் புதிய கேலக்ஸி டேப் மாடல் வெளியாக இன்னும் சில மாதங்கள் ஆகும் என்றே தெரிகிறது. இதற்கிடையில் புதிய டேப் பற்றிய கூடுதல் விவரங்கள் தொடர்ந்து வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
Tags:    

Similar News