தொழில்நுட்பம்
ஜியோ

அனைத்து நெட்வொர்க் எண்களுக்கும் இலவச வாய்ஸ் கால் வழங்கும் ரிலையன்ஸ் ஜியோ

Published On 2021-01-01 07:24 GMT   |   Update On 2021-01-01 13:20 GMT
ரிலையன்ஸ் ஜியோவில் இருந்து மற்ற நெட்வொர்க்குகளுக்கு மேற்கொள்ளப்படும் வாய்ஸ் கால் இலவசமாக வழங்கப்படுகிறது.


ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் தனது நெட்வொர்க்கில் இருந்து மற்ற நெட்வொர்க் எண்களுக்கு மேற்கொள்ளப்படும் அழைப்புகளை இலவசமாக வழங்குவதாக மீண்டும் அறிவித்து இருக்கிறது. 

இதன் மூலம் ஒரு ஆண்டு இடைவெளிக்கு பின் மற்ற நெட்வொர்க் எண்களுக்கான வாய்ஸ் கால் சேவையை ஜியோ இலவசமாக வழங்குகிறது. முன்னதாக ஜியோவில் இருந்து மற்ற நெட்வொர்க் எண்களுக்கு மேற்கொள்ளப்படும் வாய்ஸ் கால் கட்டணம் நிமிடத்திற்கு 6 பைசா வீதம் வசூலிக்கப்பட்டு வந்தது.



புதிய அறிவிப்பு மத்திய டெலிகாம் ஒழுங்குமுறை ஆணையம் இன்று (ஜனவரி 1) முதல் அமலாக்க இருக்கும் ‘Bill and Keep' முறையின் அடிப்படையில் வெளியிடப்பட்டு உள்ளது. இந்த முறையில் இன்டர்கனெட் கட்டணம் உள்நாட்டில் முழுமையாக ரத்து செய்யப்படுகிறது.

டிராய் புது முறையின் படி ரிலையன்ஸ் ஜியோ மற்ற டெலிகாம் நிறுவனங்களை போன்று அனைத்து நெட்வொர்க் எண்களுக்கும் இலவச வாய்ஸ் கால் சேவையை வழங்க முடியும். இதன் மூலம் ஏர்டெல் மற்றும் வி போன்ற நிறுவனங்கள் கடும் போட்டியை எதிர்கொள்ள வேண்டிய சூழலுக்கு தள்ளப்பட்டு உள்ளன.

Tags:    

Similar News