தொழில்நுட்பம்
ஒன்பிளஸ் பேண்ட்

ஒன்பிளஸ் பேண்ட் டீசர் வெளியீடு

Published On 2021-01-04 13:48 IST   |   Update On 2021-01-04 13:48:00 IST
ஒன்பிளஸ் நிறுவனத்தின் முதல் பிட்னஸ் பேண்ட் மாடலுக்கான டீசர் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டு இருக்கிறது.


ஒன்பிளஸ் நிறுவனத்தின் முதல் பிட்னஸ் பேண்ட் டீசர் வெளியாகி உள்ளது. புதிய டீசர், “The New Face of Fitness” தலைப்பில் #SmartEverywear-எனும் ஹேஷ்டேக் கொண்டு பதிவிடப்பட்டு இருக்கிறது. இத்துடன் ஒன்பிளஸ் பிராண்டிங்கில் வளைந்த ஸ்கிரீன் கொண்ட பேண்ட் படமும் இணைக்கப்பட்டு உள்ளது.

புதிய பிட்னஸ் பேண்ட் ஸ்லீப் டிராக்கிங் அம்சம் கொண்டிருக்கும் என்றும் டீசரில் தெரிவிக்கப்பட்டு இருக்கிறது. முந்தைய தகவல்களின் படி ஒன்பிளஸ் பேண்ட், சியோமி நிறுவனத்தின் எம்ஐ பேண்ட் 5 மாடலுக்கு போட்டியாக வெளியாகும் என கூறப்பட்டது.



இதில் வாட்டர் ரெசிஸ்டண்ட், AMOLED ஸ்கிரீன், நீண்ட பேட்டரி பேக்கப் போன்ற அம்சங்கள் வழங்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இத்துடன் புதிய ஒன்பிளஸ் பேண்ட் சொந்தமான மென்பொருள் கொண்டிருக்கும் என கூறப்படுகிறது.

மேலும் இதய துடிப்பு சென்சார், SpO2 சென்சார் வழங்கப்படும் என்றும் கூறப்படுகிறது. சமீபத்தில் ஒன்பிளஸ் தலைமை செயல் அதிகாரி புதிய ஒன்பிளஸ் வாட்ச் உருவாகி வருவதாக தகவல் தெரிவித்து இருந்தார். எனினும், முதற்கட்டமாக பேண்ட் அறிமுகம் செய்யப்படலாம் என தெரிகிறது.

Similar News