தொழில்நுட்பம்
ஜியோ

ஜியோ 4ஜி ஸ்மார்ட்போன் வெளியீட்டில் திடீர் மாற்றம்

Published On 2020-12-05 07:51 GMT   |   Update On 2020-12-05 07:51 GMT
ரிலையன்ஸ் ஜியோ நிறுவனத்தின் புதிய 4ஜி ஸ்மார்ட்போன் வெளியீட்டில் திடீர் மாற்றம் செய்யப்பட்டு இருக்கிறது.

ரிலையன்ஸ் ஜியோ மற்றும் கூகுள் நிறுவனங்கள் இணைந்து புதிய ஸ்மார்ட்போனினை உருவாக்கி வருவது அனைவரும் அறிந்ததே. முந்தைய தகவல்களில் இந்த ஸ்மார்ட்போன் டிசம்பர் மாதத்தில் அறிமுகம் செய்யப்படும் என கூறப்பட்டது. எனினும், புதிய ஸ்மார்ட்போன் வெளியீடு அடுத்த ஆண்டு நடைபெறலாம் என கூறப்படுகிறது.

தற்சமயம் இந்த ஸ்மார்ட்போனின் சோதனை பணிகள் நடைபெற்று வருகிறது. இதன் காரணமாக அறிமுகமாக சில மாதங்கள் ஆகும் என கூறப்படுகிறது. இந்தியாவில் புதிய ஸ்மார்ட்போன் விலை ரூ. 4 ஆயிரம் பட்ஜெட்டில் நிர்ணயம் செய்யப்படும் என தெரிகிறது. 

புதிய ஸ்மார்ட்போன் மூலம் ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் 2ஜி பீச்சர் போன் பயன்படுத்தும் வாடிக்கையாளர்களை கவர திட்டமிட்டு இருப்பதாக கூறப்படுகிறது. அடுத்த இரண்டு ஆண்டுகளில் 20 கோடி வாடிக்கையாளர்களிடம் புதிய ஸ்மார்ட்போனினை விற்பனை செய்ய ஜியோ இலக்கு நிர்ணயித்து உள்ளதாக கூறப்படுகிறது.

இதேபோன்று ஜியோ 5ஜி ஸ்மார்ட்போன்களும் அறிமுகம் செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இவை குவால்காம் பிராசஸர் கொண்டிருக்கும் என கூறப்படுகிறது. முன்னதாக குவால்காம் வென்ச்சர்ஸ் நிறுவனம் ரிலையன்ஸ் ஜியோவின் 0.15 சதவீத பங்குகளை வாங்க முதலீடு செய்து இருந்தது குறிப்பிடத்தக்கது.

Tags:    

Similar News